Abusalihonline's Blog

Just another WordPress.com site

இடஒதுக்கீடு _ மோசடிபரப்புரையின் முகத்திரை கிழிந்தது .

இட ஒதுக்கீடு என்பது இந்நாட்டின் சமூகங்களில் அடித்தட்டில் உழலும் மக்களுக்கு ஓர் ஒத்தடமாக உந்து சக்தியாக அமைந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. சமூநீதி தத்துவத்தின் நன்கொடையே இட ஒதுக்கீடு ஆகும். ஆதிக்க சக்திகளின் கைப்பிடிக்குள் அரசுகளும், அனைத்து துறைகளும் சிக்கிக்கொண்டு இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்கு முறைகளையும் ஆண்டாண்டுகாலமாக செய்து வந்த நிலையில் , ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இது போன்ற யுத்தங்களுக்கு எதிராக நம்நாட்டில் சமூக நீதி போராளிகள் களமாடி வந்துள்ளனர்.

நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் கெடுதலை விளைவிக்கும் சமூக அநீதியாளர்களுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் பெரியார். இதன்விளைவாக அரசுத்துறைகளில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

அன்றில் இருந்து தமிழகம் சமூக நீதியின் பூமியாக இந்தியாவின் வழிகாட்டி மாநிலமாக திகழ்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய சமூக நீதியின் புரட்சி கண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காலகாலமாக அடக்கி ஒடுக்கி அதன்மூலம் அதிகார சுகம் கண்ட ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீட்டின் வழியாக எளியவர்கள் ஏற்றம் பெறுவதைகண்டு கலக்க, கொண்டனர். பதட்டம் அடைந்தனர்.

விரக்தியின் உச்சகட்டத்தில் அந்த சக்திகள் சமூக நீதி குறித்தும் , இட ஒதுக்கீடு கொள்கை குறித்தும் உண்மைக்கு மாறான கருத்துக்களை நாடெங்கும் பரப்பி வந்தனர்.

இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமை போன்ற முக்கிய அம்சங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு நிர்வாக கட்டமைப்பின் வேகம் தடைபடுகிறது இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கும் , தகுதிக்கும், திறமைக்கும் தொடர்பே இல்லை என்கிற ரீதியில் மிகவும் கொச்சைத்தனமாக பேசியும் எழுதியும் வந்தனர். அந்த ஆதிக்க சக்திகளின் முகத்தில் அறையும் விதமாக . அவர்களது ஆணவ கோட்டையின் அடித்தளத்தினை ஆட்டம் காண செய்யும் விதமாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு ஒன்று வெளிவந்து கோணல் பார்வையாளர்களுக்கு தெளிவான பார்வையை வழங்கும் விதமாக அந்த ஆய்வின் முடிவுகள் அமைந்துள்ளன.

இட ஒதுக்கீட்டினால் திறமையோ உற்பத்தி திறனோ , பாதிக்கப்படுவதில்லை என அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழகம் , டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொருளாதார பேராசிரியர்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

இந்த ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொண்டு இந்த இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதன்மூலம் நாட்டு மக்களுக்கு முழுமையான சமூக நீதியினை மத்திய மாநில அரசுகள் வழங்கிட ஆவனசெய்யவேண்டும்.

தாராளமய பொருளாதார மாற்றத்தின் விளைவாக அரசுத்துறைகளிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் பெருமளவு வேலை வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையே ஏற்பட்டுள்ளது. தனியார் துறையில் கட்டாயமாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்

தனியார் துறை பெரும்புள்ளிகள் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று முன்னர் பிடிவாதம் காட்டி இதுவரை அவர்கள் வைத்த நொண்டி சாக்குகளும் , வறட்டு வாதங்களும் வலு இழந்து விட்டன.

எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு முறையை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும். உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதி பராமரிப்பு துறைகளிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைபடுத்த வேண்டும்.

சமூக நீதியில் நம்பிக்கை உள்ள , அனைத்து உரிமை பேணும் சக்திகளும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு கிடைத்திட குரல் எழுப்பவேண்டும்.

Advertisements
Comments Off on இடஒதுக்கீடு _ மோசடிபரப்புரையின் முகத்திரை கிழிந்தது .

அப்பாவியை பயங்கர வாதியாக்கிய டெல்லி சிறப்பு காவல்படை அம்பலமாகும் உண்மைகள்

அப்பாவியை பயங்கர வாதியாக்கிய டெல்லி சிறப்பு காவல்படை
அம்பலமாகும் உண்மைகள்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியை சேர்ந்த லியாகத் ஷாவை பயங்கரவாதி என சித்தரித்து டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அறிவித்தது. . ஆனால் உண்மையில் அவர் தீவிரவாதி அல்ல .

