Abusalihonline's Blog

Just another WordPress.com site

வளைகுடாவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டும் ?

This slideshow requires JavaScript.

உலக அளவில் எந்த முனையில் புரட்சி வெடித்தாலும் இந்திய மக்கள் அவர்களுக்கு ஆதரவு நீட்ட என்றும் தயங்கியதில்லை ஆளும் வர்க்கங்கள் என்னதான் அடக்கி வாசித்தாலும் இந்திய மக்கள் சுதந்திர வேட்கையை இரு கரம் நீட்டி வரவேற்கிறார்கள் துனிசியாவில் மலர்ந்த மல்லிகை புரட்சியானாலும் சரி எகிப்தில் வெடித்த எழுச்சிப்புரட்சிஆனாலும் சரி இந்திய மக்கள் அந்த ஆதரவை வெளிப்படுத்த தயங்குவதே இல்லை

அமெரிக்கவைபோலவே இந்தியாவும் எகிப்தில் அமைதியை நிலை நாட்டுமாறு ஹோஸ்னி முபாரக்குக்கு வேண்டுகோள் விடுத்ததுதான் வினோதம் .ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது குறித்து எவ்வித அக்கறையும் இல்லாத நிலையிலே இந்தியாவின் கருத்து அமைந்தது.இந்தியா எகிப்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.இருப்பினும் வெளியுறவு மற்றும் வர்த்தக உடன்பாடுகளில் முன்பு கடைபிடிக்ப்பட்ட நிலையே நீடிக்கும் என கருதப்படுகிறது

25 ஆண்டுகளாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் எந்த அளவு பொருளாதார ஏற்றத்தை சந்தித்தார்களோ அதே அளவு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றத்தை ச்ந்த்திதுள்ளது. பாலஸ்தீன சிக்கல் , இராக்கின் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஈரானில் ஏற்பட்டுள்ள நிலை போன்ற வற்றினால் மத்தியக்கிழக்கு மூச்சுத்தினருகிறது அதனாலே வளைகுடாவில் தெள்கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டும் அபாய ம இருப்பதை
மறுக்கமுடியாது என்பதே வல்லுனர்களின் அகருத்தாகஇருக்கிறது.

வளைகுடா நாடுகளில் 55 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர் , உழைக்கின்றனர்.அம்மக்களின் உழைப்பின்வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் அந்நிய செலவானியாக ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டுக்கு வருகிறது.

வளைகுடா பிராந்தியத்தின் பெட்ரோல் என்ற திரவத்தங்கம் இந்தியாவின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தகம் நடைபெறுகிறது.

ந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சுமார் இரண்டு லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளுகின்றனர்.வளைகுடா நாடுகளில் நம் இந்ஹிய மக்களின் எண்ணிக்கையை தேசம் வாரியாக பார்ப்போமா ?

சவூதி அரேபியா 20 லட்சம் பேர்
ஐக்கிய அரபு அமீரகம் 10 லட்சத்து 75 ஆயிரம்
குவைத் 6 லட்சம்
ஓமன் 5 லட்சத்து 73 ஆயிரம்
கத்தார் 5 லட்சத்து 60 ஆயிரம்
ஏமன்ஒரு லட்சம்
பஹ்ரைன் 32 ஆயிரத்து 700
லிபியா 17000
ஜோர்டான் 7000
எகிப்து 3000
சிரியா 300
மொராக்கோ 200
துனிஷியா 150 இந்தியர்களும் வாழவதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன

Advertisements
Comments Off on வளைகுடாவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டும் ?

எகிப்து மக்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…

எகிப்தில் ஏற்பட்ட 17 நாள் புரட்சி 30 ஆண்டுகால சர்வாதிகாரியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. அது மட்டும் இன்றி நைல் நதிக்கரையில் இருந்து மக்கள் புரட்சியின் செய்திகளைக் கண்ட உலகம் குறிப்பாக அரபகம் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இந்த பூமியில் முதன்முதலாக நாகரீகம் கற்றுக்கொடுத்த நைல் சமவெளிப் புரட்சியின் மூலம் புதிய இலக்கணத்தை பூவுலகுக்கு கற்றுக்கொடுத்தது.

2011 பிப்ரவரி 11ஆம் தேதி, உலக சரித்திரப் பக்கங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்தது. இஸ்லாமிய வரலாற்றில், நீங்காஇடம் பெற்ற வீரத்தியாகி ஹசனுல் பன்னா அவர்கள் உயிர்த்தியாகம் செய்த 12&ம் தேதி எகிப்து, அன்னாரின் தியாகத்தின் பலனை கண்ணாற்கண்டது. மாலை நேர தொழுகைக்குப் பிறகு சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கின் நீண்டகால விசுவாசியான உமர் சுலைமானின் தொலைக்காட்சி அறிவிப்பு சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டதை உறுதி செய்தது. முப்பது வினாடிகளுக்கும் குறைவாகவே அவரின் அறிவிப்பு அமைந்திருந்தது. முப்பது ஆண்டுகாலம் அந்த நாட்டை கட்டி ஆண்ட ஒரு சர்வாதிகாரி வீழ்ந்த சேதியை முப்பது வினாடிக்கும் குறைவான நேரத்திற்குள் அறிவித்த விநோதத்தை என்னவென்று சொல்வது? எல்லா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியும் இவ்வாறு தான் அமையுமோ ?

1981 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் அன்வர் சாதாத் கொல்லப்பட்டார். அன்று துணை அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் அதிபரானார். 2011 பிப்ரவரி 10ஆம் தேதி முபாரக்கின் குடும்பத்தினர் பத்திரமாக எகிப்தின் செங்கடல் கரையோர சுற்றுலா நகரான ஷரம் அல்ஷேக் நகருக்கு இடம் பெயர்ந்தனர். சர்வ பலம் பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு இருந்தும் என்ன பயன்? படைபலம் மிக்க இஸ்ரேல் உற்ற துணையாகஇருந்தும் என்ன பலன்? மக்கள் எழுச்சி ஏற்பட்டு விட்டதென்றால் இரவோடு இரவாக ஓடவேண்டியது தான். ஹோஸ்னி முபாரக் என்ற அரபுலக சர்வாதிகாரியின் ஆட்சிக்கு தஹ்ரீர் என்ற சுதந்திர சதுக்கத்தில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
2009 ஜூன் நான்காம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய உலகத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை புதிய தொடக்கமாக்குவோம் என அழைப்பு விடுத்திருந்தார் அல்லவா! அந்த தொடக்கம் எந்த தொடக்கம் என்பதை எகிப்து விடுதலைப் போராளிகள் ஒபாமாவுக்கு உணர்த்தியுள்ளதாகவே உலகம் கருதுகிறது. மக்கள் எழுச்சிக்கு முன்னால் சாம்ராஜ்யம் சரியும் காட்சியை உலகம் கண் முன்னால் கண்டது. இறைவன் மிகப்பெரியவன் என முழங்கிய தஹ்ரீர் சதுக்கப் போராளிகள் இந்தப் புரட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை வாழ்த்தி முழங்கினர். எந்த சர்வாதிகாரியின் முடிவும் இனி அதிரடியாகவே முடியும்; அதோ கதியில் முடியும் என போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான மஹ்மூத் எல்ஹேத்தா அறிவித்தார்.

