Abusalihonline's Blog

Just another WordPress.com site

அரபு நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகண்டு நடுங்கி கிடக்கிறார்கள் ஒபாமாவும் புஷ்ஷும் நோம் சோம்ஸ்கி

நோம் சோம்ஸ்கி நாம் வாழும் காலத்தில் உஅகில் வாழும் மிகப்பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர் 82 வயது அமெரிக்கரான இவர் ஆங்கில மொழியியல் அறிஞ்ர் ,தத்துவ போதகர்,உரிமை போராளி என பன்முக தன்மை கொண்டவர் பிறப்பால் அமெரிக்கராக இருந்த போதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக்கொள்கையையும். போருலாதாரக்கொள்கையையும் கடுமையாக விமரிசனம் செய்பவர்.நோம் சோம்ஸ்கி .
நோம்சோம்ஸ்கி சமீபத்தில் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகள் ,மக்கள் திரள் போராட்டங்கள் குறித்து தனது பிரத்யேக வலை தளத்தில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் அரபு இஸ்லாமிய உலகில் ஜனநாயகம் என்பது நீண்ட நெடிய வராலாற்று பாரம்பரியம் கொண்டது இருந்த போதிலும் அரபுலகின் ஜனநாயகம் மேற்குலக சக்திகளால் எப்போதும் நசுக்கப்பட்டே வந்துள்ளன.

1953 இல் ஈரானில் நடைபெற்று வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் சேர்ந்தே தூக்கி எறிந்தன . 1958 ல் ஈராக்கில் ஏற்பட்ட புரட்சி என்னவாயிற்று ?

அரபுலகில் ராணுவ புரட்சி ஏற்படுத்தி ஆட்சிகளை கவிழ்ப்பதே அமெரிக்காவின் அடிப்படை பணியாக இருந்தது ஈரானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு பிரதமர் முசததிக் 1951 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் கூட சுற்றுப்பயணம் செய்தார் .
ஆனால் 1958 ஆம் ஆண்டு சி ஐ எ வாழ் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டத்தின் மூலம் அவர் வீழ்த்தப்பட்டார் இது நிகழ இரண்டு ஆண்டுக்கு முன்பு அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் அரபுகளுக்கு எதிராக எதிர்ப்பு கருத்துக்களை பரப்பும் பிரசாரக்களத்தைஅமைத்தார் .

அரபுகளுக்கு எதிரான கருத்துக்கள் அரசாங்கத்திடம் இருந்து வெளிப்படக்கூடாது.அமெரிக்க பொது மக்களிடம் இருந்தும் வெறித்தனமாக வெளிப்படவேண்டும் என்பதே அந்த பரப்புரைக்கலத்தின் நோக்கமாகும் அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அவையின் முக்கிய திட்ட வடிவமைக்கும் துறை அது.இந்த துறை முக்கிய செயல் அட்டவனையை தயாரித்தது. இப்போதும் கூட இணைய தளங்களில் அது குறித்தத தகவல்களை பார்வையிடமுடியும் அந்த ஆவணங்கள் அமெரிக்க சதி திட்டங்களை விரிவாகவே விவரிக்கும்

அமெரிக்கா அரபுநாடுகளில் எழுந்த ஒவ்வொரு ஜனநாயகப்போராட்டத்தையும் அது முடக்கியது அரபு பிராந்தியத்தின் நியாயமான வளர்ச்சியையும் அது தடுத்தது.அரபுலகின் கொடூர சர்வாதிகளுக்கு ஆதரவு அளித்தல், எண்ணெய் வள அதிகாரத்தை தங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளின் மறைமுக சதி திட்டங்களை அந்த வலை பதிவுகளின் மூலம் நாம் இப்போதும் அறிய முடியும்

மேற்குலக ஜனநாயக சக்திகள் அரபுலகில் எழுந்த ஜனநாயகத்திற்கான முயற்சிகளை தலையெடுக்க விடாமல் தவிர்த்தன.இதனை என்னால் விரிவாக விளக்கிட முடியும் அரபுநாடுகளில் எழுந்த ஜனநாயக எழுச்சியை அமெரிக்கா பிரிட்டன் மற்றும் அந்த நாடுகளின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரிகளால் நசுக்கப்பட்டது அங்கு ஜனநாயகம் என்பது அறவே இல்லை என்ற நிலையில் மக்களை மிக எளிதாக நசுக்க முடியும்

இதே போன்ற நிகழ்வுகள் லத்தீன் அமெரிகக நாடுகளில் நடந்தன. தொடர்ச்சியாக ஆட்சி செய்த சர்வாதிகாரிகள் கொடூரமான கொலைப்படை தலைவர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் ஐரோப்பாவும் அமெரிக்காவின் பின்னால் நின்றது.இதைப்போன்று தான் அரபுலகம் நசுக்கப்பட்டு வந்தது

அரபுலகில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி உடனடியாக ஏற்பட்டதல்ல .அதற்கு நீண்ட பின்னணி உண்டு.எகிப்தை அவர்கள் எடுத்தாகாட்டாய் எடுத்துக்கொண்டார்கள்.உங்களுக்
கெல்லாம் தெரியும் இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி எகிப்தின் வாலிப பட்டாளம் ஏப்ரல் ஆறாம் தேதி இயக்கம் என்ற புதிய முழக்கத்தோடு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள்
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி எகிப்தின் மிகப்பெரிய ஜவுளி ஆலையான மஹல்லா டெக்ஸ்டைல்வளாகத்தின் பண முதலைகளின் அடக்கு முறையை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கினர் நாடெங்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு குவிந்தது.இருப்பினும் அந்த மக்கள் திரள் போராட்டம் எகிப்தின் சர்வாதிகார ஆட்சியாளரால் முரட்டுத்தனமாக நசுக்கப்பட்டது மேற்குலகம் அனைத்து அடக்கு முறைகளுக்கும் ஆதரவு வழங்கியது.