1997 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவிய அசாதாரண சூழலில் இராணுவத்தினரின் சர்ச்சைக்குரிய கெடுபிடிகளுக்கு அஞ்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ஆண்டு பல கழித்த லியாகத் ஷா தாயகத்திற்கு திரும்பவேண்டும் என தாளாத வேட்கையுடன் இருந்த லியாகத் ஷாவின் வயிற்றில் பால் வார்ப்பதைப்போல ஒரு நிகழ்வு 2003 ஆம் ஆண்டு நடந்தது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் காஷ்மீருக்கு இடம்பெயர்ந்த காஷ்மீர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பவும் அவர்களது மறு வாழ்வுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை தீட்டிய ஜம்மு காஷ்மீர் அரசு நாடு விட்டு சென்ற தங்கள் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களை திரும்ப அழைத்தது.
மறுவாழ்வு அறிவிப்பினை தொடர்ந்து பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து லிகாயத்ஷா ஜம்மு காஷ்மீர் நோக்கி புறப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் அறிவுறுத்தலின் படி இந்திய நேபாள எல்லைப்புற நகரமான உத்திர பிரதேசத்தின் கோரக்பூர் நகர் வழியாக இந்தியா நுழைய முற்பட்டபோது டெல்லியின் சிறப்பு காவல் படையினரால் கைது செய்யப்பட்டார். 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி சிறப்பு காவல்படையினரால் கைது செய்யப்பட்ட லியாகத் ஷாவ்டம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை டெல்லி விருந்தினர் மாளிகையில் இருந்து அவரிடம் இருந்து கையும் களவுமாக பிடித்ததாக டெல்லி சிறப்பு காவல்படை அறிவித்தது.

டெல்லி சிறப்பு காவல்படையின் அறிவிப்பை கட்டுக்கதை என்றும் நம்பமுடியாதது என்றும் ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்தது. அமைதியாக வாழ திரும்பி வந்தவரை தீவிரவாதி போல சித்தரிப்பது சரியல்ல என்றும் ஜம்மு காஷ்மீர் அரசு வன்மையாக மறுத்தது. இருப்பினும் டெல்லி சிறப்ப காவல்படை தன்னிலையிலே உறுதியை காட்டியது. தீவிரவாதி (?) லிகாயத் ஷா அப்சல் குருவுக்கு தூக்குதண்டனை விதித்ததற்கு பழிவாங்கவே குண்டுவைக்க திட்டமிட்டதாக கூறியது.

லிகாயத் ஷாவின் நீதி தேடிய அலறல் சப்தம் தொடர்ந்து அவலக்குரலாய் ஒலித்தது. இந்நிலையில் லிகாயத்ஷாவின் அபயக்குரல் ஜம்மு காஷ்மீர் அரசின் சீற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் வழக்கு ஐ என் ஏ என்ற தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது.

2013 ஆம் ஆண்டு மார்ச்சில் நிகழ்ந்த அநீதிக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. லியாகத் ஷா தீவிரவாதியல்ல என்று அறிவித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி டெல்லி சிறப்பு காவல்படை லியாகத்ஷாவை தீவிரவாதி என காட்டுவதற்காக சமர்பித்த ஆதாரங்களும் வாதங்களும் முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை என்றது. லியாகத் ஷா டெல்லி விருந்தினர் மாளிகையில் குண்டுவைக்கவில்லை. அவர் குண்டு வைப்பது போல சிறப்பு காவல் படையால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் போலியானவை .
காவல்துறை இன்பார்மர் ஒருவர் லியாகத் ஷாவை போல தொப்பி மாட்டி குண்டுகளை பதுக்கி வைத்துள்ளார் என்பதும் என் ஐ ஏ வினரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள\ மக்களிடையே எழும் கேள்வி இது தான்

உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் ?
தீவிரவாதத்தை வளர்ப்பது யார் ?
தீவிரவாதம் கருக்கொண்டுள்ள இடம் எது ?
கடமை உணர்வுக்கு பெயர் போன காவல்துறையில் குறிப்பாக டெல்லி சிறப்பு காவல்படையில் ஊடுருவிய கருப்பாடுகளைப்போன்று நாடெங்கும் உள்ள காவல்துறையினர் இடையே ஊடுருவிய கயமைத்தனம் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது ?

Comments Off on அப்பாவியை பயங்கர வாதியாக்கிய டெல்லி சிறப்பு காவல்படை அம்பலமாகும் உண்மைகள்