எகிப்து இப்போது விடுதலைக் காற்றை சுவாசிக்கிறது என அறுபது வயதான சப்வான் அபூசாத் தெரிவித்தார். செப்டம்பர் 11, பிப்ரவரி 11 ஆகிய தேதிகள் 30 ஆண்டுகால வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவையாகத் திகழ்கின்றன. 1990 செப்டம் பர் 11 ஆம்தேதி நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பிப்ரவரி 11 ஈரானில் எழுந்த புரட்சிக்கு குமைனி தலைமை தாங்கினார்.

தன்னெழுச்சியாக எகிப்து புரட்சி நடைபெற் றதாகக் கூறப்பட்டாலும், இதில் கொள்கை ரீதியான ஒரு படை முக்கியப் பங்கு வகித்தது. ஆம் இஹ்வான்கள் எகிப்தின் மீள் கட்டமைப்புக்கு முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1928ஆம் ஆண்டு ஆறு கொள்கைப் போராளிகளுடன் சூயஸ் நகரில் தொடங்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு 10 லட்சம் இஹ்வான்கள் எகிப்து முழுவதும் உருவானார்கள். இலட்சியத்திற்காக எழுந்த அந்தத் தூய இயக்கம் அரபுலகின் தவப்புதல்வன் என்று தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கமால் அப்துல்நாசர் மற்றும் அவரது பின்னோடிகளான அன்வர் சாதாத் மற்றும் ஹோஸ்னி முபாரக் உள்ளிட்ட ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற எகிப்து நாடாளுமன்றத் தேர்தலில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 சதவீத தொகுதிகளைக் கைப்பற்றினர் இஹ்வான்கள்.

88 தொகுதிகளை வென்ற இஹ்வான்கள் அரசியலில் முக்கிய இடத்தினைப் பெற்றாலும் சுயேச்சை யாகப் போட்டியிட்டனர். சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகின்றனர். அடுத்து எகிப்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நகர்வுகளில் இவர்களது பங்கு பிரதானமாக இருக்கும் என கருதப்படுகிறது. இன்று துணை அதிபராக இருக்கும் உமர் சுலைமான் எகிப்தின் முன்னாள் உளவுத்துறை தலை வராகவும் சிஐஏவின் தரகராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக எகிப்தில் களமாடிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை நாடு கடத்திய சேவையை செய்துள்ளார். சிறைவாசிகளை சித்திரவதைகள் செய்வதில் மிகவும் தேர்ந்தவராக விளங்கினார். அவர் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலுடன் தனி தொலைபேசியில் உரையாடும் வழக்க முடையவர் என விக்கி லீக் அம்பலப்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக முடிவுக்கு வரமுடியாது. தஹ்ரீர் சதுக்கத்தில் கூட்டம் கூடுவதைத் தடுக்க முற்படுவது, தேர்தல் ஆறு மாதம் கழித்து என அறிவித்துள்ளது போன்றவை சந்தேகத்தை வரவழைத்தாலும் ஹோஸ்னி முபாரக்கை அகற்றிய மக்களுக்கு இவர்கள் ஒரு பொருட்டாக கருதப்பட மாட்டாது என்பது திண்ணம்.

தஹ்ரீர் சதுக்கம் எழுப்பிய வினாக்களுக்கு அரபகம் நாளை என்ன பதில் கூறப்போகிறது? இந்தப் புரட்சி தங்களுக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவாகப் பேசிய சவூதி அரேபியா இன்று புரட்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளது. அல்ஜீரியா மற்றும் ஏமன் மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் தன்னை நிரூபிக்கத் துடிக்கிறது. உலகமே உன்னிப்புடன் பார்க்கும் இந்தப் புரட்சியில் பல்வேறு முக்கிய அம்சங்களும் படிப்பினைகளும் உள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. ஹோஸ்னி முபாரக் மட்டுமே எகிப்தின் முழுமையான வில்லன் என சித்தரிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹசனுல் பன்னா, செய்யது குத்துப் போன்றவர்களின் உயிரைக்குடித்த சர்வாதிகார சக்தி களான நாசர், அன்வர் சாதாத் போன்றவர்களை மறக்க முடியாது. அன்னை ஜைனப் அல் கஜ்ஜாலி போன்றவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய அந்தக் கொடூர ஆட்சிகளை அகற்றிவிட்ட எகிப்து உண்மையான விடுதலையை அனு பவிக்க கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருக்கும். அரபகத்தில் பல நாடுகளுக்கு சுதந்திர உணர்வை எகிப்து புரட்சி வழங்கி இருப்பினும் இந்தப் புரட்சிதான் நாளை சுதந்திர பாலஸ் தீனம் உருவாக முக்கியக் காரணியாக இருக்கும் என கருதப்படுகிறது. இன்றைய எகிப்து புரட்சியை வாழ்த் தும் அதேவேளையில் சுதந்திர பாலஸ் தீனத்தினை வரவேற்கத் தயாராவோம்

This slideshow requires JavaScript.

1 Comment »

மாவீரன் சஹீத் ஆஷ்மி படுகொலை ஓராண்டாகியும் விடை காண முடியா வினாக்கள்

This slideshow requires JavaScript.

ஷஹித் ஆஸ்மி ரஷ்யா விலோ சீனாவிலே சுட்டுவீழ்த் தப்பட்டிருந்தால் ஷஹித் ஆஸ்மி யின் படுகொலைச்செய்தி மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்திருக்கக்கூடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கொள்கை அடிப்படையில் மேற்குலக மீடியாக்கள் இந்த கொலையை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கறிஞர் ஆஸ்மி இந்நாட்டில் வாழ்ந்து இந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரச பயங்கர வாதத்தை எதிர்ப்பது பயங் கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக மாறியது.

