Abusalihonline's Blog

Just another WordPress.com site

ஆட்சிப்பணி தேர்வில் முஸ்லிம் மாணவர்களின் பங்கு ஓர் ஆய்வு

This slideshow requires JavaScript.

ஐ ஏ எஸ் தேர்வில் 31 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற இந்திய ஆட்சிப்பணி தேர்தலில் இந்தியா முழுவதும் 920 பேர் தேர்வாகியுள்ளனர் இதில் முஸ்லிம் சமூகத்தினர் 31 பேர் தேர்வாகியுள்ளனர் இந்திய ஆட்சிப்பணி இந்திய வெளியுறவுத்துறை , இந்திய காவல்பணி ஆகிய மத்திய பணிகளுக்கு நடைபெற்ற தேர்வில் ஏறக்குறைய 30 கோடி முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட ஒரு பரந்த சமூகத்தில் வெறும் 3 .36 சதவீதம் தான் தேர்வாகியுள்ளனர் என்பது உண்மையில் மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்

920 ஆட்சிப்பணி பணியிடங்களில் 428 பொது ஒதுக்கீடாகும் இதில் உடல் சவால் உள்ள 19 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 270 இடங்கள் ஒ பி சி என அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் 8 உடல் சவால் உள்ளவர்கள் அடங்குவர்.தலித் சமூகத்தவர்கள் 148 பேரில் ஒரு உடல் சவால் நிறைந்தவர் ஒருவரும் ஒதுக்கீடு பெறுவார் தலித் பழங்குடியினர் 74 பெரும் இந்திய ஆட்சிப்பணி பொறுப்புக்கு தேர்வாகியுள்ளனர்,

இனி இவர்கள் பயிற்சி முடிந்து நாட்டின் பல பாகங்களில் நிர்வாகத்தை திறம்பட நடத்துவர்ர்கள் ஆட்சிப்பணி தேர்வில் தேர்வான முஸ்லிம் மாணவர்களின் தர வரிசை படி பார்ப்போம்
கடந்த ஆண்டு அதாவது 2009 ஆம் ஆண்டு ஐ ஏ எஸ் தேர்வில் இந்திய நாட்டிலேயே முதலிடம் பிடித்தமாணவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஷா பைசல் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இவ்வாண்டு முஸ்லிம் மாணவர்களில் முதலிடம் என்பதே 35 ஆவது இடம் தான்

தாரிக் 35 வது இடம்
மன்னான் அக்தார் 55 வது இடம்
மீர் முஹமது அலி 59 இடம்
டானிஷ் அஸ்ரப் 145 இடம்
முஹமத் இம்ரான் 169 இடம்
சையது ஆபித் ரஷீத் ஷாஹ் 180 இடம்
சபார் அஜ்மல் கித்வாய் 187 இடம்
ஆதில் கான் 208 இடம்
முஹமெத் அலி ஷிஹாப் 226 இடம்
ஆபித் கான் 245 இடம்
அனம் பெனிஸ் 249 இடம்
குல்சார் அஹ்மத் வானி 341 இடம்

ரியாஸ் இக்பால் 363 இடம்
அஜீதாபேகம 397 இடம்
இல்யாஸ் 404 இடம்
அஞ்சும் ஆரா 408 இடம்
முஹமத் அலி 431 இடம்
ஷேய்க் அமீன் கான் யாசீன் கான் 450 இடம்
சையத் வாசிப் ஹைதர் 460 இடம்
மொஹ்சினா தபஸ்ஸும் 527 இடம்
ஒவேசா இக்பால் 572 இடம்
ஆபித் ஹுசைன் 585 இடம்

அஹ்மத் முயீன் பாரூக்கி 611 இடம்

இம்ரான் அஹ்மத் சித்திக் 655 இடம்
முஹமத் யாகூப் 737 இடம்
யூசுப் கபீர் அன்சாரி 740 இடம்
முஹமெத் ஐஜாஸ் 794 இடம்
அசார் ஜமால் 857 இடம்

கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்றாலும் இது மிகவும் மந்தமான நிலையில் உள்ளது மிகவும் சோகமாகும்
கடந்த 10 ஆண்டுகளில்ஐ ஏ எஸ் தேர்வில் முஸ்லிம் சமூகத்தின் தேர்ச்சி விகிதத்தினை பார்த்தோமானால்

