Abusalihonline's Blog

Just another WordPress.com site

1993ம் ஆண்டு குண்டுவெடிப்பு ‘ 67 அப்பாவிகள் விடுதலை

1993 ம் ஆண்டு ஆகஸ்ட் 12 மற்றும் டிசம்பர் 6 ல் நடந்த ஹைதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அது தொடர்பாக ஏராளமானோர் விசாரணை வளையத்தின் முன் நிறுத்தப்பட்டனர். குறிப்பாக சிறுபான்மை சமூகத்தின் நிம்மதியை தொலைக்க வைத்த தொடர் கதைகள் நடந்த வண்ணம் இருந்தன. ஊடகங்கள் பெரும்பாலானவை தங்கள் கற்பனைகுதிரைகளை தட்டி விட்டு அபத்தங்களையும் அபாயங்களையும் பரப்பின. . முகம் தெரியாத அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சூறையாடி சூன்யமாக்கும் நிலைக்கு இட்டு செல்கிறோமே என்ற கவலை , பொறுப்புணர்வு , துளியும் இல்லாத ஊடகங்கள் அரசுத்துறை இயந்திரங்களின் நிலையால் முஸ்லிம் சமூகம் தொடர் துயரத்துக்கும் இன்னலுக்கும் இலக்கானது .

தங்கள் மீதான களங்கத்தை துடைத்திட , அநீதியை அகற்றிட இடைவிடாத போராட்டத்தின் காரணமாகவும் , நீதித்துறையின் நீஈண்ட உறக்கத்தின் பின் கிடைத்த விழிப்பின் காரணமாகவும் இந்த நாட்டில் நீதி மெல்ல மெல்ல சாகாமல் உயிர் பிழைத்து வாழ்கிறது என்பது உண்மை.

1993ல் நிகழ்ந்த 3பேர் பலியான குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பலரில் 9 பேர் 2007 ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். . அவர்கள் மீதான குற்றசாட்டில் உண்மை இல்லை , ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பதின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். சம்சுத்தீன், ஜாகிர்த்தீன், அஹ்மத், அஜீமுத்தீன் , நஷீருத்தீன் முகமது யூசுப், முகமது அன்சாரி, முகமது, கவுஸ் , பாஷா , மற்றும் அஜீஸ் அக்பர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு சம்பவம் நடந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் அல்ல என 9 பேர் விடுவிக்கப்பட்டனர். அதற்கான இழப்பீடோ , அந்த அப்பாவிகளை சிக்க வைத்த படுபாவிகள் மீதோ இவ்வளவு தாமதான நீதிக்கு காரணமான புண்ணியவான்களுக்கு (?) எதிரான விசாரணையோ மேற்கொள்ளப்படவில்லை.

எப்படியாவது அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டால் போதும் என்ற மன நிலை , பரிதாபகர மன சமாதானம் மக்களின் பொது புத்தியில் புகுத்தப்பட்டு வெகு காலமாகி விட்டது.
அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டு சிறையில் அவலம் அனுபவித்த 58 பேர் நிரபராதிகள் என கடந்த வாரம் ஹைதராபாத் கீழ் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 58 பேரில் 57 பேர் மட்டுமே வீடுகளுக்கு செல்ல முடியும் . டாக்டர் ஜலீல் அன்சாரியை தவிர . காரணம் அவர் மீது மகராஷ்டிர மாநிலத்தில் வழக்குகள் உள்ளனவாம்

ஹைதராபாத்தில் உள்ள 4 வழக்குகளில் இருந்து மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது போல் எத்தனை பேர் இந்திய மாநிலங்களில் வெஞ்சிறைகளில் வெம்பி கிடக்கிரர்களோ ? யார் அறிவார் ?சில ஆங்கில ஊடகங்களின் தகவல்படி டாக்டர் ஜலீல் அன்சாரி க்கு 2 மகன்களும் 5 பெண்குழந்தைகளும் உள்ளனர்.. நான் இழந்த பொன்னான 22 ஆண்டு வாழ்க்கையை யார் தருவார் ? என்கிறார் ஓர் அமைதியான குடும்ப தலைவனின் வாழ்வு செராப்பள்ளி மற்றும் வாரங்கல் சிறைகளிலே பெரும்பகுதி கழிந்து விட்டது.

இந்திய சிறைகளில் இஸ்லாமியர்களின் நிலை என்ன ? அ வர்களின் வழக்குகள் மீதான உண்மை தன்மை என்ன? நீதி நிறை செலுத்தப்படுகிறதா ?
சிறைவாசிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே என்ற தகவல்கள் ஆய்வுகள் இன்னமும் அவ்வாறே நீடிக்கிறதா ?

மத்திய மாநில அரசுகளும் நீதித்துறையும் அரசு இயந்திரங்களும் தமது நீடு துயிலை கலைக்குமா ?

Advertisements
Comments Off on 1993ம் ஆண்டு குண்டுவெடிப்பு ‘ 67 அப்பாவிகள் விடுதலை