Abusalihonline's Blog

Just another WordPress.com site

யுவன் ஹாலிக் திருமணமும் ஊடகங்களின் ஒர வஞ்சனையும்

ஹாலிக்  திருமணமும்   ஊடகங்களின் ஒர  வஞ்சனையும்
முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும்  என   முன்னர் அழைக்கப்பட்ட இந்நாள்   அப்துல்  ஹாலிக்க்கும்      கீழக்கரையைச் சேர்ந்த ஜபருன்னிசாவுக்கும்  திருமணம் நடந்தது.  இந்த திருமணத்தில் மணமகள்  வீட்டார்  அனைவரும்   பங்கேற்றனர். மணமகன்   யுவன் ஹாலிக் தரப்பில்  அவரது  தங்கை  பவதாரணி தனது    குடும்பத்துடன்   பங்கேற்றார். இதனை ஒரு    தனிப்பட்ட மனிதனின்   மண விழாவாக   நன் முறையில்  நாகரிக   த்துடன் செய்தியாக மட்டும்  அமைந்திருக்க வேண்டிய   ஒன்றை  தேவையில்லாமல் சர்ச்சையாக்கி ஊடகங்கள்  தனது கோணல்    பார்வையை அடையாளம்  காட்டியுள்ளன.      இது யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணமாகும். ஏற்கெனவே இருமுறை அவருக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தனது பெயரை அப்துல் ஹலிக் என்று மாற்றிக் கொண்டுள்ள யுவன், கீழக்கரையைச் சேர்ந்து ஜபருன்னிசாவை மூன்றாவதாக ரகசிய   திருமணம் செய்துள்ளார்.  மேலே உள்ள  இந்த வரிகளை கவனியுங்கள் எவ்வளவு   வக்கிர சிந்தனை கொண்ட  பேர்வழிகளாக  இருந்தால்  இது போன்ற வார்த்தை  பிரயோகங்கள் பயன்படுத்தி   இருப்பார்கள்  என்பதை நாம்  உணர்ந்து கொள்ள முடியும் ,.
அப்துல்   ஹாலிக் பகிரங்கமாகவே  தனது   திருமணத்தை   செய்துள்ளார். மணமகளின் வீட்டார்       மணமகனின்   சகோதரி  குடும்பத்தினர்   மற்றும்   பல   முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்ற ஒரு   மணவிழாவை  இவர்கள்  எவ்வாறு ரகசிய திருமணம் என்று சொல்கிறார்கள் ?  இந்த  கோணல்   பார்வை    இவர்களுக்கு  ஏன் ?
சம்பந்தி  விருந்தை   தவறவிட்ட  இளையராஜா
இந்தத் திருமணம் நடந்த போது யுவனின் தந்தை இளையராஜா குடும்பத்துடன் திருவண்ணாமலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கு  ஒரு முக்கிய வரலாற்று   சம்பவத்தை குறிப்பிட்டே   தீரவேண்டும். அனைத்து சமூக  மக்களிடையே சமத்துவம்  நிலவிட வேண்டும்  .என்று  பேசப்பட்டு   நாடெங்கும்  சம   பந்தி   போஜனம்  போடப்பட்டபோது   திமுக    தலைவர்    சம பந்தி   போஜனம்   வேண்டாம்   சம்பந்தி  போஜனம்,  வேண்டும் .  என   அறைகூவல்   விடுத்தார். இது   சமூக நீதி  தளத்தில்   அதிர்வலைகளை   ஏற்படுத்தியது.   கீழக்கரை  வாழ் மக்கள்  பொதுவாக    கீழக்கரைக்கு  வெளியே   பெண் கொடுப்பதில்லை. என்ற   வழக்கத்தை   வைத்துள்ளனர். இதுபோன்ற   செய்திகளை   உள்ளடக்கி  செய்திகளை   வெளியிட   வேண்டிய  ஊடகங்கள்   உண்மைக்கு மாறாக  ஒரு தலை பட்சமான   முறையில்   வழங்குவது ஏன் ?
Advertisements
Comments Off on யுவன் ஹாலிக் திருமணமும் ஊடகங்களின் ஒர வஞ்சனையும்