Abusalihonline's Blog

Just another WordPress.com site

கோத்ரா ரயில் எரிப்பு – மோடி அரசியல் வெற்றிக்காக நடத்தப்பட்டது. பட்டேல் இனத்தை சார்ந்த தலைவர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

கோத்ரா ரயில் எரிப்பு – மோடி அரசியல் வெற்றிக்காக நடத்தப்பட்டது. பட்டேல் இனத்தை சார்ந்த தலைவர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

இந்திய அரசியலையே புரட்டி போட்ட , ஓர் அரசியல் சக்தி வெறியூட்டி வளார்ந்தது எப்படி என்பதை அந்த கைகங்கர்யத்தை செய்த சமூகத்தை சேர்ந்த தலைவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்த போது உலகம் அதிர்ந்து போனது அந்த வெறியூட்டும் பரப்புரையினால் ஒரு இனப்படுகொலை ஒன்றை நடத்தி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை படுகொலை செய்த கொடூரத்தின் பின்னணியில் பாஜக வும் மோடியும் இருந்ததாக தகவல்கள் உருதிபடுத்தப்ப்ட்டுள்ளன.

இது குறித்து படிதார் சமிதி என்ற சாதி சங்கத்தின் முக்கிய தலைவர்கள் தங்களின் மனம் திறந்து கருத்துக்களை கூறியுள்ளனர்.

படிடார் சமிதி தலைவர்கள் – ராகுல் தேசாய் , லால்ஜிபாய் பட்டேல் என்ற முன்னணி தலைவர்கள் வெளியிட்ட நெருப்பு கருத்துக்களில் பாஜக என்ற மதவாத அமைப்பு , முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வை வளர்த்து அரசியல் வளர்த்து வருகிறது.

2002 தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக கோத்ரா ரயில் எரிப்பை பயன்படுத்தினார் என்பதை தெளிவாக சொல்ல முடியும் என்கிறார் ராகுல் ராய்

பிப்ரவரி 2002 ல் சபர்மதி விரைவு தொடர் வண்டியில் 59 பேர் பலியாயினர். அதில் பெரும்பாலோனோர் கர சேவகர்கள் .

(31 முஸ்லிம்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ) தொடர்ந்து நடந்த இனப்படுகொலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெறித்தனமாக வேட்டையாடப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்பு வீடியோ பள்ளிகூட மாணவர்களிடம் கூட மீண்டும் மீண்டும் போட்டு காட்டப்பட்டு அவதூறு மற்றும் பகைமை தீ வளர்க்கப்பட்டது .

அவர்களது தீவிர வெறி பரப்புரையில் முஸ்லிம்களை கொன்று தீர்ப்பது மட்டுமே ஹிந்துக்களின் வேலையாக இருக்க முடியும் அளவுக்கு கொடூர பரப்புரையில் ஈடுபட்டார்கள். ரயிலை முஸ்லிமை வைத்து எரித்தார்களா ? என்பது எங்களுக்கு தெரியாது ஆனால் இது பாஜக முன்கூட்டியே திட்டமிட்டு செய்த சதி என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்கிறார்

மத வாத வெறுப்பின் போக்கு இங்கு வேர் பிடித்து வளர்ந்துள்ளது . மதவாதத்தின் பேரால் நாங்கள் வஞ்சகமாக இப்பொது உணர்கிறோம் என்கிறார் . ராகுல் தேசாய்

முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக வன்முறைகள்
நி கழ்த்தப்போகிரார்கள் என்று எங்கள் மக்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் பாஜக அதனை செய்தே தீரும் என்கிறார் .

மெஹ்சானா பகுதியை சேர்ந்த லால்ஜி பாய் பட்டேல் கூறுகிறார் கோத்ரா சம்பவத்தின் பின்னணியில் பாஜகவின் சதி உண்டு என்பதில் சந்தேகமே இல்லை . நேற்று முஸ்லிம்களை குறிவைத்தவர்கள் இன்று எங்களை நோக்கி திரும்பி இருக்கிறார்கள் இவர்களின் கேவல அரசியல் நாளை நக்சல் கொள்கை தலை தூக்கத்தான் வழி வகுக்கும் என்றார்.

