Abusalihonline's Blog

Just another WordPress.com site

அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் நாடு மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்

அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம்
நாடு மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்

மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரிக்கப்படும் சுவாமி அசீமானந்தா டெல்லியின் டீஸ் ஹஜாரி நீதிமன்றத்தின் முன்பாக விசாரிக்கப்படும் முன்பு வரை இந்த நாட்டில் அதிகாரமிக்க அனைத்து மட்டங்களிலும் என்ன விதமான பரப்புரைகள் பரப்ப பட்டன. அதில்எந்த சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்த நாடு அறியும்

இவை திட்டமிட்டு பரப்பப்பட்ட புளுகு மூட்டைகள் ஆனால்முஸ்லிம்கள் மீது வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டுவந்த ஒரு கும்பல் இனி தப்புவதற்கே வாய்ப்பில்லைஎன்பது அசீமானந்தாவின் வாக்குமூலமும் அதற்கு முன்பாக தயானந்தா பாண்டே என்ற காவி தீவிரவாதி யின் லேப்டாப் இல் இருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்ட்ட குரல்களும் சதிகளை யுரைத்து சொல்லின.
2006 மற்றும் 2008 ஆண்டுகளில் நிகழ்ந்த மாலேகான் குண்டு வெடிப்புகள் 2007 ஆம் ஆண்டுசம்ஜோதா எக்ஸ்பிரஸ்அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் காவி பயங்கரவாதிகளின் உரையாடல் பதிவுகள் ஆள்வோரை உலுக்கி இருக்கவேண்டும் ஆனால் தாமதமாகவே அது கவன ஈர்ப்பினைபெற்றது. ஆனால்உண்மையில் இதுவரை நடந்தது கண்டிக்ககூடியதாகவே இருந்தது என்பதை மறுக்க வே முடியாது. இதுவரை ஏராளமான முஸ்லிம் இளைஞ்சர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே நாண்டேட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவி பயங்கரவாதம் தனது கோர முகத்தை காட்டிய போதும் மத்திய மாநில அரசுகள் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை விளைவு தேசத்தை அபாயத்தில் தள்ளிய ஒரு மாபெரும் பயங்கர வாதம் குறித்த உண்மை விவரங்கள் தற்போதைய கால கட்டங்களில் வெளியாகி நிலைமையின் விபரீதத்தை வெளிப்படுத்தி காட்டியுள்ளன. அப்பாவி முஸ்லிம் களை துன்புருத்திவதில் குஜராத் மகாராஷ்டிராஆந்திரா ஆகிய மாநில காவல்துறையினர் ஆடிய வெறியாட்டம் முஸ்லிம் அப்பாவிகளை வாட்டியெடுத்தது. 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றவாளி ராணுவ உயர் அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் 2006 ஆம் ஆண்டே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாமில் இருந்து ஆர் டி எக்ஸ் வெடி மருந்துக்களை காவி பயங்கரவாதிகளுக்காக கடத்தினார். ஆனால் அது குறித்து அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஹேமந்த் கர்கரே மராட்டிய மாநில தீவிர வாத எதிர்ப்பு படையின் தலைவராக பொறுப்பேற்ற பின்னரே உண்மைகள் வெளிவந்து காவி தீவிரவாதம் தோலுரிக்கப்பட்டன. எவ்விதத்திலும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டதாக ஒரு தகவலும் இல்லை என்ற நிலை
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக 70 முஸ்லிம் இளைஞ்ர்கள் ஆந்திரகாவல்துரையினர் இழுத்து சென்று கொடுமை செய்தனர். இன்று அந்த குண்டு வெடிப்பு காவி தீவிரவாதத்தின் கைங்கர்யம் என்பது தெரிய வந்துள்ளது.