ஏனெனில் இந்தியநாடு மேற் குலக சக்திகளின் கையுறை மாட்டிய கைகளில் இருக் கிறது. இந்தியாவின் பெரும் பான்மையான மத்திய தரவர்க்கம் மேற்குலக நட்பின் பக்கமே சாய்ந்திருக்கிறது. மேற்குலக மற்றும் இந்திய மீடியாக்கள் ஆஸ்மியை பாராட்ட விரும்பவில்லை. ஆஸ்மி மும்பையில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்காக நீதி வென்றிட போராடிய அந்த வீரத்தியாகி பயங்கரவாத ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புடினுக்கு எதிராக தீரத் துடன் போராடி மூன்றாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வீரப்பெண்மணி ரஷ்யப் பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி அன்னாபொலிட் கோவ்ஸ்கியாவுக்கு இணையாக போற்றத்தக்கவர் வழக்கறிஞர் ஷஹித் ஆஸ்மி.

ரஷ்யாவிலோ, சீனாவிலோ, ஈரானிலோ அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தால் மேற்குலகம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.

ஆஸ்மியின் நீதிக்கான யுத்தம் அசாத்திய துணிச்சல்மிக்கது. அவர் அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் என கூறப்படும் அல்காயிதா, தாலிபன் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தவறாக குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காகவும் ஆஸ்மி சட்டயுத்தத்தில் இறங்கினார். நான் நேரடியாக கேட்க விரும்புவதெல்லாம். ஷஹீதின் படுகொலையில் பயனடையந்தது இந்திய புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கான பதில் தான் இதற்கான பதிலும், இந்திய உள்துறை அமைச்சகம், ரா, இன்டலிஜென்ட்ஸ் பீரோ போன்றவைகளால் கற்பிக்கப் பட்ட பயங்கரவாதம் என்ற கற்பிதத்தை உடைத்து ஒவ்வொரு வழக்கையும் ஜெயித்துக்காட்டினார்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஏராளமான பேருக் காக வாதாடி அவற்றில் பெரும் பாலான வழக்குகளில் வெற்றி கண்டு மகாராஷ்ட்ரா காவல் துறையின் இழிசெயலை அம்பலப்படுத்தினார்.

2008ம் ஆண்டுவரை கைது செய் யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் ஏறக் குறைய ஒரு டஜன் பேருக்காக வாதாடி னார். குஜராத்தில் பல்வேறு பயங்கர வாதக் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்பட்ட பலருக்கு சட்டப்பூர்வமான ஆதரவு கொடுத் தார் ஆஸ்மி.

கடந்த ஜுலை மாதத்தில் மும்பை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஆஸ்மிக்கு எதிரிகள் உருவானார்கள்.

சிறைச்சாலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக அடைக் கப்பட்டவர்களை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கினார்கள். கொடூரமான தாக்குதல் தொடுத்த சிறை காவலர்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற் றியை ஈட்டினார் ஆஸ்மி.

இந்த நிகழ்வு சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரி களின் வெறுப்புக்கு தீனி போடு வதாக அமைந்தது.

கடந்த டிசம்பர் 11&ம் தேதி இந் நிகழ்வைக் குறித்து அவரது அலுவலகத்தில் என்னிடம் ஆஸ்மி கூறினார். சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கிய வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்த அன்று எங்கள் சேரியில் இருந்து ஏராளமான அப்பாவிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி இழுத்துச் சென்று உதைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார் ஆஸ்மி.

நான் அவரை ஜுலை 2008&ல் முதன்முறையாக சந்தித்தபோது, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல் துறையினரால் புனையப்பட்ட சங்கதிகளை எனக்கு வழங்கினார். ஷஹித் ஆஸ்மி வழங்கிய தகவல்கள் வைத்து ஒரே மாதத்தில் சிமி அமைப்பினர் மீதான வழக்குகள் குறித்த புலனாய்வு தகவல்களை குறித்த முழுமையான செய்தி தெஹல்காவில் வெளியிடப்பட்டது. சிமி அமைப் பினர் எவ்வாறு பொய் யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப் பட்டனர் என்ற ஆதாரபூர்வ செய்திகள் தெஹல்காவில் வெளியானது.

இந்ததேசம் மறுக்கவே முடியாத, சவால் விடவும் துணியாத நிகழ்வாக இது அமைந்தது.

மகாராஷ்ட்ரா கண்ட்ரோல் ஆஃப் ஆர்கணைஸ்ட் கிரைம்ஆக்ட் ((MCOCA) என்ற மகாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புச்சட்டம் குறித்து உண்மைகளை எங்கள் தெஹல்கா இதழைச் சேர்ந்த ரானா அய்யூப் கடந்த மாதம் வெளிவந்த இதழில் அம்பலப்படுத்தினார்.

(MCOCA) சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து முழுமையான செய்தி வந்தது ஷஹித் ஆஸ்மியின் வற்புறுத்தலால் தான் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கடந்த மாதம் ஆஸ்மியை நான் சந்தித்தேன். மூன்று முக்கிய வழக்குகளில்தான் தீவிரமாக இறங்கி சட்டயுத்தம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

2006-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறிப்பாக மும்பையில் 187 மக்கள் உயரிழக்கக் காரணமாக இருந்த ரயில்குண்டு வெடிப்பு வழக்கு 37 அப்பாவிகளை பலி கொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் தான் ஆஜராவதாகக் குறிப்பிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் தவறாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் மீதான குற்றச் சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை. (ஜீரோ எவிடென்ஸ்).

மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து ஆஸ்மி உச்சநீதிமன்றம் சென்றார். இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் விரோதமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே இயற்றமுடியும் என் றார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஆஸ்மியின் வாழ்வு வீர வாழ்வு, வீரமரணமடைந்த ஆஸ்மிக்கு 32 வயது தான். ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாகப் பிறந்த ஆஸ்மியின் வாழ்வு 1992&ல் மாறியது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்த மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவன் ஆஸ்மியை பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு கொல்ல முயன்றனர்.

ஹிந்து நண்பரான அண்டை வீட்டுக்காரர் ஷஹித்தை காப்பாற்றினார்.

ஆஸ்மிக்கு 16 வயதாக இருக்கும் போது தோளில் துப்பாக்கி தூக்கி காஷ்மீருக்கு சென்றார்.எல்லை தாண்டி செல்லவும் முயன்றிருக்கிறார். என்னவோ தெரியவில்லை. உடனடியாக திரும்பிவிட்டார் என்று அவரது அண்ணன் ஆரிஃப் என்னிடம் கூறினார்.

1994&ம் ஆஸ்மி கைது செய் யப்பட்டார். இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஒரே ஆதாரமாக குறிப் பிடப்பட்டது அவர் ஒருபோதும் கொடுக்காத ஒப்புக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் ஆஸ்மிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.

டெல்லி திஹார் ஜெயிலில் ஆஸ்மி சும்மா இருக்கவில்லை. பட்டப்படிப்பு பயின்றார். சிறையில் அடைக்கப்பட் டவர்களின் சட்ட ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தார்.

