Abusalihonline's Blog

Just another WordPress.com site

20 லட்சம் அமெரிக்கர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்தவர் அபுசாலிஹ்

20 லட்சம் அமெரிக்கர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்தவர்

அபுசாலிஹ்

முகமது அலி என்ற உலகப் புகழ் பெற்ற குத்து சண்டை வீரர் மானிட நேயராக நிற வெறியை எதிர்த்த மாவீரராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தனது அதிரடி கேள்விகளால் அதிரவைத்தவர் என்ற அம்சங்கள் அவருக்கு உண்டு எனினும் தம் வாழ்வின் முக்கியமான மகிழ்வான தருணம் தாம் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்ட தருணம் தான் என பூரித்து புளகாங்கிதத்துடன் அறிவித்தவர் .

உலக அளவில் சமூகத்தில் புகழின் உச்சத்தில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்றார். 1964 ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வாங்கிய கையோடு தான் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதை மன பூர்வமாக அறிவித்தவர்.

தி கேஷியஸ் மேர்சுலிஸ் கிளே தன்னை தொற்றிக்கொண்டு இருந்த பழைமைக்கு விடை கொடுத்தபின் தன் பெயரை முகமது கிளே என மாற்றிக்கொண்டார்.

ஒரு முஸ்லிம் தன்னிடம் உள்ள செல்வம் உள்ளிட்ட சிறந்தவைகளை அனைத்தையும் மார்க்கத்திற்காக மார்க்கம் இட்ட கட்டளைக்காக செலவிடப்படவேண்டும் என்பதை அறிந்ததால் அதன்படி செலவிட்டேன் என்கிறார்.

முகமது அலி தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிபிடுகிறார். 1964 ல் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து தான் முதன் முதலில் இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து கொண்டபோது அதனை தொடர்ந்து முகமது (ஸல் ) அல்லாஹ்வின் இறுதி தூதர் என்பதும் ஈசா நபி இறைவனின் தூதர்களில் ஒருவர் என்பதை முதன்முதலில் கேள்வி பட்டபோது முதலில் ஷாக் ஆகி பின்னர் அது இன்ப அதிர்ச்சியாக மாறியது என்கிறார்.
நான் அதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றாக அது இருந்தது. அமைதிக்கான , உண்மைக்கான எனது தேடலுக்கான விடையாக இஸ்லாம் அமைந்தது.

எவ்வாறு பிராத்தனை செய்வது ? நோன்பு நோற்பது எப்படி? வல்ல அல்லாஹ்வுடன் நெருங்குவது எப்படி ? என்பதை பயபக்தியுடன் தெரிந்து கொண்டேன். உண்மை மார்க்கமாம் இஸ்லாத்தை அனைவரையும் அழைத்தேன் . அல்லாஹ்வின் பேரருளால்20 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

எனது ஆண்டு வருமானத்தில் 20 கோடி டாலர்களை மார்கத்திற்காக செலவளித்தேன். என் இனிய மனைவியும் குழந்தைகளும் இதனை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். எனது அரண்மனை போன்ற பங்களா பெரிய மஷ்ஜிதாகவும் திரு குர் ஆன் செண்டரகவும் மாறியது. மேலும் மாபெரும் இறை இல்லம் ஒன்றை சிக்காகோ நகரில் கட்டவேண்டும் என்றும் அது அமெரிக்காவில் முக்கிய இஸ்லாமிய மையமாகவும் விளங்கவேண்டும் என திட்டமிட்டு செய்து முடித்தேன் அல்லாஹ்வின் அருளால் என்று கூறிய அவர் அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக மார்க்க சம்பந்தமான புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கினேன் . என்றார்.

நாம் விரைவில் முதியவானகி விடுவேன் . மரணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் ஆனால் என்னை உலகில் பெரும் புகழை பெற்றுதந்த இறைவனுக்கு அவன் இட்ட கட்டளைகளின் படி நற்கருமங்களை அனைவருக்கும் புகட்ட வேண்டும். மது போதை விபச்சாரம் போன்ற கொடிய தீமைகளுக்கு எதிராக போராடி கொண்டே இருக்கவேண்டும் என்றார் . ஒருதடவை தீவிரவாதம் பயங்கராவாதம் இஸ்லாமோபோபியா குறித்து தனது கருத்தினை கூறும்போது நான் ஒரு முஸ்லிம் . அப்பாவிகளை கொலை செய்ய இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது. . வன்முறை என்பது மார்க்கத்தின் அடிப்படை கொள்கைக்கே விரோதமானது அது உண்மை முஸ்லிமுக்கு தெரியும் என்றார்