இந்த அடக்கு முறையை எத்தனை ஆண்டுகள் தான் மக்கள் சகித்துக்கொள்வார்கள் ?வெகுண்டெழுந்த மக்கள் சர்வாதிகாரிகளை ஒடுக்க எழுந்தார்கள் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே

எகிப்தின் தொழிலாளர் போராட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய அமெரிகக அறிஞ்ர் ஜோயல் பெனின் 2008 ஆம் ஆண்டு வெடித்த தொழிலாளர் போராட்டத்தின் விளைவு தான் எகிப்தின் ஜனநாயகத்தை மீட்டுக்கொடுத்தது என்று கூறியது இங்கு கவனிக்கத்தக்கது.

மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களை ஒழித்துக்கட்ட அமெரிகக சக்திகள் எப்போதும் முயன்று கொண்டே இருப்பார்கள் இருப்பார்கள் கியூபா , பிரேசில் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களையும் அவர்களது கொள்கைகளையும் வைரஸ் கிருமிகள் என்றார் அமெரிக்காவின் ஹென்றி கிஸ்சிங்கர் (இவர் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கை கொண்ட நாடுகளை ஒடுக்கதிட்டம் வகுக்கும் ராஜ தந்திரி முன்னாள் அமெரிகக வெளியுறவுத்துறை அமைச்சர் )கிஸ்சிங்கர் சொல்வதை அன்றைய அமெரிகக அதிபர்நிக்சன் செய்து முடித்துவிடுவார்.

சிலி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லன்டே வை பதவியில் இருந்து அகற்றியது அமெரிக்கா . சிலியில் அமெரிக்காவால் நடத்தப்படட் ஜனநாயகபடுகொலையை ஆணவமாக குறிப்பிட்டு பெருமையடித்துக்கொண்ட ஹென்றி கிஸ்சிங்கர் சிலியில் உருவான வைரஸ் பல நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் கூட தொற்ற தொடங்கியது ஆனால் நாங்கள் அதனை துடைத்தெறிந்து விட்டோம் என்றார்.

இன்றைய அட்டூழியத்திற்கு அன்றைய சோவியத் யூனியன் அதிபர் பிரஸ்னேவ் கூட சம்ம்த்திதார்.ஜனாநாயகம் என்றால் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்தே நடுங்கின.ஜனநாயகப்படுகொலைகளைஅவர்கள் செய்து முடித்தார்கள் ஒடுக்கி காட்டினார்கள்

சமீபத்தில் ஒரு அருமையான கட்டுரை ஒன்றை படித்தேன் அதனை எழுதியவர் அரபுலக அரசியல் விவகாரங்களில் ஆழமான அனுபவம் வாய்ந்தவர்.சிறந்த பத்திரிகையாளருமான பிரிட்டனின் ராபர்ட் பிஸ்க் எகிப்தின் புரட்சியையும் தொழிலாளர் போராட்டங்கள் குறித்து அக்கறை செலுத்தாத அமெரிகக உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகள் பின்னொரு காலத்தில் வருந்த வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.

ஒபாமாவின் கொள்கைகள் அரபுலகிற்கு தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது அதனை வைத்துக்கொண்டு அரபுலகிற்கும் அமெரிகவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவே முடியாது என ராபர்ட் பிஸ்க் மிக சரியாகவே கூறியுள்ளார்.

அமெரிக்காவை தங்கள் எதிரியாகவே அரபுலக மக்கள் நினைக்கத்தொடங்கி விட்டார்கள்.அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தல் 90 சதவீத எகிப்திய மக்கள் தெரிவித்துள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.அமெரிக்கா எவ்வளவு சக்திவாய்ந்த நாடாகவும் இருக்கட்டும் ஆனால் அதனை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம் என அவர்கள் தெரிவித்து விட்டார்கள்.
இவ்வளவு மக்கள் எழுச்சி அரபுலகில் ஏற்பட்டு வந்த நிலையிலும் அரபுநாடுகளில் உள்ள அறிவு ஜீவிகள் பலத்த மவுனம் சாதிப்பது வியப்பையும் வேதனையையும் தருகிறது.அறிவுஜீவிகள் தங்கள் பொறுப்பினை மறந்து விடக்கூடாது.அவர்கள் சாதாரண குடி மகன்களை விட துடிப்பாக செயலாற்ற வேண்டும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்

அரபுநாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி கண்டு ஒபாமா புஷ் இரண்டு பேருமே நடுநடுங்கி நிற்கிறார்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை இந்த பிராந்தியத்தை விட்டே வெளியேற்றம் செய்யவேண்டும் என விரும்புகிறார்கள் அரபுலக மக்கள்.
அரபுலகில் அமைதியோ ஜனநாயகமோ ஏற்படுவதை விரும்பாத புஷ்களும் ஒபாமாக்களும் அஞ்சி நடுங்காமல் வேறென்ன செய்வார்கள்?

This slideshow requires JavaScript.

Advertisements
Comments Off on அரபு நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகண்டு நடுங்கி கிடக்கிறார்கள் ஒபாமாவும் புஷ்ஷும் நோம் சோம்ஸ்கி