Abusalihonline's Blog

Just another WordPress.com site

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் விரிவான ஆய்வு அபுஸாலிஹ்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் விரிவான ஆய்வு

அபுஸாலிஹ்
மேற்கு வங்காளம் தமிழ்நாடு கேரளம் அஸ்ஸாம் பாண்டிசேரி ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தல்கள் கிட்ட தட்ட மினி இந்தியாவுக்குமான தேர்தலாகவே நடந்து முடிந்துள்ளன .23 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இது ஒரு மெகா தேர்தல் கொண்டாட்டமாகவே முடிந்துள்ளது. இவ்வளவு அதிகமான மக்கள் திரள் வாக்களித்த நிகழ்வு முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த மெகா தேர்தல் கச்சேரி சீனா அமேரிக்கா இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக திரளான மக்கள் வாக்குரிமையை பயன்படுத்திய சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது . ஐந்து மாநிலங்களிலும் களம் கண்ட 4,120 வேட்பாளர்களில் 884 வேட்பாளர்கள் வாகை சூடினர். 1504 சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் களம் புகுந்தனர் . நம்புங்கள் அதில் 9 பேர் மட்டுமே வென்றனர்

1873 கோடீஸ்வர வேட்பாளர்கள் களமிறங்கினர் . பெரும்பாலும் பணக்காரர்கள் களமிறங்கிய தேர்தல்களம் இது தான் என்றால் அது மிகையில்லை. நாட்டிலேயே மிகவும் வயது முதிர்ந்த 103 வயது அஸ்கர் அலி மேற்கு வங்காளத்தில் தனது வாக்கினை செலுத்தினார் முதியவர் அஸ்கர் அலிக்கு வாக்களிப்பதில் இருந்த ஆர்வம் இன்றைய இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இருந்ததா என்றால் அதற்கு ஆம் என உங்களால் விடையளிக்க முடியாது . மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற அரு பத்தொரு வயது மம்தா பானர்ஜியும் எக்சிட் போல் முடிவுகள் 5 மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் அதனால் ஏற்பட்ட மக்களின் துயர் திமுக காங்கிரஸ் மனித நேய மக்கள் கட்சி மு லீக் பு.த உள்ளிட்ட வலுவான கட்சிகளின் வலுவான கூட்டணி என்ற அனைத்து அம்சங்களையும் மீறி பணபலத்தை பக்க பலமாகக்கொண்டு மத்தியில் ஆளும் மோடி அரசை உற்ற துணையாகக்கொண்டு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்த அதிமுக ஆட்சி அமைக்கும் அளவு சீட்டுக்களை பெற்றது

பீகாரில் அடைந்த படு தோல்விக்கு பிறகு அஸ்ஸாமில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியும் மேற்கு வங்காளத்தில் அது வென்ற 3இடங்களும் கேரளாவில் கிட்டிய ஒரே ஒரு சீட்டும் பாஜகவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அரசியல் செய்ய போதுமானவை

அஸ்ஸாமில் பாஜாகவுக்கு கிடைத்த வெற்றி அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்டதுதான் 3 தடவை தொடர்ந்து முதல்வராக இருந்த 81 வயது தருண் கோகய எப்போது இடத்தை காலி செய்வார் என பெரும்பாலான காங்கிரஸ் காரர்களே எதிர்பார்த்த தருணத்தில் தான் பாஜக அங்கு ஆட்சியை பிடித்துள்ளது

யாராலும் எப்போதும் எளிதில் அணுக முடிந்த பாமர மக்களிடம் நன்மதிப்பை பெற்ற உம்மன் சாண்டி வலுவாக எழுந்த இடது சாரி கூட்டணியிடம் வீழ்ந்தார். பல பத்து ஆண்டுகளாக சட்ட மன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற தொகுதிகளிலும் கேரளாவில் போட்டியிட்டு முட்டி மோதி பார்த்த பாஜக மூத்த தலைவர் முதியவர் ஒ ராஜகோபால் ஒரு வழியாக சட்டமன்றத்தில் நுழைந்துவிட்டார். ராஜகோபாலின் மேல் உள்ள அனுதாபத்தின் காரணமாக கிடைத்த வெற்றி பாஜகவின் கணக்கினை தொடங்கிவைக்க உதவியுள்ளது