சம்ஜோதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட சிமி அமைப்பின் சப்தார்நாகூரி நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் என்றபெயரில் உண்மை அறியும் சோதனை செய்யப்பட்டுஅவர் உண்மைகளை ஒப்புக்கொண்டார் என்றும் மும்பை ரயில் குண்டு வெடிப்பில் குண்டு வைத்தவர்கள் என்றும் இந்தியா டுடே உள்பட பல ஊடகங்கள் குறிப்பிட்டே வந்தன. அதிலும் குறிப்பாக சிமி என்ற அமைப்பினர் தான் எல்லா குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருந்ததாக அரசு இயந்திரங்களும் அதனை ஒத்து ஊதும் விதமாக ஊடகங்களும் பரப்புரை செய்தன. இந்து இதழில் பிரவின் சுவாமி என்பவர் 2007 அக்டோபர் மாதம் அதே ஆண்டு மே மாதம் பிரண்ட்லைன் மாத இதழிலும் உலகளாவிய ஜிஹாத் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் தென்பட்ட தாகபுனைகதைகள் எழுதினார்
அரசு அமைப்புகள் ஊடகங்கள் இது நாள் மாபெரும் தேசத்துரோகிகளுக்காக மனித குல விரோதிகளுக்காக வாதாடியதை நினைத்து வெட்கப்படவேன்டாமா அப்பாவிகளை வதை செய்ததற்காக வேதன படவேன்டாமா அந்த அப்பாவிகளுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை அறிவிக்கவேண்டாமா குற்றவாளிகளை கடும் தண்டனைக்கு உள்ளாக்கவேன்டாமா என்ற குமுறல்கள் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது உண்மைகளை வெளிப்படுத்திய அசீமானந்தா உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் காவி பயங்கரவாதிகள் சுனில் ஜோஷியை கொலை செய்ததை போல் மீண்டும் நிகழக்கூடாது
என்பது நாட்டுப்பற்றாளர்களின் கவலை
இதுவரை குற்றம் செய்யாமல் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் உடனடியாக வெளியட வேண்டும் நாட்டுமக்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்

Comments Off on அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் நாடு மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்

இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரர் சதாம் படுகொலை :உலகை உறைய வைத்த வீர மரணம்

இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரர் சதாம் படுகொலை
:உலகை உறைய வைத்த வீர மரணம்
(சதாம் வீர மரணம் அடைந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த மாவீரனின் தியாகத்தை இந்த உலகம் நினைவு வைத்திருக்கிறதா ?)
தியாகச் செம்மல், இறை நம்பிக்கையாளர்களின் ஞானத்தந்தை நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இவ்வுலகம் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது உலகத்தைப் பதறச் செய்த, சரித்திரம் சந்தித்திராத சதிச் செயலை சண்டாளர்கள் நிகழ்த்தினர்.
ஈராக்கின் அதிபர் மாட்சிமிகு சதாம் ஹுசைன் ஆக்கிரமிப்பு சக்திகளாலும், அவர் களின் அடிவருடிகளாலும் படுகொலை செய்யப்பட்டார்.
கொடூரர்களான ஃபிர்அவ்ன், ஜெங்கிஸ்கான், ஹிட்லர் வரிசையில் வெள்ளை மாளிகை என்ற சாத்தான் குகையின் ஓநாய் மனிதனும் நவீனக் கொடூரனாக நான் காவதாக இடம்பெற்றார்.
2006 டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை, இருவேறு மனிதர்களை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது. ஒன்று, இந்த நூற்றாண்டின் சரித்திரம் இதுவரை கண்டி ராத மாவீரன். மற்றொன்று, உலகமகா கோழைகள்.
மரணம் என்ன செய்யும் என்பார்கள்? ஆனால் மரணம் வந்த பின்னர்தான் அதனை எதிர்கொள்பவர்களின் பரிதாப நிலை குறித்து நாம் காண முடியும். அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் சிக்குண்டு உரிமைகள் பறிக்கப் பட்ட மனிதராக இருந்தபோதும் துணிச்ச லாக ஆண்மையுடன் கம்பீரத்துடன் சதாம் மரணத்தை எதிர்கொண்டார்.
உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்று கூறுபவர்கள், ‘உயிர் எமக்கு தூசுக்கு சமானம்’ என்பவர்களெல்லாம் அத்துனை நெஞ்சுரத்துடன் நடந்து கொண்டதாக வழிவழிக் கதைகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் காவிய நாயகர்களையும் மிஞ்சி வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதராக சதாம், உலகின் வரலாற்று பிரமிப் பாகிறார்.
தனது உயிருக்கு உலைவைக்க முயன்ற கொலைகாரக் கூட்டத்தை காவல்படையினர் சுட்டுக் கொன்றதற்காக மாபெரும் மனிதகுலப் படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறி சதாம் ஹுசைனுக்கு அடிவருடி அரசின் நீதிமன்றம் தீர்ப்ப ளிக்கிறது. சட்ட உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இறுதியாக நீதி மறுக்கப்படுகிறது. அல்ல முதலிலிருந்தே மறுக்கப்படுகிறது. சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பொம்மை நீதிமன்றம் பொய்மை தீர்ப்பை வழங்குகிறது. உலகமெங்கும் கண்டனக் கணைகள் எழுந்தன. சதாம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீடு மறுதலிக்கப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. எப்போது வேண்டுமானாலும் தூக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்ற பதட்ட நிலையை அடிவருடி நீதிமன்றம் ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் நீதி பரிபாலனம் குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பியது. வாடிகன் அரசும் தனது கண்டனத்தை எழுப்பியது. பிரேசில் தனது கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது. உலகம் மெல்ல மெல்ல சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனை குறித்த செய்திகளை அறிந்து செய்வதறியாது தவித்தன. அரசுப் பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் ஆலோசனைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதிதீவிர அமெரிக்க ஆதரவு நாடுகள் அமெரிக் காவுக்கு வலிக்காமல் எப்படி கண்டனங்களை(!) தெரிவிக்கலாம் எனத் திணறிய நேரத்தில் மணித்துளிகள் மளமளவென இறக்கை கட்டிப் பறந்தன.
உலகம் சுதாரித்து விட்டால் ஆபத்து. பொதுமக்கள் பொங்கி எழுந்தால் என்னா வது? ஒருவேளை அரபுலகத் திற்கு சொரணை ஏற்பட்டு தொலைத்து விட்டால் என்ன செய்வது என்கிற விபரீத சிந்தனையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அடிவருடி அரசும் யூகித்தன.
எவ்வாறாயினும் காலம் தாழ்த்தினால் தாழ்ந்து விடுவோம். சதாம் மீண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டு விடப் போகிறது என அஞ்சி சில மணி நேரங்களில் காரியத் தை கனகச்சிதமாக முடித்துவிட திட்டம் தீட்டப்பட்டு மரணத்துக்கு மணித்துளிகள் குறிக்கப்படுகின்றன.
ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தற்போதைய ஈராக் அடிவருடி அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறார்.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றவாளிகளைக் கூட எதிரிகளிடம் ஒப்ப டைக்கக் கூடாது. ஆனால் ஒரு நாட்டின் அதிபரை ரவுடித்தனமாகக் கைது செய்து, குதறக் காத்திருந்த குள்ளநரிக் கும்பலின் கைகளில் திணித்தனர்.
இதுவரை மோசமான தீர்ப்பினை வழங்கியதாக கூறப்படும் ‘ஜெயித்தவன் நீதியை’ வன்மமாக வலியுறுத்திய ‘நூரெம்பர்க்’ தீர்ப்பாயம் கூட தனது எதிரியை (அதாவது) பாதிக்கப்பட்டவரின் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியது. ஆனால் இந்த நீதிமன்றத்தில் அது கூட வழங்கப்படவில்லை. இருட்டு மனம் கொண்ட தீயவர்கள் திருட்டுத்தனம் செய்ததைப் போல உலகம் விழிக்கும் முன்பே கொடு மையை செய்யத் துணிந்தனர்.
அதிகாலை இந்தியா அலறலுடன் விழித்தது. இந்தியாவின் ஆங்கிலச் செய்திச் சேனல்கள், இன்னும் சிறிது நேரத்தில் சதாம் தூக்கிலிடப்படுவார் என்றே பதட்ட செய்தியை பரபரப்பாய் நகரும் எழுத்துக்களால் சொன்னது. சதாம் சார்பாக அமெரிக்க நீதிபதியிடம் செய்த முறையீடும் மறுதலிக்கப்பட்டது.
