Abusalihonline's Blog

Just another WordPress.com site

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன ?

தைரிய லட்சுமி
எதிர்கால சமூகத்திற்கு நம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டிய கல்விக்கூடங்கள் தற்கொலைகளை தூண்டி விடும் மறைமுக காரணிகளாக மாறி வரும் தகவல் சமூகத்தைஅதிர வைத்துள்ளது தமிழகத்தின் முதல் நிலை கல்வி நிறுவனம் என உலக புகழ் பெற்று விளங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி தைரியலட்சுமிதற்கொலை செய்துகொண்டார் இது சென்றவார நிகழ்வு …i இதே பல்கலைக்கழகத்தின் மாணவர் மணிவண்ணன் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார் . கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட தைரிய லட்சுமிக்கு படிப்பில் கொள்ளைப்பிரியம் . நன்றாக படிப்பவர் வறுமையில் அவரது கல்வியில் செம்மை பேணினார்.. பத்தாம் வகுப்பில், நானூற்றி அறுபத்தி ஐந்து மதிப்பெண்களும் ப்ளஸ் டூ வகுப்பில் ஆயிரத்தி பனிரெண்டு மதிப்பெண்களும் பெற்றவர் அண்ணாபல்கலைக்கழகத்தில் சிவில் இஞ்சினியரிங் தமிழ் மீடியம் வகுப்பில் ஆர்வமாக சேர்ந்த தைரிய லட்சுமி இரண்டு செமெஸ்டர் கூட முடியாத நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். தமிழ் வழி வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டு இருந்தநிலையில் அவை சரியான மொழியாக்கத்தில் இல்லை என்பதாலும் மிக கடினமான மொழி நடையில் இருப்பதாலும் ஏராளான தொழில் நுட்ப வார்த்தைகளை தமிழ் படுத்தாமல் ஆங்கிலத்தில் இருப்பதாலும் மிரண்டு போன நிலையிலே தமிழ் வழி மாணவர்கள் இருந்துள்ளனர் பாடம் சரிவர புரியாத நிலை ஒரு புறம் தமிழ் வழி மாணவர்கள் என்பதால் ஏதோ ஒதுக்கப்பட்டவர்கள் போல் ஆங்கில வழி மாணவர்களால்நடத்தப்பட்டதாக ஒரு தகவலும் வெளி வந்து சமூக நல ஆர்வலர்களை பதறவைத்துள்ளது.
தைரிய லட்சுமியை கொன்றது தாய்மொழியா ?

தைரியலட்சுமிகளை கொன்றது தாய் மொழியா? என்ற சந்தேகம் நமக்கு தோன்றி விக்கித்து நிற்கும் வேளையில் உயர் கல்வி வளாகங்களில் இதைபோன்றதற்கொலைகள் அதிகஅளவில் பெருகி வரும்செய்திகள் இந்த தேசத்தின் இளைய சமூகம் குறித்த கவலையை அதிகரிக்கச்செய்துள்ளது

மதிப்பெண்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமும் இல்லை ஆனால் மதிப்பெண்கள் உயிரை குடிப்பதை அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு மாணவ மாணவியரும்உயர் கல்வியில் சேர வேண்டும்என்பதற்காக நுழைவு தேர்வு எழுதி மருத்துவர்களாகபொறியாளர்களாக அறிவியல் நிபுணர்களாக உருவாகவேண்டும் என்ற லட்சியக்கனவுடன் உயர் கல்வி நிறுவனங்களில் காலடி எடுத்து வைக்கிறார்கள் ஆனால் தொடங்கும் போதே தங்களின் வாழ்வினை முடித்துக்கொள்ளும் போக்கை என்னவென்று சொல்வது?
அணில் மீனா
2010 ஆம் ஆண்டு அனில் மீனா மீனா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டாள்.பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை விவசாயி குடும்பத்தை சேர்ந்த மீனா பத்தாம் வகுப்பிலும் ப்ளஸ் டூ வகுப்பிலும் முதல் மாணவியாக விளங்கிய அவள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரான் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இது தலைநகர் டெல்லியில் இருந்து ஐநூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கடினமான மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி அகில இந்திய விஞ்சான மருத்துவக்கழக மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். பெருமைக்குரிய இந்த கல்விக்கூடத்தில் அவர் சேர்ந்து மூன்று ஆண்டுகள் கூடநிறைவு அடையவில்லை. 2012 ஆம் ஆண்டு மார்ச்
மூன்றாம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் காரணம் என்ன தெரியுமா ? ஆங்கில அறிவு போதிய அளவுஇல்லாததாலும் கல்வி சூழலோடு இணைந்து கற்க முடியாத காரணத்தால் அந்த மாணவி மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டாள்

