Abusalihonline's Blog

Just another WordPress.com site

தெலங்கானா – — முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் !! BY அபூஸாலிஹ்

தெலங்கானா –

முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் !!

அபூஸாலிஹ்

ஆந்திராவில் இருந்து தனியாக உருவாகிய தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார். அம்மாநில முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதார நிலை குறித்து பிரத்யேக ஆய்வுக்குழு அமைத்து அது தனது அறிக்கையினை முடித்து விட்ட நிலையில் விரைவில் இது தொடர்பாக சட்டமன்ற சிறப்புக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு அதில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் போடப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளேன் நான் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் எனவே என்ன விலை கொடுத்தேனும் அதனை நிறைவேற்றுவேன் என முதல்வர் ராவ் தெரிவித்தார்.

தலைநகர் ஹைதராபாத் நிஜாம் கல்லூரி வளாகத்தில் பலத்த வரவேற்பிக்கிடையில் இதனை அறிவித்தார்

.

சட்டமன்றம் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பின் இட ஒதுக்கீட்டுக்கு நிச்சயம் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது அவ்வாறு அதற்கு இடையூறு ஏற்படும் நிலையில் சந்திர சேகர ராவின் அதிரடியால் இட ஒதுக்கீட்டு உரிமை வென்றெடுக்கப்படும் என முக்கிய பிரமுகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்

சிறுபான்மை நலத்துறைக்கு 1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ராவ் இதுவரை எந்த மாநிலத்திலும் ஒதுக்கீடு செய்யப்படாத அதிக தொகை இது என்றார். அது மட்டுமின்றி சிறுபான்மை சமூகத்தினருக்காக 120 உறைவிட பள்ளிகள் 3900 கொடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ராவ் தெரிவித்தார் . பாராட்டுவோம் . ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்க உறுதியுடன் செயல்படுவோரை உளமார பாராட்டுவோம்

Comments Off on தெலங்கானா – — முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் !! BY அபூஸாலிஹ்

ருஷ்டிகள் , தஸ்லீமாக்கள் ,யோகிகள் , பெண் சாமியார்களுக்கு உள்ள கருத்து சுதந்திரம் ஜாகிர், ஒவைசி, ஆஸம்கானுக்கு ஏன் இல்லை? BY அபூஸாலிஹ்

ருஷ்டிகள் , தஸ்லீமாக்கள் ,யோகிகள் , பெண் சாமியார்களுக்கு    உள்ள  கருத்து  சுதந்திரம் ஜாகிர், ஒவைசி, ஆஸம்கானுக்கு   ஏன்   இல்லை?
அபூஸாலிஹ்

ருஸ்டிகள் ,தஸ்லீமாக்கள் .யோகிகள் , பெண் சாமியார்கள்   சில  கார்ட்டூனிஸ்டுகள் என  பலர் இஸ்லாத்தை இழிவுபடுத்தவும் , குர் ஆனை  களங்கப்படுத்தவும் , நபிகளாரை , அவர்களது தோழர்களை மோசமாக அவமதிப்பவர்களை சரவதேச அளவிலும்  இந்திய அளவிலும் உள்ள மீடியாக்கள் பல அவர்களுக்கு பகிரங்க ஆதரவு     தெரிவித்து  ஊக்குவிக்கின்றன. . இது பேச்சுரிமை என்ற பெயரில் அவர்களது வெறி பேச்சுக்களை  புண்படுத்தும் எழுத்துக்களை கண்டிக்காமல் அல்லது கண்டு கொள்ளாமல் இருப்பது  மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிரான  விவாதங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் அளவிற்கு முஸ்லிம்  சமூகத்திற்கு   எதிரான போக்கை கொம்பு சீவி விடும்  போக்கை தொடரும் மேற்குலக மீடியாக்களும்,  தேசிய ஊடகங்களும் தெளிவாக சொல்ல   வருவது என்ன ?

மத தீவிரவாதம் என்ற சொல்லை இஸ்லாத்திற்கு   எதிராக  மட்டுமே பயன்படுத்துவோம். இஸ்லாமிக் ரேடிக்கலிசம்  என்று  விவாதிப்பது மட்டுமே எங்கள் வேலை. .உலகளவில்   பயங்கரவாதம் புரியும் மேற்குலக தீவிரவாதம் குறித்தோ நாட்டில் பயங்கரமான  படுகொலைகள் புரியும் ஹிந்துத்துவ  பயங்கரவாதம்  குறித்தோ முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் புரியும் வன்முறை படுகொலைகள் குறித்தோ கேள்விகள் எழுப்ப மாட்டார்கள், விவாதங்கள்  நடத்த மாட்டார்கள்.
சரவதேச அளவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும் இந்திய அளவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டாலும்  கூட வாய் திறக்கமாட்டார்கள் புறக்கணித்து விடுவார்கள் . அது மட்டுமா ?  எந்த சின்ன வன்முறையாக இருந்தாலும் , அதில்   யாரும்   கொல்லப்படாவிட்டாலும்  சரி ஒரு முஸ்லிமின் பெயர் அந்த வழக்கு விசாரனை தொடர்பாக  உச்சரிக்கப்பட்டால் போதும். அந்த   முஸ்லிம்  மட்டுமல்ல அவர்   சார்ந்த சமூகமே மீடியாக்களின்   முன்கூட்டியே திட்டமிடும் அவதூறு  விசாரணையின் மூலம்  அநீதி தீர்ப்பு   மக்களின்  பொதுப்புத்திக்கு   புகட்ட  அனுப்பப்படும்.அதில்   ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமே சிக்கி திண்டாடும்

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப்   கொசுவாமி நடத்திய விவாதத்தில் விருந்தினர்களுடன்  மோசமான கூச்சல்களை கண்டு ஒன்றை  புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய மீடியாக்களில் உள்ள மிக மோசமான தீவிரவாதி இவர் என்பது புரிந்தது.

 

அவரது வாதங்கள்  எல்லாம் வெற்றுக்கூச்சல்களாக மட்டுமே இருந்தன.

 

உஸாமா பின் லாதான் குறித்து டாக்டர்  ஜாகிர் நாயக் கூறியதை திரித்து விஷம் பரப்பினார்  உஸாமா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவர் பயங்கரவாதிதான் உண்மையிலேயே அது போன்ற செயலில் அவர் இறங்கி இருந்தால் உறுதியாக அவர் பயங்கவாதிதான் அது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்கிறார். இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு பயங்கரவாதத்தை ஜாகிர் நாயக் ஆதரித்ததற்கான ஆதாரம் இதோ  என  பேயாட்டம் போட்டார்.ஜாகீர் நாயக்கை கொல்ல யாரோ விலை நிர்ணயித்தார்கள் என்ற வதந்தியை பரப்பியது டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில  ஊடகங்கள்   .  ஆனால் அதுகுறித்து எந்த  ஆதாரங்களையும்  யாரும்  கொடுக்கவில்லை.

