Abusalihonline's Blog

Just another WordPress.com site

வழக்கை வாபஸ் வாங்கு – ஜுனைத் குடும்பத்தை மிரட்டும் சங் கட்ட பஞ்சாயத்து கும்பல் BY ABUSALIH

வழக்கை வாபஸ் வாங்கு – ஜுனைத் குடும்பத்தை மிரட்டும் சங் கட்ட பஞ்சாயத்து கும்பல்

ABUSALIH
20 வெறி பிடித்த மிருகங்கள் ஓடும் ரயிலில்

ஓடும் ரயிலில் வன்முறை கும்பலால் கொல்லப்பட்ட ஜுனைத் என்ற 16 வயது பாலகனை யாரால் மறக்க முடியும் ? திரு குர் ஆணை மனனமாக ஓதும் திறன்பெற்ற ஹாபிழ் எனும் பட்டம் பெற்ற சின்னஞ்சிறு ஜுனைத் ரமலான் பெருநாள் கொண்டாடுவதற்காக துணி மணிகள் வாங்கிக்கொண்டு திரும்பும் ரயிலில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக , மாட்டுக்கறி வைத்திருந்தான் என கூறி 20 வெறிபிடித்த மிருகங்கள் ஒன்று சேர்ந்து கொன்று தீர்த்ததை அவ்வளவு எளிதில் மறந்து போகமுடியுமா ? இந்த நாடுதான் அவ்வளவு லேசில் கடந்து போகமுடியுமா ?

ஜுனைத் படுகொலை வழக்கை திரும்ப பெறவேண்டும் சமாதானத்தை பேண, சகோதரத்துவத்தை நிலை நிறுத்த ஜுனைத் குடும்பம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று கூறி காப் பஞ்சாயத்து எனும் கட்ட பஞ்சாயத்து கும்பல் நிர்ப்பந்தப்படுத்திடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி மதுரா லோக்கல் ரயிலில் இவ்வாண்டு ஜூன் மாதம் ஜுனைத் கொல்லப்பட்டார் . ஜுனைதுடைய சகோதரர் ஹாஷிம் அவர்களது இரண்டு நண்பர்கள் டெல்லியின் சதர் பஜாரில் பெருநாட்களுக்கான பொருட்கள் வாங்கிவிட்டு ரயிலில் பரிதாபாத்தில் உள்ள கந்தவாடி கிராமத்திற்ற்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது டெல்லியில் சில பயணிகள் ஜுனைத் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறு செய்து அதில் 10முதல் 20 பேர்வரை ஜூனைதை தாக்கி கொன்றனர். அவர் சகோதரர் ஹாஷிம் படுகாயமடைந்தார்.

ஜுனைத் குடும்பத்தை அச்சுறுத்த திரண்ட மஹா பஞ்சாயத்துக்கள்

2 மகா பஞ்சாயத்துக்கள் அருகிலுள்ள கிராமங்களிலுள்ள மக்களை திரட்டி ஜுனைதுடைய கிராமத்தில் ஒன்று குவிக்கப்பட்டனர்.

கொலையல்ல வெறும் விபத்தாம் !

அவர்கள் திரட்டிய மகா பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இது வெறும் விபத்து தான் உட்காரும் சீட்டுக்காக நடந்த சண்டை தான் கொலையில் முடிந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதன் அமைப்பாளர்கள் சர்பன்ச் என அழைக்கப்படும் கிராமத்து தலைவரையும் ஜுனைத் உடைய கிராமத்தின் முக்கிய புள்ளிகளையும் அழைத்து தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழக்கை வாபஸ் வாங்குமாறு நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர் . அக்டோபர் 15 மற்றும் 17ம் தேதிகளில் நடந்த மகாபஞ்சாயத்துகளின் முடிவினை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது திணித்த அந்த கும்பல் நீங்கள் என்ன செய்தாலும் அது நடக்கப்போவதில்லை . வாபஸ் பெறுவதே நல்லது என்று கூறியதை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம் என ஜுனைத் மூத்த சகோதரரும் கொலையை நேரில் கண்ட சாட்சியுமான ஹாஷிம் முஸ்லிம் மிரர் வலைத்தளத்திற்கு நேர்காணல் அளித்ததுபோது கூறினார்.