பல்முகுந்த்
மார்ச் மூன்றாம் தேதி இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் பல்முகுந்த் பார்த்தி என்ற தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் , ஒரே காரணத்தினால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் துயரமான ஒன்றாகும் .

இந்த துயரங்கள் இத்துடன் முடிவடையவில்லை.பல்முகுந்த் கூட பள்ளியிலேயே முதல் மாணவன் தான். தைரியலட்சுமியைப்போல ,அணில் மீனாவைப்போல ,மணிவன்னனைப்போல, , பல்முகுந் கல்வியின் முதல் தரத்தை நிரூபிக்கும் விதமாக ஏராளமான சான்றிதழ்களை வாங்கிகுவித்தார்.. இந்த சான்றிதழ்களில் முக்கியமானது இந்தியக்குடியரசு தலைவரிடம் இருந்துஅவர் பெற்ற ஒரு சான்றிதழ்
பல்முகுந்தும் மிகவும் மனமுடைந்த நிலையில் விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பல்முகுந்துக்கு இருபத்தி ஐந்து வயது.. ஏறக்குறைய அவரது படிப்பு முடிந்து விட்டது என்றே சொல்லலாம் . இரண்டே மாதங்களில் இந்தியாவின் புகழ்பெற்ற அகில இந்திய விஞ்சான மருத்துவக் கழகத்தில் இருந்து ஒரு மருத்துவராக உருவாகி வந்து இருக்ககூடிய வாலிபர் தற்கொலையை நாடியது எவ்வளவு கொடுமையானது ?
சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐம்பது வருட காலத்தில் பல்முகுந்த் போன்ற ஒரு மாணவர் உருவாகவில்லையே என வேதனையுடன் கதறினர அவர் பெற்றோர். எய்ம்ஸ் என்ற அகில இந்திய விஞ்ஜான மருத்துவ கழக கல்லூரியில் மட்டும் இது போன்ற வேதனை தற்கொலைகள் நிகழவில்லை.
முன்னணி கல்வி நிறுவனங்கள் பலவற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி ) மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பல புத்திசாலி தலித் மாணவர்கள்,, ஆதிவாசி மாணவர்கள்,பள்ளிக்கூடங்களில் முதல் இடத்தில் வந்தவர்கள்,தங்களது வருங்கால நம்பிக்கைகளை தொலைத்து விட்டு தற்கொலையை நாடியுள்ளனர்.
செந்தில் குமார்

இயற்பியல் பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற செந்தில் குமார் என்ற மாணவர் மிகவும் பின்தங்கிய சமூகமான பண்ணியாடி என்ற சமூகத்தை சேர்ந்தவர் பன்றி மேய்ப்பது மட்டுமே இவர்களது குலத்தொழிலாக உள்ளது. அந்த குடும்ப பின்னையில் பிறந்த செந்தில் குமார் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது டைரியை பார்த்தவர்கள் பதைபதைத்து போனார்கள் எனது லட்சியம் இயற்பியலில் எனது நாட்டுக்கு நோபெல் பரிசு வாங்கி கொடுப்பேன் என்று சபதம் எடுத்ததாக குறிப்பிட்ட செந்தில் குமார் டாக்டர் அப்துல் கலாம் தனது வழிகாட்டி என்று டைரியில் எழுதியுள்ளார்.. ஒரு அறிவியல் மேதை வாழ்க்கை ஒரு சுருக்கு கயிறில் முடிந்து போன அவலத்தை என்ன வென்று சொல்வது?