 

அண்மைக்காலமாக டாக்டர் ஜாகீர் என்ற இஸ்லாமிய அழைப்பாளர்  வேகமாக வளர்ந்து வருகிறார். அது பாசிச சக்திகளின் கண்களை உறுத்துகிறது. அவரது ஆய்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க புதுமையானவை என்றோ இதுவரை யாரும் செய்யாத ஒன்றோ என்று கூறிட இயலாது. அவையனைத்தும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது  முன்னோடிகளால் பெறப்பட்ட அறிவார்ந்த நன்கொடைகளையே  அவர் பெற்று அவரூக்கேற்றார் போல்  மேம்படுத்தி  மக்களிடையே பதிவு செய்தார். சான்றாக  கூற வேண்டுமானால் அஹ்மத் தீதாத் நவீத் உஸ்மானி,  ஹாரூன் யஹ்யா ஆகியோரின் முந்தைய தயாரிப்புகளின் மெம்படுத்தப்பட்ட்து  அல்லது அவர்களின் நேற்றைய வாதங்களின்   அணிவகுப்புகளே ஆகும்.

 

இஸ்லாம் ஹிந்து மத்ம் கிறித்தவம் ,போன்ற்வற்றில் உள்ள முக்கிய கூறுகளை மென்மையாக கண்ணியத்துடன் வெளிப்படுத்துவார் .ஒரு போதும் அவர் வெறுப்பு தோன்றும் பேச்சு பேசியதை  யாரும் கண்ட்தில்லை. இவர் முஸ்லிம் இளைஞர்களூக்கு  ஏன் ஒட்டு மொத்த சமூகத்திற்கே அவர் வழங்கி இருக்கும்  ஆயுதம் அறிவார்ந்த  வாதம் தான் . ஏராளமான ஹிந்து கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் நபிகள் நாயகம் குறித்தும் ,இஸ்லாம் குறித்தும், குர் ஆன் குறித்தும், முஸ்லிம் பிரச்சாரகர்கள் குறித்தும் விஷ விதை பரப்பினர் . ஆனால் டாக்டர் ஜாகிர்  கிறிஸ்தவம், பற்றியும் ,புத்தர், ராமர் குறித்து உயர் மதிப்புடன் கூறுபவர் .

ஆனால் இத்தனை முதிர்சியுடன் செயல்படும் ஒருவரை முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்த்துடன் டைம்ஸ் நவ்   அவரை மடக்க  செயல்பட்ட்து எடுபடவில்லை.

 

 

இந்த   வெகு ஜன மீடீயாக்கள்  ஒருபக்க சார்புடன் ஓர வஞ்சகத்துடன் செயலாற்றுகின்றன. அவர்களிடம்  கீழ்கண்ட வினாக்களுக்கு  எப்போதும் விடை கிடைக்காது.

ஒரு வன்முறையை வைத்து ஒரு சமயத்தை தீவிரவாத கொள்கையுடன் தொடர்பு படுத்துபவர்கள் மேற்குலகை தீவிரவாத கொள்கையின் மோசமான வடிவமாக கூறாத து ஏன்?

 

இரட்டை கோபுர தாக்குதல்    செய்த உசாமா பாகிஸ்தானில் பதுங்கி இருந்த்தை கண்டு பிடித்த  அமெரிக்க அதற்கு முன்பு உசாமாவை தேடுகிறோம் பேர்வழி என லட்சக்கனக்கான ஆப்கானியர்களை கொலை புரிந்த்து ஏன்?  அதற்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கா மல்  இருக்கிறதே ?இது பற்றி  எந்த டிவியாவது விவாதம்    செய்த தா ?

பேரழிவு ஆயுதங்கள் இருப்தாகதானே இராக்கிற்கு அமெரிக்கா சென்றது அங்கு  ஒன்றும் இல்லை என சில்காட் கமிஷன் கூறியதே ?    இதை  காரணமாக வைத்து தான் 20 லட்சம் இராக்கியர்களை கொன்றது அமெரிக்கா ?  இதை  இதுவரை எந்த  ஊடகமும் கேள்வி  எழுப்பியதா ?

 

எப்போதும் எங்கு பார்த்தாலும் ஜிஹாதி கொள்கைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படுவதும் அதற்கு  அப்பன்  பாட்டன் போன்ற பயங்கர வாத விஷயங்களை  கண்டும்  காணாமலும்  இருப்பதை என்ன செய்ய ?

 

எதற்கும் விடை கிடைக்காது ?  தூங்குபவர்களை  எழுப்பலாம் தூங்குவதை போன்று நடிப்பவர்களை  என்ன தான் செய்வது ?

Comments Off on ருஷ்டிகள் , தஸ்லீமாக்கள் ,யோகிகள் , பெண் சாமியார்களுக்கு உள்ள கருத்து சுதந்திரம் ஜாகிர், ஒவைசி, ஆஸம்கானுக்கு ஏன் இல்லை? BY அபூஸாலிஹ்

பெண் சாமியார் பிரக்யா வகையறாவுக்கு ஜாமீன் வேண்டும் துடிக்கும் என் ஐ ஏ – கிடையவே கிடையாது ; மூக்குடைத்த மும்பை உயர் நீதிமன்றம் by அபூஸாலிஹ்

பெண் சாமியார் பிரக்யா வகையறாவுக்கு ஜாமீன் வேண்டும் துடிக்கும் என் ஐ ஏ – கிடையவே கிடையாது ; மூக்குடைத்த மும்பை உயர் நீதிமன்றம்