எங்கள் இளைய சகோதரனையே பறிகொடுத்து விட்டோம்

எம் இளைய சகோதரனையே பறிகொடுத்து விட்டோம் இதற்கு பிறகு சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றார் ஹாஷிம் . குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் . நீதி மன்ற முடிவுக்காக உள்ளோம் எங்களுக்கு தேவை நீதி மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகள் அல்ல என்றார் ஹாஷிம் . அவர்கள் பணம் தர முன்வந்தார்கள் அதை நாங்கள் புறக்கணித்தோம் . பணம் என் தம்பியை திரும்ப கொண்டு வரப்போவதில்லை என்ற அவர் இது தொடர்பாக பரீதாபாத் காவல்துறை ஆணையர் ஹனீப் குரைஷியிடம் புகார் செய்யயப்பட்டுள்ளது இனிமேல் ஜுனைத் குடும்பத்தை வழக்கை வாபஸ் பெறும்படி நிர்பந்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு ஜாமீன்

இதனிடையே ஜுனைத் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6பேரில் நால்வருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற இருவர் யார் என்பதே தெரியவில்லையாம் . இது எப்படி இருக்கிறது பாருங்கள் .

கொலையாளிகள் உள்ளூர் கிரிமினல்கள்

கொலையாளிகள் சந்தர் , கவுரவ் பிரதீப் , மற்றும் ரமேஸ்வர் ஆகியோர் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் சட்டவிரோத கும்பல் இவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர். . இந்த நான்குபேரும் சேர்ந்து பிடித்து கொள்ள நரேஷ் ஜூனைதை கத்தியால் குத்தினான். அவர்கள் அனைவருக்கும் பொதுவான தீய நோக்கம் உள்ளது. ஆனால் தீய நோக்கம் இருந்ததை ரயில்வே காவல்துறை மறுத்ததை தொடர்ந்தே இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இது தடம் புரண்ட வழக்கு
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் நிப்ரெஸ் ஆலம் கூறுகிறார் காவல்துறை நிர்பந்தத்தில் செயல்படுகிறது. இது ஒரு தடம் புரண்ட வழக்கு . காவல்துறை குற்றவாளிகளுக்கு உதவுகிறது என்கிறார்.
2ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அஹ்லாக் படுகொலையில் நீதி கிடைக்குமா என்பது நிச்சயமில்லை என்பது போல் , கடந்த ஆண்டு நிகழ்ந்த பெஹ்லு கான் படுகொலைக்கு நீதி மறுக்கப்படும் நிலையே நீடிக்கிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த பாலகன் ஜுனைத் படுகொலை வழக்கிலும் தடம் புரளல்கள், வழக்கை வாபஸ் வாங்கு என்ற மிரட்டலும் கேட்கிறது . சிறுபான்மை மக்களுக்கு நீதி என்பது எப்போதும் கானல் நீர்தானோ?

Advertisements
Comments Off on வழக்கை வாபஸ் வாங்கு – ஜுனைத் குடும்பத்தை மிரட்டும் சங் கட்ட பஞ்சாயத்து கும்பல் BY ABUSALIH

பல்கிஸ் பானு வழக்கு – குஜராத் அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம் by அபூஸாலிஹ்

பல்கிஸ் பானு வழக்கு – குஜராத் அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

அபூஸாலிஹ்

பாலியல் பயங்கரவாத பாவிகள்
நாட்டையே உலுக்கிய குஜராத் இனப்படுகொலையில் பாசிச மதவெறி பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்ட பல்கிஸ் பானு என்ற பல்கிஸ் யாக்கூப் ரசூல் வழக்கில் உச்சநீதிமன்றம் குஜராத் அரசை வறுத்தெடுத்துள்ளது. 2002 மார்ச் 3ம் தேதியன்று அகமதாபாத் அருகே ராந்திக் பூர் என்ற கிராமத்தில் இனப்படுகொலையாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.. 5மாத கர்ப்பிணி பெண்ணான பல்கிஸ்பானு மிருக வெறி கயவர்களால் வெறித்தனமாக வேட்டையாடப்பட்டார். . பல்கிஸ் பானுவின் தாய், சகோதரி , அவரது குழந்தை உள்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர் .

இந்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . கடமை தவறியதாக , ஆதாரங்களை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளையும் (ஐ பி எஸ் அதிகாரி உட்பட ) விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு

காவல்துறை அதிகாரிகள் நால்வரையும் , மருத்துவர்கள் இருவரையும் விடுவித்ததை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து 12பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அந்த காவல் அதிகாரிகளையும் 2 டாக்டர்களையும் குற்றவாளிகள் என அறிவித்தது.

சீறிய உச்சநீதிமன்றம்

தமக்கு போதிய இழப்பீடு வழங்குமாறும் தவறு செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு உத்திரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் பல்கீஸ் பானு தரப்பில் மனு செய்தனர்.

