Abusalihonline's Blog

Just another WordPress.com site

மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கசாபுக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்துள்ளது அது தொடர்பாக நமது பதிவுகள் எண்ணங்கள்

மும்பை பயங்கரம்: வெளிவராத உண்மைகள்!

 

 

மும்பை மீது பயங்கரவாதிகள் தொடுத்த யுத்தம் உலகத்தையே அதிரச் செய்துள்ளது. ஆசியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை முதன்முறையாக பயங்கரவாதி களின் துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக் கானது. மும்பைக்கு மட்டுமல்ல, இந்திய வல்லரசுக்கு இதுவே கசப்பான முதல் அனுபவமாக இருந்தது.

 

 

உலகின் நான்காவது தரைப்படையைக் கொண்டிருந்த இந்திய வல்லாண்மைக்கு, நூற்றி இருபது  கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் ஜனநாயக நாட்டின் மீது பயங்கர வாதிகள் தொடுத்த போர், அவர்களை முறியடித்து முற்றிலும் அழித்தால் மட்டும் போதாது. இனி நம் இந்தியத் திருநாட்டின் மீது எந்த தீய சக்தியும் எந்த தாக்குதலையும் நிகழ்த்த இனி கனவிலும் கூட நினைக்காத வண்ணம் என்றுமே மறக்க முடியாத பதிலடியைக் கொடுக்க தயாராக வேண்டும் என்ற உறுதியையும் ஏற்க வைத்துள்ளது.

 

 

ஒரு சின்னஞ்சிறு கும்பல்  மட்டுமே ஒரு மாபெரும் நகரத்தின் முக்கிய பகுதிகளைப் பிடித்து ஏராளமான மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து அப்பாவி மக்களை குலைநடுங்க வைத்த கொலைகாரப் பாவிகளை கிஞ்சிற்றும் மன்னிக்க முடியாது. பாவிகளின் கைகளில் மும்பை மாநகரம் சிக்கித் தவித்தபோது உள்துறை அமைச்சர் வழக்கம்போல் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். 60 மணி நேரத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்ற போர் நாட்டையே நிலைகுலைய வைக்கக்கூடியதாகவும், அதிர்ச்சியில் உறைய வைக்கக் கூடியதாகவும் இருந்தது.

 

 

நாரிமன் ஹவுஸில் 26.11.08 இரவு 8.20க்கும்,

 விக்டோரியா டெர்மினஸில் 9.24க்கும்,

லிபோ போர்டு கபேயில் இரவு 9.15க்கும்,

டிரைடன்ட் ஹோட்டலில் 8.25க்கும்,

 விபோபார்லேவில் 9.55க்கும்

, காமா மருத்துவமனைக்கு வெளியே 10.15க்கும்

, மெட்ரோ சினிமா தியேட்டருக்கு வெளியே 10.30 மணிக்கும்,

 வாடி பந்தரில் 10.45க்கும்

, ஜிர்காம்சல்பதியில் 10.50க்கும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடங்கின என்று அனைத்து ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தியை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது.  

 

வெளிநாட்டிலிருந்து 20 முதல் 25 பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்ததாக மகாராஷ்டிர மாநில காவல் துறைத் தலைவர் ஜி.பி.ராய் தெரிவித்தார். ஒரு நகரமே முற்றுகையில் சிக்கித் தவித்த போது அதனை மீட்க நடந்த முயற்சி உடனடி யாக ஏன் நிகழ வில்லை என்பதை ஆய்ந்தால் 9.30க்கு மகாராஷ்டிரா முதல் வருக்கு தகவல் தெரிந்த போது அவர் கேரளாவில் இருந்தார்.முழு விவரத்தையும் நிலை மையின் தீவிரவாதத் தையும் அவர் புரிந்து கொண்ட போது கூடுதலாக ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது.

 

 

ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச் சர் சிவராஜ் பாட்டீலுக்கு மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தொலை பேசியில் தகவல் தெரிவித்து கமாண்டோ படைகளை அனுப்புமாறு கேட்கும் போது நேரம் இரவு 11.30 ஆனது.

எத்தனைப் பேர் வேண்டும். எத்தனைப் பேர் வேண்டும் என சிவராஜ் பாட்டீல் கேட்கிறார். 200 பேர் வேண்டும் என்கிறார்.

 சிவராஜ் பாட்டீல் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ தலைவர் ஜி.கே.தத்-ஐ அழைத்து, தீவிரவாதிகளை ஒடுக்க 200 கமாண்டோக்களை தயாராக்கி அனுப்புமாறு உத்தரவிடுகிறார்.

