Abusalihonline's Blog

Just another WordPress.com site

மேற்கு வங்கம்; தேவை 88 முஸ்லிம் வேட்பாளர்கள்- அறிவித்ததோ 56 மட்டுமே . அபுசாலிஹ்

மேற்கு வங்கம்; தேவை 88 முஸ்லிம் வேட்பாளர்கள்- அறிவித்ததோ 56 மட்டுமே .
அபுசாலிஹ்

எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் அதிக சட்ட மன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக மேற்கு வங்காளம் பெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 294, தமிழ்நாடு 234, கேரளா 140, அஸ்ஸாம் 129, பாண்டிச்சேரி30 தொகுதிகளிலும் தேர்தல்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு , கேரளா , புதுவை மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அஸ்ஸாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் மட்டும் 6 கட்டமாகவும் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவித்துள்ள நிலையில் மேற்கு வங்காளத்தில் பெரிய சமூகங்களில் ஒன்றாக கருதப்படும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக மேற்கு வங்காள முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி 56 முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

63 சதவீத முஸ்லிம்கள் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அதிக பட்சமாக 14 முஸ்லிம் வேட்பாளர்களும் அதற்கு அடுத்தபடியாக 50 சதவீத முஸ்லிம்கள் வாழும் வடக்கு பர்கானா மாவட்டத்தில் 10 முஸ்லிம் வேட்பாளர்களும் மால்டா மாவட்டத்தில் 5
ஹூக்ளி மாவட்டத்தில் 5
உத்தர் தின்ஜ்புரா 4
பர்த்மான் 4
ஹவுரா 3
பிர்ப்ஹூம் 3
நாடியா 2
கொல் கத்தா 2
தக்ஷின் தினாபூர் 1
கூச் பெஹார் 1
பார்பா 1
மேற்கு மிதுனாபூர் 1

ஆகிய இடங்களில் களம் காண்கின்றன. மம்தா வின் திருணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள294 தொகுதிகளில் 227 தொகுதிகளில் போட்டியிட்டு மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் 30 சதவீதத்திற்குமேல் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதன் அடிப்படையில் மேற்கு வங்க சட்ட மன்றத்தில் 88முஸ்லிம்கள் சம உ க்களாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற நிலையில் ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் 56 முஸ்லிம்களை மட்டுமே வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. மக்களின் சதவீததின்படி மம்தா மட்டுமே 68 முஸ்லிம்களை களமிறக்கி இருக்கவேண்டும் . கூட்டணியிலும் சேர்த்து மொத்தமாக88 முஸ்லிம்களை வேட்பாளர்களாக அறிவித்து இருக்கவேண்டும்

Advertisements
Comments Off on மேற்கு வங்கம்; தேவை 88 முஸ்லிம் வேட்பாளர்கள்- அறிவித்ததோ 56 மட்டுமே . அபுசாலிஹ்

இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை ஆம்நெஸ்டி அதிர்ச்சி தகவல் அபுசாலிஹ்

இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை ஆம்நெஸ்டி அதிர்ச்சி தகவல்

அபுசாலிஹ்

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாக ஆம்நெஸ்டி எனும் சர்வதேச பொது மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் நம் நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என சமூக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்தியில் மோடி ஆட்சி ஏற்பட்ட காலம் தொடங்கி சமூக பதற்றம் சகிப்பின்மை அதிகரித்து வருவதை இந்தியாவில் உள்ள நடுநிலையாளர்கள், உண்மையை உரைக்கும் இதழியலாளர்கள் , மதசார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக களமாடும் போராளிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து அபாய அறிக்கை வாசித்து வருவதை இந்நாடு உணர்ந்துள்ளது. இருப்பினும் அரசியல் முரண்பாட்டின் காரணமாக , எதிர் கருத்துக்களை , மோடிக்கு எதிராக பரப்புகிறார்கள் என்ற பதிலை மோடி தரப்பினர் உடனடியாக கூறி எதிர் கருத்துக்களை எளிதாக சமாளித்து வந்தனர்.