அபூஸாலிஹ்

மோடியின் செல்ல தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். டி டெக்ளே வெளியிட்டுள்ளார்.
இரண்ட்சயிரத்து எட்டில் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான பெண் சாமியார் பிரக் யா சிங் தாக்கூர் மீதான ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருப்பத்தொன்பதாம் தேதி மாலேகானில் பிகுஹு சவுக் என்ற பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் பலியாயின்ர். நூற்றியொரு பேர் படு காயமடைந்தனர். இது தொடர்பாக உடனடியாக மராட்டிய மாநில காவல்துறை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூக்கி வந்து சித்திரவதை செய்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் தேதி பெண் சாமியார் பிரக் யா சிங் உள்ளிட்டோரை மகராஷ்டிர மாநில எ ட்டி எஸ் என்ற தீவிர வாத தடுப்பு படை கைது செய்தது. இதன் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே அரும் பணி ஒவ்வொரு இந்தியரும் நன்றியுடன் நினைவு கூரத்தகதாகும்.
நவம்பர் நான்காம் தேதி ராணுவத்தில் இருந்து கொண்டே ரானுவக்கிடங்கில் உள்ள ஆர் டி எக்ஸ் வெடிபொருட்களை மலேகானில் குண்டு வைப்பதற்காக திருடியதாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் கைது செய்யப்பட்டார். இவர் மீதுசம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு , அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் இருபத்தொன்பது குண்டு வெடிப்பிற்கு பிறகு உடனடியாக முஸ்லிம் சமூகத்தினரை சேர்ந்த அப்பாவி இளைஞர்களை மகராஷ்டிர மாநில காவல்துறை வளைத்து பிடித்தது. இருபத்தைந்து நாட்கள் வரை உண்மை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படாத நிலையில் ஏடீஸ் என்ற தீவிரவாத எதிர்ப்பு படையிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்ட தை தொடர்ந்து உண்மை குற்றவாளிகளான பெண் சாமியார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் பிடிபட்டனர்.
கர்னல் ஸ்ரீ காந்த் புரோகித் கொடுத்த ஆர் டி எக்ஸ் வெடிபொருட்கள் பெண்சாமியாரின் மோட்டார் சைக்கிள் எல் எம் எல் ப்ரீடம் வாகனத்தில் நிரப்பி சம்பவ இடத்தில் வைக்கப்பட்டது அது தான் ஆறு பேர் மரணத்திற்கும் நூற்றி ஒரு பேர் படு காயத்திற்கும் காரணமானது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அத்வானி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். பரபரப்பான இந்த சூழலில் பெண் அன்றைய பாஜக தேசிய தலைவரும் இன்றைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை செய்யும் புகைப்படம் ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகியது. பயங்கரவாதிகளுடன் பாஜக தலைவர்களுக்கு தொடர்பா ? கடும் நடவடிக்கை எடுக்கப்பவேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் எழுந்தது. அன்று மாலையே ஹேமந்த் கர்கரே இந்த வழக்கினை கைவிட வேண்டும் என பாஜக தலைவர்களால் மிரட்டப்பட்டார். அதனை அவர் ஆங்கில தொலை காட்சி சானல்களில் இதனை அம்பலப்படுத்தினார் . யாருக்கும் அஞ்சப்போவதில்லை என்றார் . அன்று இரவே மும்பை பயங்கர வாத தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்

இனிமேல் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் கதி என்னவாகுமோ என்ற கவலை நடுநிலை யாளர்களுக்கு எழுந்தது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி வரும்வரை குற்றவாளிகள் சிறையிலேயே இருந்தனர்.
இரண்டாயிரத்து பதினான்கில் மோடி ஆட்சி அமைந்த ஒராண்டுக்குள்ளாகவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.இரண்டாயிரத்து பதினனந்தாம் ஆண்டு ஜூன் இருப்பத்தைந்தில் வழக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தொன்றதொடங்கியது.
மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் வழக்கில் மிருதுவான போக்கை கடைபிடிக்குமாறு என் ஐ எ தன்னை கட்டாயப்படுத்தியதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சல்லியன் தெரிவிக்கவே நாடே பரபரப்பானது. எவ்வித பழி பாவத்துக்கும் அஞ்சாத சற்றேனும் கூச்சமோ தார்மீக பொறுப்புணர்வோ இல்லாத மத்திய அரசின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அடுத்து செய்த காரியம் நீதி நாடு வோரை கொந்தளிக்க வைத்தது.
இரண்டாய்ரத்து பதினாரூ மே மாதம் பதினாறில் தேசிய புலனாய்வு ஏஜென்சி இணைப்பு சார்ஜ் சீட் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அதில் மராட்டிய மாநில தீவிர வாத எதிர்ப்பு படை மீது சரமாரியான குற்றசாட்டை அள்ளி வீசியது. எந்த அளவிற்கு எனில் மாலேகான்
குண்டு வெடிப்பை மராட்டிய மாநில தீவிர வாத எதிர்ப்பு படை தான் நடத்தியது என்று மட்டும் தான் சொல்லவில்லையே தவிர கடும் குற்றசாட்டுக்களை கூறியது.
கர்னல் ஸ்ரீகாந்த் புரோகிதை கைது செய்ய சென்ற மராட்டிய மாநில ஏடிஎஸ் கையுடன் ஆர் டி எக்ஸ் வெடி போருட்களுடன் சென்று அவர்களே வைத்து புரோகித்தை கைது செய்ததாககூறி இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் என் ஐ எ நீதிமன்றத்தில் தெரிவித்தது. பெண்சாமியார் மற்றும் சிலர் சதி ஆலோசனை செய்ததற்கு வலுவான ஆதாரம் இல்லை என்று கூறிய என் ஐ எ அவர்களை ஜாமீனில் விடலாம் என்றும் தெரிவித்தது.

இந்த கோரிக்கையை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம் குண்டு வெடிப்பிற்கு பிறகு அக்டோபர் எட்டில் பெண் சாமியாரும் பிரக் யா சிங்கும் தலைமறைவு குற்றவாளி ராம்ஜி கல் சந்க்ராவும் குண்டு வெடிப்பு தொடர்பாக உரையாடியதையும் என்ன இவ்வளவு குறைவா செத்திருக்காங்க ? மோட்டார் சைக்கிள் முழுவதும் குண்டு நிரப்பி சரியான இடத்தில் வைத்தும் சாவு எண்ணிக்கை கூடவில்லையே என கவலையுடன் விவாதிததை கண்ணால் கண்ட சாட்சி தெரிவிதததையும் அதனை ஏடிஎஸ் பதிவு செய்ததையும் ஏன் என் ஐ எ கவனத்தில் கொள்ளவில்லை அவை ஆதாரபூர்வமானது தான் என்று கூறி மும்பை நீதிமன்றம் பெண் சாமியார் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் ஜாமீனை நிராகரித்தது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் டி டிகாலே அறிவிப்பால் நீதிக்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது . நிரந்தர வெற்றி எப்போது ?

Comments Off on பெண் சாமியார் பிரக்யா வகையறாவுக்கு ஜாமீன் வேண்டும் துடிக்கும் என் ஐ ஏ – கிடையவே கிடையாது ; மூக்குடைத்த மும்பை உயர் நீதிமன்றம் by அபூஸாலிஹ்

குல்பர்க் படுகொலை உள்ளிட்ட அந்த ஒன்பது வழக்குகளின் கதி என்ன ? நீதிக்கான யுத்தத்தின் நேர்முக வர்ணனை BY அபுஸாலிஹ்

குல்பர்க் உள்ளிட்ட அந்த ஒன்பது வழக்குகளின் கதி

நீதிக்கான யுத்தத்தின் நேர்முக வர்ணனை

அபுஸாலிஹ்

கடைசியில் குல்பர்க் சொசைட்டி வழக்கில் தீர்ப்பு வந்தே விட்டது. குற்றவாளிகள் சிலர் தண்டனை அறிவிக்க பட்டுள்ளனர்.