 

 

உள்துறை அமைச்சரும் மகாராஷ்டிர முதலமைச்சரும் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் பெரும்பாலான கமாண்டோ படையினர் தூங்கவே போய் விட்டார்கள்.

 அதன்பிறகு அவர்களிடம் விஷயத்தைக் கூறி சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிய பின் 200 பேரும் தயாராக இருக்க இவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய விமானம் அங்கு இல்லை.

 11.76 என்ற விமானம் டெல்லியில் இல்லை. அது சண்டீகரில் இருந்தது. சண்டீகருக்கு தகவல் அனுப்பப்பட்டது. விலை மதிப்பு மிக்க நேரம் வீணாகிக் கொண்டிருந்தது. விலை மதிக்கவே முடியாத உயிர்களும் தான்.

 

 

சண்டீகரில் 11.76 என்ற அந்த விமானத்தின் பைலட்டை உறக்கத்தில் இருந்து எழுப்பி விமானம் புறப்பட, நேரம் அதிகாலை 2 மணி ஆகியிருந்தது.

 200 கமாண்டோ படையினரை சுமந்து வந்த விமானம் மும்பை வந்து சேர விடியற்காலை 5 மணி ஆனது. இருப்பதிலேயே மிகவும் வேகம் குறைந்த விமானமாம் 11.76.

 

 

விமான நிலையத்தில் காத்திருந்த இவர்கள் சம்பவ இடத்திற்காக சிறப்பு பேருந்துகள் வருவதற்காக 5.30 மணி வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

கமாண்டோ படையினர் அனைவரையும் கொண்டு செல்ல பேருந்துகள் அனைத்தும் மொத்தம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டன.

 

 

பயங்கரவாதிகளோடு யுத்தம் செய்வதற்காக ஆயத்தமாக குழு குழுவாக அவர்கள் பிரிந்து தங்கள் கடமையைத் தொடங்கிய போது காலை 7 மணி.

 

 

இந்திய தேசிய பாதுகாப்பு படை சாமான்யமான படை அல்ல. அதிரடி சாகசங்களுக்கும் அநாயச துணிச்சலுக்கும் பெயர் பெற்றது. சம்பவம் நிகழ்ந்த அரை மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் சென்றிருந் தால் நிச்சயம் பயங்கரவாதிகளை துவம்சம் செய்திருப்பார்கள். எதிரிகள் பின்னங் கால் பிடறியில் பட ஓடியிருக்கக் கூடும். ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல, 9 1/2 மணி நேரம் தாமதம் என்பது ஜீரணிக்கவே முடியாதது; மன்னிக்கவே முடியாதது.

 

 

 

 

ஆனால்பயங்கர வாதம் நடந்தபோது முதல மைச்சர் முறையான உத்தர வுகளை பிறப்பிக்கவே இல்லை என்கிறார்கள்.

 

 

இது ஒன்றும் மன்னர் காலம் அல்ல. மன்னர் காலத்தைப் போல் தளபதிகள் படையினை வழிநடத்திச் செல்வதைப் போன்ற ஓர் அவசியம் இல்லை. வீரர்களை சிப்பாய்களை அனுப்பி அவர்களை களத்திலே நிறுத்தி பின்னால் இயக்கி வெற்றி பெறு வது இன்றைய உலகின் வழமை. ஆனால் நிலைமையை நேர் மாறாக்கி விட்டிருக்கிறார்கள்.

 

 

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத் திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக கொல்லப்பட்டிருக் கிறார்கள். இது எதிரிகள் தீட்டிய சதியின் வெற்றியா?

 நம்மவர் களின் மதியின் தோல்வியா?

 வெறும் பத்து பேர்கள்தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணமா? என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

 

 

.

 

 

 

 

இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம் வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக் கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.

 

 

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுவும் நாட்டு மக்கள் ஏராள மானவர்களுக்கு பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ உள்நாட்டுத் தீவிர வாதமோ எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ் வொரு இந்தியனுக்கும் உண்டு. இந் நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென செலவழிக்கப் படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடும்போது 10 மணி நேரம் கழித்தே நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாகியிருக்கிறது.

 

 

ராணுவத்தில் ஆகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும் பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் உழைக்கும் மக்கள்  அதிக அளவு சேர்க்க வேண்டும்.

அரசுகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.