இந்த மனுவை தலைமை தீபக் மிஸ்ரா ,நீதிபதிகள் ஏ. எம் கான் வில்கார்,டி ஒய் சந்திர சூட், அடங்கிய அமர்வு 23-10-2017 அன்று விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை தொடங்கப்பட்டதா அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. எனது கட்சிக்காரர் இன்றும் பெரும் வேதனையை அனுபவித்து வருகிறார். குற்றம் இழைத்த அதிகாரிகள் இன்றும் பணியில்
தொடர்கிறார்கள் என பல்கீஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா தனது வாதத்தில் குறிப்பிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இது எப்படி நடக்கிறது ? எப்படி இவர்கள் பணி செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதாரங்களை சிதைத்த காவல்துறை அதிகாரிகளையும் 2 மருத்துவர்களையும் மீண்டும் எவ்வாறு பணியில் அமர்த்தினீர்கள் குஜராத் அரசுக்கு கேள்வி விடுத்த உச்சநீதிமன்றம் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறும் உத்திரவிட்டுள்ளது முன்னதாக உயர்நீதிமன்ற்ம் தங்களின் மீது சுமத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு மேல்முறையீடு அந்த 6 பேர் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2004ல் சிபி ஐ விசாரணைக்கு உத்திரவிட்ட உச்சநீதிமன்றம்

2004ல் அகமதாபாத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு குஜராத் மாநில காவல்துறை கொடுத்த அறிக்கையை தூக்கி கடாசிவிட்டு மும்பை உயர்நீதிமன்றத்திடம் இந்த வழக்கை ஒப்படைத்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது உச்சநீதிமன்றம் குஜராத் மாநில அரசை அக்கினி வினாக்களால் வறுத்தெடுத்துள்ளது . சங்கு முகாமுக்கு குஜராத்தில் இருந்து தான் சரிவு தொடங்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளதை பார்க்கும்போது அரசியல் களத்தில் மட்டுமல்ல நீதி தளத்திலும் அவர்களின் மீதான பிடி இறுகுகிறதா?

1 Comment »

பாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள் BY ABUSALIH

பாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள்

பாஜக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந் தின் சாதனைகள் பாஜக வினர் மட்டுமே மெச்சிக்கொள்ளும் வகையில் உள்ளது . அவர் தனது ராஜ்யசபா உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு போதும் தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கவோ , அந்த மக்கள் சந்தித்து வரும் சவால்கள் பற்றியோ தமது சொந்த மாநிலமான உத்திரபிரதேச திற்கு வேண்டிய கோரிக்கைகள் குறித்தோ வாயே திறக்கவில்லை என்பது குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன

ராம் நாத் கோவிந்த் தனது ராஜ்ய சபா உறுப்பினர் காலமான 10 ஆண்டுகளும் அவர் மொத்தம் 283 வினாக்களை எழுப்பினார் அதில் ஒன்று கூட தலித் மக்கள் குறித்தோ அல்லது தனது சொந்தமாநிலமான உ பி குறித்தோ பேசவே இல்லை .

19994முதல் 2006 வரை அவர் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். 2015ல் இருந்து இன்றுவரை அவர் பிகார் ஆளுநராக இருந்தார் . அவர் குறித்து இரண்டு விஷயங்கள் முக்கியப்படுவப்படுத்தப்படுகின்றன. ஒன்று அவர் ஏழை விவசாயியின் மகன் . மற்றொன்று அவர் தலித் என்பதாக .
இது போன்ற அம்சங்கள் நாடாளுமன்ற அரசியலில் ஒரு விலை மதிப்பு மிக்க வாதமாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசியல் அரங்கில் , பொதுவெளியில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே எடுத்துக்கொள்ளப்படும்

சமூக நீதி மற்றும் விவசாய அமைச்சரகங்களில் அவர் கேட்ட 25 கேள்விகளிலும் கூட ஆதிக்க சாதி அட்டூழியங்கள், விவசாயிகள் தற்கொலை குறித்த ஒரு கேள்வி கூட இடம்பெறவில்லை. .இத்தனைக்கும் அவர் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பேற்ற தவறு பொறுப்பற்ற முறையில் இருந்தது முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆட்சிதான் . எதிர் முகாமில் இருந்தபோதும் கூட வாய் திறக்க மறுத்தவர்தான் மாபெரும் நாட்டின் குடியரசு வேட்பாளர் ?

Comments Off on பாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள் BY ABUSALIH

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ்
BY ABUSALIH

கேனப்பய ஊருக்குள்ள கிறுக்குப்பய நாட்டாமை

ஹனிபா ஷேய்க் மூன்று குழந்தைகளுக்கு தாயார் தனது கணவர் ஷேய்க் முக்கத்தர் தினக்கூலியாக வேலைபார்த்து வந்தார் அவரை அடித்து இழுத்து சென்று காவல்துறையினர் துன்புறுத்தியபோது கெஞ்சுகிறார் கதறுகிறார் . தனது கணவர் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் . அவருக்கு ஓரு எதிரி கூட கிடையாது . அவருக்கு ஏன் இந்த நிலை என குமுறுகிறார் .