அசாமில் சர்பானந்தா சொனாவாலும் கேரளாவில் 72 வயது பினராயி விஜயனும் மேவங்கத்தில் 61 வயது மம்தா பானர்ஜியும் தமிழகத்தில் 68 வயது ஜெயலலிதாவும் அரியணையில் அமர்ந்தனர்
ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் அடுத்து அமையும் ஆட்சியின் கடிவாளம் எங்கள் கைகளில் தான் இருக்கும் என சூளுரைத்து மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த தமிழகத்தின் 63 வயது விஜயகாந்தும் அஸ்ஸாமின் 66 வயது மவ்லவி பத்ருதீன் அஜ்மலும் போட்டியிட்ட தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாதது சோகம் தான் மவ்லவி அஜ்மலாவது 16000 வாக்குகள் பின்னடைந்து தான் தோற்றார் . ஆனால் மக்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் கட்டுதொகையை கூட இழந்தது பரிதாபம்.

மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து மூன்றாவது இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தள்ளப்பட்டது கடந்த தேர்தலில் பிரதான எதிர்கட்சியாகவும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாமல் ஆட்சி பீடத்தில் வீற்றிருந்த இடது சாரிகள் இன்று மேற்குவங்காளத்தில் மூன்றாமிடம் தள்ளப்பட்டது படு பாதாள வீழ்ச்சிதான்

கொதிக்கும் சாலைகள் கோழி முட்டையை சாலையில் போட்டால் நொடிப்பொழுதில் ஆப்பாயில் ஆகிவிடும் அளவு அனலின் கொடூரம் மக்களை மருட்டியது. வீட்டை விட்டே வெளியில் வர முடியாத அளவு மக்களை விரட்டியது ஜெயலலிதாவின் பரப்புரை பொதுக்கூட்டங்களில் கால் நடைகளைப்போல் சுமையுந்துகளில் மூடுந்துகளில் அள்ளி கொண்டு வரப்பட்ட மக்கள் தண்ணீரின்றி நிழலின்றி நாவரண்டு 7பேர் மடிந்தனர் அது அவரின் உயிர்கொல்லி யாத்திரையின் விளைவு அது .

இத்தனைக்கும் நடுவே மக்களை துன்புறுத்தாது தொண்டர்களை தொந்தரவு செய்யாமல் கேரள காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி 93 கூட்டங்களில் பங்கேற்று 4,100 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியே பயணித்து மக்களை சந்திப்பதில் முதலிடத்தையும் இந்திய அரசியல் தலைவர்களில் முது பெரும் அரசியல் தலைவராக விளங்கும் திமுக தலைவர் கலைஞர் 33 பொதுக்கூட்டங்களில் 3,500 கிலோ மீட்டர் பயணித்து மக்களை சாலை வழியாக சந்தித்தார். கேரளா மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தொண்ணூறு வயது அச்சுதனந்தன் 3,100 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியே பரப்புரை செய்தார் இதில் வேடிக்கை என்னவெனில் இவர்கள் நால்வருமே முதல்வர் ஆகவில்லை எனினும் மக்களை சந்திப்பதில் தாளாத தாகம் கொண்டவர்கள்

மேற்கு வங்காளம்
மேற்கு வங்கத்தில் 293 இடங்களில் 211 இடங்கள் மம்தா பானர்ஜியின் திருநாமூல் வெற்றி பெற, 92 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களில் வென்றது . சிபி எம் 148 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது சி பி ஐ 11 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்திலும் பார்வார்டு பிளாக் 25 இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும் ஆர் எஸ் பி 19 இடங்களில் போட்டியிட்டு மூன்றிலும் வெற்றி பெற்றன . பாஜக 291 இடங்களில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றது.

யார் இந்த மம்தா ?
61 வயது மம்தா 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் முதுபெரும் தோழர் சோம்நாத் சாட்டர்ஜியை 1984 ல் காங்கிரஸ் சார்பாக தோற்கடித்து யார் இவர் என அகில இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் 43 வருட கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு வந்தவர் ஓர் எழுத்தாளராக 41 நூல்களை எழுதியவராக பல கோடிகளுக்கு ஏலம் போகும் அளவு மதிப்பு மிகு ஓவியம் வரைபவராக பாடல்களுக்கு மெட்டமைக்க தெரிந்தவராக வெற்றிமிகு அரசியல் தலைவராகவும் மிளிர்கிறார் . ஹூம் வங்காளமே இவரது மெட்டுக்குதான் தாளம் போடுகிறது இரண்டாவது முறையாக.