ஆனால் நமது நீதித்துறை எந்த அளவு நேர்மையானது என்ற கேள்வி எழுகிறது. உண்மையிலேயே நியாயம் வழங்கப்பட்டுள்ளதா ? இதற்கான விடையை அறிய நாம் சில உண்மைகளையும் கணக்குகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். . 2002 பிப்ரவரி 27ம் நாள் கோத்ரா சம்பவத்திற்கு பிறகு 28 தேதியில் இருந்து பல மாதங்கள் குஜராத் மாநிலம் முழுவதும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். . இது குறித்த விரிவான விபரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத்தில் சுதந்திரமான நேர்மையான நீதி விசாரணைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்தது. ஏராளமான சமூக மேம்பாட்டு செயற்பாட்டாளர்களும் , தன்னார்வ அமைப்புகளும் குஜராத் காவல்துறையின் ஒரு தலைப்பட்ச மான செயல்பாடுகளை உச்சநீதிமன்றத்தில் புகாராக தெரிவித்தன.

இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழுவை (SIT ) ராகவன் ஐ பி எஸ் தலைமையில் அமைத்தது. 9 முக்கிய வழக்குகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. 9 வழக்குகளின் குல்பர்க் வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 வழக்குகளில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு விட . 11 பேர் கொல்லப்பட்ட நரோதா காம் வழக்கு இன்னமும் நடந்து வருகிறது தீர்ப்பு வாசிக்கப்படவில்லை.

நாம் இந்த வழக்குகளில் கைதுகள் , மரணங்கள் ,தண்டனை விதிப்புகள் குறித்து ஆராய்ந்து பார்ப்போம் .

1. 97 பேர் படுகொலையான நரோடா பாட்டியா வழக்கு
2. 69 பேரை பலி கொண்ட குல்பர்க் சொசைட்டி வழக்கு

3.. 59 பேரை காவு வாங்கிய கோத்ரா வழக்கு
4. 33 பேரை பலியெடுத்த சர்தார் புரா வழக்கு
5. 23 பேர் படுகொலையான ஓடி கிராம வழக்கு
6. 11 பேரை படுகொலைக்கு காரணமான தீப்தா தர்வாஜா வழக்கு
7. 4 பேர் படுகொலையான பிரின்டிஜ் வழக்கு

8 மோடி மீது நடவடிக்கை வேண்டும் என ஜாக்கியா ஜாபிரி தொடுத்த வழக்கு

(9. வது வழக்கு 11 பேர் கொல்லப்பட்ட நரோதா காம் வழக்கு அதில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்பட வில்லை என்பதை முன்னர் குறிப்பிட்டோம்.)

எனவே சிறப்புக்குழுவின் மேற்பார்வையில் விடப்பட்ட 8 வழக்குகளை பற்றி மட்டும் பார்த்தோ மானால்

97 பேரின் படுகொலைக்கு காரணமான நரோடா பாட்டியா வழக்கில் 32 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த 32 பெருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

69 பேர் படுகொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை ஒருவருக்கு10 ஆண்டு தண்டனை 12 பேருக்கு 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 59 பேர் பலியாயினர். 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அதில்11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 20 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
33பேர் படுகொலையான சர்தார்புரா வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் 31 நபருக்கும் ஆயுள்தண்டனை .
ஓடி கிராம வன்முறை வழக்கில் 23 பேர் குற்றவாளிகள் 18 பேருக்கு ஆயுள், 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை இருவர் விடுதலை
. . தீப்தி தர்வாஜாவில் 11பேர் படுகொலை 22 பேர் குற்றவாளிகள் 21 பேருக்கு வாழ்நாள் சிறை.
பிரிட்டனை சேர்ந்த பிரான்டிஜ் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் யாரும் தண்டிக்கப்படவில்லை.
ஜாக்கியாஜாபிரி வழக்கில் மோடியையே நேரடியாக குற்றம் சாட்டிய வழக்கில் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை மோடிக்கு உத்தமர் பட்டம் வழங்கப்பட்டது.

மொத்தம் 296 பேர் உயிரிழந்த வழக்குகளில் 163 பேர் மட்டுமே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அதில் கோத்ரா சம்பவத்தில் மட்டும் 11 பேருக்கு மரண தண்டனை . விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை மட்டுமே உச்ச பட்ச தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 112 பேருக்கு வாழ்நாள் சிறை என்ற ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 10 ஆண்டும் 17 பேருக்கு 7 ஆண்டு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கண்டுகொள்ளப்படாத குற்றவாளிகள்

1. விஸ்வ ஹிந்து பரிஷத் சட்டவிரோதமான பந்திற்கு அழைப்பு விடுத்தது.இதுதான் குஜராத் இனப்படுகொலைக்கு மூல காரணம் ஆனால் அந்த சதிகாரர்கள் குறித்து ராகவன் தலைமையிலான சி பு கு நடவடிக்கை குறித்து எதுவுமே இல்லை . வீதிகளில் இறங்கி வாள்கள் திரிசூலங்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களில் வன்முறை வெறியாட்டம் நடத்தியவர்கள் தண்டிக்கப் படவில்லை.

இரண்டாவதாக நரோடா பாட்டியா வழக்கை தவிர மற்ற வழக்குகளில் தீப்தி தர்வாஜா வழக்கு , குல்பர்க் சொசைட்டி வழக்கு உள்பட பாஜக முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வழிவகை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.போதுமான சாட்சியங்கள் இல்லை குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற அரசு தரப்பின் ஓரவஞ்சனை பார்வையுடன் நடத்தப்பட்டது.

ஜாக்கியா ஜாபிரி வழக்கில் மோடி க்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

. 3. சிறப்பு விசாரணை நீதிமன்றம் 2002ல் பிரான்டிஜ் என்ற பிரிட்டிஷ் நாட்டவரின் கொலையில் தொடர்புடைய 6பேர் விடுவிக்கப்பட்டனர். பிராசிகியூசன் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படவில்லையாம்.

4. 9 வழக்குகளில் தீப்தா தர்வாஜா வழக்கில் மட்டும் ஒரே ஒரு போலீஸ்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். . தண்டனை என்ன தெரியுமா ? ஓராண்டு தண்டனை மட்டுமே .

