Abusalihonline's Blog

Just another WordPress.com site

அறிவொளி அணைந்தது

அறிவொளி அணைந்தது

அபுசாலிஹ்

இந்திய
நாட்டின் கண்ணியம் ,அறிவுக்கூர்மை எளிமை , வலிமை ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த டாக்டர் கலாம் மறைந்து விட்டார்,

இன்னாலில்லாஹி….நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்,
அவனிடமே திரும்பிச் செல்பவராய் இருக்கிறோம்

இந்திய இளைஞர்களை கனவு காண சொன்ன கனவு நாயகன் .. உழைப்பு அறிவு தேடல் , மானிட நேசம் நாட்டுப்பற்று உள்ளிட்ட முழக்கங்களை தாரக மந்திதிரமாக கொண்ட சிறந்த மனிதர் ராமேஸ்வரத்தில் ஏழை மார்க்க அறிஞருக்கு மகனாக பிறந்தார். . வறுமையில் செம்மை பேணிய
இளைஞர்களுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்து, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்த தமிழ்மகன் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். பொறாமை , தற்பெருமை , அகங்காரம் , தன்னை மட்டுமே முன்னிருத்தும் அகந்தை என இன்றைய கால கட்டத்தில் உலகில் அத்தகைய குணங்களை அடிப்படையாக கொண்ட பல அரசியல் வாதிகளாலும் கூட தவிர்க்க முடியாத, மதித்தே தீரவேண்டிய மாண்பாளராக விளங்கினார். இந்திய வரலாற்றில் வீர திப்புவுக்கு பிறகு ஏவுகணை இயலை மேம்படுத்தி அந்நிய சக்திகளை அலற வைத்தவர். . அணு விஞ்ஞானியாக இந்தியாவை வல்லரசாக்கிய நல்லரசர். . அவரது அக்னி சிறகுகள் உள்ளிட்ட நூல்கள் இளைய தலைமுறையினருக்கு நிரந்தர பாடநூலாக மாறிய வினோதம் கலாம் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

கலாம் காட்சிக்கினிய வராக கடும் சொல் சொல்லாதவராக இருப்பினும் கொண்ட கொள்கையில் உறுதி வாய்ந்தவராக விளங்கினார். .கல்வி கற்பித்தலில் ஆர்வம் கொண்டவராக மட்டுமே விளங்கினார். உயர உயர சிகரம் தொட்ட போதும் அவரது பார்வை ஏழைகளை இளையதலைமுறையினரை நோக்கியே இருந்தது.

கலாம் அவர்களை பற்றி பொதுவாக யாரும் அறியப்படாத செய்தி . ஆச்சரியப்படும் செய்தி ஒன்று உண்டு . ஆர் எஸ் எஸ்ஸின் பழம் பெரும் தலைவரும் விடுதலைபோராட்ட காலத்தில் சர்ச்சைக்குரியவராக கருதப்பட்ட வீர சவர்க்கார் உருவப்படத்தை கலாம் குடியரசுத்தலைவராக பொறுப்பில் இருக்கும்போது திறந்து வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எவர் மனதையும் புண்படுத்த விரும்பாத கலாம் அன்றைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டவர்களின் விருப்பத்திற்கேற்ப சிலை திறந்து வைத்து விட்டார். பாஜக அல்லாத பல கட்சிகள் அதனை விமர்சித்தன. . கலாம் அந்த விமர்சனத்தை லட்சியம் செய்யாதவர் போல் காணப்பட்டார். குடியரசுத்தலைவர் என்னதான் நினைக்கிறார். என்பதை யாராலும் அறிய முடியவில்லை. . ஆனால் அதன் பிறகு சில நாட்களில் குடியரசுத்தலைவர் மாளிகை அலுவலகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. . மேதகு குடியரசுத்தலைவர் அவர்கள் இனி சிலை திறப்பு , மற்றும் உருவப்பட திறப்பு நிகழ்வுகளுக்கு அழைக்கவேண்டாம் . பிரமுகர்கள், தலைவர்கள் காட்டிய நல்ல விஷயங்களை மட்டும் கருத்தில் கொள்ள குடியரசுத்தலைவர் விரும்புகிறார் . எனவே அழைக்கவேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தல் கலாமின் மாளிகையில் இருந்து வெளியானது. அதன்பிறகு எந்த சிலை திறப்புக்கோ , பட திறப்பிற்கோ சென்றதில்லை. .

நமக்கு தெரிந்து சிலைகள் , உருவப்பட திறப்பு நிகழ்வுக்கு சவூதி மன்னருக்கு பிறகு அதிகார பூர்வமாக இன்னும் சொல்ல வேண்டுமெனில் ஆவணப்பூர்வமாக , ஆதார பூர்வமாக பங்கேற்காதவர் ,தலைமை வகிக்காதவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே.

தனது கொள்கையை விருப்பத்தை ,நம்பிக்கையை வன்மையாக கடை பிடிக்காமல் மென்மையாக பிறர் மனம் புண்படாமல் வெளிப்படுத்தியவர் . பண்பாளர் கலாம்.

படம் . சிலை திறப்பு நிகழ்வுகளை சமயோசிதமாக தவிர்த்தார் . அடுத்து ஒரு சோதனை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவாலயத்தின் திறப்பு நிகழ்வில் அப்துல் கலாம் தலைமை ஏற்று தீரவேண்டிய நிலையில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு நடுவே பிரார்த்தனையை தமது செய்தியாக வழங்கினார். இறைவா எங்களுக்கு நல்ல தலைவர்களை வழங்குவாயாக . அடுத்து அடித்தார் ஓர் அதிரடி . இறைவா எங்களுக்கு நல்ல குடிமக்களை வழங்குவாயாக . என்றார் அவரது பிரார்த்தனை இந்த ரீதியிலேயே அமைந்தது. அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளின் உதாரண புருஷனாக வாழ்ந்த அப்துல் கலாம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க வேண்டுவோம்

Advertisements
Comments Off on அறிவொளி அணைந்தது