2000 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 427 பேரில் 14 பேரும் 3 .3 சத வீதமும்
2001 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 417 பேரில் 12 பேரும் 2 . 9 சதவீதமும்
2002
286 9 பேரும் 3 1 சதா வீதமும்
2003 ஆம் ஆண்டில் 413 13 பேரும் 3 .1 சத வீதமும்
2004 422 13 3 . 2
2005 425 12 2 . 8
2006 474 18 3 .8
2007 734 27 3 . 7
2008 791 31 3 .9
2009 875 20 2 . 3
2010 920 31 3 . 26 என்ற சதவீதத்தில் உள்ளனர் நாம் அடைய வேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்பதையே இது காட்டுகிறது

ஐ ஏ எஸ் குறித்து விளம்பரம் நாளேடுகளில் வெளியானவுடன் உடனே ஆட்சிப்பணி கனவில் 547698 மாணவர்கள் விண்ணப்பித்தனர் அதில் 269036 பேர் முதல் கட்ட தேர்வில்தேறினர
12491 விண்ணப்பதாரர்கள் அதில் வடிகட்டப்பட்டு மெயின் டெஸ்ட் என்ற பிரதான தேர்வில் நுழைந்தனர் அவர்களில் 2589 பேர் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர் பின்னர் 920 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிப்பணி தேர்வில் நம்மவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Comments Off on ஆட்சிப்பணி தேர்வில் முஸ்லிம் மாணவர்களின் பங்கு ஓர் ஆய்வு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

டைபெற்று முடிந்துள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அஸ்ஸாம் மாநிலம் தவிர மீதம் உள்ள நான்கு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மூன்று மாநிலங்களிலும் மக்கள் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்கு விடை கொடுத்து விட்டார்கள். மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தோமானால் முஸ்லிம்களிடையே தங்கள் சமூக பிரதிநிதித்துவம் குறித்து தெளிவான, எழுச்சியான விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் வெற்றி பெற்றதை விட அதிகமானவர்கள் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இது எண்ணிக்கை வடிவில் மட்டுமல்ல, எண்ணத்தின் அடிப் படையில் கூட சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம். மகிழ்ச்சிக்குரிய மாற்றம் என்றால் அது மிகையல்ல.

2006 ஆம் ஆண்டில் 105
2011 ஆம் ஆண்டில் 130

கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு வங்காளம், கேரளா, அஸ்ஸாம் தமிழ்நாடு, புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 105 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து மாநிலங்களில் 130 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கேரளா 36

இனி மாநில வாரியாக பார்ப் போம். நம் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது 36 முஸ்லிம்கள் சட்டமன்றம் செல்கின்றனர். 140 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கேரளா வில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முன்னணி 72 இடங்களை கூட்டணியாகப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் கூட்டணி 68 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் இங்கு கூட்டணி பலத்தில்தான் முதல் அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவி களைப் பெற்றுள்ளது.காங்கிரஸ் 82 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான கேரளா முஸ்லிம் லீக் 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வென்றுள்ளது.

அஸ்ஸாம் 33

அஸ்ஸாம் மாநிலத்தில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் 33 முஸ்லிம்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்கின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் 9 இடங்களில் வென்ற அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி (கிமிஹிஞிதி) இந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய கட்சியாகவும், முக்கிய எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

16 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களும் இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் மற்றொன்றில் தலித் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரும் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கிமிஹிஞிதி தனித்த அடையாளத்துடன் பெரும் சக்தியாக வடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் 59

மேற்கு வங்காள சட்டமன்றத்தில் 59 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள் ஆவர். மேற்கு வங்க வரலாற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் நுழைவது இதுவே முதல் முறை. கடந்த 2006 சட்ட மன்றத் தேர்தலில் 46 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

294 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்காள சட்ட மன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதி த்துவம் 20 சதவீதத்தை தொட்டுள் ளது. 59 சட்டமன்ற உறுப்பினர் களில் ஏழு பேர் பெண்கள்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 226 தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. இடது சாரிகள் 61 தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்துள்ளனர். (மார்க்சிஸ்ட் 40, சிபிஐ 2, அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் 11, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 7, சமாஜ்வாடி கட்சி 1).

திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக தேர்ந் தெடுக் கப்பட்ட 226 சட்டமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம் உறுப்பி னர்கள் 40 பேர் என்பது குறிப்பி டத்தக்கது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள் 25 பேர், காங்கிரஸ் கட்சியில் 15 பேர்.

பொதுவாக காங்கிரஸ்& திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி யில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலானோர் புதுமுகங் களாவர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஹைதர் அஸீஸ் சபாய், ஹவ்ரா மாவட்டத்தில் உலுபெரியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி நூரே ஆலம் சவுத்ரி பிர்பும் மாவட்டத்தில் உள்ள முராரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷ்வானுர் ரஹ்மான் என்ற கணினி மென்பொருள் நிபுணரின் மர்ம மரணம் குறித்து மாநில ஆளும் கட்சிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் பெரும் பிரச்சாரத்தினை மேற்கொண்டதோடு, ரி ஸ்வானின் மூத்த சகோதரருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கியது. ருக்பானு ரஹ்மான் நாடியா மாவட்டத்தில் சப்ரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நந்திகிராமில் வெற்றி

சர்ச்சைக்குரிய நந்திகிராமில் நில ஆக்கிரமிப்பு கொள்கையை எதிர்த்து ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் பிரோஜா பீபி மீண்டும் வெற்றி பெற்றார். 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரோஜா பீபி இந்த தேர்தலிலும் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். நந்திகிராமில் திரிணா மூல் காங்கிரஸ் பெற்ற வெற்றி நெகிழ வைப்பதாக இருந்தது.

2006ல் இரண்டு என்ற அளவில் இருந்த முஸ்லிம் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2011 சட்டமன்ற தேர்தலில் 7 ஆக உயர்ந்துள்ளது. நந்திகிராம் பிரோஜா பீபியை தொடர்ந்து மேதிசபுர்ஜ்ஜில் இருந்து மும்தாஜ் பேகமும், மத்திய சொனார்பூர் தொகுதியில் இருந்து பிர்தௌசி பேகமும், தெற்கு 24 பர்கானா தொகுதியில் மஹ்மூதா பேகமும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நகராட்சி கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட 59 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களில் 15 பேர் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

புதுவையில் ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டார். திமுகவைச் சேர்ந்த நாஜிம் தேர்ந்தெடுக் கப்பட்டார். சிறிய யூனியன் பிரதேசத்தில் முன்பு இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் இருந் தனர்.

தமிழகத்தில் ம.ம.க.

தமிழகத்தில் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் 7 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந் தெடுக் கப்பட்டனர். தற்போது ஒன்று குறைந்து 6 பேர் சட்டமன்றம் செல்கின்றனர். அதிமுக சார்பில் திருச்சி (மேற்கு) தொகுதியில் மரியம் பிச்சை, ஆவடியில் அப்துல் ரஹீம், ராணிப்பேட்டையில் முஹம்மது ஜான் ஆகியோரும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ஆம்பூரில் அஸ்லம் பாஷா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் மனிதநேய மக்கள் கட்சி முதல் முறையாக இந்த தேர்தலின் மூலம் தனது கணக்கை துவக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மனதினில் இந்நிகழ்வு உற்சாக ஊற்றாக அமைந்ததுள்ளது

This slideshow requires JavaScript.

Comments Off on ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

ஒசாமாவின் லேட்டஸ்ட் மரணமும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுக்கதைகளும் ஒரு வரலாற்றுப்பார்வை

ஒசாமா பின்லாடன் கொலை குறித்து அமெரிக்கா பரப்பிவரும் கட்டுக்கதைகள் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்கள் ஆய்ந்து வரும் நிலையில் அமெரிக்கா ராணுவம் கப்சாக்களை பரப்புவது ஒன்றும் புதிய செய்தி அல்ல என்பதை மெய்ப்பிப்பதை போல தொடர் நிகழ்வுகளை ஆதாரங்களாக மேற்குலக ஊடகங்கள் சமர்ப்பிக்கின்றன.