5.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்ற சதி இருப்பதாக நீதிமன்றம் கூறியது. கோத்ரா வழக்கு குஜராத் அரசு காவல்துறை ஆர்வத்துடன் ஈடுபாட்டுடன் நடத்திய வழக்கு அதில் குற்ற சதி இருப்பதாக குறிப்பிட்டதில் வியப்பில்லை. ஆனால் நரோடா பாட்டியா வழக்கு மற்றும் ஓடி வழக்கு இரண்டிலும் குற்ற சதி இருப்பதாக தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பை வழங்கியவர்கள் பெண் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நரோடா பாட்டியா வழக்கில் பெண் நீதிபதி ஜ்யோத்க்ஷனா யாக்கினிக் ஓடி கிராம வழக்கில் குற்ற சதி இருப்பதாக தீர்ப்பு கூறியவர் ஜஸ்டிஸ் பூனம் . மீதம் இருக்கும் வழக்குகளில் குற்ற சதி இருந்தது என்பதை நிரூபிப்பதில் சிறப்பு புலனாய்வுக்குழு தோல்வியடைந்துள்ளது.

6. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை அரிதினும் அரிதாக கருதப்பட்டு 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 8 வழக்குகளில் ஒருவருக்கு கூட மரண தண்டனை வழங்கப்படவில்லை தண்டனை வழங்குவதில் கூட பெரும்பான்மையினர் என்றால் சிறைத்தண்டனை மட்டும் போதும் சிறுபான்மை என்றால் உடனடியாக மரண தண்டனை தான் இதில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா ? என்ற வினா எழுகிறதல்லவா?

7.இதில் நாட்டின் நடுநிலையாளர்கள் ஓரளவு திருப்தியடையும் வண்ணம் தீர்ப்பு வழங்கப்பட்டது நரோடா பாட்டியா வழக்கில்தான் . பெண் நீதிபதி ஜ்யோத்ஸ்னா யாக்கனிக் அவர்கள் வழங்கிய துணிச்சலான தீர்ப்பை குறிப்பிடலாம் .அன்றைய பாஜக பெண் அமைச்சர் மாயா கொத்னானிக்கு இருபத்தெட்டு ஆண்டுகளும் பாபு பஜ்ரங்கி என்ற வெறி பிடித்த மிருகத்திற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளும் தண்டனை வழங்கியதை குறிப்பிடலாம்

எட்டு .
நரோடா பாட்டியா வழக்கிற்கு அடுத்து அதிக உயிர்களை பலியெடுத்த குல்பர்க் சொசைட்டி வழக்கில் பதினோரு பேருக்கு மட்டுமே வாழ் நாள் சிறை த்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இஹ்சான் ஜாப்ரியை வில்லனாகவும் துப்பாக்கியை எடுத்து வந்து சுட வந்ததாகவும் அதனால் தன கூடி இருந்த கும்பல் அவரை தாக்கியதாகவும் குஜராத் போலீஸ் தனது வாதத்தை எடுத்து வைத்தது.
பயங்கர ஆயுதங்களுடன் வந்த கூட்டம் தியானம் செய்யத்தான் வந்தது என்று கூறுகிறார்களா ?

ஒன்பது . கோத்ரா உள்ளிட்ட ஒன்பது வழக்குகளில் நூற்றி அறுபத்தி மூன்று பேருக்கு மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து . இந்த வழக்குகளின் விசாரணைகள் அனைத்துமே சிறப்பு புலனாய்வு குழுவின் ராகவனின் கண்காணிப்பில் குஜராத் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நரோடியா பாட்டியா தவிர வேறு எதிலும் அரசியல் செல்வாக்குடைய முக்கிய புள்ளிகள் தண்டிக்கப்படவில்லை. நமது குற்றவியல் நீதித்துறை அரசியல் வாதிகளின் தலையீடுகளால் நிரம்பி நீதியை குருடாக்கியுள்ளது. நீதித்துறை ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்று என்பார்கள் ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் நீதியை பரிதவிக்கவிடும் தீர்ப்புகள் நீதியை பரிகசிக்கும் தீர்ப்புகள் வாசிக்க்கப்பட்டு வருகின்றன. இந்திய ஜனநாயகம் தனது குடிமகன்களுக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு நீதி பரிபாலனம் செய்வதில் படு தோல்வியை தழுவி வருகிறது

Comments Off on குல்பர்க் படுகொலை உள்ளிட்ட அந்த ஒன்பது வழக்குகளின் கதி என்ன ? நீதிக்கான யுத்தத்தின் நேர்முக வர்ணனை BY அபுஸாலிஹ்

திருடப்படும் அணு ஆயுதப்பொருட்கள் – திருட்டு கொடுத்த நாடுகளின் பட்டியல் திடுக் தகவல்கள் BY அபுஸாலிஹ்

திருடப்படும் அணு ஆயுதப்பொருட்கள் – திருட்டு கொடுத்த நாடுகளின் பட்டியல்

திடுக் தகவல்கள் அபுஸாலிஹ்

இந்த பூமி பத்திரமாக இருக்கிறதா ? அடுத்த தலைமுறைக்கு நாம் அனுபவித்து கொண்டு இருக்கும் அளவுக்காவது இந்த பூமியை விட்டு செல்வோமா ? என்ற ஆதங்கம் எழுகிறதல்லவா ?

ஆனால் சற்றும் யோசிக்காமல் உடனடியாக இதற்கு விடை கூறிட முடியும். இப்போது உள்ளது போல இந்த பூமியை அடுத்த தலை முறைக்கு நிச்சயம் விட்டுப்போக மாட்டோம். நமக்கு நம் முன்னோர்கள் தந்து விட்டு போனதைப்போலவா இந்த நிலபரப்பை நாம் வைத்துள்ளோம் ? மண்ணை, மலையை,நீரை, காற்றை இயற்கை வளங்களை,எல்லாவற்றையும் சீரழித்து சின்னாபின்னமாக்கி வைத்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் கொஞ்சமென்ன கொஞ்சம் இன்னும் அதிகமாக நாசப்படுத்தி நாளையை தலை முறையிடம் இந்த மண்ணை ஒப்படைத்து விட்டு கண் மூடப்போகிறோம்.

இயற்கை வளங்களை அழித்த தன் பலனை நாம் நாளும் அனுபவித்து வருகிறோம். வாட்டி வதைக்கும் வறட்சி , பேரழிவுக்கு உள்ளாக்கும் பெருவெள்ளம் என எல்லாமே நம் கைவரிசையால் விளைந்த கைங்கர்யம் மட்டுமே . இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதால் உடனடியாக உலகிற்கு அழிவு ஏற்படும் என சொல்லி விட முடியாது. ஆனால் போர் வெறியால் அந்த வெறியில் பிறந்த ஆயுதங்களால் குறிப்பாக அணு ஆயதங்களால் எத்தகைய அபாயம் நேரிடும் என்பதை சொல்லத்தேவையில்லை.