ஷரீபா தனது கணவன் வருகைக்காக வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார் . தேசத்துரோக குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ச்சப்படும் விபரீத நிலை ஏன் ? ல் பாகிஸ்தான் ஆதரவு கோஷ ம் போடப்பட்டதாக பொய்குற்றச்சாட்டில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில்

உத்திரப்பிரதேசத்தில் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டு விட்டது. சாம்பியன் டிராபி இறுதி ஆட்டத்தில் விராட் கோஹ்லியும்
ஹர்டிக் பாண்டியாவும் சொதப்பியதற்காகவும் இந்தியா வெற்றி பெறாததற்காகவும் குறிப்பாக பாகிஸ்தான் என்ற நாடு அந்த நாடு வென்றதற்காக பட்டாஸுகளின் முதல் திரியை பற்ற வைத்தது யார் ? மத்திய பிரதேசத்தின் முகமது என்ற மனிதரை இதற்கு முன் யாரும் பார்த்தது கூட கிடையாது . அந்த புர்ஹாண்பூர் கிராமத்தில் இவரோடு இணைத்து 15 பேரின் மீது போடப்பட்ட வழக்குகள்
வேண்டுமென்றே போடப்பட்டதாகவே உள்ளது. . காரணம் அங்கு பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போடப்பட்டதாக ஒருவர் காதிலும் விழவில்லை . யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்டதாக நிரூபிக்க முடியவில்லை. இந்த குற்றசாட்டை சுமத்திய சுபாஷ் லக்ஷ்மன் கோலி யால் கூட நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை .

சுபாஷ் என்பவர் நான் புகார் கொடுக்கவே இல்லையே எனது பக்கத்து வீட்டுகாரர் பெரும் கூச்சலாக இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகவே சென்றேன் புகார் பதிவு செய்ய செல்லவில்லை . ஆனால் காவல்துறையினர் வேண்டுமென்றே என்னை முக்கிய சாட்சியாக்கி வழக்கை பதிவு செய்துவிட்டனர் என கூறுகிறார் நான் இதனை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு முறையிட போகிறேன்

காவல்துறை என்னை குறி வைப்பதாக அஞ்சுகிறேன் என குறிப்பிடுகிறார் 20 களின் மத்தியில் இருக்கும் இந்த இளைஞர் டிஷ் ஆன்டெனா பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார் . உண்மையை சொன்னதால் போலீஸ் தன்னை பழி வாங்குமோ என அஞ்சுகிறார் . ம. பி போலீசின் மகிமை அப்படி

புர்ஹாண்பூர் என்ற அந்த முஸ்லிம் கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமங்களுக்கு விளையாட பேட்மிட்டன் டீம் ஒன்று புறப்படும் அது கிராமங்களில் புகுந்து புறப்பட்டு வெற்றி வாகை சூடும் அது இளைஞர்களுக்கு நல்லிணக்கம் சார்ந்த உற்சாகத்தை ஊட்டுவதாக இருக்கும். இந்த பாகிஸ்தான் டீமுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டதாக கிளப்பி விடப்பட்ட கெடு நோக்கம் இந்த நல்லிணக்கத்தை சிதைத்து விட்டது. புர்ஹாண்பூர் கிராம முஸ்லிம் இளைஞர்கள் தங்களது பேட்மிட்டன் டீமுக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா ? டார்கெட் . இப்போது ஹிந்துத்துவ கும்பலும் ம. பி போலீசும் முஸ்லீம் இளைஞர்களை டார்கெட் செய்கிறது என்ன ஒரு குரூர வினோதம் .

அந்த 15 வாலிபர்களும் இன்னும் சிறையில் இருக்க அவர்கள் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் மட்டும் திரும்ப பெறப்பட்டு இரு சமூகங்களுக்கு இடையில் பகைமை வளர்த்ததாக குற்றம் சாட்டும் பிரிவான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 ன் படி குற்றசாட்டு பதிவு செய்துள்ளனர். 15 பேரில் இருவரை தவிர மீதமுள்ளோர் உயர் கல்வி படிக்காதோர் ஆவார். மேலும் அந்த 13 இளைஞர்களின் தின வருவாய் 200 க்குள் தான் வருகிறது என வட்டார மக்கள் கூறுகின்றனர். அந்த இளைஞர்களால் மட்டும் அல்ல அப்பகுதி மக்களால் கூட இதுவரை அங்கு அமைதிக்கு பங்கம் ஏற்படவில்லை என மராத்தி மொழி ஆசிரியர் பிரபாகர் மகாஜன் கூறுகிறார் . கைது செய்யப்பட்ட 15 பேரும் நள்ளிரவில் பெற்றோர் முன்னிலையில் அடித்து இழுத்து செல்லப்பட்டுள்ளனர். புகாரே கொடுக்கவில்லை என குமுறும் ஹிந்து இளைஞரைக்கூட மிரட்டி தங்கள் கெடு நோக்கம் நிறைவேற 15 அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடும் மத்திய பிரதேச போலீசின் , மத்திய பிரதேச ஆளும் பாஜக அரசின் தீய திட்டம் வன்மையாக கண்டிக்கப்படக்கூடியது