65 முஸ்லிம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ப்படவேண்டிய மேற்கு வங்க சட்டமன்றத்தில் திருநாமூல் காங்கிரஸ் சார்பில் 38முஸ்லிம்களும் காங்கிரஸ் சார்பில் 18 முஸ்லிம்களும் இடது சாரிகளின் சார்பில் 8 பேர் பாஜக சார்பில் ஒரு முஸ்லிமும் சட்ட மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்க உள்ளனர்

அஸ்ஸாம் பாஜகவிடம் வீழ்ந்தது எப்படி ?

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிக அளவு முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றது எதனால் ? என்ற கேள்விக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிப்பாக அசாம் மாநில பாஜக பொறுப்பாளரும் பொது செயலாளருமான சங் பரிவார் சித்தாந்த வாதி ராம் மாதவ் கூறுகிறார் . அஸ்ஸாமில் முஸ்லிம் வாக்களர்களின் எண்ணிக்கை எங்களை பிரமிப்பு ஊட்டி மிரட்டியது உண்மை அது நிச்சயம் சவாலானது தான் . நாங்கள் தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களிடையே கவனம் செலுத்தினோம். மேலும் எங்களது மறைமுக திட்டப்படி காங்கிரசும் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் அவர்களுகுள்ளே மோதிக்கொண்டனர் . முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் அசாமில் பாஜக அமைச்சர்வையில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையே நிலவுகிறது ஆனால் ஆயுதம் ஏந்திய 9 முன்னாள் தீவிரவாதிகள் பாஜக ஏஜிபி போடோ முன்னணி சார்பில் சட்டமன்றம் செல்கின்றனர்
அஸ்ஸாம் பற்றி மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் கேரளா தமிழ்நாடு தேர்தல்கள் பற்றிய விரிவான மதிப்பீடுகள் அடுத்து

Advertisements
Comments Off on ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் விரிவான ஆய்வு அபுஸாலிஹ்

என்ன நடக்கிறது பங்களா தேஷில் ? அபுசாலிஹ்

என்ன நடக்கிறது பங்களா தேஷில் ? அபுசாலிஹ்

மோதியுர்ரஹ்மான் நிஜாமி பங்களாதேஷ் ஜமாயத்தே இஸ்லாமி தலைவர் மே 11ம் தேதி டாக்கா மத்திய சிறையில் வைத்து தூக்கில் போடப்பட்டார். ஜமாஅத் தொண்டர்கள் நாடெங்கும் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர் துறைமுக நகரமான சிட்டகாங்கில் ஆளும் அவாமி லீக்கிற்கும் ஜமாஅத் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது காவல்துறையினர் ரப்பர் குண்டுகளை வீசி ஜமாயத்தே இஸ்லாமி தொண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் அசனுஸ் ஷமான் நள்ளிரவில் நிஜாமி தூக்கிலிடப்பட்டார். என வெகு சிம்பிளாக அறிவித்தார் . அவரது தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிய கருணை மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. நிஜாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வடமேற்கு மாவட்டமான பாப்நாவில் உள்ள நிஜாமியின் பூர்வீக வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. . இத்தகவலை நிஜாமியின் மாமா மகன் அப்துல்லா அல் மாமூன் தெரிவித்தார். அவரது இறுதி அடக்க நிகழ்வில் 2500 பேர் பங்கேற்றனர். பல்வேறு நகரங்களில் காயிபான ஜனாஸா தொழுகை நடைபெற்றது. போராட முயன்ற ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தினர் முரட்டுத்தனமாக நசுக்கப்பட்டனர். அண்மைக்கலாமாக அவர்கள் போராடும் சக்தியை இழந்துவிட்டனர். ஜமாஅத்தே இஸ்லாமியை தடை செய்யும் திட்டத்துடன் ஆளும் ஷேய்க் ஹசீனா அரசு தீவிர ஆலோசனையில் இருக்கிறது. ஏற்கனவே 2013 ம் ஆண்டு ஜமாஅத் அரசியல் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் போராட வீதியில் களமிறங்கினால் என்ன கதி ஆவார்களோ என்ற பீதியில் அவர்கள் உறைந்து போய் உள்ளனர் . இதுவரை 200 பேருக்கு மேல் தூக்கிலிடப்பட்டுள்ளனர் . போதாத குறைக்கு 2015ல் மேலும் 197 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்த தீர்ப்பினை விதித்தது ஐ சி டி அது என்ன எழவு என நீங்கள் கேட்பது என்மனதிற்குள் கேட்கிறது. இன்டர் நேஷனல் கிரிமினல் TRIBUNAL சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் என்ற அமைப்பை ஷேய்க் ஹசீனா அரசு.. ஏற்படுத்தியது . அதனை வழக்கம்போல் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றது. அதன் போக்கு நூற்றுக்கணக்கான உயிர்களோடு விளையாடும் தீர்ப்பினை அள்ளி விடுவதை பார்த்த பின்னர் ஐநா வழக்கம்போலவே எதிர்ப்பினை பதிவு செய்தது. நியாயமான விசாரணையின்றி முறைகேடுகளும் வரம்பு மீறுதல்களும் அதிகரித்ததால் ஐநா அதிருப்தி தெரிவித்தது. யார் எதிர்த்தால் என்ன ஷேய்க் ஹசீனா அரசு தனது உயிர் கொல்லி நடவடிக்கைகளை நிறுத்தியபாடில்லை.

