Abusalihonline's Blog

Just another WordPress.com site

2040 ல் இந்தியா முஸ்லிம் நாடாக மாறும் ? ஆவணங்களை மேற்கோள்காட்டி ஓர் ஆய்வு அபுசாலிஹ்

2040 ல் இந்தியா முஸ்லிம் நாடாக மாறும் ?

ஆவணங்களை மேற்கோள்காட்டி ஓர் ஆய்வு

அபுசாலிஹ்

2035ஆம் ஆண்டு ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகமாகிவிடும். 2040 ஆம் ஆண்டு இந்தியா முஸ்லிம் நாடாகிவிடும். 2035 ம் ஆண்டு முஸ்லிம்களின் மக்கள் தொகை 92 கோடியே 50 லட்சமாக உயரும் அதே நேரத்தில் ஹிந்துக்களின் மக்கள் தொகை 90 கோடியே 2 லட்சமாக இருக்கும் என்ற பரபரப்பு பரப்புரை நாடெங்கும் சங்க்பரிவார சக்திகளால் பரப்ப ப்பட்டு வருகிறது.

2040 ம் ஆண்டு ஹிந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை தொடரமுடியாது. காரணம் பெரிய அளவில் முஸ்லிம் அல்லாதவர்கள் மதம் மாற்றம்
செய்யப்படுவார்கள். எதிர்ப்பவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற அறிவுக்கு சற்றும் பொருந்தாத, சாமான்ய மக்களிடயே குழப்பத்தையும் பீதியையும் உருவாக்கி சமாதானத்தை சீர் குலைக்கும் விஷம பரப்புரை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமா 2050 ம் ஆண்டு முஸ்லிம்களின் மக்கள் தொகை 189 கோடியாக உயர்ந்து இந்தியா முஸ்லிம் நாடாக மாறும். பல ஆண்டுகாலமாகவே இந்த பரப்புரையை தனது முக்கிய வியூகமாக வைத்து பாமர மக்களை வளைத்து வருகிறது. இதனை துண்டு பிரசுரங்கள் ,விளம்பர பதாகைகள், சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்கள், உள்ளூர் தொலை காட்சிகள் மற்றும் தனியார் வலைகாட்சிகள் வாயிலாக பரப்பி வருகின்றனர்.

இந்த பிரச்சாரம் தொடங்கியது எப்போது?

2013 ம் ஆண்டு அக்டோபரில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு கேரள மாநிலம் கொச்சினில் கூடியது. அங்கு ஆர் எஸ் எஸ் ன் இணை பொதுசெயலாளர் தத்தாரேயா ஹோசபாலே தங்களது தொண்டர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார் . நீங்கள் குறைந்த பட்சம் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். என்று பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து இந்த வகையான பரப்புரை தீப்பிடிக்கத்தொடங்கியது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் வி எச் பி பிரமுகர் சாத்வி பிரச் ஆகியோர் ஒவ்வொரு ஹிந்து பெண்ணும் நான்கு குழந்தைகளை உருவாக்கவேண்டும் என்றனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் 50ம் ஆண்டு நிறுவன நாள் விழாவில் உபி மாநிலம் பரேலியில் பேசிய பிரவின் தொகாடியா ஒரு படி மேலே சென்று ஏன் எல்லோரும் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொல்வதைப்பற்றி இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ? முஸ்லிம்கள் குழந்தைகளை பெற்று தள்ளுகிறார்கள் அது குறித்து யாரும் ஒரு வார்த்தை பேசுவதில்லை. முஸ்லிம்கள் நான்கு பெண்களை கட்டுகின்றனர். 10 குழந்தைகளை பெறுகின்றனர் . நீங்கள் இரண்டு குழந்தைகள் பற்றி மட்டுமே பேசுவீர்கள் என்றால் முதலில் சட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும். அதன்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன்பிறகு பார்ப்போம் யார் அதிகமாக குழந்தைகளை உருவாக்குகிறார்கள் என்று உசுப்பேற்றியுள்ளார் .

பத்ரிக் ஆஷ்ரமத்தின் சங்கராச்சார்யா வாசு தேவானந்த் சரஸ்வதி பெண்களிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். நமது பெண்கள் 10 குழந்தைகளை பெற்று நமது சமயம் பெருகி வளர உறுதி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மேற்கண்டவைகளை கவனமாக படித்து விட்டீர்களா ? உங்கள் மனதில் முக்கிய வினாக்கள் எழுகிறதல்லவா ?

இந்தியாவை முஸ்லிம் நாடாக்க முஸ்லிம்கள் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு தங்கள் மக்கள் தொகையை அதிகரிக்க செய்கிறார்களா ?

அவர்கள் உண்மையிலேயே நான்கு மனைவிகளை கட்டுகிறார்களா ?

முஸ்லிம் பெண்கள் 10 குழந்தைகள் பெறுகிறார்கள் என்பது உண்மையா ?