Comments Off on இந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ்

சவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH

சவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH

சவூதியில் வாழ்ந்து வரும் வெளிநாட்டு வாசிகள் குறிப்பாக சட்ட விரோத வெளிநாட்டுக்காரர்கள் தானாகவே வெளியேற மேலும் ஒரு மாதம் கால வாசம் சவூதி அரேபிய அரசு வழங்கியுள்ளது. பாஸ் போர்ட் இயக்குனரகம் அரசின் ஒப்புதல் பெற்று இதனை அறிவித்துள்ளது. அந்த சலுகை கெடு ஜூன் 25 முதல் தொடங்குகிறது இந்த ஒரு மாதத்திற்குள் அனைத்து நாடுகளை சேர்ந்த சட்ட விரோதமாக தங்கியவர்கள் தானாக வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள சவூதி கெஸட் சட்ட விரோத குடியேறிகள் இல்லா நாடு என்ற நாடு தழுவிய இயக்கத்தின் முயற்சியின்படி வெளிநாட்டு குடியேறிகள் தமது சொந்த செலவில் வெளியேற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது . சட்ட விரோதமாக குடியேறிவர்களை தகவல் தொடர்பு மையத்தின் உதவியுடன் கண்டுபிடித்து ஆவண செய்ய அரசு ஆயத்தமாகி வருவதாக மேஜர் ஜெனெரல் சுலைமான் அல் யஹ்யா தெரிவித்தார்

முன்னதாக மன்னிப்பை பெற முடியாதவர்கள் அருகிலிலுள்ள வரவேற்பு மையங்களை அணுகி கால தாமதத்தினை தெரிவித்து சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்

Comments Off on சவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH

இந்தியாவில் இருந்து மாட்டுக்கறி தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது – முக்கிய வெளிநாடுகளுக்கு மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை அபூஸாலிஹ்

இந்தியாவில் இருந்து மாட்டுக்கறி தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது – முக்கிய வெளிநாடுகளுக்கு மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை

மாட்டுக்கறி தொடர்பான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கவேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிட்டன் உள்பட 9 நாடுகளுக்கு அது அறிக்கை மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

கூட்டமாக சிறுபான்மையினரை வதைப்பது ஒடுக்குவது குறித்தும் மாட்டுக்கறி கொடூர கொலைகளுக்கு காரணமாக இருப்பது பற்றியும் அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படுகொலைகளில் பசு மட்டுமே முக்கிய காரணமாக இருக்கவில்லை. முஸ்லிமாக வாழ்வதும் தொப்பி அணிந்து செல்வதும் கூட கொலைக்கான காரணமாக இருப்பது ஜுனைத் படுகொலை மூலம் நிரூபணமாகியுள்ளது.

வலது சாரி வெறி இயக்கங்களால் மத பாகுபாடு வெறுப்புணர்வு குற்றம் காரணமாக கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென்று அது கோரிக்கை வைத்துள்ளது

மாட்டுக்கறி வைத்த்திருப்பதாக , உண்பதாக கருதி கொல்லப்பட்டவர்கள் குறித்து கண்டறிய ஓர் ஆய்வுப்பயணம் இந்தியா முழுவதும் மேற்கொள்ள வேண்டுமென அது கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான பயங்கரவாத இயக்கங்கள் அமேரிக்கா , ஐரோப்பிய யூனியன், கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளில் இருந்து நன்கொடை வசூலிப்பதை தடை செய்யவேண்டும் மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் அவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது தொடர்பான குற்றவாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து தண்டனை கிடைக்க செய்யவேண்டும். அரசு வன்முறைகளையும் வெறுப்புணர்வு குற்றங்களையும் எதிர்த்து போராடி கட்டுப்படுத்தாவிட்டால் அமைதி வழியிலான போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்

வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் அரசியல் ரீதியாக ஆளும்கட்சி ஆதாயம் அடைய நினைத்தால் அதன் விளைவு இனப்படுகொலைக்கு வழி வகுத்து கட்டுப்படுத்த நேரமின்றி விபரீத நிலைக்கு இட்டு செல்லும்

என்று செல்லும் அதன் அறிக்கை இந்திய மாட்டு இறைச்சிக்கு சர்வதேச ரீதியில் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

Comments Off on இந்தியாவில் இருந்து மாட்டுக்கறி தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது – முக்கிய வெளிநாடுகளுக்கு மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை அபூஸாலிஹ்

