Abusalihonline's Blog

Just another WordPress.com site

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலும் முஸ்லிம் வாக்குகளும் அபுசாலிஹ்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலும் முஸ்லிம் வாக்குகளும்

அபுசாலிஹ்
பல்முனை போட்டி யுடன் நடைபெற இருக்கும் மகாராஷ்டிர சட்ட மன்ற தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை பொருத்தவரை ஹைதராபாத்தில் வெற்றி கொடி கட்டிய உவைசி சகோதரர்களின் எம் ஐ எம் என சுருக்கமாக அழைக்கப்படும் மஜ்லிசே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி களத்தில் குதித்துள்ளது ஒரு சுவாரஸ்யமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் எம் ஐ எம் இன் வருகை பிற மதசார்பற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை காவு வாங்கிவிடுமோ என்ற அச்சம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

காங்கிரஸ் 19 தேசியவாத காங்கிரஸ் – 16
காங்கிரஸ் – தேசிய வாத கூட்டணி முறிந்ததற்கு பின்னர் காங்கிரஸ் 19 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது. கடந்த 2009 ஆம் தேர்தலில் 12 முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியது. . காங்கிரசின் பழைய கூட்டணியான சரத் பவாரின் தேசிய வாத கூட்டணி கூட இந்த முறை அதிக அளவு முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 4 சீட்களை மட்டுமே முஸ்லிம்களுக்கு கொடுத்த அந்த கட்சி 16 சீட்களை தாரளாமாக வழங்கியுள்ளது .
இதில் அதிக அளவாக உவைசியின் எம் ஐ எம் 24 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இவர்கள் மட்டும் இன்றி அவாமி விகாஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், வெல்பர் பார்டி , மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் கணிசமான அளவு முஸ்லிம் வேட்பாளர்களை இறக்கியுள்ளது.

ஒரு தொகுதி கூட ஒதுக்காத பாஜக

சிவசேனா ஒரே ஓர் முஸ்லிமுக்கு சீட் வழங்கியுள்ளது. மகராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம் என் சி ) ஏழு முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் முஸ்லிம் வேட்பாளர்களின் சதவீதம் 3.3 சதவீதம் ஆகும். இது கடந்த 2009 தேர்தலைவிட சற்று அதிகமே. கடந்த தேர்தலில் 2.7 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்து இருந்தது. முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து காங்கிரசும் , சரத் பவாரின் தேசிய வாத காங்கிரசும் களமாடுகின்றன. அதே வேளையில் இவைகளின் கனவை கலைக்கும் விதமாக அரை டஜன் முஸ்லிம் கட்சிகள் வேறு மாநிலத்தின் 15 சதவீத முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து களத்தில் நிற்கின்றன. சமீபத்தில் மும்பையில் கூடிய முஸ்லிம் பிரபலங்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டினர். எத்தனை முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி இட்டாலும் மத வாத பாசிச சக்திகளை முறியடிக்கும் திறன்படைத்த முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக அனுப்பிவைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் அங்கு பரிமாறி கொள்ளப்பட்டன. . ஆனால் நடப்பு நிலை நிச்சயம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதுதான் உண்மை.

இந்திய அளவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நான்காவது மாநிலமாக மகராஷ்டிரா விளங்குகிறது. உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பிகார் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடிக்கின்றன.

1999 ஆம் ஆண்டு 12 முஸ்லிம் எம் எல் ஏக்கள் இங்கு உண்டு. 2004 இல் 11 ஆக குறைந்தது. 2009 ஆம் ஆண்டு 10 ஆக குறைந்தது. .10 இல் 6 எம் எல் ஏக்கள் மும்பை மாநகரில் இருந்து தேர்ந்தேடுக்கபட்டனர்.

முஸ்லிம் சதவீத கணக்குப்படி பார்த்தால் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தெரி வாகி இருக்கவேண்டும். ஆனால் காலம் கற்றுக்கொடுக்கும் பாடங்களை யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. .முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாலேகான் தொகுதியில் 17 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்(. உருப்பட்டாப்லதான் )

மாலேகானின் நிலை முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளான அவ்ரங்கபாத், பார்பானி, பிவண்டி, நாக்பூர் மத்திய தொகுதி, மற்றும் மும்பையின் பல தொகுதிகளில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

முதன்முறையாக ஹைதராபாதின் ஒவைசி யின் எம் எம் ஐ கட்சியும் களமிறங்கி உள்ளதால் கூடுதல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் கிட்ட தட்ட எல்லா தொகுதிகளிலும் எம் ஐ எம் மும் போட்டி இடுவதால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுமா ? அல்லது அமோக ஆதரவுடன் அசதுத்தீன் ஒவைசியின் எம் ஐ எம் கட்சி வெற்றி வாகை சூடுமா ? என்பது பரபரப்பான வினாவாக வலம் வருகிறது.

மாலேகானிலும் பார்பாநியிலும், அசதுத்தீன் மற்றும் அக்பருத்தீன் ஒவைசிகளின் உரை கேட்க திரண்டு இருந்த கூட்டங்கள் வரலாறு காணாதது என்று சொல்கிறார்கள்.

மொத்தம் 288 தொகுதிகளைக்கொண்ட மகராஷ்டிரா மாநிலத்தில் 150 தொகுதிகளில் வெற்றி , தோல்விகளை நிர்ணயிக்க கூடிய சக்தியாக முஸ்லிம் வாக்குகள் திகழ்கிறது .ஏனெனில் 150 தொகுதிகளில் 10 இல் இருந்து 30 சதவீதம் வரை முஸ்லிம் வாக்குகள் உண்டு.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அபு ஆஸ்மி மும்பை முஸ்லிம்களின் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருக்கிறார். தேசிய வாத கட்சியின் பார்பானி தொகுதி வேட்பாளர் ஷேய்க் முஸ்தபா மற்றொரு முக்கிய பிரமுகராக முஸ்லிம் வாக்க்குகளை திரட்ட முடியும் என நினைத்து தேர்தல் களத்தில் நிற்கிறார்.

பாஜக வெல்லும் என்று ஒரு தரப்பும் , கூட்டணி பலம் இன்மையால் பாஜக , சிவசேனா இரண்டுமே வலிமை குறைந்து தொகுதிகள் குறைந்து பலவீனமான நிலையை அடையலாம் என ஒரு தரப்பும் ஆருடம் கூறி வருகின்றன. . இதற்கான விடை விரைவிலேயே தெரியத்தானே போகிறது

Advertisements
Comments Off on மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலும் முஸ்லிம் வாக்குகளும் அபுசாலிஹ்