 

 

எனவே நாட்டை அச்சுறுத்தும் நிஜமான பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த அனைத்து மாணவர் களுக்கும் பள்ளி இறுதி படிப்பு காலத்தி லேயே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க இந்திய அரசு முன்வர வேண் டும். அதற்கான முதற்கட்ட முன்னேற் பாடுகளைத் தொடங்க வேண்டும்.

 

 

அப்போதுதான் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள் மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று கூப்பாடு போட்டுக் கொண்டு நம்நாட்டில் – மத்தியக்கிழக்கு நாடுகளில்சுரண்டுவதைப்போல நமது வரிப் பணத்திலே டேரா போட்டு காலத்தைத் தள்ளலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கும்அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளின்  பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தி அழித்தொழிக்க முடியும்.

 

மும்பை தாக்குத லில் அமெரிக்க பயங்கரவாதியின் சதி

 

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு முடிந்து விட்டது. அந்த சோக நிகழ்வை வெறுமனே வேத னைப்படும் சோக நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.

நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய அபாய மாகவே கருதிட முடியும். தென்கிழக்கு ஆசியாவின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் பெருமைக்கும் வல்லமைக் கும் எதிராக இழிவுபடுத்தும் நோக்கம் அதில் இருந்தது.

 

இந்தியாவின் நியூயார்க் என செல்ல மாக அழைக்கப்படும் இந்தியாவின் வர்த் தக தலைநகரமான மும்பை மாநகரம் பல மணிநேரங்கள் பயங்கரவாதிகளின் முற்றுகையில் தவித்தது. மும்பை மாநகரில் முக்கியப் பகுதிகள் குறிப்பாக சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையம், தாஜ் ஹோட்டல், நாரிமண்பாயிண்ட் என பல்வேறு பகுதிகளும் தாக்குதலுக்கு இலக்காயின.

 

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நவம்பர் 20ம் தேதிக்கு முந்தைய தினம் வரை நாட்டையே பரபரபுக்குள்ளாக்கிய மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து இந்திய நாட்டையே அதிரச் செய்தது.

பெண்சாமியார் பிரக்யாசிங், ராணுவத் தில் உயர் பதவி வகித்துக் கொண்டே நாட்டிற்கு எதிராக தொடர்ந்து துரோகம் இழைத்த தீவிரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 11 பேரின் அனைத்து துரோகச் செயல்களையும் நிரூபித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என சபதம் செய்தார் மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த்கர்கரே எத்தகைய உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் மிரட்டலுக்கும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்தார் மாவீரன் ஹேமந்த்கர்கரே.

 

இந்த துணிச்சலான பேட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பரபரப்பு சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்த நிலை யில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத் தில் தீவிரவாத தடுப்புபடையின் தலைவர் ஹேமந்த்கர்கரேயின் மர்ம படு கொலையும் நிகழ்ந்தது.

 

நாட்டின் முக்கிய துறைமுக நகரத்துக் குள் புகுந்து பல மணிநேர தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்களுக்கு அத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந் தது? ஒரு வலுவான பின்னணி இல்லாமல் இந்த தாக்குதலை யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது! என்ற பலத்த சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் யூகங்களுக் கும் கால காலமாக திட்டமிட்டு வரும் வியூகங்களுக்கும் வலுசேர்க்கும் வித மாகவே செய்திகள் புறப்பட்டனவே தவிர மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் மும்பையையே முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் குறித்தும் கூர்மையான தகவல்கள் கண்ட றியப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அன்மையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

அவை சர்வதேச அளவில் பதட்டத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

 

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற பயங்கரவாதி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி மற்றும் தஹாவுர்ரானா ஆகிய இருவரும் பாகிஸ்தானி ருந்து செயல்படும் லஷ்கர்லஇதொய்பா வோடு சேர்ந்து கொண்டு இவர்கள் இயங்குவதாகவும் இந்தியாவிலும் டென் மார்க்கிலும் பயங்கர வாதத் தாக்குதல்களை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் இவர்களை சமீபத்தில் கைது செய்த அமெரிக்க உளவுத்துறை கூறியது.

 

டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற அமெரிக்கன் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன் பது முறை இந்தியா வந்துள்ளான். ஒவ்வொரு தடவையும் படுபயங்கர திட்டத்துடன் தான் இந்த சதிகாரன் இந்தியா வந்து சென்றுள்ளதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் இப்போது தெரி வித்துள்ளன.

 

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை குடியரசு தினங்களும், சுதந்திர தினங்களும், டிசம்பர் 6 உள்ளிட்ட பாது காப்பு கெடுபிடி மிகுந்த நாட்களில் பல முறை வந்து சென்றுள்ளான். ஆனால் அப் போதெல்லாம் பாதுகாப்பு கெடுபிடிகள் ரெய்டுகள் என்ற பெயரில் அப்பாவிகள் வளைத்து பிடித்து விசாரிக்கப்பட்டார்களே தவிர டேவிட்கோல்மேன் ஹேட்லி போன்ற அதி பயங்கரவாதிகள் அந்தக் காலகட்டங்களில் பிடிக்கப்பட்டதாகவோ ஏன் விசாரிக்கப்பட்டதாகவே, எந்தச் செய்தியும் ஏன் செய்தியின் சுவடுகூட இல்லை.

 

அதைவிட வேதனை என்னவெனில் பயங்கரவாதிகள் ஹேட்லி 9 முறையும் வந்து சென்ற இடங்கள் எவைஎவை தெரியுமா?

 

 

 

டெல்லி , மும்பை, லக்னோ, அஹமதா பாத் ஆகிய நகரங்களுக்கு ஹேட்லி வந்து சென்றுள்ளதாகவும், அங்கு பயங்கரவாதத் தளங்களையும் உருவாக்கியுள்ளதாக இப்போது உளவுத்துறை அமைப்புகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறுகின்றன. ஹேட்லி 9 முறை வந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இடங் களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

 

 

பயங்கரவாதி ஹேட் லி வந்து பயங்கர வாதத் தளங்கள் அமைத்த டெல் லியை ஆளும் ஷீலாதீட்சித் தலைமையிலான அரசு ஜாமியாநகரில் நடைபெற்ற போலிஎன்கவுண்டரில் இரண்டு அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை மண்ணில் சாய்த் தும் அப்பாவி இளைஞர்களை எவ்வித விசாரணையும் இல்லாமல் துன்புறுத்தும் போக்கை நோக்கமாகக் கொண்ட அரசு.

 

லக்னோவுக்கு ஹேட்லி பலமுறை வந்துள்ளார். லக்னோவை நிர்வகித்து வரும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் உ.பியின் ஆசம்கார் என்ற மாவட்டத்தில் உள்ள அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்திய நிகழ்வுகள் எண்ணற்றவை நடைபெற்றன.

 

ஒரு கட்டத்தில் வெளியூர்களில் தங்கி மேல்படிப்பு படித்து வரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை ஊருக்கு வரவேண்டாம் என பெற்றோர்களே கெஞ்சும் அளவுக்கு உ.பி. காவல் துறையினரின் கெடுபிடி இருந்தது.

 

மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் விசாரணை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் அடைந்த துன்பங்கள் யாராலும் மறுக்க முடியாதவை.

 

குஜராத் மாநில அகமதாபாத்தில் குறித்தும் மோடி அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மூலம் அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை கருவறுத்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தான் உலக மகா பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹேட்லி சொந்த நந்தவனத்தில் உலவுவதைப் போல் உலாவியுள்ளான்.

 

அப்போதெல்லாம் பயங்கரவாதி ஹேட்லி யைக் குறித்து எந்த தகவலையும் பெற திராணியற்ற நிலையிலேயே டெல்லி, மும்பை, லக்னோ, அகமதாபாத் நகரங் ககளை கண்காணிக்கும் அந்தந்த மாநில புலனாய்வு அமைப்புகள் இருந்துள்ளன அவர்களுக்கு தீவிரவாதிகள் என்றாலே சிறுபான்மை சமூக இளைஞர்கள் தானே நினைவுக்கு வருவார்கள் இல்லையா?

 