நிலைமை இவ்வாறிருக்க சக்தி அணுக்கதிர் வீச்சுத்திரன் கொண்ட அபாயகர பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன. ஜேம்ஸ் மார்ட்டின் சென்டர் என்ற பேரழிவு ஆயுதங்கள் குறித்து கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு எடுத்த ஆய்வின் படி உலகம் முழுவதும் ஐநூற்றி பதினான்கு கதிர்வீச்சு பொருட்களின் திருட்டுக்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிக அளவு திருட்டுக்கள் நடந்த நாடாக அமேரிக்கா உள்ளது. முன்னூற்றி பதினாறு அணுக்கதிர் ஆயுதப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து மட்டும் களவாடப்பட்டுள்ளன. மொத்த ஐநூற்றி பதினான்கில் முன்னூற்றி பதினாறு அமெரிக்காவில் மட்டும் என்றால் அமெரிக்காவின் சிறப்பை (!) விளங்கி கொள்ளலாம் . இந்த லட்சணத்தில் அமேரிக்கா உலக பாதுகாப்புக்கு நாட்டாமையாக விளங்கி வருகிறது. இந்தியா , பாகிஸ்தான் ,ஈரான் நாடுகளின் அணு அணு ஆயுத பாதுகாப்பு குறித்து அதிகமாக நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்காதான் அதிக அளவு பரிகொடுத்து விட்டு விழி பிதுங்கி நிற்கிறது.

அடுத்து இருபத்தி ஒன்பது முறை களவாடப்பட்டு இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் , மூன்றாவது அமெரிக்காவின் அண்டை நாடான கனடா இருபத்தெட்டு முறை களவு கொடுத்துள்ளது. நான்காவது ரஷ்யா பத்தொன்பது முறை பறிகொடுத்துள்ளது. ஐந்தாவது இடம் உக்ரைனுக்கு பதினான்கு தடவைகள். ஆறாவது இடம் இத்தாலிக்கு எழு தடவை களவாடப்பட்டது. எட்டாவது இடத்தில் ஜப்பான், கஜகஸ்தான் மெக்சிகோ, மற்றும் போலந்து நாடுகள் உள்ளன. ஒன்பதாவது இடத்தில் பிரேசில் மோல்டோவா வியட்நாம் ஆகிய நாடுகள் நான்குமுறை களவு கொடுத்துள்ளன . பத்தாவது இடத்தில் அர்ஜென்ட்டினா ஆஸ்திரேலியா ,சீனா ,இஸ்ரேல் ,ஜார்ஜியா ,லெபனான், தென் ஆப்பிரிக்கா , பிரிட்டன் ஆகிய நாடுகள் தலா மூன்று முறை திருட்டுக்கொடுத்துளன. இந்தியா இந்த பட்டியலில் இடம் பெறாவிட்டால் எப்படி ?

இரண்டு முறை பறிகொடுத்து பரி தவிக்கிறது. பிறநாடுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் நாற்பத்தி நான்கு முறை அணுகதிர் வீச்சு பொருட்கள் தொலைந்துள்ளது. அமெரிக்காவில் தனி நபர்களும் ,சின்னஞ்சிறு சிறுவர்களும் , புல் தடுக்கி பயில்வான்கள் கூட டோப்டோப் என்று சுடுகிறார்கள். ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் இழக்கின்றனர்.

நம் நாட்டில் இதே வேலையை அரிவாள்கள் செய்கின்றன. இடையிடையே துப்பாக்கிகளும் துப்புகின்றன தோட்டாக்களை . இதற்கே இந்த பூமிப்பந்து கொலை நடுங்கி கிடக்கும் நிலையில் அணுக்கதிர் வீச்சை உருவாக்கும் பொருட்களை கடத்திய கயவர்கள் என்னென்ன சதி திட்டமிடலுடன் நடமாடுகிரார்களோ ?

Comments Off on திருடப்படும் அணு ஆயுதப்பொருட்கள் – திருட்டு கொடுத்த நாடுகளின் பட்டியல் திடுக் தகவல்கள் BY அபுஸாலிஹ்

அது ஜாகிர் நாயக்கிற்கு வைக்கப்பட்ட குறி அல்ல. அழைப்பு பணியை அழிக்கும் முயற்சி அபூஸாலிஹ்

அது ஜாகிர் நாயக்கிற்கு வைக்கப்பட்ட குறி அல்ல.
அழைப்பு பணியை அழிக்கும் முயற்சி

அபூஸாலிஹ்

சர்வதேச இஸ்லாமிய அழைப்பாளர் ஜாகிர் நாயக் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளால் நாடகத்தனமான குற்ற சாட்டுக்களால் குறிவைக்கப்பட்டுள்ளார். அறிவார்ந்த விவாதங்களை உலகளவில் முன்னெடுக்கும் அந்த ஆளுமையின் தரத்திற்கும் , தன்மைக்கும் துளியளவு கூட பொருந்தாவண்ணம் அவர் மீதான குற்ற சாட்டு அமைந்துள்ளது. காலமெல்லாம் வன்முறையை பயங்கரவாதத்தை தனது உரைகளின் வாயிலாக எதிர்த்தும் முறித்தும் போட்டு வரும் அந்த பரப்புரையாளரை தீவிரவாதத்தை பரப்புபவர் என குற்றசாட்டுவதைக்கண்டு நாடே நகைத்தது.

ஏனெனில் டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து யாரும் புதிதாக அறிமுகம் செய்யத்தேவையில்லை அவரது ஒவ்வொரு உரையும் காணொளி பதிவுகளாக , ஆவணங்களாக , ஒலிப்பேழைகளாக , மாற்றப்பட்டு உலக அளவில் பரவி வியாபித்து வரும் சூழலில் கட்டுக்கதைகள் மூலம் களங்கம் கற்பிக்க முனையும் கயமைத்தனத்தை கண்டு கண் சிவப்பதா ? கண்டு நகைப்பதா ? என புரியாமல் தவிக்கும் நிலையில் அந்த சக்திகள் தொடர்ந்து தனது சூழ்ச்சி வலையை மேலும் இறுக்கமாக பின்னி வருகின்றன. இதன் விளைவாக ஜாகிர் நாயக் குறித்து ஓரளவு அறிந்தவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளவும் , அவ்வளவாக தெரியாதவர்கள் அவரை பற்றி வலைத்தளங்கள் , குறிப்பாக விக்கி பீடியா உள்ளிட்ட தளங்கள் மூலமாக அறிந்து கொள்ள முனைகின்றனர் . மின் வெளிகள் போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது.