Advertisements
Comments Off on 20 லட்சம் அமெரிக்கர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்தவர் அபுசாலிஹ்

இஸ்லாமிய வங்கி விரைவில் குஜராத்தில் விரிவான தகவல்கள் அபுஸாலிஹ்

இஸ்லாமிய வங்கி விரைவில் குஜராத்தில்

விரிவான தகவல்கள்

அபுஸாலிஹ்

இஸ்லாமிய வங்கி என்று அழைக்கப்படும் வட்டியில்லா வங்கி இன்றைய உலகின் வளர்ச்சியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. . வட்டி அடிப்படையிலான வங்கிகளால் தொடுக்கப்பட்ட இரக்கமற்ற தாக்குதல்களால் மாபெரும் தொழில் அதிபர்களில் இருந்து அன்றாடம் காய்ச்சிகள் வரை நாளும் அனுபவிக்கும் துன்பங்கள் துயரங்கள் சொல்லி மாளாது என்ற நிலையில் இஸ்லாமிய வங்கிகளான வட்டியில்லா வங்கிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதலாக அரு மருந்தாக திகழ்கின்றன.

இந்தியாவில் ஷரியத் பாணியிலான இஸ்லாமிய வங்கியினை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சவூதியை தளமாகக்கொண்டு செயல்படும் இஸ்லாமிய வளர்ச்சி வங்கி குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இஸ்லாமிய வளர்ச்சி வங்கி யின் முதல் கிளையை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை எனினும் அது குறித்து பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன.

இஸ்லாமிய வளர்ச்சி வங்கி என்ற சரவதேச முதலீட்டு நிறுவனம் ஜித்தாவை தளமாகக்கொண்டு இயங்கும் அமைப்பாகும் இஸ்லாமிய நாடுகளில் இருந்தது முதலீடுகளை திரட்டி தனது வங்கி உறுப்பு நாடுகளின் சமூக மற்றும் கல்வி கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது. நூற்றி என்பது மில்லியன் வலுவான இஸ்லாமிய மக்கள் தொகையைக்கொண்ட நாடுகளை கவரும் அமைப்பாக ஐ டி பி விளங்கி வருகிறது.

ஐடிபி ஐம்பத்தாறு இஸ்லாமிய நாடுகளை பங்குதாரர்களாக கொண்ட வங்கியாகும். இதில் நான்கில் ஒரு பங்கு சவூதி அரேபியவினுடையதாகும் ஐக்கிய அரபு அமீரகம் இதில் ஐந்தாவது பெரிய பங்குதாரராகும் .

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதத்தில் சவூதிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது ஐடிபியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி தான் ஐடிபி என்ற இஸ்லாமிய வளர்ச்சி வங்கியின் முதல் கிளை அகமதாபாத்தில் தொடங்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் மேலும் பலகிளைகள் தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இஸ்லாமிய வங்கியியலின் தேவை அதன் சேவை குறித்த ருசிகர விவாதங்கள் எழதொடங்கியுள்ளன .

குஜராத்தில் அறுபது லட்சம் முஸ்லிம்கள் முன்னணி வியாபார சமூகமாக வாழ்கின்ற மாநிலத்தில் முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த ஏற்பாட்டின் வாயிலாக நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது முன்னூற்றி அறுபத்தி ஏழு .மூன்று மில்லியன் திர்ஹம் இஸ்லாமிய வளர்ச்சி வங்கியின் உறுப்பு நாடுகளின் வாயிலாக இந்தியாவுக்கு கடன் வசதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இந்திய கிராமப்புற ஏழைகளின் மருத்துவ வசதியை மேம்படுத்த ஐம்பத்தைந்து மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஐடிபி உறுதியளித்துள்ளது. அதி நவீன சிகிச்சை வசதிக்காக முன்னூற்றி ஐம்பது மெடிக்கல் வாகனங்கள் ஐடிபி மூலமாக வழங்கப்பட உள்ளது.