ஏதாவது அப்பாவி இளைஞனை குறிப்பாக முஸ்லி ம் இளைஞனை பிடித்து சித்திரவதை செய்தால் போதும் அடிதாங்காமல் அந்த இளைஞன் தானே தீவிரவாதி என ஒப்புக்கொள்வான் அவன் தீவிரவாதி என தாங்களே கண்டுபிடித்ததை போல பக்கம் பக்கமாக கற்பனைக் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட ஏராளமான வெகுஜன ஊடகங்கள் நம் நாட்டில் உண்டு. இத்தகைய முக்கிய(?) கடமைகள் இருக்கும் போது ஹேட்லி போன்ற உத்தமர்களை(!)க் கண்காணிக்க குறிப்பிட்ட அந்த மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு பாவம் ஏதுநேரம்? ஏதாவது நாச வேலைகள் நடந்தால் எங்காவது தாடிவைத்த தொப்பி அணிந்த ஒரு இளிச்சவாய் இளைஞன் நமக்கென்று கிடைக்காமலா போவான் என்ற வக்கிர சிந்தனையைத் தாண்டி புத்திசா லித் தனமாக யோசிக்க சில புலனாய்வுப் பு லிகளுக்கு இயலாமலே போய்விட்டதோ என்ற வலுவான சந்தேகம் ஹேட்லியின் விஷயத்தில் உறுதியாகி விட்டது. (இந்தப் புலனாய்வு மேதாவிகள் பேசாமல் விஜய் காந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதப் போகலாம் என்கிறீர்களா?)

 

2006-லி ருந்து 2009 வரை நாட்டில் நடந்த அனைத்து அசம்பாவிதங்களிலும் பயங்கரவாதி டேவிட் கோல் மேன் ஹேட் லிக்கு உள்ள தொடர்பை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.

 

இதனிடையே அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட டேவிட்கோல்மேனை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காத தால் இந்தியக்குழு வெறுங்கையுடன் தொங்கிய முகத்துடன் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியது.

 

அமெரிக்கா சென்றிருந்த இந்திய புலனாய்வுக் குழுவினர் வாஷிங்டனில் தங்கி அந்நாட்டு புலனாய்வுக் குழு வினருடன் டேவிட் கோல் மேனின் சதித்திட்டம் குறித்து விரிவான ஆலோச னைகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட போதும் சிகாகோ சிறைச்சாலையில் அடைக் கப்பட்ட டேவிட் கோல் மேனை தாங்கள் விசாரிக்க வேண்டும் என்ற இந்தியக்குழுவினரின் கோரிக்கைக்கு அமெரிக்கா செவிசாய்க்கவேயில்லை.

 

மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ல் வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பாக யூதர் கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக விமானங்களில் சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக அமெரிக்கா உள்ளிட்டமேற்கு நாடுகளி ருந்து புல னாய்வு குழுக்கள் வந்தவண்ணம் இருந்தன.

 

 

ஆனால், மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ன் மூலம் பெரும் இழப்பினை சந்தித்த இந்தியத் திருநாட்டின் புல னாய்வுக் குழுவினை விசாரிக்க அனுமதி மறுத்த அமெரிக்க அரசின் அடா வடித்தனம் கண்டிக்கத் தக்க செயல் அல்லவா?

 

இந்தியக் குழு முதன் முறையாக ஹேட்லி யை விசாரிக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வாளர்கள் முக்கியமான ஒரு கருத்தி யலைக் குறிப்பிடுகிறார்கள்.

 

அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எ.இ.ஒ.யின் ஆலோசனைப்படி அவர்களது விருப்பப்படியே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தந்திர யுக்தியின் படியே முத ல் அனுமதி மறுக்கப்டடிருக்கிறது. விரைவில் ஹேட்லி இந்திய புலனாய்வுக் குழுவினரால் விசாரணை என்ற நாடகம் அரங்கேற்றப் படலாம் முத ல் இந்திய குழுவினருக்கு ஹேட் லியை விசாரிக்க அனுமதி மறுக்கப் பட்டதற்கு காரணம் விசாரணை என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு யூதனுக்கு (ஹேட்லி க்கு) இந்தியக் குழுவினரால் ஒரு தொந்தரவும் ஏற் படக்கூடாது என்பதற்காகவே ஒரு அமெரிக்கனுக்கு குறிப்பாக ஒரு யூதனுக்கு அந்நிய நாட்டினரால் அவமரி யாதை நடக்கக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. அது தான் அமெரிக்கா.

 

200 பேரை பறிகொடுத்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசார ணையில் ஒத்துழைப்பு கிடைக்காமல் அமெரிக்காவி ருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது இந்தியா. ஒரு யூதன் மீது விசாரணை செய்தது 200 இந்தியர்களின் உயிரிழப்புகளை விட பெரியது என்று சொல்லாமல் சொன்னது அமெரிக்கா. மௌனத்தை கடைப்பிடித்தது இந்தியா. மவுனம் என்பது சம்மதத்துக்கு அறிகுறிதானே

Comments Off on மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கசாபுக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்துள்ளது அது தொடர்பாக நமது பதிவுகள் எண்ணங்கள்

India Shooting

India Shooting

Comments Off on India Shooting