பாசிச சக்திகளின் தூக்கத்தை , நிம்மதியை களவாடிய டாக்டர் ஜாகிர் நாயக் 1965 ஆக்டொபர் மாதம் 18ல் மும்பையில் பிறந்தார். கிஷன் சந்த் செல்லராம் கல்விக்கூடத்தில் பயின்றவர்.
மருத்துவப்படிப்பை தோபிவாலா தேசிய மருத்துவ கல்லூரியிலும் ,பி ஒய் எல் நாயர் அறக்கட்டளை மருத்துவமனையிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் மருத்துவ படிப்பை முடித்தார். 1987 ல் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரான அழைப்பியலின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த ஷேய்க் அஹ்மது தீதாத் அவர்க ளை சந்தித்தார். அது தான் அவரை அழைப்பு பணிக்கு ஈர்த்த முக்கிய காரணமாக அமைந்தது.

அழைப்பு பணியை தொடங்கிய அவர் 1991ல் இஸ்லாமிக் ரீசேர்ச் பவுண்டேஷன், என்ற இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தை தொடங்கி அழைப்பு பணியை மேலும் செழுமைப்படுத்தினார். இஸ்லாமிக் சர்வதேச பள்ளிக்கூடத்தை நிறுவினார். யுனைடெட் இஸ்லாமிக் எய்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார்.
இஸ்லாமும் நவீன அறிவியலும், இஸ்லாமும் கிறித்தவமும் ,இஸ்லாமும் மதசார்பின்மை தத்துவமும், உள்ளிட்ட தலைப்புகளில் டாக்டர் ஜாகீர் நாயக் பங்கேற்ற விவாதங்கள் உலகப்புகழ் பெற்றவை.

2000ல் அமெரிக்க சிகாகோ நகரில் கிறிஸ்தவ சமய அறிஞர் வில்லியம் கேம்பல் உடன் அறிவியல் ஒளியில் குர் ஆனும் பைபிளும் என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட நேரடி விவாதம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.

2006 ஜனவரி 21ம் தேதி பெங்களூரில் இஸ்லாம் மற்றும் ஹிந்து மதத்தில் உள்ள கடவுள் கொள்கை என்ற தலைப்பில் ஹிந்து மதத்தின் முக்கிய ஆளுமையான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் விவா தித்தார். இது இரண்டு மதத்திலும் உள்ள கடவுள் கொள்கை பற்றி யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அந்த விவாதம் அமைந்தது. அந்த விவாதத்தின் முடிவில் டாக்டர் ஜாகிர் நாயக் மீது தாம் ஏற்கனவே வைத்திருந்த மதிப்பு மேலும் கூடி விட்டது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். இவை இவ்வாறு இருக்க 2011 பிப்ரவரி மாதம் ஆக்சு போர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் இருந்து காணொளி மூலம் அற சொற்பொழிவாற்றினார். 2007 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு மும்பை சோமைய்யா விளையாட்டு மைதானத்தில் பீஸ் மாநாடு நடத்தி வருகிறார் இடையிடையே சென்னை , பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களிலும் டாக்டர் நாயக் பீஸ் மாநாட்டினை நடத்தி வருகிறார். டாக்டர் நாயக் உடன் இருபதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அழைப்பாளர்கள் பங்கேற்று உரைவீச்சினை வழங்கி வருகின்றனர்.

2004 ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். இஸ்லாம் மகளிருக்கு வழங்கும் உரிமைகளை சமத்துவ தத்துவத்தை தெளிவுறுத்தினார்

2006 ம் ஆண்டு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை தவறாக சித்தரித்து பின்னர் தனது தவறை திருத்திய சம்பவம் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் நடந்தது .
2006 ஆகஸ்ட் மாதம் கார்டிப் நகரத்தில் ஜாகிர் பங்கேற்கும் சொற்பொழிவு டேவிட் டேவிஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீட்டின் பேரில் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கப்பட்டது. அதனை கண்டு வெகுண்டெழுந்த வேல்ஸ் இஸ்லாமிக் கவுன்சிலின் பொது செயலாளர் சலீம் கித்வாய் டாக்டர் நாயக் கார்டிப் நகரத்தில் உரையாற்ற தடை சொல்ல எவருக்கும் உரிமையில்லை. . அவரை போன்று சர்ச்சைகளற்ற பரப்புரையாளரை எங்கும் காண இயலாது. அவரை உரையாற்ற வைத்து பாருங்கள். அவர் சமயங்களுக்கான ஒற்றுமைகள் . ஒப்பீடுகள் பற்றி தான் பேசுகிறார். என்றார். டாக்டர் ஜாகிர் பேச அனுமதி வழங்கப்பட்டது. . ஜாகிர் நாயக் பேசினார். அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் டேவிஸ் தனிப்பட்ட முறையில் டாக்டருடன் உரையாற்றினார். கார்டிப் நகர சபை டாக்டர் ஜாகீர் உரை வீச்சில் தீவிர வாதம் குறித்து துளியளவு கூட காண முடியாது . முன்னதாக அவரை வைத்து சர்ச்சைகள் எழுப்பியது அனாவசியமானது என வருந்தியது .
டாக்டர் ஜாகிர் நாயக் தொடர்ந்து நெருப்பாற்றிலேயே நீந்தி வருகின்றார் என்பதை நிரூபிக்கும் விதமாக இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அவர் வாழ்வில் இடம்பெற்றது

பிரிட்டனிலும் கனடாவிலும் அவரின் பேச்சுக்கு தடை விதிக்கப்பட்டது அவர் மீது சர்ச்சைகள் உண்டு என்பதால் அல்ல.டாக்டர் நாயக் தரப்பில் அந்த பிரச்னையை கையாண்ட விதம் தான் அங்கு அவருக்கு தடை நிலை அறிவிக்கப்பட்டதாக கொள்ளவேண்டும். கனடாவில் முஸ்லிம் கனடியன் முஸ்லிம் காங்கிரசின் நிறுவனர் தாரிக் பாத்தாஹ் ஜாகிர் நாயக் கனடா நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.கானடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர் வர வேண்டாம் என தெரிவித்தார். கார்டிப் நகரத்தில் நடத்தப்பட்டதை போல பிரச்னையின் தீவிரத்தை குறைக்க முயற்சிகள் நடத்தப்படவில்லை எனலாம். பிரிட்டனின் உள்துறை செயலர் தெரேசா மே தடை விதித்தார் . பிரிட்டனின் உள்துறை அமைச்க த்தில் தடை நீக்க முயற்சியில் சட்டப்பூர்வமான நடவடிக்கையில் இறங்கவேண்டிய டாக்டர் நாயக்கின் சட்ட நிபுணர் குழு டாக்டர் ஜாகிர் நாயக் மீதான தடை குறித்து கருத்தினை கடுமையாக காட்டு மிராண்டி தனமானது . மனித தன்மையற்றது என்று கூறி பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக்கொண்டது. பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் மகேஷ் பட் இந்த தடை விதிப்பினை கண்டித்தார் . இது பேச்சு சுதந்திரத்தினை பறிக்கும் செயல் என்றார்