முஸ்லிம் மக்கள் தொகை பெருகுவதற்கு அவர்கள் செய்யும் பல தார மணம் பின்னணியில் உள்ளது(!) என்ற வாதம் எவ்வளவு தூரம் உண்மை . ?

இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்பதற்காக குடும்ப கட்டுப்பாடு முறையையே முஸ்லிம் மக்கள் அறவே பின்பற்றுவது இல்லை என்ற குற்றசாட்டில் ஓரளவாவது உண்மை உள்ளதா? இந்த கேள்விகளுக்கு விடை காண போகுமுன்பாக இதை போன்ற கருத்துக்கள் ஐரோப்பா கண்டத்திலும் சில தரப்பினரால் எழுப்பப்பட்ட துதான்

போகிற போக்கை பார்த்தால் ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகரித்து ஐரோபியா என எதிர்காலத்தில் அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டன. ( கற்பனை செய்வதில் கூட ஒரு புதுமை வேண்டாமா ? ஐரோ பியா என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா என்ன ? )

இந்தியாவில் பாசிச சக்திகள் மேற்குலகில் கடந்த 25 ஆண்டுகளாக பரப்பப்பட்ட பழைய புனைவுகளைதான் இப்போது காப்பியடிக்கத்தொடங்கியுளனர். இதில் கூட சொந்த கற்பனை இல்லையா? என்று சமூக ஆர்வலர்கள் ஆச்சரியம் எழுப்புகிறார்கள் .

அதுசரி இவர்களது கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது. ஆய்வுகள் எடுத்துக்காட்டுவது என்ன ?

2011 ம் ஆண்டு மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த அறிக்கை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தயாரிகப்பட்டதுதான் மக்களவை தேர்தல் 2014 வரை இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மேலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டால் அதைவைத்து புதிது பதிதாக பூகம்பங்களை கிளப்பி சங்க பரிவார் சக்திகள் தங்கள் ஆட்சிக்கு இடையூறு விளைவிப்பார்கள் என்ற சிந்தனையின் காரணமாக அன்றைய மன்மோகன் அரசு வெளியிடவில்லை எனினும் அந்த அறிக்கையின் சாரம் மெல்ல மெல்ல கசியத்தொடங்கியது. சமீபத்தில் அந்த தகவல்கள் ஊடகங்களிலும் வலை தளங்களிலும் வெளி வரத்தொடங்கியது

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கம் சதவீத அளவில் 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்து விட்டதாம். இதைவைத்து விஷம பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். ஆனால் இது அரை உண்மை மட்டுமே . அரை உண்மைகள் முழு பொய்யை விட ஆபத்தானது அல்லவா ? பல 10 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என அதே அரசு புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. 1991-2011 , 2001-2011 ஆண்டுகளுக்கான கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் மக்கள் வளர்ச்சி விகிதம் நியாயமாக எதிர்பார்க்கும் அளவுக்கு கூட உயரவில்லை மாறாக குறைந்து வருகிறது.

முஸ்லிம் இளைய தலைமுறையினரிடையே சிறிய குடும்பங்களே விருப்பத்தேர்வாக இருக்கின்றன.

இது கடந்த 15 ஆண்டுகளாக இருக்கும் நிலைமை தேசிய குடும்ப ஆரோக்கிய ம் தொடர்பான சர்வேயில்( National Family Health survey ) 1991-92, 1998-99 மற்றும் 2005-06 வரை முஸ்லிம் பெண்களின் மொத்த இனப்பெருக்க விகிதம் சங்க பரிவார கட்டுகதைகளை தோலுரிக்கிறது. முஸ்லிம் பெண்களின் மொத்த இனப்பெருக்க விகிதம் Total fertility rate (TFR) 4 குழந்தைகளை விட குறைவாக பெறுவதாகவே தேசிய குடும்ப சுகாதாரம் தொடர்பான ஆய்வு தெரிவிக்கிறது.

அடுத்து முஸ்லிம்கள் பலதார மணம் புரிகிறார்கள் என்ற சொத்தை வாதத்திற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவ்வித ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் அந்த வாதத்தை மேலும் கேவலப்படுத்தும் விதமாக இந்திய அரசின் மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1000 முஸ்லிம் ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற விகிதத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அமைந்துள்ளது. இந்த விகிதத்தில் 64 பேர் திருமணத்திற்கு இணையில்லை என்ற நிலை. இதில் பலதாரத்திற்கு எங்கு செல்வது ? சங்கபரிவாரின் அவதூறுகளும் புனை கதைகளும் இன்னும் எத்தனை நாளுக்கு செல்லுபடியாகும் ?

Advertisements
Comments Off on 2040 ல் இந்தியா முஸ்லிம் நாடாக மாறும் ? ஆவணங்களை மேற்கோள்காட்டி ஓர் ஆய்வு அபுசாலிஹ்