முஹ்ஸின் ஷேய்க் படுகொலையாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை ! அரசு வழக்கறிஞர் திடீர் விலகல் ஏன் ? குமுறுகிறார் ஷேக்கின் தந்தை அபூஸாலிஹ் BY ABUSALIH

முஹ்ஸின் ஷேய்க் படுகொலையாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை !
அரசு வழக்கறிஞர் திடீர் விலகல் ஏன் ? குமுறுகிறார் ஷேக்கின் தந்தை

அபூஸாலிஹ்

2014 ஜூன் 2ம் தேதியை யாரால் மறக்க முடியும் 24வயது மென்பொறியாளர் முஹ்ஸின் ஷேய்க் இஷா தொழுகை முடித்து விட்டு வரும்போது ராஷ்டிர சேனா மதவெறியர்களால்
ஹாக்கி மட்டைகளாலும் இரும்பு தடிகளாலும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த குடும்பத்தின் உணவு தேடி , வருவாய் ஆதாரமான ஷேக்கின் இழப்பு அந்த குடும்பத்தை குலுங்க செய்தது. சிறிய போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் தந்தை சாதிக் ஷேய்க்க்கின் நீதிதேடிய போராட்டம் கல்நெஞ்சையும் கரைய செய்யக்கூடியது . அன்றைய மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் , உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் இருவரையும் சந்தித்து நீதி கோரினார் நிவாரணம் வேண்டினார்

அன்றைய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயவையும் சந்தித்தார் . நிவாரணமும் நீதியும் வழங்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டதே தவிர அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை.

இதில் அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வேறு இந்நிலையில் முஹ்ஸின் தொடர்பான சட்ட யுத்தத்தின் போக்கில் மட்டுமே சில நம்பிக்கை வெளிச்சக்கீற்றுகள் தென்படலாயின . குற்றவாளிகள் தலைவன் கொடூர குற்றவாளி தனஞ்செய் தேசாய் உள்பட ஹிந்து ராஷ்டிரா தேசத்துரோகிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இந்த வழக்கில் ஆஜராகப்போவதில்லை என அறிவித்திருக்கிறார் . இது நீதி நாடிய முஹ்ஸினின் தந்தை 63 வயது சாதிக்கிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாகிவிடும் என நம்பப்படும் நேரத்தில் உஜ்வாலின் இந்த முடிவு அதிர்ச்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உஜ்வால் கசாப் பெரிய தீவிரவாதிக்கு எதிராக வழக்கையே நடத்தியவர் இந்த உள்ளூர் தீவிரவாதிக்கு எதிராக வழக்கில் ஆஜராவதற்கு அஞ்சுவார் என தான் நம்பவில்லை . நீங்கள் வழக்கில் ஆஜராவதில் விலகி செல்வது எங்களுக்கு மன வேதனையை தருகிறது என கடிதம் எழுதினார் அதற்கு எவ்வித பதிலையும் நிகாம் அளிக்கவில்லை .
உஜ்வால் இந்த வழக்கில் ஆஜராகும் தொடக்க கால கட்டத்தில் அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அவருக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தொடர்பு உண்டு என பலர் எச்சரித்தனர். இப்போது ராஷ்ட்ரீய சேனா தலைவன் தனஞ்செய் தேசாய் மிரட்டலுக்கு பணிந்து விட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக ரோஹினி சல்லியனை நியமிக்கவேண்டும் என முதல்வர் பட்நாவிஸ், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். பதில் இதுவரை இல்லை.

ரோகினி சல்லியன் மலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு நேர்மையான சட்ட யுத்தம் தொடுத்தவர் அரசுகள் அழுத்தம் கொடுத்த்த போதும் அஞ்சாது குற்றவாளிகளுக்கு பிணை கூடாது . என சாதித்தவர் . அவரை சிறப்பு வக்கீலாக நியமியுங்கள் என கெஞ்சுகிறார் மகனை பறிகொடுத்த தந்தை . நச்சுப்பாம்பை அடித்துக்கொல்ல ஓநாய்களிடம் பஞ்சாயத்து செய்த கதையாக அல்லவா இருக்கிறது.

முஹ்ஸின் ஷேய்க் படுகொலைக்கான நீதி கைக்கெட்டும் தூரத்தில் இருந்து கானல் நீராகிவிடுமோ . கதறும் தந்தைக்கு இந்த நாடு என்ன பதில் சொல்லப்போகிறது ?