2012ல் டாக்டர் ஜாகீருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஜோஹர் பாரு ,ஷா ஆலமில் உள்ள டெக்னோலோகி மாரா பல்கலைக்கழகம் , தலைநகர் கோலாலம்பூரில் உள்ள குஆன் தான் , மற்றும் புத்ர வ்ர்ல்டு டிரேடு செண்டர் ஆகிய இடங்களில் உரையாற்றினார். அப்போது மலேஷியாவில் செயல்பட்டு வந்த மதவாத அமைப்பான ஹிண்ட்ராப் கடும் எதிர்ப்பு எழுப்பியதையும் பொருட்படுத்தாமல் முன்னாள் மலேஷிய பிரதமர் மகாதீர் முகமத் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் டாக்டரின் அழைப்பு பணிகள் வரவேற்பை பெற்று வந்தாலும் சில குதர்க்க புத்திக்காரர்களின் குறுக்கு மூளைகளால் சர்ச்சைகளாக்கப்பட்டு வந்தன. அதனால் அவர் சர்ச்சைக்குரிய பரப்புரையாளர் என சித்தரிக்கப்படுவதில் யாதொரு நியாயமும் இல்லை

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த மனிதர்களில் 89 வது இடத்தை டாக்டர் ஜாகிர் நாயக் பிடித்ததாக 2010 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு தெரிவித்தது. 2009ல் அவருக்கு 82 ம் இடம் கிடைத்தது . மேலும் உலகின் சக்தி வாய்ந்த 500 முஸ்லிமகளில் டாக்டர் ஜாகிர் நாயக் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். 2009,2010,2011,2012,2013,2014 ஆகிய ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். (2015 ஆண்டுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை ஆபீஸர்ஸ் )

2013ம் ஆண்டு உலகின் சிறந்த முஸ்லிம் ஆளுமையாக 17 வது துபை சரவதேச புனித குர் ஆன் விருது வழங்கப்பட்டது. இதனை அமீரக துணை ஆட்சியாளர் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
அதே ஆண்டு மலேஷியாவில் உயர் விருது மா அல் ஹிஜ்ராஹ் பெர்சனாலிட்டி விருது நவம்பர் 5ம் தேதி மலேஷிய அதிகார பீடமான புத்ர ஜெயா இன்டர் நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் வண்ணமயமான நிகழ்வில் வழங்கப்பட்டது . நாட்டின் உயர் விருதினை வழங்கிய மலேஷியா நாட்டில்தான் டாக்டர் ஜாகீருக்கு நுழைய தடை விதிக்கப்பட்டதாக சில அரைகுறைகள் அலறுகின்றன. (இவனுகளுக்கு பொதுஅறிவு பத்தாது என்பதை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டவேண்டும். ?)

ஆப்பிரிக்க நாடான காம்பியா தொடங்கி சவூதியின் மன்னர் பைசல் சர்வதேச விருது வரை பெற்று இருக்கும் ஜாகிர் நாயக் இனி பெற வேண்டிய விருது சர்வதேச அமைதி விருதான நோபல் பரிசு மட்டுமே என்ற நிலையில் அவரை தாறுமாறாக தரக்குறைவாக எழுதியும் காணொளி காட்சியாக ஒளி பரப்பி வரும் மதவாத ஊடகங்கள் உண்மை நிலை பரப்பாமல் தங்களின் எஜமானர்களின் உத்தரவை மட்டுமே சிரமேற்கொண்டு பரப்பி நாட்டை குழப்பத்தில் தள்ளி வன்முறைக் காடாக மாற்ற முயல்கிறார்கள்.பங்களா தேஷின் ஏதோ ஒரு தீவிரவாதி சொன்னானாம் ஜாகிர் நாயக்கால் உத்வேகம் பெற்றேன் என்று அதனால் இவரை கண்காணிக்கவேண்டுமாம் கைது செய்யவேண்டுமாம் என்ன ஒரு பித்தலாட்டம் ? குஜராத் இனப்படுகொலை சம்பவத்தில் பாபு பஜ்ரங்கி யார் கட்டளையின் படி செயல்பட்டேன் என்று கூறினான் ? தெஹல்கா ஆவணங்கள் என்ன சொல்கின்றன. ? அதன் மீது நடவடிக்கை என்ன ? சரி அது ரொம்ப பெரிய்ய இடம் . அதைவிடுங்கள் . எஸ் பி பட்டினம் கொலைகார எஸ் ஐ காளிதாஸின் முக நூல் பக்கத்தில் சு சாமியை லைக் பண்ணி இருந்தானே ? அதற்கு சு சாமியை தமிழக போலீஸ் என்ன செய்தது ? இத்தனைக்கும் தமிழக முதல்வருக்கும் சு சாமிக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு இருந்ததே ? அப்படியும் கைது செய்யவில்லையே ? டைம்ஸ் நவ்வில் அர்னாப் கொசுவாமி என்ற பன்னாடை ஆங்கிலத்தை ஹிந்தி போல் பேசுகிறான் . அதனை ஆஹா ஓகோ என்று கொண்டாட இங்கும் சிலர் உலவுகின்றனர். அவரிடம் இதழியல் அறம் என்பது மருந்துக்கும் கூட தென்படவில்லை.

இது ஜாகிர் நாயக் மீதான குறி மட்டும் தான் என நாம் நினைத்தால் ஏமாந்து போவோம். அழைப்பியல் பணியை இந்திய துணை கண்டத்தில் ஒட்டு மொத்தமாக அழிக்க நினைக்கும் சதி திட்டம் தான் இதற்கு பின்னால் உள்ளது. அவர்கள் நூறு மடங்கு ஆவேசத்தில் வந்தாலும் இந்திய முஸ்லிம் சமூகம் ஆயிரம் மடங்கு வேகத்துடன் வீரியத்துடன் களமிறங்கும் வெற்றி முகட்டை முட்டும் வரை .
இது திண்ணம்

Comments Off on அது ஜாகிர் நாயக்கிற்கு வைக்கப்பட்ட குறி அல்ல. அழைப்பு பணியை அழிக்கும் முயற்சி அபூஸாலிஹ்