2001&ம் ஆண்டு ஷஹீத் ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த உடன் இதழியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்வியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தான் துணை ஆசிரியராக பணி யாற்றிய பத்திரிகையிலிருந்து விலகி வழக்கறிஞர் மஜீத்திடம் ஜுனியராக மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். நான் ஏழைகளுக்காகவே பாடு படவே விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்மி பிரபலமானபின்னரும் கூட பெரும்பாலான கட்சிக்காரர்களிடம் கட்டணம் வாங்கியதை நான் பார்த்ததே இல்லை என்றார் அவரது அண்ணன் ஆரிஃப்.

மும்பையில், அந்த திங்கட் கிழமை (பிப்&11) நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண் டிருந்தார். சுற்றியிருந்த மக்கள் ஏதும் புரியாமல் அமைதியாய் இருந்தனர்.

அதே நாளில் நான் அவசர வேலையாக சென்னை வந்து இருந்தபோது, நான் கேட்ட செய்தி இடியாய் என்னைத் தாக்கியது. ஷஹீத்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியே அது.

நான் தங்கியிருந்த தனியறை யில் உடைந்து அழுதேன். எனது மனம் பின்னோக்கி சென்றது. 1991&ம் ஆண்டு தொழிற்சங்க ஜாம்பவானும் சத்திஸ்கர் பழங்குடிமக்களுக்காக பாடு பட்ட சங்கர் குகாநியோகி சுட்டுக் கொல்லப்பட்டது என் நினைவுக்கு வந்தது.

அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்திருந்தேன். அது என் மனதில் நிழலாடியது. 18 மாதங்களுக்கு முன்பு ஷஹீத்தை சந்தித்ததிலிருந்து என்வாழ்வில் வருடக்கணக்காக எனது இலக்கற்ற பத்திரிகை வாழ்வை புதுப்பித்ததைப் போன்று இருந்தது.

நீதிக்கான போராட்டத்திலும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்த எனது போரிலும் ஷஹீத் எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக் கினார். எனது கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வற்றியும் விட்டது. கண்ணீருடன் சென்னை தெருக் களில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

மும்பையிலிருந்து அதாவுர் ரஹ்மான் என்ற முதியவர் ஒரு வர் எனக்கு போன் செய்தார். (மும்பையில் 2006&ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட இருவரின் தந்தை தான் அதாவுர் ரஹ்மான்.

இந்த வழக்கிலும் ஷஹீத் தான் வாதாடினார்.) அவர், சாஹிப் என்று பேச ஆரம் பிக்கும்போதே, குரல் உடைந்தது. நாங்கள் இனி என்ன செய்வோம்? என்றார்.

நான் அவரிடம் மட்டும் அல்ல ஒவ்வொரிடம் சொல்கிறேன். ஷஹித்சாகவில்லை. அவரது சீரிய சாதனைகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

Comments Off on மாவீரன் சஹீத் ஆஷ்மி படுகொலை ஓராண்டாகியும் விடை காண முடியா வினாக்கள்

கண்றாவி தினம்

பிப்ரவரி 14 2007 அன்று மக்கள் உரிமையில் நான் எழுதிய தலையங்கம் இதனை பல்வேறு இணைய தளங்களும் மகிழ்ச்சியுடன் மறு பதிப்பு செய்தன மீண்டும் ஒரு நினைவூட்டல்

கண்றாவி தினம்
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்மண்ணில் குமரர்க்குமாமலையும்சிறு கடுகாம்-என்றான் பாவேந்தர் பாரதிதாசன். உண்மையான அன்பு, உள்ளார்ந்த காதல், இணை பிரியா தன்மையுடன் உள்ள நேசிப்பின் மகத்துவத்தைக் கூறி காதலியின் கடைக்கண் பார்வையைப் பெற்றால் மலையைக் கூட ஒரு கடுகாக எண்ணி, எவ்வாறெனில் மலையைப் போன்ற ஒரு கடினமான செயலைக்கூட கடுகினைப் போல் எளிதாகக் கருதி சடுதியில் முடிப்பான் என ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் பாரதிதாசன் பாடியுள்ளார்.

ஆனால் பெண்மையை, இளமையை, பண்பாட்டுப் பெருமையைக் கூறுபோடும் விதமாக காதலர் தினம் என்ற பெயரில் கன்றாவி தினத்தை மேற்கத்திய கலாச்சார சீரழிவை நம்நாட்டிலும் சில வேலையற்றது இறக்குமதி செய்து தொலைத்துள்ளனர்.விற்பனைக் கண்காட்சிகளை நடத்துவதைப் போல வாழ்த்து அட்டைகளும், காதல் ஈமெயில்களும் தடபுடலாய் பரிமாறிக் கொள்கின்றனர். கலாச்சார சீரழிவின் மொத்த குத்தகைதாரர்களான தொலைக்காட்சி சேனல்கள் காதலர் தினத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி கணிசமாய் காசு பண்ணி விடுகின்றன.

இளசுகள் கூடும் இடங்களில் பச்சை வண்ண உடை அணிந்து சென்றால் நான் ரெடி (இன்னும் எனக்கு காதலர் (அ) காதலி இல்லை) என்பதை உணர்த்தும் சிக்னலாம். இதை வைத்து புதிதாக தங்கள் காதல் ஜோடியை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். ரோஜாக்களின் மவுசு கூடுகிறது. மணக்கும் ரோஜா, மயக்கும் மல்லிகை, கசங்கும் காகிதப் பூ வரை விலை ஏற்றத்தில் இறக்கை கட்டி பறக்கும். இளைய தலைமுறை யினரின் சிந்தனையில் சிதிலங்களை ஏற்படுத்திவரும் இத்தகைய கொண்டாட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

கல்வி கற்க வேண்டிய வயதில், தனது எதிர்கால வாழ்க்கைப் பாதையை தெரிந் தெடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பருவத்தில் நற்குணங்களுடன், நன்னடத்தையுடன் தனது தாய் தந்தையரையும் சுற்றத்தாரை யும் பெருமைப்படுத்த வேண்டிய பருவத்தில், சில்லறைத்தனமான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனதை இளைய தலைமுறையினர் பறிகொடுத்து விடக்கூடாது.

நமக்குத் தெரிந்த எத்தனையோ இளைஞர்கள், இளைஞிகள் இந்தக் காதல் கன்றாவியால் தங்கள் எதிர்காலத்தைத் தெளிவாக தெரிந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து துயரப்படுகிறோம் என்றும் மற்றும் இளைஞர் இளைஞிகள் காதல் செய்யும்போது வசந்த மாகத் தெரிந்த வாழ்வு பின்னர் இருண்டு வறண்டு காட்சி யளிக்கிறது என்றும் மனம் வெறுத்து சொன்னதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர் எனக்கு அருமையான வாழ்க்கையை அமைத்துத்தர என் பெற்றோர் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அவசரத் துடுக்கினால் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டேனே எனக் கதறியவர்களும் உண்டு.