ஷேய்க் ஹசீனாவின் இந்த ருத்ர தாண்டவ ஆட்டத்திற்கு என்ன காரணம் ? பங்களாவில் ஓடும் ரத்த ஆற்றிற்கும் மரண ஓலத்திற்கும் என்ன காரணம் ? அதற்கு நாம் 45 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும் . 1971 ம் ஆண்டு பாகிஸ்தானின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து வங்காள மக்கள் கிளர்ந்து எழுந்தனர் . பாகிஸ்தான் தனது கோர குண்டு வீச்சினை அப்பாவி பங்களாதேஷ் மக்கள் மீது கொடூரமாக ஏவியது. அந்த மக்களை ஷேய்க் முஜிபுர்ரஹ்மான் ஒருங்கிணைத்தார்.முஜிபுர்ரஹ்மான் தலைமையின் கீழ் பாகிஸ்தானை திணறடித்த தலைமைத்துவம் உலகளவில் முக்கியத்துவம் பெற்றது. தமிழகத்தில் கூட அன்றைய முதல்வர் கலைஞரை அவரது கட்சிக்காரர்கள் தென்னகத்து முஜிபுர்ஹ்மான் என அழைத்தனர். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் பிறந்த அநேக குழந்தைகளுக்கு முஜிபுர் என பெயரிடப்பட்டது . அந்த முஜிபுர்ருக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி பகிரங்க ஆதரவு அளித்தார். பங்களாதேஷ் விடுதலை பெற இந்தியா அளப்பெரிய பங்கு ஆற்றியது.

கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட பங்களாதேஷின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் ஆயுதமேந்திய ரவுடிகள் நிகழ்த்திய தாக்குதலால் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 2 லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டனர். ஒரு கோடிப்பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் சுதந்திரம் என்ற இலக்கை அடைய பங்களாதேஷ் கொடுத்த பெரும் விலை . மறக்க முடியா கொடுங்கனவு அது . 9 மாதம் நடந்த இந்த போர் உலக வரை படத்தின் செட் அப்பை மாற்றி போட்டது . . முஜிபுர்ரஹ்மான் வங்கத்தின் பிரதமரானார் மிக குறுகிய காலத்தில் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட அவரது குடும்பத்தினர் அனைவருமே கருவறுக்கப்பட்டனர் ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் ஆனால் பங்களாதேஷ் மக்களுக்கு விடுதலை வாங்கி தந்த தலைவனின் உயிர் பறிக்கப்பட்ட நாள் ஆம் 1975 ஆகஸ்ட் 15 ம் நாள் முஜிபுரும் அவரது குடும்பத்தினரும் கூண்டோடு கொலை செய்யப்பட்டனர். அவரது இரண்டு மகள்களான ஷேய்க் ஹசீனா ஷேய்க் ரெஹானா இருவரும் அந்த கால கட்டத்தில் வெளி நாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர் . இல்லையெனில் முஜிபுரின் குடும்பத்தின் பேர் சொல்ல ஆள் இல்லாமலே இருந்து இருக்க கூடும் . ராணுவ ஜெனெரல் ஜியாவுர்ரஹ்மான் ஆட்சியை பிடித்தார். அவரும் 1981ல் கொல்லப்பட்டார். 1991 ல் ஜியாவின் மனைவி கலீதா ஜியா பிரதமரானார் . 2001 ல் முஜிபுரின் உயிர் தப்பிய மகள் ஷேய்க் ஹசீனா தலமையில் அவாமி லீக் ஆட்சியை பிடித்தது. அன்றில் இருந்து வரை இரண்டு பெண்மணிகளின் இரும்பு பிடியில் பங்களா தவிக்கிறது .

9 மாதங்கள் நடந்த போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்காக அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஜமாயத்தே இஸ்லாமி தலைவர்களை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. மோதியுர்ரஹ்மான் நிஜாமி தூக்கிலிடப்பட்ட ஜமாயத்தே இஸ்லாமி தலைவர்களில் நான்காமவர் . நிஜாமி மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் சாதாரணமானதல்ல 480 பேரை கொன்ற குற்ற சாட்டு அறிவுஜீவிகள் ஆசிரியர்கள் பத்திரிக்கையாளர்கள் மருத்துவர்கள் ஆகியோரை கொன்றதாக அவர் மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டு கருணை மனு நிராகரிக்கப்பட்ட அவல நிலை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய பிரிவின் துணை இயக்குனர் பில் ராபர்ட்சன் சொல்கிறார் நிஜாமி மீதான விசாரணை சுதந்திரமாகவோ நேர் மையாகவோ நீதிமன்ற நடைமுறைகளின் படி நடக்கவேயில்லை என்கிறார்
ஆம்நெஸ்டி என்ற சர்வதேச பொது மன்னிப்பு சபைக்கான தெற்காசிய பிராந்திய இயக்குனர் சம்பா பட்டேல் நிஜாமி மீதான விசாரணை ஐயங்களை எழுப்புகிறது. என்கிறார்

நிஜாமி மீதான வழக்கை எடுத்துக்கொண்டால்
( பிராஷிகியூஷன் தரப்பில் ) அரசு தரப்பில் 22 சாட்சிகள் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் நிஜாமியின் தரப்பில் 4 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க முடிந்தது. விசாரணை காலாவகாசம் நிஜாமிக்கு எதிராக 22 மாதங்களும் நிஜாமிக்கு 3 வாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினர் பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தின் போது நிஜாமி உள்ளிட்ட தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டது உண்மை ஆனால் அதற்காக கொடும் கொலைகள் பாலியல் வன்கொடுமைகள் எல்லாம் தங்களின் தலைவர்கள் செய்தார்கள் என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்கிறார்கள் சரவதேச சமூகம் வன்மையான எதிர்ப்புகளை வெளியிட்ட போதும் தூக்குத்தண்டனை அணிவகுத்த வண்ணம் உள்ளது கொலைக்களம் சுறுசுறுப்பாக ரத்த ஆறை ஓட்டிக்கொண்டே இருக்கிறது . பீதியில் உறைந்து கிடக்கிறது வங்கதேசம்