இவை அனைத்தும் இவ்வாண்டு இறுதிக்குள் குஜராத் மாநிலம் முழுவதும் செயல்பட விருக்கிறது. குஜராத் வழியாக இந்தியாவுக்கு இஸ்லாமிய வளர்ச்சி வங்கியின் அறிமுகம் நீண்ட கால நிதியினை கடனாக அதன் உறுப்பு நாடுகளான ஐம்பத்தாறு முஸ்லிம் நாடுகளில் பெரும் வாய்ப்பினை உறுதி படுத்தும் நீண்ட கால திட்டமாக கருதப்படுகிறது. இதனை ஐடிபி வங்கி குஜராத்தில் அறிமுகம் செய்யும் முயற்சியில் முன்னெடுப்புடன் செயல்பட்ட ஜாபர் உறுதி படுத்துகிறார்.

இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி பத்து ஆண்டுகளாகவே ஆலோசித்து வருகிறது. இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டில் மத்திய வங்கியால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு இஸ்லாமிய வங்கி செயல்பட அனுமதி அளிக்க கூடாது என தனது முடிவினை அறிவித்தது. ஆனால் வட்டியில்லா வங்கியியல் குறித்து ஆதரவு கருத்துக்கள் மீண்டும் நாடு முழுவதும் எழ த்தொடங்கியது. இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு தேசிய சிறுபான்மை ஆணையம் இது தொடர்பாக நிதி அமைச்சகத்திடம் தீவிரமாக லாபி செய்ய ஆரம்பித்தது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் அடிபடாத வீழ்ந்து விடாத அதே நேரம் முன்னேற்றம் மட்டுமே கொண்டதாக இஸ்லாமிய வங்கியியல் விளங்கி வருகிறது என அந்த கமிட்டி சுட்டிக்காட்டியது.

வட்டியில்லா வங்கியினை முன்னெடுக்கும் இஸ்லாமிய நிதியியல் மையத்தின் பொது செயலாளர் அப்துரகீப் இதனை வரவேற்றார்.

இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை. ஏராளமான முஸ்லிம் நாடுகள் இந்தியாவில் முதலீடுகளை குவிக்க ஆர்வமுடன் இருக்கும் நிலையில் வட்டியில்லா வங்கியியலுக்கு இந்நாடு வகை செய்யவேண்டும் இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைவருமே பயன் அடைவார்கள்.

வட்டியில்லா வங்கிகளான இஸ்லாமிய வங்கிகள் பெருங்கடன் மற்றும் கொடிய வட்டிகளால் வதைபடும் சிறு குறு தொழில் அதிபர்கள் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் துயர்கள் தீர்க்கும் திறன் படைத்தது என்கிறார் வேளாண் விஞ்ஞானியும் பொருளாதார நிபுணருமான எம் எஸ் சுவாமிநாதன் சொல்கிறார் .

வட்டியில்லா வங்கிகளால் மட்டுமே விவசாயிகளை கொடிய கடன்களில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் மீட்க முடியும் என்கிறார்

எல்லோருக்கும் ஒரு வழி என்றால் இடும்பனுக்கு மட்டும் வேறோர் வழி என்று கூறப்படுவதைப்போல இது விஷயத்தில் அரசியல் கோமாளி சு சாமி மட்டும் முரண்படுகிறார். வட்டியில்ல வங்கி இந்தியாவில் கொண்டு வர முன் முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதோடு அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என விஷ பரப்புரை மேற்கொண்டு வருகிறார்

இஸ்லாமிய வங்கியினை கொண்டு வரும் முயற்சி யை கெடுக்கும் முயற்சியில் சு சாமியின் கேடு மதி இன்றல்ல இதற்கு முன்பாகவும் படு தோல்வியினை தழுவியுள்ளது. இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் கேரளா அரசு இஸ்லாமிய வங்கி தொடர்பாக அனுமதி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்ட தை கண்டித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சு சாமி இஸ்லாமிய வங்கியினை அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ கூடாது என அவர் தொடர்ந்தவழக்கின் சாராம்சம் . ஆனால்கேரளா உயர்நீதிமன்றம் சு சாமி கோரிக்கையை நிராகரித்தது.

ஒரு நிறுவனம் தனது வணிக திட்டத்தை வட்டியில்லா வங்கி முறையில் இந்த நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு செயல் பட முடிவெடுத்தால் அதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க முடியாது. மதத்தை பரப்புவதற்கோ பரப்ப உதவுவதாக குற்றம் சாட்டி தடை விதிக்க முடியாது என சு சாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு முறை மூக்குடைபட்டது போதாது என்று இரண்டாவது தடவையாக மூக்கறுபட தயாராகி வருகிறார் சு சாமி .