Comments Off on முஹ்ஸின் ஷேய்க் படுகொலையாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை ! அரசு வழக்கறிஞர் திடீர் விலகல் ஏன் ? குமுறுகிறார் ஷேக்கின் தந்தை அபூஸாலிஹ் BY ABUSALIH

அல் அக்ஸாவில் ரமலான் BY ABUSALIH

அல் அக்ஸாவில் ரமலான் BY ABUSALIH

முஸ்லிம்களின் மூன்றாம் கிப் லாவான அல் அக்ஸா வில் வழக்கத்தை விட சிறப்பாக ரமலான் நல்லறங்கள் நிறைவேற்றப்பட்டன மூன்று லட்சம் பாலஸ்த்தீனர்கள் ரமலான் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளில் அல் அக்ஸா வளாகத்தில் தொழுகை நிறைவேற்றினார்கள்.

அல்அக்ஸா வளாகமே மக்கள் திரளால் நிறைந்தது . அதுமட்டுமின்றி ஜெருசலேம் நகரத்தையே திணறடித்தது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசு பலத்த போலீஸ் கெடுபிடியுடன் முஸ்லிம் மக்களிடம் நடந்து கொண்டது .

ரமலான் மாதம் மட்டும் ஆக்கிரமிப்பு

இஸ்ரேல் அரசு அல் அக்ஸா மஸ்ஜிதுக்கு வருபவர்களை அவ்வளவாக கெடுபிடி செய்வதில்லை என பொதுவாக கருதப்படுகிறது அதாவது ஆண்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களையும் ஆண் குழந்தைகளில் 12 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி . பெண்களுக்கும் முதியவர்களுக்கும் எந்த கெடுபிடியும் இல்லை. அவர்கள் எளிதாக சோதனை சாவடிகளை கடந்து செல்லலாம்.

எல்லா பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ஜெருசலேம் நகருக்குள் நுழைய 4 மணி நேரத்துக்கும் அதிகமானது என மேற்குக்கரை நபுலஸ் நகரை சேர்ந்த 52 வயது சலீம் அப்துல்லா கூறினார். பாலஸ்தீன மேற்குக்கரை பகுதி முற்றுகையிடப்பட்டுள்ள காசா , மற்றும் ஜெருசலேமில் உள்ள அரபு சமூக மக்கள் 2.5 லட்சத்திலிருந்து 3லட்சம் வரை திரண்டனர் என குறிப்பிடும் அல் அக்ஸா தொடர்பான அறக்கட்டளை பொது இயக்குனர் ஷேய்க் அல் ஹாதிப் தராவீஹ் தொழுகைக்கு மட்டும் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்து ஒன்றரை லட்சம் மக்கள் வருகை தருகின்றனர் என்கிறார்.

மேற்குக்கரை ஜெனின் நகரை சேர்ந்த 40 வயது சலீம் சபானா கூறும் போது தான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தருணத்திற்காக காத்திருந்தேன் என நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் மனைவி மற்றும் இரண்டு புதல்விகளுடன் வந்த அவர் ஜூம்முஆவுக்கு பிறகு பல மணிநேரங்கள் கழித்து தராவீஹ் தொழுகையும் நிறைவேற்றிவிட்டு செல்வோம் என்றார் அவரது 12 வயது மகள் அல் அக்ஸா மஸ்ஜித் மிக அழகு நிறைந்ததாக உள்ளது . ரமலானின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு வந்து தொழுகை நிறைவேற்றவேண்டும் என ஆவலாக உள்ளது . எனது தந்தையும் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்கிறது அந்த பெண் குழந்தை.

1967 ல் நடந்த போரில் மேற்கு கரையையும் கிழக்கு ஜெருஸலத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியது . 1980ல் மேற்கு ஜெருஸலத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியதை தொடர்ந்து அல் அக்ஸா மஸ்ஜித் வளாகம் தொடர்ந்து தகிப்பிலேயே உள்ளது. ஒன்று பட்ட ஜெருசலேம் தங்களின் யூத நாட்டின் கனவு தலைநகரம் எனக்கூறி வரும் சியோனிஸ சக்திகள் அதனை நிலை நிறுத்தி பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேலின் இந்த தகாத ஆசையை சரவதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை .அமெரிக்காவின் நேற்றைய அதிபர் ஒபாமா கூட இதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Off on அல் அக்ஸாவில் ரமலான் BY ABUSALIH

பன்றி இறைச்சி விற்பனையை தடை செய்ய முடியாது . நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதமாட்டோம் பஹ்ரைன் அரசு அறிவிப்பு BY ABUSALIH

பன்றி இறைச்சி விற்பனையை தடை செய்ய முடியாது .
நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதமாட்டோம் பஹ்ரைன் அரசு அறிவிப்பு BY ABUSALIH

பஹ்ரைன் அரசு பன்றி இறைச்சி விற்பனையையும் இறக்குமதியையும் தடை செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கையையை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் அதனை அரசு புறக்கணித்தது , பன்றிக்கறி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தால் அது நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதும் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்றும் அரசு எச்சரித்தது.