ஒரு தேநீர் கடைக்காரர் தானே ? ஏழை தாயின் மகன் தானே ? என இளக்காரமாக கருதி தன்னை எதிர் கருத்தினர் அவமானப்படுத்துவதாக பிரதமர் மோடி சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அழுகுணி ஆட்டத்தை அரங்கேற்றி வரும் நிலையில் சர்வதேச ஆம்நெஸ்டி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கை முற்றும் முழுதாக தோலுரித்துள்ளது.

சட்ட விரோத கைதுகள், , சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறைகள் , பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சாதீய படுகொலைகள், குற்றங்கள், , நீதியை கேலி செய்யும் விதமாக நடைபெறும் கொலைகள், மற்றும் கருத்துரிமைக்கு எதிரான வன்முறை செயல்கள் அதிகரித்து வருவதாக ஆம்நெஸ்டி வெளியிட்டுள்ள விவரங்கள் மத்திய அரசுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதை கூறிட முடியும்.

2015-16 அறிக்கையில் நரேந்திர மோடி என்ற ஹிந்து தேசிய வாதியின் தலைமையிலான அரசு ஆளும் கட்சி எம்பிக்களின் , ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் வெறியூட்டும் செயல்களால் மதவாத பிரச்னை என்ற நெருப்புக்கு நெய்யூற்றும் விதமாக நூற்றுக்கணக்கான மத வாத வன்முறைகளில் செயல்பட்டதை தடுக்காததொடு மாறாக அந்த கொடும் செயல்களை மறைக்கவும் நியாயபடுத்தவும் முயன்றதாக ஆம்நெஸ்டி வெளுத்து வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சில அமைப்புகள் , அரசு மற்றும் ஆளும்கட்சி துணையுடன் தாக்குதல் தொடுத்து வருகிறது. அதன்விளைவாக அறிஞர்கள் , எழுத்தாளர்கள் கவுரத்திற்குரிய தங்கள் விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.

விருதுகளை திருப்பி கொடுத்துள்ள அறிஞர்களின் அறிக்கைகளே கருத்துரிமை இந்த அரசில் எந்த அளவு நசுக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணமாக , சாட்சியமாக விளங்குவதாக ஆம்நெஸ்டி குறிப்பிட்டுள்ளதை மறுக்க முடியுமா ?

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதிகளை அனுப்ப விடாமல் தடுத்து கெடுபிடி காட்டப்படுகிறது.

பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 22 ஆயிரம் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 37 ஆயிரம் குற்றங்கள் கற்பழிப்பு குற்றங்கள் ஆகும் என்பது குலை நடுங்க வைக்க கூடியது . இதில் அதிகமானவை காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்டதாகவும் பெண்களை பணி இடங்களில் அவர்களில் தனித்தன்மையை காக்க எந்த வழி காட்டுதல்களும் அறிவுருத்தப்படவும் இல்லை. , பின்பற்றப்படவும் இல்லை. அநேக மாநிலங்களில் இது தான் நிலை .

சட்ட விரோத கைதுகள் மனித உரிமை மீறல்கள் போன்ற விஷயங்களில் இன்றைய மத்திய அரசின் செயல்பாடுகளை விளாசி தள்ளிய ஆம்நெஸ்டி யின் அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் நடந்த சட்ட விரோத கைதுகளை குறித்த விவரங்களை நாம் அறிந்துகொண்டாலே போதும் நிலைமை எந்தளவு மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் ?