நீதி மற்றும் அறத்தின் அடிப்படையில் செயல்படும் வட்டியில்லா வங்கி சாமான்ய மக்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டிய பரிசு என்பதில் மாற்று கருத்துண்டோ

Comments Off on இஸ்லாமிய வங்கி விரைவில் குஜராத்தில் விரிவான தகவல்கள் அபுஸாலிஹ்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் விரிவான ஆய்வு அபுசாலிஹ் 2

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் விரிவான ஆய்வு
அபுசாலிஹ்

சென்றவார தொடர்ச்சி

அஸ்ஸாம் ஐக்கிய முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் பிகார் பாணியில் ஒரு மகா கூட்டணி அமைக்க முயன்றார் 3 கோடியே 12 லட்சம் மக்களை கொண்ட அஸ்ஸாமில் 35 சதவீத மக்களாக செறிந்து வாழும் முஸ்லிம்களை இணைத்து ஆளும் கட்சியாக வர இருந்த வாய்ப்பு காங்கிரசின் பிடி வாதத்தால் மங்கி விட்டது. 36 முஸ்லிம் உறுப்பினர்கள் செல்லவேண்டிய சட்டமன்றத்தில் 30பேர் மட்டுமே சட்டமன்றத்திற்கு செல்கின்றனர். காங்கிரஸ் சார்பாக பதினைந்து உறுப்பினர்களும் பத்ருதீன் அஜ்மல் கட்சி சார்பாக 13 பேர் அஸ்ஸாம் கனபரிஷத் சார்பாக இருவர் வென்றனர். முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து இடங்களில் சுளையாக பாஜக முஸ்லிம் அல்லாதவர்களை நிறுத்தி வென்று காட்டியது இதற்கிடையில் காங்கிரசுக்கு ஏற்பட்ட இமாலய சரிவுக்கு பிறகு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டும் போக்கு தொடங்கி விட்டது. நாங்கள் கூட்டணிக்கு முயன்றோம். பத்ருதீன் அஜ்மல் அதனை விரும்பவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மவ்லவி பத்ருதீன் அஜ்மல் அதனை வன்மையாக மறுத்தார். நான் பிகார் பாணியில் மெகா கூட்டணி அமைக்க ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு தூதுக்குழு அனுப்பினேன். ஆனால் காங்கிரஸ் தங்களைப்பற்றிய அதீத மதிப்பீடுகளால் தனது ஆணவத்திற்கு தக்க விலையை பெற்றுக்கொண்டது .

சில காலத்திற்கு முன் காங்கிரசில் இருந்து செல்வாக்கு மிகுந்த ஹேமந்த் பிஸ்வாஸ் ஷர்மா என்பர் வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். அவர் பத்ருதீன் அஜ்மலின் படத்தை காட்டி பாஜகவுக்கு மட்டும் வோட்டு போடாவிட்டால் இந்த பயங்கரவாதி முதல்வராக வந்து விடுவார் என துவேஷ பரப்புரை செய்து என்னை ஓர் அச்சுறுத்தும் சக்தியாக காட்டி வோட்டு வேட்டையாடியுள்ளனர்.

முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளில் குறிப்பாக எங்கள் கட்சி செல்வாக்கு நிறைந்த பகுதிகளில் தான் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்தியது. ராகுல் காந்தி பங்கேற்ற எட்டு பேரணிகளில் ஏழு பேரணிகள் முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் தான் நடந்தது. அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவர் அஞ்சன் தத்தா மீடியாக்களிடம் தெளிவாகவே கூறினார் அஜ்மல் கட்சியின் கதையை இந்த தேர்தலோடு ஒழித்துக்கட்ட விரும்புகிறோம் என்றார் . காங்கிரசோடு கூட்டணி வைத்தால் நாங்கள் மதசார்பற்றவர்கள் எதிர்த்து போட்டியிட்டால் மதவாதிகளா ? என தனது உள்ளக்குமுறலை டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் வஜீஹுத்தீனிடம் தெரிவித்தார் . ஒன்று மட்டும் புரிகிறது அஸ்ஸாமில் பாஜக வெற்றி பெறவில்லை. மதசார்பற்ற சக்திகளின் பிரிவும் பிணக்கும் பிளவும் பாஜகவுக்கு வெற்றியை தங்க தாம்பாளத்தில் வைத்து வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