அரசியல் ரீதியாக முன்னுக்கு வர அப்பாவிகளை கருவறுத்த பயங்கரவாதிகளை யார் தண்டிப்பது ?

Advertisements
Comments Off on கோத்ரா ரயில் எரிப்பு – மோடி அரசியல் வெற்றிக்காக நடத்தப்பட்டது. பட்டேல் இனத்தை சார்ந்த தலைவர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

பாஜகவை அலறவைக்கும் மஹ்பூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் அரங்கம் மீண்டு ம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அண்மையில் அம்மாநிலத்தில் அமைந்த மஜக பாஜக கூட்டணி அரசு நிர்வாகத்தை நகர்த்திக்கொண்டு இருந்த நிலையில் முதல்வர் முப்தி முகமது மறைந்ததை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற வினா அரசியல் அரங்கில் எழுந்தது . விடை தெரிந்த வினாதான் எனினு ம் விடையை உறுதி செய்து கொள்வதில் மனித மனங்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது தானே ?
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல் அமைச்சராக இருந்த மக்பூபா முப்தி மீண்டும் மக்கள் ஜனநாயக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தெர்த்டுகப்பட்டு மாநில முதல்வராவார் என அனைவரும் எதிர்பார்த்த சூழலில் அரசியல் காட்சிகள் மாறத்தொடங்கியுள்ளது. தந்தை முப்தி முகமது சயீது போல் மகள் மக்பூபாவும் முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வார் . பாஜகவுக்கு முன்பு வழங்கப்பட்டது போல் துணை முதல்வர் பதவி தரப்படும் மனம் போனபடி முன்னர் திட்டமிட்டபடி சங்க பரிவர் அஜெண்டாக்களை படிப்படியாக நிறைவேற்றலாம் என பகல் கனவு கண்டு கொண்டு இருந்த பாஜகவினரின் கனவுக்கு திடீர் என திரை போட்டு இருப்பவர் மக்பூபா முப்தியே தான் .

பாஜகவுக்கு துணை முதல் அமைச்சர் பதவி தர முடியாது என மறுத்து இருக்கிறார். இதனால் பனி மலையில் காவி தொடர்ந்து பறக்க இயலா நிலை ஏற்பட்டுள்ளது. குறுகிய kaala ஆட்சியில் பாஜக பல்வேறு வெறுப்பு நடவடிக்கையில் இறங்கியது.ஜம்மு பகுதி மக்களை ஒரு சார்பாகவும் காஷ்மீர் மக்களை பாரபட்சமாகவும் நடத்தியது. குறிப்பாக பசுவதை தடை சட்டத்தை சாக்காக வைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்தியது .
மாட்டு இறைச்சி விருந்து வைத்த சுயேச்சை எம் எல் ஏ பொறியாளர் ரஷீத் சட்டசபை வளாகத்தில் பாஜக எம் எல் ஏ க்களால் தாக்கப்பட்டார். . இரு சமூக பதட்டம் அதிகரிக்க பாஜக தொடர்ந்து காரணமாக விளங்கவே காஷ்மீர் மக்களிடையே பாஜகவின் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில் பாஜகவை மசக தலைவி மக்பூபா கடும் சுற்றலில் விட்டு விட்டார். அதிகாரத்தில் சரி பங்கு , ஆட்சியில் ஆதிக்கம் என ஆதிக்க கனவு கொண்ட பாஜக முகாம் விரக்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தந்தையரின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதோடு அரசியல் நகர்வு குறித்து ஆலோசிக்கவும் பாஜகவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், காங்கிரசின் சோனியா காந்தியும் அடுத்தடுத்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவியை சந்தித்துள்ளனர். தந்தையார் முப்தி முகமது சயீது போல் அல்லாமல் காஷ்மீர் சுயாட்சி அரசியலில் மக்பூபா நம்பிக்கை உடையவர். பாஜகவின் விருப்ப திற்கு ஏற்ப தலை அசைப்பாரா ? பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பாரா? விரைவில் தெரிந்து விடும்

Comments Off on பாஜகவை அலறவைக்கும் மஹ்பூபா முப்தி