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 3200 பேர் எவ்வித குற்ற சாட்டும் இன்றி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற கைதுகளில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டி காட்டும் வழி காட்டும் நெறி முறைகள் பின்பற்றபடவே இல்லை என வேதனை தெரிவிக்கிறது ஆம்நெஸ்டி

Comments Off on இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை ஆம்நெஸ்டி அதிர்ச்சி தகவல் அபுசாலிஹ்

இந்தியா- உயர்நீதிமன்றங்களில் 26 நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள் ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் அபுசாலிஹ்

இந்தியா- உயர்நீதிமன்றங்களில் 26 நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள்
ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்

அபுசாலிஹ்

இந்தியாவில் நீதித்துறையில் உயர் பொறுப்புகளில் மிக குறைந்த அளவே முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14.2 விழுக்காடு முஸ்லிம் மக்கள் தொகை யின்படி உரிய பிரநிதித்துவம் வழங்கப்படவில்லை
இந்தியா முழுவதும் உள்ள 24 உயர்நீதி மன்றங்களில் நீதித்துறையின் அதிகார பூர்வ அறிவிப்பின்படி 1. 044 உயர் பொறுப்புகள் உள்ளன. அதன்படி 601 உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடமையாற்றி வருகின்றனர். 443 உயர் நீதியன்ற நீதிபதி பணியிடங்கள் நிரப்ப படவில்லை. நிரப்பப்பட்ட 601 நீதிபதிகளில் 26 நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள் என்ற தகவல்கள் நாட்டின் நலன் நாடுவோரை அதிரவைத்துள்ளது.

இது நீதித்துறையில் உயர் பதவிகளில் வெறும் 4.3 விழுக்காடு தான் . எவ்வளவு அவலம் . நியமனம் செய்யப்பட்ட 601 நீதிபதிகளில் 83 முஸ்லிம்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டால் தான் சரியான சம நீதி சமூக நீதி செயல்படுத்தப்பட்டது என இந்தியர்களாகிய நாம் மார் தட்டிக்கொள்ள முடியும் . ஆனால் நடந்தது நேர் மாறானது. இதில் மிகப்பெரிய சோகம் என்னவெனில் இந்த 26 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 8 நீதிபதிகள் இவ்வாண்டு ஒய்வு பெறுகின்றனர், அடுத்த ஆண்டு மேலும் மூன்று பேர் ஒய்வு பெற விருக்கின்றனர. அடுத்த ஆண்டில் உயர்நீதிமன்றங்களில் 20 க்கும் குறைவான முஸ்லிம் நீதிபதிகளே பொறுப்பில் தொடர்வார்கள் என்ற நிலை (உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா ) .

மாநில வாரியாக பார்த்தோமானால் புள்ளிவிவரங்களும் பிரநிதித்துவ விவரங்களும் உள்ளத்தின் கொதிநிலை யை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகையில் நாட்டில் இரண்டாமிடம் வகிக்கும் மாநிலமாகும். அரசு புள்ளிவிவரப்படியே 34.2 விழுக்காடு முஸ்லிம் மக்கள்தொகையைக்கொண்ட அங்கு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் உள்ள 19 நீதிபதிகளில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.

68.3 விழுக்காடு முஸ்லிம்களை கொண்ட ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே முஸ்லிம்கள் . இதில் ஒருவர் விரைவில் ஓய்வு பெறப்போகிறார்.

10 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரே ஒரு நீதி பதி மட்டுமே இருக்கிறார். அந்த ஒரே ஒரு நீதிபதியும் இவ்வாண்டு ஒய்வு பெறப்போகிறார். ஹைதராபாத் உயர்நீதிமன்ற முஸ்லிம் நீதிபதியும் , ராஜஸ்தான் மாநில உயர் நீதி மன்ற ஒரே ஒரு முஸ்லிம் நீதி பதியும் இவ்வாண்டு ஒய்வு பெற்று விடுவார்கள் எனில் அங்கு முஸ்லிம் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம் செய்யப்பட எத்தனை காலம் ஆகுமோ ?