குறிப்பாக கார்டியன் செய்தி ஏடு அமெரிக்க ராணுவத்துறை பரப்பும் பொய்கள் குறித்து வரலாற்றுபூர்வமாக சென்றவாரம் செய்திகளை வெளியிட்டுள்ளது.எழுத்தாளர் சாம் ஜோன்ஸ் அமெரிக்க ரானுவப்பொய்கள் குறித்தும் அதனை பரப்பும் விதம் குறித்தும் தெளிவாக அதில் குறிப்பிட்டுள்ளார்

2003 ஆம் ஆண்டு அமெரிக்காஈராக் மீது படையெடுத்தது.அமெரிக்க மற்றும் கூட்டுப்படைகளில் பணிபுரிந்த ஜெஸ்ஸிகா லின்ச் என்ற அமெரிக்க ராணுவ பெண் அதிகாரியை மார்ச் 23 ஆம் தேதி ஈராக் படைகள் கடத்தியதாகவும் படுகாயமடைந்த நிலையில் இருந்த அவரை அமெரிக்க ராணுவம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியன்று சதாம் ஹுசைனின் படைகளிடம்இருந்து வீரத்துடன் போரிட்டு மீண்ட ஜெஸ்ஸிகா லிஞ்சை குறித்து அமெரிக்க ஊடகங்கள் பெருமையுடன் இந்த செய்தியை வெளியிட்டன.
மேலும் இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு பிறகு முதல் முதலாக எதிரிப்படையிடம் பிடிபட்ட ஒரு பெண் ராணுவ அதிகாரி சதாம் ஹுசைன் படையிடம் வீரமாக போரிட்டு மீண்டு வந்ததாக ஒரு சாகசக்ககதையை போல அமெரிக்க தரப்பில் பரப்பினர் ஈராக்கில் அப்போது பணியாற்றிய அமெரிக்க மக்கள் தொடர்பு அதிகாரி ஜிம் வில்கின்சன் அமெரிக்க ராணுவத்தின் வீர தீர சாகச செயலாக இதனை பரப்பினார்.

ஜெஸ்ஸிகா சதாம் ஹுசைன் படைகளால் தாக்கப்படவில்லை அவர்மீது குண்டுகாயமோ வேறு எந்த காயமோ படவில்லை அவர் வாகனவிபத்தில் சிக்கி காயம் அடைந்தார் அவர் அபாய கட்டத்தில் தவிப்பதை பார்த்து இராக் படையினர் நசிரியா மருத்துவமனயில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் மருத்துவமனையில் உள்ளவர்கள் அனைவரும் அவரை நல்ல முறையில்பராமரித்தனர். அமெரிக்க படையினரிடம் நசிரியா மருத்துவமனயில் உள்ளவர்களே ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியபோது அமெரிக்காபடையினர் வேண்டும் என்றே சில செயற்கை காட்சிகளை உருவாக்கினர்

ஓடு ஓடு என்று அவர்களே கூச்சலிட்டுக்கொண்டு செயற்கை தாக்குதலை நடத்தி அதனைபடம் பிடித்து அந்த தாக்குதலில் எதிரிகளை கடுமையாக தனது துப்பாகியால் தாக்கி விட்டு வெற்றி வீராங்கனையாய் திரும்பினார்
என அமெரிக்க ராணுவம் பரப்பிய கதையை ஜெசிக்கமறுத்த போது உலகம் அதிர்ந்தது

ஜெசிக்கா ஈராக் ராணுவத்திடம் பிடிபட்டு பின்னர் வீர போர் நடத்து தான் மீண்டாரா ? ஈராக்கியர்கள் கருணையுடன் அவரை விடுவித்தனரா ? பென்டகனில் புளுகு பரப்பும் துறை என ஒன்று இருக்கிறதாமே அது பரப்பிய கதை ஜெசிக்கவோடு முடிந்து விட்டதா ? இப்படி நாளொரு கப்சாவும் பொழுதொரு புளுகுமாக பரப்பிக்கொண்டு இருக்கும் ஏகாதிபத்திய சக்தியின் பொய்மையின் அணிவகுப்பு மலைக்க வைத்தது.