விபரம் அறியாது, விபரீதம் புரியாது காதல் கட்டுக் கதைகளை இளைஞர்கள் தங்களுக்குள் ஊக்குவிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள இளம்பெண்களின் இதயமும் நஞ்சாகிறது.

இளைஞன் ஒருவன் ஜம்பமாக, பந்தாவாக கல்லூரியில் தன்னை மஞ்சுளாவும், மரிக்கொழுந்தும் மாறி மாறி காதலிப்பதாக கதை விடுவதும், அதைக்கண்டு தானும் ஒரு மாரிமுத்துவையோ, மாயாண்டியையோ விரும்பினால் ஒன்றும் தவறல்ல எனும் விபரீத முடிவுக்கு அவனது சகோதரியோ அல்லது அடுத்த வீட்டு இளம் பெண்ணே வரும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அருமை அருமையாய் வளர்த்தெடுத்த மக்களால் அவமானம் சுமக்கும் அவல நிலைக்கு பெற்றோர்கள் ஆளாகலாம்.

எத்தனை சமாதானங்கள் கூறினாலும் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே என்பதை அடித்துக் கூற முடியும். சமுதாயத்தில் திருமணமாகாமல் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் தொகை விலைவாசி போல் உயர்ந்து வரும்போது குறைந்தபட்சம் தனக்கு ஏற்ற பெண்ணைபெற்றவர்களுடன் ஆலோசித்து தேடி மணமுடிக்க வேண்டும். அதை விடுத்து இவனே இன்னும் சிலகாலம் கழித்து கறுப்பு வெள்ளைத் தாடியுடன் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருக்கும் தனது சகோதரிக்காக (அ) மகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டு ‘இந்த சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது’ என்று புலம்பும் நிலை அவனுக்கும் வரும்.

சமுதாயத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களின் பல்வேறு நலன் நாடும் விஷயங்களில் இதை நாம் எவ்வாறு மறந்தோம்.
காதலர் தினம் போன்றவற்றை கழிவுகளாகக் கருதி, திருமண இணை தேடும் விஷயத்தில் தெளிவினைப் பெறுவோம் .

Comments Off on கண்றாவி தினம்

வெடித்தது மக்கள் புரட்சி வெருண்டோடும் சர்வாதிகாரிகள் மிரண்டு போன மேற்குலகம்

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆகும் ? பிரெஞ்சு புரட்சியை பார்த்தவர்கள் யாரவது இப்போது இருக்கிறார்களா ? சோவியத் ரஷ்யாவின் புரட்சி, மாவோவின் தலைமையில் செஞ்சீன புரட்சி ..லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ . சைமன் போலிவர் உள்ளிட்ட புரட்சி தளபதிகளின் தலைமையில் வெடித்த பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி , இன்றும் கூட அமெரிக்கர்களை உறக்கத்திலும் புலம்பவைக்கும் வியட்நாமியர்களின் வீர புரட்சி என வெற்றி பெற்ற புரட்சிகளானலும் சரி ,ஷேய்க் அஹ்மது யாசீன் , ஹசனுல்பண்ணா , அபு முசஹ்பல் ஜர்காவி போன்ற சீரிய ஆளுமைகளின் தலைமையில் எதிர்காலத்தில் வெற்றி பெற்றே தீரும் என நம்பிக்கை ஊட்டி கொண்டுஇருக்கும் புரட்சிகளை பார்க்காதவர்கள் என அனைவரும் மக்கள் எழுச்சி போராட்டங்களை பார்க்க வேண்டும் என ஆசை கொண்டால் துநிசியாவிற்கும் எகிப்திற்கும் ஜோர்தானுக்கும் அல்ஜீரியாவுக்கும் ஒரு நடை சென்று பார்த்து விட்டு வாருங்கள்
அங்கெல்லாம் எரிமலைகள் வெடித்து கிளம்புகின்றன இத்தனை எரிமலைகள் இவ்வளவு காலமாக எங்கே இருந்தன என கேட்கிறீர்களா ? போராடும் மக்களின் உள்ளங்களில் இதுவரை இந்த எரிமலைகள் மையம் கொண்டு இருந்தன.
பொறுமை எல்லை கடந்தது எரிமலைகள் இடம் பெயர்ந்தன.கொந்தளிக்கிறது அரபுலகம். வெலவலத்து பொய் கிடக்கிறது ஐரோப்பியம் , தனது ஆதிக்க மேலாண்மை தனத்திற்குஇந்த மக்கள் புரட்சி இரங்கல் பா வாசித்து விடுமோ என்றெல்லாம் நொறுங்கிய பார்வையோடு அமெரிக்க விதிர்விதிர்த்து நிற்க விண்ணேறிய விலைவாசியால் சோர்ந்து கிடந்த இந்திய சமூகமும் மெல்ல உறக்கம் கலைத்து சோம்பல் முறித்து புரட்சியின் எழுச்சியை அவதானிக்க தொடங்கியுள்ளது.
துனிசியா எகிப்து ஜோர்டான் அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சியின் எழுச்சி நிகழ்வுகள் புகைபடங்களாக ஒளிப்படங்களாக ஊடகங்களில் வெளிப்படும் போது அவை படங்களாக அல்லாமல்இந்த கிரகத்தின் அனைத்து மக்களுக்கும் பாடங்களாக மாறியது எனில் அது மிகையல்ல
இனி புரட்சி முனைக்கு புறப்படுவோம்
சர்வாதிகாரத்தை துடைத்தெறிந்த துனிசியா
துனிசியாவில் 23 வருட கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அந்நாட்டு அதிபராகயிருந்த பின் அலியை நாட்டை விட்டு வெருண்டோடச் செய்தது துனீசியாவில் வறுமை மற்றும் வேலையின்மையின் காரணமாக வீதியில் இறங்கிப் போராடிய இளைய தலைமுறையினர்தான்எனில் அது மிகையல்ல
துனீசியாவில் நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்த 26 வயது இளைஞனின் தற்கொலை தீநெருபுபோரியாக மாறிகொடுங்கோலன் பின் அலியின் ஆட்சியை காவு எடுத்தது.
அல்ஜீரியா அது அமில மலை சிகரம்
அல்ஜீரியா மக்கள் புரட்சியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. ஜோர்டான் மற்றும் யேமன்நாடுகள் எதிர்ப்பு முழக்கங்களோடு ஆட்சியாளர்களை தூக்கி எறிய ஆயத்தமாகி வருகிறது.
அல்ஜியர்ஸ் , சண் ஆ , அம்மான் அலெக்சாண்ட்ரியா , கெய்ரோ உள்ளிட்ட நகரங்கள் மக்கள் திரளோடு நகரத்தொடங்கியுள்ளன.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் ஏராளமானோர் பங்கேற்ற போராட்டத்தை பாதுகாப்பு படை கடுமையாகஅடக்கியது . பொதுக்கூட்டங்களை தடைச் செய்யும் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.
தடை உடைத்து படை திரட்டினர் அல்ஜீரிய மக்கள். மக்கள் எழுச்சி கண்டு அரசு செய்வதறியாது தவிக்கிறது.இங்கும் வேலையில்லாத திண்டாட்டம் வறுமை அந்நாட்டு மக்களை ஆத்திர அமிலத்தில் ஆழ்த்தியது.துனிசியாவில் நடைபெற்றதைநிகழ்த்த விரும்புகிறோம் என வெளிப்படையாக வே தெரிவிக்கின்றனர புரட்சியாளர்கள்
அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
‘ராலி ஃபார் கல்சர்’ என்ற அமைப்பு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இவ்வமைப்பின் ஏராளமான தலைவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அரசு தடையை எதிர்த்து ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