Comments Off on என்ன நடக்கிறது பங்களா தேஷில் ? அபுசாலிஹ்

முஸ்தபா – தன்னம்பிக்கையின் அடையாளம் அபுசாலிஹ்

முஸ்தபா – தன்னம்பிக்கையின் அடையாளம்

அபுசாலிஹ்

முஸ்தபா கூலித் தொழிலாளியின் மகன் இன்று 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுAவனத்தின் அதிபதி . ஐ டி பிரெஷ் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்துபவர் . இட்லி தோசை தயாரிக்கும் பிரமாண்ட நிறுவனம் இவருடையது இவரது ஐ டி 2005ல் 10 பாக்கெட் இட்லி தோசை தயாரிக்கும் நிறுவனத்தை 550 சதுர மீட்டர் பரப்பு மட்டுமே உள்ள சமையல் அறையில் நடத்தி வந்தார். சரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு 100 கோடி மதிப்புடைய நிறுவனமாக 1100 ஊழியர்களுடன் 50 ஆயிரம் இட்லி தோசை பாக்கெட்கள் தயாரிக்கும் நிறுவனமாக பெங்களூரு மைசூரு மங்களூரு சென்னை, மும்பை .,ஹைதராபாத் புனே, உள்ளிட்ட எட்டு நகரங்களில் வெற்றிகரமாக நடத்துகிறார் .

சென்னலோடே என்ற எளிமையான சாலை வசதிகளற்ற மின்வசதியற்ற ஒரு கிராமத்தில் இருந்து வந்த முஸ்தபா அவரது சொற்களில் சொல்லவேண்டுமெனில் என் தந்தை ஒரு கூலி தொழிலாளி வயநாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தேன் . காலை உணவு என்பது எங்களுக்கு ஓர் ஆடம்பர விஷயம் . என்றும் நெகிழ்சியுடன் குறிப்பிடும் முஸ்தபா தான் காலை வேளையில் கிட்ட தட்ட லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கும் நிறுவனத்தின் அதிபர் என்பது வியப்பானது அல்லவா ?

முஸ்தபாவின் வெற்றியின் பின்னணியில் அவரது ஆசிரியர் மேத்யூவின் நல்லெண்ணமும் இருக்கிறது ஆம் முஸ்தபா 6ம் வகுப்பில் தோல்வி அடைந்து தனது தந்தையை போலவே தினக்கூலி வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்த போது ஒரே யொரு வாய்ப்பை கொடுங்களேன் என முஸ்தபாவின் தந்தையிடம் கெஞ்சி கேட்டு அவரின் கல்வி தொடர முயற்சித்து வெற்றிகண்டவர் மேத்யூ என நன்றியுடன் நினைவு கூர்கிறார் முஸ்தபா . 10 ம் வகுப்பு தேறியபின் முதன்முறையாக வெளியூர் செல்கிறார். கோழிக்கோட்டில் உள்ள பாரூக் கல்வி நிறுவனத்தில் சேர்கிறார் . அங்கு இவருடன் சேர்ந்து 15 ஏழை மாணவர்களுக்கு கல்வி நிறுவன அறக்கட்டளை நிர்வாகம் இலவச உணவு உறைவிடம் வழங்குகிறது. ஆனால் அந்த கல்வி நிறுவனத்தில் நான்கு விடுதிகள் இருந்தன. . அவை அனைத்தும் கட்டணம் செலுத்தி மாணவர்கள் தங்கி வந்தனர். முஸ்தபா உள்ளிட்ட 15 மாணவர்கள் அவமானத்தை சந்தித்தனர். ஆவேசத்தில் அதே நேரம் வைராக்கியத்துடன் வெளியேறி ரீஜனல் இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தார். (இன்று நேஷனல் இன்ஸ்டி ட்யூட் ஆப் டெக்னாலஜி ). படிப்பை முடித்தபின் பெங்களூருவில் உள்ள மொடரோலாவில் வேலை கிடைக்கிறது .கை நிறைய சம்பளம். . மகிழ்சியில் திளைத்த முஸ்தபாவுக்கு லண்டனில் வெளி நாட்டு ப்ராஜக்ட் ஒன்றுக்காக பிரிட்டன் செல்கிறார் முஸ்தபா. அங்கு அவரது உழைப்புக்கும் திறமைக்கும் உரிய மதிப்பு மற்றும் பதவி தேடி வந்தது. எல்லாம் கிடைத்தது. ஆனால் இந்தியாவில் வாழ முடியவில்லையே என்ற ஒரே ஒரு குறை மட்டுமே அவருக்கு உண்டு .