நகர்ப்புற மாணவர்கள்,மேல்தட்டு மக்களாகவும் , சிறந்த கல்வியறிவு பெற்றவர்களாகவும் நல்ல கல்விக்கூடங்களில் , அடிப்படை கல்வியில் இருந்து உயர்கல்வி வரை கற்ற மாணவர்களின் மத்தியில் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மேல்தட்டு மாணவர்களினால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.தங்களுக்கு சமமாக ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னிலை பெறுவதை சகித்துக்கொள்ள முடியாமல் , அவர்கள் பெற்ற இடஒதுகீட்டினை விவாத பொருளாக்கி வம்புக்கு இழுக்கின்றனர்.மேலும் தினம் தோறும வகுப்பறைகளில் , விடுதி அறைகளில் விளையாட்டு மைதானங்களில் ,பரிதாபத்துக்குரிய அந்த மாணவர்கள் அவமானப்படுத்துகின்றனர்.
குப்பை கூடையில் போடப்பட்ட கமிட்டி அறிக்கை
நிச்சயமாக இந்த படிப்பு தொடர்பான அழுத்தத்தினால் விரக்தியினால் மட்டும் ந்கழ்ந்தது அல்ல.புறக்கணிப்பும் பாகுபாடும் இந்த அவலநிலைக்கு முக்கிய காரணமாகும் .வெறுப்பு,ம,சுய இரக்கமும் முற்றிய நிலையே தற்கொலைக்கு தூண்டிய காரணியாக கருதப்படுகிறது.தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களின் குற்றசாட்டுகள் , மற்றும் உள்ள குமுறல்களுக்கு தீர்வுகாணும் விதமாக இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு மத்திய அரசு மூன்று உறுப்பினர்களைக்கொண்ட விசாரணைக்குழுவை அமைத்தது பலகலைக்கழக மானியக்குழு . அன்றைய சேர்மன் பேரா .எஸ்.கே.தொராட் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் ஆதிக்க சாதி மாணவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டுகிரார்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறார்கள். மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது மட்டும் இன்றி உடல் ரீதியாகவும் துன்புருத்தபடுவதாகவும் , உடன் படிக்கும் மாணவர்களின் ஒத்துழைப்பு இல்லாமை,குறிப்பிட்ட பாடத்துறையில் சார்பாக தேவையான வசதிகள் செய்யப்படாமை ,என பல்வேறு துன்புருத்தல்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆளாக்கப்டுகின்றனர்.என இந்த கமிட்டி உலுக்கும் உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் சில பரிந்துரைகளையும் அந்த கமிட்டி முன்வைத்தது.. அதன்படி மாணவர்களுக்கு கல்விக்கூட வளாகத்தில் சமவாய்ப்பு குழு உருவாக்கப்படவேண்டும் . சாதி பாகுபாடு காட்டி இழிவு செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும. உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த கமிட்டி அறிவித்ததை எடுத்த எடுப்பிலேயே எய்ம்ஸ் புறக்கணித்தது.. இது ஓர வஞ்சனை கொண்ட பரிந்துரை என எய்ம்ஸ் வர்ணித்தது.இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருந்தது. இனவொதுக்கல் ,ஏழை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த உயர்கல்வி கிடைக்காமை போன்றவை தான் இந்தியாவின் இளைய தலைமுறை மலரவேண்டிய வேளையில் மடிந்து விட காரணமா ?
பெற்றோரின் வறட்டு பிடிவாதம் அரசுகளின் துரோகம்