1992 ஆம் ஆண்டு முதல் அல்ஜீரியாவில் அவசரச் சட்டம் அமுலில் உள்ளது. விலைவாசி உயர்வுக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட துணிந்துள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன

கந்தகக்கிடங்கான ஜோர்டான்

ஜோர்டான் அரசை தூக்கியெறிவோம் என அந்நாட்டு மக்கள் புரட்சியாளர்களாக உருவெடுத்தனர் விலைவாசியை குறைக்கவும் வேலையின்மையை போக்கவும் ஒரு புதிய நிதி திட்டத்தை .அந்த நாட்டு அரசு அறிவித்தது.அது வெறும் கண்துடைப்பு போதுமானதல்ல என கிளர்தெழுந்து மக்கள் திரள் வீதிக்கு வந்து நீதி கேட்டது.
பிரதமர் ஸாமிர் ரிஃபாஈ பதவியை விட்டு ஓடும் வரை போராடுவோம் மக்கள் ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.
துனிசியாவின் பின் அலி ஜெயினுல் ஆப்தீனை போல் நம் மன்னரும் அடைக்கலம் தேடி ஓட வேண்டும் என போராட்டகாரர்கள் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர்.
ஜோர்டானில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரிஃபாயி நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களின் ஆத்திர அணையை உடைத்தது.. அத்தியாவசியப் பொருட்களுக்கு அளிக்கப்படும் வரி சலுகையை நீக்கியது மக்களை அதிருப்தியுற்ற செய்தது.

பிரதமரை மன்னர் அப்துல்லாஹ் நேரடியாக நியமிப்பதை கைவிட்டுவிட்டு ஜனநாயக ரீதியாக பிரதமரை தேர்வுச் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர் போராட்டக்காரர்கள்
மன்னர் வழிகாட்டியாக மட்டும் இருந்தால்போது. நாட்டின் நிர்வாக விஷயங்களில் செயல்படுத்த முனையக்கூடாது மக்கள் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

துனீசியாவில் சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் ஆட்சியை கவிழச்செய்து அவரை நாட்டைவிட்டு துரத்தக் காரணமான ஜனநாயக வழியிலான மக்கள் புரட்சி அரபகம் முழுவதும் பற்றி பரவுகிறது.

சர்வாதிகாரத்தின் கடைசி புகலிடம் காலடி மண்
என உணர்த்த துடிக்கும் யேமன்

ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்து இங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.யெமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவிலக வேண்டும எனக்கோரி கோரி அந்நாட்டில் மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்கின்றன.

ஸன்ஆ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாணவர்கள், சமூகசேவர்கள், எதிர்கட்சியினர் கலந்துக்கொண்ட பிரமாண்டமான கண்டனப் போராட்டம் யெமனில் முதன் முறையாக அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

துறைமுக நகரமான ஏதனிலும் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர்களுக்கு காயமேற்பட்டது. 22 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் ஆயுள் முடியும்வரை ஆட்சிபுரிய வழிவகைச் செய்யும் வகையிலான சட்டம் மக்களைகடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைநகரான ஸன்ஆவில் எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட புரட்சியாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.

சர்வாதிகாரி ஸாலிஹ் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என யெமன் நாட்டின் பிரபல பெண் தலைவரான தவக்குல் கர்மான் அறிவித்துள்ளார்.

யெமன் நாட்டின் தெற்கு பகுதியில் ஜனநாயகவாதிகளும், வடக்கு பகுதியில் ஷியா புரட்சியாளர்களும், பாராளுமன்ற எதிர்கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர் என தவக்குல் கர்மான் தெரிவித்தார்.

இஸ்லாமிய கட்சியான அல் இஸ்லாஹ் மற்றும் யெமன் நாட்டின் பிரபல மனித உரிமை அமைப்பின் தலைவர்தான் தவக்குல் கர்மான். யெமன் நாட்டில் 1978 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் ஸாலிஹின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகத்தான் மக்கள் திரள் போராட்டம் நடந்துவருகிது .