2003 ம் ஆண்டு தனது பெற்றோருடன் முஸ்தபா இந்தியா திரும்புகிறார் . . சமூகத்தை கற்றறிந்த அவர் இந்த சமூகத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்பினை செய்ய வெகு ஆவலுடன் முயற்சிகளை முன்னெடுத்தார் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் அதிக அளவு வழங்க வேண்டும் என திட்டமிட்டார் குறிப்பாக கிராமங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு அதிக அளவு வாய்ப்புகளை வழங்க முயன்றார்

ஏழை கிராமப்புற மாணவர்களை சேர்த்து பெரிய நிறுவனத்தை உருவாக்க வெளிநாட்டில் நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டாச்சு குடும்பத்தினர் அவ்வளவாக ஊக்கம் வழங்கினார்கள் என்று சொல்ல முடியாது..ஆனால் அவரது மாமா மகன் நாசர் , சம்சு ஜாபர் மற்றும் நவ்ஷாத் இவருக்கு கைகொடுத்தனர்

நிறுவனத்தில் 50 சதவீத பங்கு இவருடையது. மீதம் 50 சதவீத பங்கு தாரர்களாக இவரது மைத்துனர்கள் பங்குபெற்றனர் .
இதற்கிடையில் பெங்களூரு ஐ ஐ எம்மில்
எம்பி ஏ முடித்து 2007ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார்.

2012ல் இவரது நிறுவனம் சென்னை மங்களூரு மும்பை புனே மற்றும் ஹைதராபாத்துக்கு விரிவு படுத்தப்பட்டது. இந்திய சாதனையாளர் விருது இந்தியன் எக்கனாமிக் டெவலப்மென்ட் அன்ட் ரிசர்ச் அசோசியேஷன் வழங்கியது .

2013ல் முஸ்தபாவின் நிறுவனம் துபையில் தொடங்கப்பட்டது. பிக் பெங் விருது பேஸ்ட் பெக்கேஜ்ஜிங் டிசைன் அவார்டு தொடர்ந்து மறு ஆண்டே அவருக்கு வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டு சிறந்த தொழிலதிபருக்கான விருதினை பெற்றார்

சிறிய தொழிலதிபர்கள் விருதுக்கு 49023 தொழிலதிபர்களின் வாக்குகளுடன் அவர் அந்த விருதை பெற்றார். தனது தொழிலை விரிவுபடுத்தும் பொருட்டு அவர் ஒருபோதும் வங்கிகளை நாடியதில்லை. வட்டியை இஸ்லாம் அறவே தடுக்கிறது எனவே வங்கி கடனை தாம் என்றுமே விரும்பியதில்லை வங்கிக்கடன் இன்றி நிறுவனத்தை விரிவுபடுத்துவதில் படுத்துவதில் இருந்த சிரமம் அல்லாஹ்வின் கருணையால் அது பொருட்டாக தெரியவில்லை. என்கிறார்

அவரது நிறுவன பண்டங்களை மதுபான பார்களில் விற்பனை செய்ய கோரிக்கை வந்த போது அந்த கோரிக்கை முஸ்தபா வால் நிராகரிக்கப்பட்டது . மதுபான பார்களோடு ஒப்பந்தம் செய்ய மறுத்தார். அதற்காக கோடிக்கணக்கான வருவாயை இழக்க தயாரானார். இறைவனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நற்கூலி உண்டு என்று கூறி புன்னகைக்கிறார்.

நாங்கள் உருவாக்கும் உணவுபன்டங்கள் அனைத்துமே இயற்கை முறையிலேயே அமைந்துள்ளன. உங்களுக்கு பொருள் தேவை என்றால் முதலில் நாங்கள் கொண்டு வந்து தருகிறோம் அதன்பிறகு நீங்கள் பணம் செலுத்தினால் போதுமானது .ஆம் எங்களுடையது நம்பிக்கையின் கடை என்கிறார் .

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது உதவிப்பொருட்களுடன் ஓடி வந்த நிறுவனம் முஸ்தபாவின் ஐ டி தான் சிற்றுண்டிகள் பரோட்டா சப்பாத்தி ,வகைகளுடன் உணவு வழங்கி மகிழ்ந்தது முஸ்தபாவின் நிறுவனம் முஸ்தபாவின் சீரிய நோக்கங்கள் மென் மேலும் வெற்றிபெற அவர் சிகரங்களை தொட வாழ்த்துவோம்

Comments Off on முஸ்தபா – தன்னம்பிக்கையின் அடையாளம் அபுசாலிஹ்