Abusalihonline's Blog

Just another WordPress.com site

ஹனீபிடம் மன்னிப்பு கேட்டது ஆஸ்திரேலிய அரசு பாதிக்கப்பட்ட இளைஞ்ர்களிடம் . இந்திய அரசு மன்னிப்பு கேட்பது எப்போது?

ஹனீபிடம் மன்னிப்பு கேட்டது ஆஸ்திரேலிய அரசு
பாதிக்கப்பட்ட இளைஞ்ர்களிடம் . இந்திய அரசு மன்னிப்பு கேட்பது எப்போது?

ஆஸ்திரலிய அரசால் குற்றம் சாட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு துயரம் அனுபவித்த இந்தியமுஸ்லிம் இளைஞ்ன் முஹம்மது ஹனீப் என்ற மருத்துவரிடம் கடைசியாக ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அத்துடன் இந்திய நாணய மதிப்பில் நான்கரை கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் மருத்துவரான ஹனீபுக்கு ஆஸ்திரேலிய அரசின் சார்பில் பணி வழங்கவும் முன்வந்துள்ளது.

பிரிட்டனின் கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன் பு கபில் என்பவர் எரிவாயு சிலிண்டர் நிரப்பிய வாகனத்துடன் தன்மீதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. 92 சதவீத நிலையில் உடல் பாகங்கள் எரிந்ததாக கூறப்பட்ட நிலையில் கபில் உயிருக்கு போராடியதாக செய்திகள் வெளிவந்தன. 2007 இல் நடைபெற்றதாக சொல்லப்பட்ட இந்த சம்பவத்துக்கு பிறகு கபில் என்ன ஆனார் என்ற தகவல் யாருக்கும் தெரியாது
இந்த மர்ம நிகழ் வு குறித்து செய்தி வெளியிட்ட அன்றைய ஊடகங்கள் இதில் மாபெரும் சதி இருப்பதாக கூறின.
இது தீவிர வாத செயல் என்றும் மோதிய வாகனத்தில் இருந்து குதித்த ஒருவரை கைது செய்ததாகவும் பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்தது.
வாகனத்தை ஓட்டிவந்தவர் முழுவதும் பெட்ரோலால் குளித்தவர் போல் இருந்த கபிலுக்கு அருகே வாகனத்தில் இருந்து குதித்தவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரது பெயர் டாக்டர் பிலால் அப்துல்லாஹ் என்றும் அவர் இஈராக் நாட்டை சேர்ந்தவர் என்றும் பிரிட்டன் கூறியது.

முழுவதுமாக தீயில் கருகியவ கபில் இந்திய ர என்றும் அவர் பெங்களூரு இளைஞ்ர் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டன. உடனே இந்திய ஊடகங்கள் கூட இந்தியாவில் சர்வதேச தீவிர வாத அபாயம் ஊடுருவி இருப்பதாகவும் அது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞ்ர்களை அது வளைத்தெடுப்பதாகவும் வழக்கம்போல புனைகதைகள் புறப்பட்டன. கடைசிவரை கபிலின் கதை தெரியவில்லை எந்த செய்தியாளருக்கும் உண்மையை ஊரறிய செய்யவேண்டும் என்ற நோக்கமும் இல்லாத நிலையில் ஓர் திடுக்கிடும் திடீர் திருப்பம் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்காக விமான நிலையம் வந்த ஹனீப் என்ற 27 வயது இளைஞ்ரை ஆஸ்திரேலிய நிர்வாகம் விசாரணை வளையத்தில் வைத்தது.முதல் முதலாக் பிறந்த பெண்குழந்தையை பார்ப்பதற்காக ஆசை ஆசையாய் புறப்பட்ட அந்த வாலிபர் கடும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டபோது வெறும் விசாரணைக்காக மட்டுமே ஹனீப் அழைத்து செல்லப்பட்டார். என்று அரசு கூறியது. ஆஸ்திரேலிய (அன்றைய )பிரதமர் ஜான் ஹோவர்ட்டும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரண்டன் நெல்சனும் ஹனீப் மீது எந்த குற்றமும் இல்லை விரைவில் விடுவிக்கப்படுவார் என்று உறுதி கூறினார்.