அல்ஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் தேர்தல் நாடகங்கள் மூலம் குடும்ப ஆட்சியை நடத்திவரும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிராக் மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
அரபு உலகில் வறுமையிலும் பசியிலும் உழலும் மக்களிடமிருந்து போராட்ட புரட்சி உருவாக இவ்வளவு காலம் தாமதித்ததுதான்நிச்சயம் வியப்பை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்சு போன்ற பல்லுபோன கிழட்டு ஏகாதிபத்திய சிங்கங்களின் ஆதரவுடன் அந்நாடுகளில் வாழும் அப்பாவி மக்களின் ஜனநாயக உரிமைகளை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காலில் போட்டு மிதித்தாலும், அவர்கள் கொடும் பசியினாலும், வறுமையினாலும் வாடினாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளலாம எனக் கருதி சுகபோக வாழ்வில் மூழ்கியிருந்த சர்வாதிகாரிகளின் கனவு தகர்ந்து போனதன் காட்சிகளைத்தான துனீஸ், கெய்ரோ, ஸன்ஆ, அம்மான், அல்ஜீர்ஸ் வீதிகளில் மக்களின் போராட்டங்களாக நாம் காண்கிறோம்.
முஸ்லிம் களின் வாழ்க்கை நெறியான இஸ்லாம்தான் அந்த சமூகத்தின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நடக்கும் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக திகழ்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அரபுலக வீதிகளில் திரளும் இந்த மக்கள் புரட்சி அதிக்க சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றால் அது மிகையன்று.
எரிமலையான எகிப்து
எகிப்தில் புரட்சியாளர்களின் போராட்டத்திற்கு தலைமை வகிக்க போவதாக கூறிய முன்னாள் அணு ஆற்றல் முகமையின் தலைவர் அல் பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஒரு திடீர் திருப்பம்
எகிப்து மக்கள் இதுவரை அனுபவித்த சோகத்திற்கு அளவில்லை காலை முதல் இரவு தூங்கும் வரை தந்தூரி அடுப்பில் வெந்து கிடந்த ஒரு பூச்சாண்டி போம்மையைபோல் தோற்றமளிக்கும் ஹோஸ்னி முபாரக்கை அனைத்து ஊடகங்களில் கண்டு தொலைக்க வேண்டிய அவல நிலை.
அதுவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடிய தண்டனை
மக்கள் ஆட்சிஎன்றால் இது தானா என வேதனையின் விளிம்பில் விக்கித்து நின்றனர்.அவர்களுக்கு ஆறுதல் வழ்கங்கிய பிரதான எதிர்கட்சியான இஹ்வான்களோ வெஞ்சிறையில் பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் வெறுத்து போயினர்.மக்கள் புரட்சி முன்னெடுக்கப்பட்டது.
சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும் மக்களின் உரிமைகளை முபாரக் நீண்டகாலமாக பறித்தார் .ரவுயகளின் ஆயுதங்களை நம்பி அவர் எகிப்தை ஆட்சிபுரிந்தார். இதற்கெதிராகத்தான் எகிப்து நாட்டு மக்கள் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் மக்கள்அடங்கப்போவதில்லை என அவர்கள் தங்களின் நடவடிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் போராட்டத்தில் ஏராளமானோர் . கொல்லப்பட்டுள்ளனர் .ஆயிரத்திற்குமேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு தனி மனிதருக்கும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் நிகழ்ந்துள்ளது. எகிப்து நாட்டு மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அவர் அடங்கியிருக்கமாட்டார்கள். முபாரக் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுவதையும் காண்பதற்காகத்தான் எகிப்திய மக்கள் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல. நாட்டிற்கு நல்லதை நாடியவர்கள் முபாரக்கை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முபாரக் தயாராகவில்லை. இப்போது அவருக்கான தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.

இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநாட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்யக்கூடும் எ ன்ற அச்சத்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில்இஹ்வான்கள் மிக சாதுர்யத்துடன் காய்களை நகர்த்திவருகிறார்கள்

கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது.

ஆனால், தங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப தலை அசைக்கும்ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பதுக் குறித்த அச்சத்தின் உச்சத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.

காஸ்ஸாவிலிருந்து எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் கலந்துகொள்கின்றனர் என்ற பரப்புரை ம் இதனடிப்படையில்தான் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர வேண்டும், வேறொரு இளம் அடிமையிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற எரிச்சலே காரணம் எனவும் கருதப்படுகிறது.

எகிப்தியபாதுகாப்பு படையில் இஸ்லாமிய சிந்தனாவாதிகளுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவை தெரிவித்த பாதுகாப்புபடையினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமறுக்கின்றனர். அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை உறுதிச் செய்துவிட்டு முபாரக் நாட்டைவிட்டு வெளியேறு என ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக் ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான ஸ்ட்ராட் ஃபோர் தெரிவிக்கிறது.

1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்தது போல ராணுவம் தங்களுடன் இணையும் என போராட்டக்காரர்கள் கருதுகின்றனர். முன்பு கமால் அப்துல் நாஸரின் தலைமையிலான இளைய அதிகாரிகள் பிரிட்டீஷாரின் கைப்பாவையாக செயல்பட்ட மன்னர் ஃபாரூக்கை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அதிகாரத்தை கைப்பற்றினர் என்பது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்

எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக்கோரி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வரும் மக்கள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.

அல்பராதி தனக்கு விதிக்கப்பட்ட வீட்டுக் காவலையும் மீறி தஹ்ரிர் ஸ்கொயரில் நடந்த பிரமாண்டப் போராட்டத்தில் கலந்து கொண்டார். உடனடியாக முபாரக் பதவிவிலக வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

முபாரக் இன்றே பதவி விலக வேண்டும். நாட்டில் சுமூகமான ஒற்றுமையான அரசாங்கம் அமைய சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

எ கிப்தின் சினாய் தீவில் சர்வாதிகார சக்திகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை அந்நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சந்தேகத்தையும் அச்சத்தையுமேற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் குவிந்தன இஸ்ரேல் ஆயுதங்கள்

போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது கொடும் தாக்குதல் நடத்த அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாகதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்டுள்ள வாயுக்கள் அடங்கிய ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. போராட்டத்தை அழிக்க முனையும் முக்கிய சதியாக இது கருதப்படுகிறது.
பீதியில் பிதற்றும் இஸ்ரேல் பிரதமர்
எகிப்தில் ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையில் இஸ்ரேல்உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அராஜகங்கள் நிறைந்த சூழலில் ஒரு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும். எனஇஹ்வான்களை பெயர் குறிப்பிடாமல் கூறினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான் சம்பவித்தது என நேற்று முன்தினம் ஜெர்மனி சான்ஸ்லர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தங்களின் உற்றத் தோழனான முபாரக் தனிமைப்படுத்தப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது.முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காதீர்கள் என இஸ்ரேல் அமெரிக்காவுடனும், மேற்கத்திய நாடுகளிடமும் கெஞ்சோ கெஞ்சு என கெஞ்சுகிறது.முபாரக்கை திட்டாதே ஐந்து
எகிப்து நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென இஸ்ரேல் கூறியுள்ளது.

எகிப்திலும், மேற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை(?)யை நிலைநாட்டுவதில் முபாரக்கை ஆதரிப்பது அவசியம் என இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கு முக்கிய நாடுகளில் தங்களின் தூதரக பிரதிநிதிகளுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக ஹாரட்ஸ் பத்திரிகை கூறுகிறது.

ஆட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளாததை காரணங்காட்டி முபாரக்கை மேற்கத்திய நாடுகள் விமர்சித்திருந்தன. இதனால் நெருக்கடியான காலக்கட்டத்தில் முபாரக் தனிமைப்படுத்தப்பட்டார்.