அரசு எல்லா வகையான இறைச்சியையும் இறக்குமதி செய்து வருகிறது. மேலும் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சுகாதார முறைகளை உறுதி செய்தபின்னரே நாட்டிற்குள் அனுமதிக்க படுகிறது. பன்றி இறைச்சியை நிறுவனங்களில் விற்பனை செய்வதை அரசு தடை செய்யவேண்டும் என பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். 2015ம் ஆண்டு அப்துல்லா பின் ஹுவெய்ல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பன்றி இறைச்சி விற்க இறக்குமதி செய்ய வைத்திருக்க தடை செய்யவேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். அதனை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது வாதத்தை வைத்தனர். பன்றி இறைச்சி மற்றும் பன்றி தொடர்பான அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிரானது. ஷரியாவை பின்பற்றும் பஹ்ரைன் நாட்டுக்கு எதிரானது என்ற வாதம் வலுவாக வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மூத்தோர் சபையான ஷூரா கவுன்சிலில் பன்றிக்கறி தொடர்பான நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றம் என கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்குகளின் மூலம் தோற்கடிக்கப்பட்டது.பன்றிக்கறிக்கு எதிரான தடை என்பது நாட்டில் வாழும் முஸ்லீம் அல்லாத மக்களின் உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான மீறலாகும். என ஷூரா உறுப்பினர்கள் உரையாற்றினர் .என கல்ப் நியூஸ் தெரிவிக்கிறது .

பஹ்ரைனில் வாழும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. .

முடியாட்சி நடைபெறும் பஹ்ரைனில் நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன் நாடும் விதமாக முடிவுகளை துணிந்து எடுக்கிறது. . எவ்வித இடையூறுகளையும் தம் நாட்டுமக்கள் அது எந்த சமூகத்தை சேர்ந்தவர்களானாலும் அனுபவித்துவிடக்கூடாது என்பதில் நேர்மை கெடுபிடியை கூர்மையாக கடைபிடிக்கிறது. . ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்ட ஜனநாயக முறையில் ஆளப்படும் நம் நாட்டில் பாசிச கூட்டம் அடிக்கும் கொட்டம் அப்பப்பா.

Comments Off on பன்றி இறைச்சி விற்பனையை தடை செய்ய முடியாது . நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதமாட்டோம் பஹ்ரைன் அரசு அறிவிப்பு BY ABUSALIH

ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள் BY ABUSALIH

ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள்

BY ABUSALIH

ஏராளமான மக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மாட்டுக்கறி விருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றுள்ளனர் மிஜோரம் மக்கள். மாடுகளை விற்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டுமக்களின் உணவு உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக மாட்டுக்கறி விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்திய மியான்மர் எல்லை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மிஜோராம் ஆளுநர் மாளிகை பகுதிக்கு 200 அடி தூரத்தில் இந்த மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.

மோசமான சீதோசன நிலையில் 5000 பேர் பங்கு பெற்ற இந்த விருந்தினை உள்ளூர் அமைப்பான ஜோ லைஃப் ஒருங்கிணைத்தது. மாட்டுகறி தீர்ந்துவிட்டதால் 2000 பேருக்கு மட்டுமே விருந்து அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறிக்கோள் மாட்டு இறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவதற்காக அன்று. நாட்டு மக்களின் உணவு உரிமையை காப்பாற்றுவதற்கு தான். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஜோ லைஃப் அமைப்பு கூறியது. முன்னதாக மாட்டுக்கறிக்கு தடை ஏதும் இல்லை என அறிவித்து விட்டு பின்னர் அடிப்படை உரிமைகளை கூட மறுதலிக்கும் சதி செயல்கள் தொடர்கிறது. ஒருவன் என்ன சாப்பிடுவது என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது . அவர்கள் எதையும் திணிக்க கூடாது என ஜோ லைஃப் அமைப்பின் ரேம் ருமாட்டா வர்தே கூறினார். மிசோரம் மாநிலத்தில் பல்வேறு சமயங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையினராவர் . அவரவர் தமது விருப்பம் போல் தம் சமய சம்பிரதாயங்களை பின்பற்றி கொள்ளலாம் இதில் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என வார்டே மேலும் தெரிவித்தார்.

மாட்டுக்கறி விருந்து என்பது மத்தியஅரசின் அறிவிப்புக்கு எதிரான அடையாள பூர்வ போராட்டமாகும். திரளான மக்கள் துணிச்சலுடன் பங்கேற்றதை வரவேற்பதாக அவர் கூறினார் . மிசோரம் உணவு உரிமையை கட்டுப்படுத்தும் செயலை காலில் போட்டு மிதிக்க தயாராகி விட்டது

4 Comments »