நான் எந்த சாகசமும் படைக்கவில்லை ?ஆயுதம் வைத்து போராடவில்லை நான் வீராங்கனையும் அல்ல என்று தெரிவித்தார் ஆனால் பொய்மையை உண்மையாக்க ஹாலிவுட் பாணியில் படம் காட்டிய அமெரிக்க ராணுவம் அம்பலப்பட்டு தான் போனார்கள்

இதே போன்று ஒரு ரீல் விளையாட்டு ஆப்கானிஸ்தானிலும் நடந்தது பாட்டில் மன் என்பவர் செப்டம்பர் தாக்குதலுக்குப்பிறகு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான அவரை அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாராட்டினார் அவர் ஆப்கானிஸ்தான் போர்முனைக்கு அனுப்பபட்டார்
ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு ஆப்கனிஸ்தானில் போர்முனையில் அவர் உயிர் இழந்தார் அவர் எதிரிகளை எதிர்த்து வீரப்போர் புரிந்து தியாகி ஆனதாக புகழப்பட்டார்கொல்லப்பட்ட பின் அரசின் ராணுவ விருதான சில்வர் ஸ்டார் விருதும் அவருக்கு வழங்கிஅன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கவுரவித்தார்
ஆனால் நடந்தது என்ன அமெரிக்க ராணுவ வீரர்களால் தவறுதலாக சுடப்பட்டு கொல்லப்பட்டார் இத்தகவலை அவர் இறந்து ஐந்து வாரம் கழித்து அவரது குடும்பத்தினர் கூறி உண்மைகளை உலகுக்கு உரைத்தனர் காரணம் அவர் உயிர் தியாகம் குறித்து தேசிய தொலைகாட்ச்யில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது அதுவரை மவுனம் சாதித்த அவர்கள் பின்னர் உண்மைகளை கூறி அமெரிக்க ராணுவத்தின் முகத்திரை தோலுரித்தனர்

இதைப்போன்றே ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் நர்க்ரோவ் ஒசாமா ஆட்களால் கொல்லப்பட்டார் என கடந்த ஆண்டு அமெரிக்க தரப்பில் பரப்பப்பட்டது அமெரிக்க கூட்டுப்படைகள் தவறுதலாக வீசிய குண்டுகளால் அவர் கொல்லப்பட்டதாக பின்னர் உண்மைகள் வெளியானது ஒவ்வொரு பொய்யிலும் அமெரிக்கர்களின் திட்ட மிட்ட தந்திரம் வக்கிரம் கோர முகம் காட்டுகிறது ஒசாமாவை சமீபத்தில் கொன்றதாக சொல்லப்படும் கட்டுக்கதையும் நாளை அமெரிக்க போர்ப்படையினரால் அம்பலபடத்தான் போகிறது

This slideshow requires JavaScript.

Comments Off on ஒசாமாவின் லேட்டஸ்ட் மரணமும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுக்கதைகளும் ஒரு வரலாற்றுப்பார்வை

எத்தனை முறைதான் கொல்வார்கள் ஒசாமாவை ?

ஒசாமா பின்லாதன் அமெரிக்க பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஒபாமாஉறுதிப்படுத்தியுள்ளார்.
ஒசாமா தரைவழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த வாரமே இது நிகழ்ந்துவிட்டது. இருப்பினும் உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருந்தோம் என்று தெரிவித்தார்.ஒசாமா கொல்லப்பட்டுவிட்டார் என ஏகாதிபத்திய சக்திகள் அறிவிப்பது இது 14 வது தடவை . ஊடகங்கள் வாயிலாக் ஓய்வு ஒழிச்சலின்றி பரப்புரை நிகழ்த்தி விட்டு தானாகவே இது
அடங்கி விடுவது வாடிக்கை தான் என்றாலும் இப்போது ஒபாமாவே அறிவித்திருப்பது கொஞ்சம் உறுதிபடுத்திருப்பதுகொஞ்சம் புதியது.
நியுயார்க் வர்த்தக வளாகதாக்குதல் தொடர்பாக பின்லாதன் தேடப்படும் குற்றவாளி என அமெரிக்காஆப்கனிஸ்தான் முழுவதும் சல்லடை போட்டு தேடியது ஆனால் தற்போது பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தற்போது அறிவித்திருக்கிறது.ஒசாமா தன்மீது சாட்டப்பட்ட குற்றசாட்டுக்கள்குறித்து ஒருபோதும் ஒப்புக்கொண்டது இல்லை செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்திலும் தான் மற்றும் தனது அமைப்பினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்திருந்தார். எப்படியோ அந்த அத்தியாயம் முற்றுபெற்றது ஆனால் தீவிர வாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இனி உலகம் உள்ள அப்பாவி துன்புறுத்தும் போக்குக்கு முற்றுபுள்ளி வைக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் human rights watch dog இன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்

ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ஒசாமா பின் லேடன் என் ஆணையின்படி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.’. ‘அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக இந்தப் போரை நடத்தவில்லை, இனியும் அவ்வாறு செய்யாது என்பதை மீண்டும் உறுதிபடுத்திக்கொள்கிறோம்.’என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்

எங்கள் நாட்டில்வெளியில் இருந்து யாரும் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட முடியாது அதை பாகிஸ்தான் ஒரு போதும் அனுமதிக்காது இது தீவிரவாதத்திற்கு எதிரான முக்கிய வெற்றி என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசாகிலானி தெரவித்தார்

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதோடு பாகிஸ்தான் மீது அமெரிக்கா
நடத்தும் வான் தாக்குதல் ஒரு முற்றுபுள்ளியாக மாறவேண்டும் என பாகிஸ்தானின் எதிர்க்கட்சிதலைவர்களில் ஒருவரும் முன்னாள் கிரிக்கட் கேப்டனுமான இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார்
பின்லாதன் கொல்லப்பட்டது இன்றைய உலகிற்கு முக்கியமான செய்தி இதில் இருந்து தலிபான்கள் பாடம் கற்று கொள்ளவேண்டும் என ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கூறியுள்ளார்.

அரபுலகின் புனிதபோராளி ஒசாமாவின் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் எல்லாம் வல்ல இறைவன் அவர் மீது கருணை காட்டி உண்மை விசுவாசிகள் வீரதியாகிகள் வரிசையில் அவரை இணைத்துக்கொள்ளுமாறு பிரார்த்தனை செய்கிறோம் என பாலஸ்தீன முன்னணி அமைப்பான ஹமாசின் தலைவரும் பாலஸ்தீன முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனியா தெரிவித்திருந்தார்.

ஒசாமா கொல்லப்பட்டது நீதிக்கான வெற்றி சுதந்திரத்திற்கான வெற்றி . இந்த வெற்றியின் மகிழ்ச்சியில் அமெரிக்கர்களுடன் இஸ்ரேலியர்களும் பங்கு கொள்கின்றனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
ஒசாமா கொல்லப்பட்ட்ட செய்தி உலகமக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருக்கிறா

ஒண்ட இடமில்லாத ஒழிய இடமில்லாத, நீட்டி படுக்க முடியாத, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒழு செய்துவிட்டு பல வேலை தொழுகையை நிறைவேற்றி, ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு மட்டும் உண்டு பல நாட்கள் மலை முகட்டிலும், பாறை இடுக்குகளிலும், அடர்ந்த காட்டிலும், வேர்வை ஆறாக ஓடும் பாலைவனத்திலும், கையில் ஒரு குவாட்ஸ் கெடிகாரம் கூட கட்டாமல் (சாட்டிலைட்டில் தெரிந்துவிடும் என்று) வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை அவர் ஒசாமா அவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தை வாங்கி தரும் என்பது நிச்சயம். அவருடைய சொத்துக்கும் பணத்திற்கும் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம், தனது சிறுநீரக உபாதை, நீரிழிவு இவற்றிற்கு கூட சரியான மருத்துவம் செய்ய முடியாமல் இந்த அமெரிக்க நாய்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு, இறைவன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பான், இத்தனை கஷ்ட்டங்களையும் அவர் தாங்கி பிடித்து இஸ்லாமிய சகோதரன் அமெரிக்க நாயால் சாக கூடாது என்று தான் தவிர அவர் எந்த சுய சுயநலத்திற்காகவும் இத்தனை கஷ்டங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்து செல்லவில்லை. என தமிழின் முன்னணி செய்தி நாளேட்டில் வெளிநாட்டு வாசகர் ஒருவர் தனது கருத்தினை பதிந்து இருந்தார்.
வலைத்தளங்கள் காட்சி ஊடகங்கள் அச்சு ஊடகங்கள் என பலவும் ஒசாமாவின் மரணம் (?) குறித்து விரிவாக விவாத்தித்து வந்தாலும் ஒசாமா ஒரு கூர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக விளங்கினார். சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை அகற்றி பெரும் சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தானின் வீர்ப்போராளிகளோடு அவர் அமெரிக்க ஏகாதிபத்திய் ஆக்கிரமிப்பையும் சாய்க்கும் முயற்சியில் இறங்கும்போது தான் அவருக்கு கடுமையாக எதிர்ப்புகள் வந்தன.
இரட்டை கோபுர வளாக தாக்குதலில் தானோ தனது அமைப்போ ஈடுபடவே இல்லை என ஒசாமா பகிரங்கமாக மறுத்தார் அதனை அல்ஜசீரா தொலைகாட்சிக்காக தய்சீர் அலூனிஎன்ற செய்தியாளர் ஒசாமாவிடம் நேர் காணலாக பதிவு செய்தார். அதனை 2011 ஆம் ஆண்டு சி என் என் தொலைக்காட்சி ஒளிபரப்பியது ஆனால் அமெரிக்காவை அம்பலப்படுத்த யார் தான் விரும்புவார்கள் ?