24 உயர் நீதிமன்றங்களில் கேரளா மாநிலத்தில் மட்டுமே அதிக முஸ்லிம் நீதிபதிகள் உள்ளனர் . 35 நீதிபதிகளில் 5 முஸ்லிம் நீதி பதிகள் உள்ளனர். ஆனால் அது குறைவான பிரதிநிதித்துவமே ஆகும். . 27 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக்கொண்ட கேரளாவில் 9 உயர்நீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிம் நீதிபதிகள் இருக்கவேண்டும்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் 7 முஸ்லிம்கள் நிரப்ப்பட்டு இருக்கவேண்டும்(. 59/7). ஆனால் ஒருவர் மட்டுமே முஸ்லிம் நீதிபதி அவரும் இதே ஆண்டில் ஒய்வு பெறப்போகிறார்.

கொல்கொத்தா உயர் நீதிமன்றத்தில் 11 முஸ்லிம் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கவேண்டும் இங்கும் இருவர் மட்டுமே முஸ்லிம்கள் 42/11 அதிலும் ஒருவர் அடுத்த ஆண்டு
( எஸ் நீங்க நினத்தது கரெக்ட் ஒருவர் ஒய்வு பெறப்போகிறார் )
டெல்லி உயர் நீதி மன்றத்தில் 39 பதவிகளில் 5 பேர் முஸ்லிம்களாக இருக்கவேண்டும் அதுவே சமூக நீதி ஆனால் இங்கு இரண்டு பேர் மட்டுமே .

மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் இடம் பெற்ற30 நீதி பதிகளில் 2 பேர் முஸ்லிம் இருக்கவேண்டும். ஆனால் ஒருவர் கூட இல்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 37 இடங்களில் இருவர் முஸ்லிம் நீதி பதிகளாக இருக்கவேண்டும். இங்கு ஒரு முஸ்லிம் நீதிபதி கூட இல்லை.

பிகாரின் பாட்னா உயர் நீதி மன்றத்தில் 28 பேரில் 5 முஸ்லிம்கள் இருக்கவேண்டும் ஆனால் இருவர் மட்டுமே முஸ்லிம்கள் . அதில் ஒருவர் இவ்வாண்டு ஒய்வு பெறப்போகிறார்.

50 நீதிபதிகள் கொண்ட பஞ்சாப் ஹரியான உயர் நீதிமன்றகளில் இரு முஸ்லிம் நீதிபதிகள் நியமனம் செய்ய ப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் இங்கும் ஒருவர் கூட இல்லை.

உத்தர் கான்ட் நீதிமன்றத்தில் 6 நீதி பதிகள் உள்ளனர் இதில் ஒரு முஸ்லிம் நியமனம் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அது இன்றுவரை நடக்கவே இல்லை

24 உயர் நீதிமன்றங்களில் 12 நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி கூட முஸ்லிம் நியமனம் இல்லை. மேகால யா, ஹிமாச்சல் பிரதேஷ் , சத்தீஷ்கர் ஒரிஸ்ஸா மாநிலங்களிலாவது முஸ்லிம் மக்கள் தொகை கொஞ்சம் குறைவு தான்.

ஆனால் அஸ்ஸாம், ஜார்கண்ட் , மத்தியப்பிரதேஷ் தமிழ் நாடு , பஞ்சாப் ஹரியானா உத்தர்கண்ட் , மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் குறைந்தது எத்தகைய சமாதானம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

உயர் நீதிமன்றங்களை விட உச்ச நீதிமன்ற நியமனங்களில் முஸ்லிம்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது 26 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள் அவர்கள் இவ்வாண்டு ஒய்வு பெற்ற பின்னர் உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் முகமே இல்லாத பரிதாப நிலை ஏற்படப்போகிறது

விளிம்பு நிலை சமூகங்களான தலித்கள் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் சார்பாக உயர் நீதிமன்றங்களில் 443 இடங்கள் நிரப்படவேண்டும். உச்சநீதிமன்ற த்தில் 5 இடங்கள் நியமனம் செய்யப்படவேண்டும்.

நீதிமன்ற உயர் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதி பரந்தாமன் அவர்களின் கருத்து இங்கு முன்னெடுக்கப்படவேண்டும்

Comments Off on இந்தியா- உயர்நீதிமன்றங்களில் 26 நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள் ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் அபுசாலிஹ்