அமெரிக்காவின் உற்ற தோழனான முபாரக் இஸ்ரேலுக்கும் நெருக்கமானவர்தான். காஸ்ஸாவின் மீது தடை ஏற்படுத்தும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் அளித்தவர் முபாரக்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் திரள் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு காரணமானால் அது தங்களையும் பாதிக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. எகிப்தின் நிலைமைகளைக் குறித்து மதிப்பீடுச்செய்ய இஸ்ரேலின் ராணுவ தலைமை அவசரக் கூட்டத்தை கூட்டியது. முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்தால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல மணிநேரம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எகிப்தின் நிலைமைகள் குறித்து நாங்கள் கவலையுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக இஸ்ரேலின் கூட்டாளியான முபாரக்கை இழந்து விடுவோமா? என இஸ்ரேல் கவலையில் உள்ளது. எகிப்திலிருந்து காஸ்ஸாவிற்கு செல்லும் எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடு பல இடங்களிலும் சீர்குலைந்துவிட்டது. ஹமாஸ் இயக்கம் இவ்வழிகள் மூலம் ஆயுதங்களை கடத்துவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும், எகிப்து நாட்டு சிறையிலிருந்து வெளியேறிய ஹமாஸ் போராளிகள் காஸ்ஸாவிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்துள்ளது

எகிப்திய மக்களுக்கு துருக்கி , ஈரான் பகிரங்க ஆதரவு
முபாரக்கை ஆட்சியை நாட்ட்டி விட்டு விரட்டுவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருக்கும் பல லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் தார்மீக ஆதரவினை வழங்கியுள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹோச்னிக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி ஒருவாரம் கழிந்தபிறகும் மெளனம் சாதித்து வந்த துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் ஏற்தொகன் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டுமானால் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்திற்கு நன்மையை ஏற்படுத்தும் காரியங்களை செய்யுங்கள். மக்களை திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என முபாரக்கிடம்அவர் தெரிவித்துள்ளார்.

எகிப்து சுமூகமான சூழலுக்கு மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனதுமுழு ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில் சுதந்திரத்திற்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் இருப்போம். மகத்தான நாடான எகிப்தில் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமிய மேற்காசியா உருவாக உதவும் என நம்புவதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் அரபுலகத்தை அதிரவைத்துள்ள போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதாக ஸாலிஹி கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

பிராந்தியத்தில் மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி கவிழவேண்டும். மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நிரூபிக்கின்றனர் துனீசியா மற்றும் எகிப்து நாட்டு மக்கள் என ஸாலிஹி தெரிவித்தார்
.
நகைச்சுவை பாத்திரத்தில் இந்திய வெளியுறவுத்துறை
எகிப்து நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக உக்கிரமடைந்துள்ள மக்கள் திரள் போராட்டத்தைக் குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்பிரச்சனை எகிப்தின் உள்நாட்டு பிரச்சனை என அபாரமான (?)கருத்தினை உதிர்த்துள்ளார்.
மேலும் இ ‘எகிப்தின் நெருக்கடிக்குதீர்வு காண போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் அங்கீகரிக்கும் தீர்வை எகிப்து அரசு முன்வைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். என்றார்.

புரட்சியில் முக்கிய அங்கம் வகிக்கும் இஹ்வான்கள்

, ஹுஸ்னி முபாரக்குடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை இஹ்வான்கள் அறிவித்திரிக்கிரார்கள்

எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் வெடித்துக் கிளம்பிய சூழலில் அந்நாட்டு சர்வாதிகாரிஹோ ஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமென மூத்த அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து மற்றும் துனீசியாவின் நிகழ்வுகளைக் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட செனட் கூட்டத்திற்கு பிறகு செனட்டர் பில் நெல்சன் தனது கருத்தை வெளியிட்டார். இனிமேலும் முபாரக் ஆட்சியை விட்டு கீழே இறங்காமல் இருக்கமுடியாது.

பாதுகாப்பு படையை பிரயோகித்தும், இணையதளத்தை செயலிழக்கச் செய்தும் புரட்சியாளர்களை தடுக்கவியலாது. இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற வலுவானசக்திகளுக்க் வாசலை திறந்துவிட வேண்டும் என நெல்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஹ்வாங்களுடன் தங்களுக்கு எவ்வித தொடர்புமில்லை என வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி செய்து வரும் ஹோஸ்னி முபாரக்கின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தலைநகர் கொய்ரோவில் உள்ள சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டதை தொடர்ந்து, அதிபர் முபாரக் மக்களின் போராட்டத்திற்கு பணிந்தார். தற்போதைய ஆட்சி காலம் வரை இருப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் கெஞ்சி ப்பார்த்தார்.

பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாடு வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் போர் தீவிரமடைந்தது.

பன்னாட்டு அணுஆற்றல் கழகத்தின் முன்னாள் தலைவரான முகமது அல்பராதி மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். செய்தியாளர்களிடம் , முபாரக் பதவி விலகாமல் நீடிப்பது நாட்டின் நிலைமையை குலைக்கும் என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், முபாரக்கிற்கு தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், எகிப்தில் உரிய மாற்றம் மேற்கொள்வதே அர்த்தம் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தேன் என்று பல்டி அடித்தார்.

போராட்டம்தீவிரம் அடையும் முன்பு உடனடியாகஹோஸ்னி முபாரக்பதவி விலக வேண்டுமென எகிப்து நாட்டைச் சார்ந்த 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிபீடத்தின் கண்காணிப்பில் நாடாளுமன்றம்தான் அதிபர் தேர்தல்களை நடத்தவேண்டுமென கெய்ரோ இன்ஸ்ட்யூட் ஆஃப் ஹியூமன் ரைட் ஸ்டடீஸ், செண்டர் ஃபார் எக்ணாமிக்ஸ் அண்ட் சோசியல் ரைட், அரப் செண்டர் ஃபார் இண்டிபெண்டண்ட்ஸ் ஆஃப் ஜுடிஸியரி உள்பட முக்கிய மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உட்படும் ஆணையத்தை உருவாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எகிப்து நாட்டு மக்களுக்கு தேவையில்லாத முபாரக்கை அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது என எகிப்து நாட்டின் முக்கிய எதிர் கட்சியான இஹாவானுள் முஸ்லிமீன் எச்சரித்துள்ளது.

எகிப்திய மக்களைத்தான் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும்மக்களை அடக்கி ஒடுக்கி படு கொலைச்செய்த அரசுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளாத ஐ.நாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு.

புதிய அரசை உருவாக்குவதற்கு முஹம்மது அல்பராதி போன்ற எந்த சுதந்திர வேட்பாளர்களையும் ஆதரிக்க தயார் எனவும் இஹ்வான்கள் அதிரடியாய் அறிவித்துள்ளனர்.

எகிப்தின் எதிர்காலம் தஹ்ரீர் சதுக்கத்தில் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான போரட்டகாரகளின் கைகளில் தான் இருக்கிறது என்றே சொலவேண்டும் உலகம் முழுவதும் தஹ்ரீர் சதுக்கம் நோக்கி வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டுள்ளது/.

Comments Off on வெடித்தது மக்கள் புரட்சி வெருண்டோடும் சர்வாதிகாரிகள் மிரண்டு போன மேற்குலகம்