உண்மையை வெளிக்கொண்டுவர முயன்ற செய்தியாளர் தய்சீர் அலூனி ஸ்பெயின் அரசால் கைது செய்யப்பட்டு இன்றும் வாடி வருகிறார்.
அல்காய்தா
ஒசாமா
பயங்கரவாதம்
இஸ்லாமிய தீவிரவாதிகள்
என்ற சொற்கள் எல்லாம்
எல்லாம் ஒரு தீய நோக்கத்தோடு வியூக நோக்கத்தோடு பரப்பப்படும் பரப்புரைஎன்பதை ஏற்றுகொள்பவர்கள் கூட தவறாக பார்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ ஒசாமா ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இரண்டாம் சேகுவாராவாக இந்த பூமி பந்தில் வாழும் உரிமை சுவாசிக்கும் மக்களால் நம்பப்படுகிறார் என்பது உண்மை . ஒசாமா பற்றிய விவகாரம் என்றாலே பொய்களுக்கு இறக்கை முளைத்துவிடுகிறது பூலோகம் முழுவதும் பறக்க தொடங்கி விடுகிறது
எத்தனை முறைதான் கொல்வார்கள் ஒசாமாவை ?
ஒசாமாவை தனது படையினர் சுட்டுக்கொன்று விட்டதாக
அமெரிக்க் அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார் ஒசாமா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல பலதடவை இதை போன்ற அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு சந்திசிரித்த கதை மனித உரிமை ஆர்வலர்களால் மறக்க முடியாதது.
டிசம்பர் 26 2001 ஆம் ஆண்டு அன்றைய பாகிஸ்தானின் பிரதமர் பெனாசிர் பூட்டோ ஒசாமாகொல்லப்பட்டு விட்டதாக பாக்ஸ் தொலைக்காட்சி யில் அறிவித்தார் கிட்டத்தட்ட பத்து ஆண்டு கழித்து ஒசாமா மீண்டும் (?)கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதரவு ஊடகங்களும் ஒசாமா கொல்லப்பட்டதாக பல தடவை அறிவித்துள்ளன. ஆனால்சில காலங்கள் கழித்து மீண்டும் அவைகள் ஒசாமா கொல்லப்பட்டார் என கொஞ்சம் கூட வெட்கமிலாமல் மீண்டும் மீண்டும் அறிவிப்பது வாடிக்கை திரும்ப திரும்ப எப்படி ஒருவர் சாவார் செத்து செத்து விளையாடுவது அவரது பொழுது போக்கா என்ன ?

தற்போது அவர் இறந்து போனதாக குறிப்பிட்டு வெளியிடப்படும் புகைப்படங்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட புகைப்படங்கள் என்றே நடுநிலை ஊடகங்கள் அடித்துக்கூறுகின்றனநடைபெற்ற சம்பவங்கள் உண்மை என்றால் முழுமையான வீடியோ பதிவுகளை வெளியிட்டுருக்கவேண்டும் ஆனால் டி என் ஏ ஆய்வுகள் செய்து உடலை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுவதையும் நம்ப முடியாததாகவே உள்ளது. நடுநிலையான எப்பக்கமும் சாராத் ஆய்வு நிபுணர்களை கொண்டு டி என் ஏ ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தனது ஆரசியல் செல்வாக்கை நிமிர்த்தவும் எதிர்வரும் அமெரிக்கஅதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் செய்து இருக்கும் சித்து வேலையாக் இது இருக்கக்கூடும் என்றே அடித்துக்கூறுகிரார்கள் செய்தியாளர்கள்

This slideshow requires JavaScript.

Comments Off on எத்தனை முறைதான் கொல்வார்கள் ஒசாமாவை ?