கேரளா

கேரளாவை பொறுத்த அளவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி கூற்றுப்படி இது இடது சாரிகளின் முறை அதனால் ஆட்சி அவர்களுக்கு செல்கிறது என்கிறார். கேரளா முதல்வராக உண்மையான மதசார்பற்ற தலைவரான தோழர் பினராயி விஜயன் பொறுப்பேற்கிறார் முஸ்லிம்களின் ஆதிக்கம் கேரளாவில் ரொம்ப ஓவராகத்தான் போய்விட்டது என ஓப்பன் கமென்ட் அடித்த அச்சுதானந்தன் போல் அல்லாமல் மதசார்பற்ற கொள்கையில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் .

ஆனால் 2006 ம் ஆண்டில் இடது சாரி கூட்டணி வெற்றி பெற்றபோது கேரளா முதல்வராக கட்சியின் செல்வாக்கு மிகுந்த பலாலி முகம்மது குட்டியை முதல்வர் பதவிக்காக முன்மொழிந்த பினராயி விஜயன் தற்போது தனது பெயர் முன் நிறுத்தப்பட்டதால் முகமது குட்டியை மறந்து போனாரா? சிறுபான்மை சமூகத்தின் ஆளுமை என்றால் இருட்டடிப்பு செய்வதில் எல்லா கட்சியினரும் போட்டிபோடுகின்றனர். போகட்டும் முகமது குட்டியை புறக்கணித்த அவர்கள் பிள்ளை குட்டிகளோடு நன்றாக வாழட்டும் வேறென்ன சொல்வது ?

கேரளா முஸ்லிம் கட்சியான கேரளா முலீக் 24 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது அடுத்து இடது சாரிகள் 7பேரும் காங்கிரசில் இருவரும் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சைகள் மூவரும் வெற்றி பெற்றுள்ளனர் ஒரு சதவீத வாக்கு பெற்றாலும் அதனை 2 தொகுதிகளாக மாற்றும் சாமர்த்தியமும் அதிர்ஷ்டமும் கேரளா லீக்கிற்கு இயல்பாகவே வாய்த்துள்ளது. யாராலும் தோற்கடிக்க முடியாத விதமாக முஸ்லிம்களின் வாக்குகள் ஒருங்கிணைத்து பல்வேறு தொகுதிகளில் வெற்றியை வாரித்தரும் வண்ணம் அமைந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. போட்டியிட்ட தொகுதிகளில் 78 சதவீத வெற்றியை ஈட்டிய கேரளா லீக்கை நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

கேரளாவில் நாம் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட படி அனுதாப அலையால் வென்று அக்கவுண்டை ஓபன் செய்த ராஜகோபாலின் வெற்றியை எளிதாக எடுத்துக்கொண்டாலும் 10.5 சதவீத ஒட்டு பெற்று கேரளாவில் பாஜக ஆறு இடங்களில்
2ம் இடம் பெற்றுள்ளது. மன்ஜெஷ்வர் தொகுதியில் 89 வாக்குகளில் வெற்றியை நழுவவிட்டது பாஜக .

. முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துர்ரசாக் 56,870 வாக்குகள் பெற்று வென்றார் . பாஜக வேட்பாளர் சுரேந்திர நாத் பெற்ற வாக்குகள் 56781 .

மினி இந்திய தேர்தலில் தனது வாக்கு வங்கியை விரிவு படுத்தி விட்டதாக மார் தட்டி கொள்கிறது . தமிழ் நாட்டில் கூட தாங்கள் தாறுமாறாக வளர்ந்து தொலைத்து விட்டதாக பெருமிதப்படுகிறது. 2011ல் 2.2 சதவீத வாக்குகளை பெற்றதாக கூறும் அந்த கட்சி 2016 ல் 2.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாம்.

ஆனால் என்ன வேடிக்கை பாருங்கள் ? 2014 நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்றதாகவும் 50 லட்சம் வாக்காளர்கள் மிஸ்டு கால் வாயிலாக உறுப்பினர்கள் ஆக்கப்பட்டதாக கூறும் அந்த தலைமையிடம் தமழக மக்கள் எழுப்பும் சந்தேகம் என்னவெனில் தேர்தல் நாளில் அந்த 50 லட்சம் வாக்காளர்களையும் யார் கடத்தி வைத்தார்கள் ?

Comments Off on ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் விரிவான ஆய்வு அபுசாலிஹ் 2