ஆனாலும் தனிமை சிறையில் வைக்கப்பட்டார் 23 மணி நேரம் தனிமை சிறை வாசத்தை அனுபவித்தார். முதலில் விசாரண மட்டுமே என்று ஆஸ்திரேலிய அரசு அவர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது.
அதற்கு காரணம் ஹனீப் விசாரிக்கப்பட்ட நாளில் இருந்து (ஜூலை 14 ஆம் தேதி ) பத்து நாளில் பிரிட்டனில் இருந்து ஒரு விசாரணை குழு என்ற பெயரில் ஒரு திசை திருப்பும் குழு வந்த பிறகு பிரச்சனை திசை மாறியது. ஹனீப் பதினான்கு நாட்கள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியதாயிறு.
ஹனீபை விடுவிக்கவேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபையான ஆம்நெஸ்டி இண்டர்நஷனல் வேண்டுகோள் விடுத்தது. ஹனீப் மீதான் குற்ற சாட்டு ஒரு நாடகம் என இந்திய தூதரகம் கூறியது. இது நாடககாட்சி போன்றே இருப்பதாகஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சி ஜே ராவ் தெரிவித்தார். ஹனீபுக்கு பிணை வழங்ககோரி வழக்கறிஞ்ர் பீட்டர் ரூசோ வழக்கு தொடர்ந்தார்.
கிளாஸ்கோ விமான நிலைய சம்பவத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட கபில் ஹனீபுக்கு உறவினராம் . தனது உறவினரான கபிலின் அலைபேசி சிம் கார்ட் ஹனீபிடம் இருந்தததால் ஹனீப் கைது செய்யப்பட்டார் என ஆஸ்திரிலிய காவல் துறை சொன்னது இந்த கதையை வைத்து ஹனீபை 14 நாட்கள் சித்திரவதை செய்தது. பிரிட்டனில் ஒரு சம்பவம் நடந்ததுஅதனை தொடர்ந்து எப்போதோ பிரிட்டன் வந்து தனது உறவினர்கபிலின் சிம் கார்டை வாங்கி பயன்படுத்தியஹனீபை விசாரணை செய்த ஆஸ்திரேலிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கப்பட்டது.
ஒரு வழியாக ஹனீப் விடுவிக்கப்பட்டார். இனி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டோம் என ஹனீபின் மனைவி பிர்தவுஸ் அர்ஷியா வேதனையோடு குறிப்பிட்டார். அர்ஷியா வும் அவரது குழந்தை யும் இப்போது (ஆஸ்திரேலியாவின் ) மன்னிப்புக்கு பிறகு மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் ஆனால் பிரிஸ்பேன் விமான நிலையத்தில்
ஹனீப் என்ற இளைஞ்ன் அனுபவித்த துன்பங்களை உருவாக்கிய அயோக்கியத்தனத்தை மன்னிக்க முடியாது.
ஆஸ்திரேலியா அரசு மன்னிப்பு கேட்டது ஆனால் நம் இந்திய திருநாட்டில் இதைப்போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதை யாராலும் மறக்க முடியாது.
டாகடர் ஹனீப் ஆங்கில மருத்துவர் இவர் ஆஸ்திரேலிய காவல்துறையால் அலைக்கழிக்கப்பட்ட்ட்டது போல் டாக்டர் இபுராஹீம் அலி ஜுனைது ஒருயுனானி டாக்டர் . 28 வயதான இவர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர் கைது செய்யப்பட்டார். (ஹனீப் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து ) இவர் ஐந்து நாட்கள் கடுமையாக சித்திரவதைக்கு இலக்காக்கப்பட்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்பு உடையவராக சித்தரிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆண்டுக்கும் மேலாக காரக்கிருகத்தில் அடைக்கப்பட்டார். இருட்டு சிறையில் வாடிய அவர் டிசம்பர் 2008 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகையும் இல்லை. அரசின் மன்னிப்பும் இல்லை
இவை மட்டுமா கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம்கள் யாரோ வெடித்த குண்டுகளுக்காக இன்றும் எத்தனயோ இளைய தலைமுறையினர் சிறை வாசம் அனுபவித்தத வேதனையே இன்னும் விலகாத நிலையில் அவர்களுக்கு இந்திய அரசு இழப்பீட்டினையும்தந்துமன்னிப்பு கேட்பது எப்போது ?
ஹனீப் அநாதை அல்ல என ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனெரல் குறிப்பிட்டார் இந்திய முஸ்லிம் இளைஞ்ர்கள் கேட்பாரற்ற அனாதைகள்தான் என சொல்லாமல் சொல்கிறது. இந்திய அரசு

This slideshow requires JavaScript.

Advertisements
Comments Off on ஹனீபிடம் மன்னிப்பு கேட்டது ஆஸ்திரேலிய அரசு பாதிக்கப்பட்ட இளைஞ்ர்களிடம் . இந்திய அரசு மன்னிப்பு கேட்பது எப்போது?