‘அந்த நேரம் வந்துவிட்டது’ என சதாமிடம் கூறப்பட்டது. சதாம் மரணத்தை நோக்கி அழைத்து வரப்பட்டார். அவரிடம் இருந்த உடைமைகள் திரும்பப் பெறப் பட்டன. அவர் தனது கையில் திருக்குர்ஆனை ஏந்தினார். சதாம் தனது முகத்திலிருந்து கழுத்து வரை மூடிக்கொள்ளும் துணியை போட்டுக் கொள்ள மறுத்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து ஈராக்கின் அடிவருடி கொலைக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு வெள்ளை யில் கம்பீரமாக சதாம் நடை போட்டார். கறுப்புக் கோட்டும் வெள்ளைச் சட்டை யும் அணிந்து வந்திருந்த அவர் முகத்தில் மரணம் குறித்த எந்த சலனமும் சஞ் சலமும் ஏற்படவில்லை. ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என நூர் அல் மாலிக்கியின் அரசியல் ஆலோசகர் சாமி அல் அஸ்கரி கேட்டபோது, ‘தேவையில்லை’ எனக் கம்பீரமாக பதில் அளித்தார். அவரது கைகள் பின்னோக்கி கட்டப்பட்ட நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து சதாமிடம் விளக்கப்பட்டது. என்னவோ சுற்றுலா பயணத்திற்கு வந்தவர் அந்த இடங்களைப் பற்றிக் கூறுவதை கவனமாகக் கேட்பதைப் போல மிடுக்கு மிளிரும் அழகுடன் நெற்றிப் புருவத்தை நெறித்து கேட்டுக் கொண்டார்.
மார்க்க அறிஞர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என கம்பீர மொழியில் சாட்சி பகர்ந்தார். ஈராக் நேரம் சரியாக காலை 6.10க்கு சதாம் என்ற அரபுலகின் கம்பீர சகாப்தம் சதியால் சாய்க்கப்பட்டது. தூக்கில் போடப்பட்டார் சதாம்.
ஈராக் துயிலில் இருந்து முற்றிலும் விழிக்காத நிலையில் சதாம் நீடு துயிலில் ஆழ்ந்து விட்டார். சதாம் படுகொலை செய்யப்பட்ட செய்தி திக்ரித், சமாரா, ரமதி உள்ளிட்ட வீர பூமிக்குப் பரவியபோது பெண்களும் குழந்தைகளும் கதறி அழுத னர். ஆண்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சதாம் வீரத் தியாகியாகிவிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரைப் பொருந்திக் கொள்வானாக! புனிதப் போராளியாக நம் அதிபர் உயிர் துறந்தார், நாம் யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம் என திக்ரிதின் பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசலின் இமாம் ஷேக் யஹ்யா அல் அதாவி கூறி னார்.
திக்ரிதின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. திக்ரிதின் அருகே உள்ள கிராமமான அவ்ஜாவில்தான் சதாம் ஹுசைன் பிறந்தார். அவ்வூரில் அடக்கம் செய்ய அமெரிக்க ஆதிக்க மற்றும் அடிவருடிக் கூட்டம் முடிவெடுத்தது.
கொலைக் களத்திலிருந்து சதாம் ஹுசைன் உடல் 110 மைல் தூரத்தில் உள்ள அவ்ஜாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வடக்கு திக்ரிதில் உள்ள கேம்ப் செபய்சர் என்ற அமெரிக்க ராணுவ தளத்தை அடைந்தது. (செபய் சர் என்பவர் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான ஓட்டியாவார். 1991ல் முதல் வளைகுடாப் போர் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஈராக்கியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவர். அவரது பெயரில் உள்ள விமான தளத்திலிருந்து சதாம் ஹுசைனின் உடல் ஈராக்கின் எடுபிடி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணத்தை சதாம் எதிர்கொண்ட விதம் உலகம் உள்ளளவும் மறக்க முடியாததாக மாறிவிட்டது. கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது வழக்கமாக தூக்குத் தண்டனைக்கு ஆளானவர் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.ஆனால் சதாம் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தண்டனை நிறைவேற்றக் கூடியவர்கள் முகமூடி அணிந்து தங்களது அடையாளத்தை மறைத் துக் கொண்டனர். சடாரென்று பார்க்கும்போது அந்தக் காட்சி சதாம் அருகிலுள்ளவர்களை தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் செல்வதைப் போல் இருந்தது. சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பலையால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு சக்திகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சதாம் சரித்திரம் காணாத மாவீரராய் உலக சமூகத்தின் முன் போற்றப் படுகிறார். இரண்டு உலகப் போர்களிலும் ஜெர்மனியும் அதன் நட்பு நாடுகளும் படைகளை இழந்து, ஆட்சியைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று அமெரிக்காவும் அதன் சகாக்களும் பெரும் வல்லமை யுடன் படை பலத்துடன் பொருளாதாரச் செழுமையுடன் விஞ்ஞான உச்சத்தில் நின்றா லும், அன்று ஹிட்லரின் ஜெர்மனி அடைந்த இழிநிலையை அவர்கள் அடைந்து விட்டனர்.
சதாமின் படுகொலைக் குறித்து, அரபுலக மாவீரரின் வீரமரணம் குறித்து பங்காளிக் காய்ச்சலில் ஈரானும், ஜால்ரா சத்தத்துடன் ஜப்பானும் மட்டுமே வரவேற்றி ருக்கின்றன. புஷ்ஷும் பிளேரும் வரவேற்றிருந்தாலும் அமெரிக்க மக்கள் சபை யை ஆளும் ஜனநாயகக் கட்சியினரும், பிரிட்டனின் துணைப் பிரதமரும் சதாம் படுகொலை குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சதாம் இறந்தாலும் உலக மக்களின் இதயத்தை வென்றிருக்கிறார். ஆக்கிர மிப்பு சக்திகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற உலகம் தழுவிய எதிர்ப்புக் குரலின் மூலம் வாழ்ந்தும் இறந்து போனவர்களாய் சதாமை படுகொலை செய்தவர்கள் கருதப்படுகிறார்கள்.
அந்த நடமாடும் பிணங்களைப் பற்றி நாம் வேறென்ன சொல்வது? காத்திருங்கள் உங்கள் கொடுமைகளுக்கு பரிசு வழங்க நாளைய வரலாறு கொடுவாளோடு தயாராகிறது.

Comments Off on இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரர் சதாம் படுகொலை :உலகை உறைய வைத்த வீர மரணம்