பிள்ளைகள் என்னவாக மாற விரும்புகிறார்கள் என்பதை அலட்சியப்படுத்தி அவர்களது கருத்துக்களை ,அபிலாஷைகளை ,புறம தள்ளி தங்களது வறட்டு பிடிவாதத்திர்க்கு வலு சேர்க்க தாங்கள் ஆசை பட்ட துறையை எடுத்து தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பது பிரச்சனையை மேலும்தீவிரமாக்கியது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீரான கல்வியை வழங்க வேண்டிய அரசுகள் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை , வேறுபாடுகளை,கொண்டு விளங்கும் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட மறைமுகமாக,ஏன் சில வேளைகளில் நேரடியாகவும் காரணமாக அமைந்து விடுகின்றன.
சமீப காலங்களில் சில தொழில் நுட்ப மற்றும் மற்றும் வியாபார கல்வி நிறுவனங்களை தவிர எத்தனைபொது கல்வி நிறுவனங்களை அரசுகள் நிறுவியுள்ளன. ?
கல்வி நிறுவனங்களையும் மருத்துவ மனைகளையும் நடத்தவேண்டிய அரசாங்கம் அவைகளைநடத்தாமல், சாராய கடைகளை நடத்தும் அவல நிலையை மாற்றாதவரை இது போன்ற அவலங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது கானல் நீர் தான்.
தங்களையே நொந்து கொண்டு இராமல் , நத்தை போல் தன் கூட்டுக்குள் சுருங்கி வாழ்வை முடித்து கொள்ளாமல் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகளை சுவைக்க மாணவ கண்மணிகள் முயலவேண்டும்.
சோதனைகளை சாதனையாக்கிய இரட்டையர்கள்
ஹபீப் , மற்றும் அக்பர் என்ற இரட்டை சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் அனைத்தையும் இன் முகத்துடன் முறியடித்து சாதனை படைத்துள்ளனர். ஆயிரத்து தொளாயிரத்து என்பத்திரண்டாம் ஆண்டு பிறந்த ஹபீப் , அக்பர் என்ற இரட்டையர்கள் பார்வை இழந்த நிலையிலே பிறந்தனர்.ஆறு வயதில் கல்விக்கான தேடுதலில் பொருத்தமான கல்வி நிலையம் தேடுவதில் இரண்டாண்டுகள் வீணானது. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள ரஹ்மானியா பள்ளிகூடத்தில் இருவரும் சேர்க்கப்பட்டனர் பள்ளிப்பருவத்தில் சிறந்த முறையில் அனைத்து வித துறைகளில் சாதனை படைத்தனர். ஒருவர் கிதார் என்ற இசைக்கருவி வாசிப்பார் மற்றொருவர் சதுரங்கம் விளையாடுவதில் சமர்த்தர்.தபெலாவும் வாசிப்பார் இது அவர்களின் ஈடுபாட்டினைகாட்டியது. பார்வை இழந்து விட்டோமே என்று முடங்கி விடாமல் அவர்கள் புத்துணர்வுடன் செயல்பட்டார்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது உத்வேகத்துடன் படித்தனர்.எல்லாவற்றையும் விட இரட்டையர்களில் ஒருவரான ஹபீப் பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலில போட்டியிட்டார் வெற்ற்யும் பெற்றார் . இன்று இருவரும் கல்லூரி பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.ஹபீப் பாரூக் கல்லூரியிலும் அக்பர் கல்பெட்டா அரசு கல்லூரியிலும் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இதில்பேராசிரியர் ஹபீப் ஆங்கிலத்தில் பல்கலை கழகத்திலேயே ஐந்தாவது இடத்தினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது . சவால்களை சாதனையாக மாற்றி தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றிய ஹபீப் மற்றும் அக்பர் சகோதரர்கள் இன்றைய இளைய சமூகத்தினருக்கு வாழும் உதாரணமாக திகழ்கின்றனர்.
தோல்வியில் துவளும் ஒவ்வொரு மனிதருக்கும் இந்த பார்வை சவால் உடைய இரட்டை சகோதரர்கள் வழிகாட்டிகள் என்றால்அது மிகையல்ல

Advertisements
Comments Off on உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன ?