Abusalihonline's Blog

Just another WordPress.com site

அது ஜாகிர் நாயக்கிற்கு வைக்கப்பட்ட குறி அல்ல. அழைப்பு பணியை அழிக்கும் முயற்சி அபூஸாலிஹ்

on July 14, 2016

அது ஜாகிர் நாயக்கிற்கு வைக்கப்பட்ட குறி அல்ல.
அழைப்பு பணியை அழிக்கும் முயற்சி

அபூஸாலிஹ்

சர்வதேச இஸ்லாமிய அழைப்பாளர் ஜாகிர் நாயக் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளால் நாடகத்தனமான குற்ற சாட்டுக்களால் குறிவைக்கப்பட்டுள்ளார். அறிவார்ந்த விவாதங்களை உலகளவில் முன்னெடுக்கும் அந்த ஆளுமையின் தரத்திற்கும் , தன்மைக்கும் துளியளவு கூட பொருந்தாவண்ணம் அவர் மீதான குற்ற சாட்டு அமைந்துள்ளது. காலமெல்லாம் வன்முறையை பயங்கரவாதத்தை தனது உரைகளின் வாயிலாக எதிர்த்தும் முறித்தும் போட்டு வரும் அந்த பரப்புரையாளரை தீவிரவாதத்தை பரப்புபவர் என குற்றசாட்டுவதைக்கண்டு நாடே நகைத்தது.

ஏனெனில் டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து யாரும் புதிதாக அறிமுகம் செய்யத்தேவையில்லை அவரது ஒவ்வொரு உரையும் காணொளி பதிவுகளாக , ஆவணங்களாக , ஒலிப்பேழைகளாக , மாற்றப்பட்டு உலக அளவில் பரவி வியாபித்து வரும் சூழலில் கட்டுக்கதைகள் மூலம் களங்கம் கற்பிக்க முனையும் கயமைத்தனத்தை கண்டு கண் சிவப்பதா ? கண்டு நகைப்பதா ? என புரியாமல் தவிக்கும் நிலையில் அந்த சக்திகள் தொடர்ந்து தனது சூழ்ச்சி வலையை மேலும் இறுக்கமாக பின்னி வருகின்றன. இதன் விளைவாக ஜாகிர் நாயக் குறித்து ஓரளவு அறிந்தவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளவும் , அவ்வளவாக தெரியாதவர்கள் அவரை பற்றி வலைத்தளங்கள் , குறிப்பாக விக்கி பீடியா உள்ளிட்ட தளங்கள் மூலமாக அறிந்து கொள்ள முனைகின்றனர் . மின் வெளிகள் போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது.

பாசிச சக்திகளின் தூக்கத்தை , நிம்மதியை களவாடிய டாக்டர் ஜாகிர் நாயக் 1965 ஆக்டொபர் மாதம் 18ல் மும்பையில் பிறந்தார். கிஷன் சந்த் செல்லராம் கல்விக்கூடத்தில் பயின்றவர்.
மருத்துவப்படிப்பை தோபிவாலா தேசிய மருத்துவ கல்லூரியிலும் ,பி ஒய் எல் நாயர் அறக்கட்டளை மருத்துவமனையிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் மருத்துவ படிப்பை முடித்தார். 1987 ல் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரான அழைப்பியலின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த ஷேய்க் அஹ்மது தீதாத் அவர்க ளை சந்தித்தார். அது தான் அவரை அழைப்பு பணிக்கு ஈர்த்த முக்கிய காரணமாக அமைந்தது.

அழைப்பு பணியை தொடங்கிய அவர் 1991ல் இஸ்லாமிக் ரீசேர்ச் பவுண்டேஷன், என்ற இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தை தொடங்கி அழைப்பு பணியை மேலும் செழுமைப்படுத்தினார். இஸ்லாமிக் சர்வதேச பள்ளிக்கூடத்தை நிறுவினார். யுனைடெட் இஸ்லாமிக் எய்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார்.
இஸ்லாமும் நவீன அறிவியலும், இஸ்லாமும் கிறித்தவமும் ,இஸ்லாமும் மதசார்பின்மை தத்துவமும், உள்ளிட்ட தலைப்புகளில் டாக்டர் ஜாகீர் நாயக் பங்கேற்ற விவாதங்கள் உலகப்புகழ் பெற்றவை.

2000ல் அமெரிக்க சிகாகோ நகரில் கிறிஸ்தவ சமய அறிஞர் வில்லியம் கேம்பல் உடன் அறிவியல் ஒளியில் குர் ஆனும் பைபிளும் என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட நேரடி விவாதம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.

2006 ஜனவரி 21ம் தேதி பெங்களூரில் இஸ்லாம் மற்றும் ஹிந்து மதத்தில் உள்ள கடவுள் கொள்கை என்ற தலைப்பில் ஹிந்து மதத்தின் முக்கிய ஆளுமையான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் விவா தித்தார். இது இரண்டு மதத்திலும் உள்ள கடவுள் கொள்கை பற்றி யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அந்த விவாதம் அமைந்தது. அந்த விவாதத்தின் முடிவில் டாக்டர் ஜாகிர் நாயக் மீது தாம் ஏற்கனவே வைத்திருந்த மதிப்பு மேலும் கூடி விட்டது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். இவை இவ்வாறு இருக்க 2011 பிப்ரவரி மாதம் ஆக்சு போர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் இருந்து காணொளி மூலம் அற சொற்பொழிவாற்றினார். 2007 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு மும்பை சோமைய்யா விளையாட்டு மைதானத்தில் பீஸ் மாநாடு நடத்தி வருகிறார் இடையிடையே சென்னை , பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களிலும் டாக்டர் நாயக் பீஸ் மாநாட்டினை நடத்தி வருகிறார். டாக்டர் நாயக் உடன் இருபதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அழைப்பாளர்கள் பங்கேற்று உரைவீச்சினை வழங்கி வருகின்றனர்.

2004 ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். இஸ்லாம் மகளிருக்கு வழங்கும் உரிமைகளை சமத்துவ தத்துவத்தை தெளிவுறுத்தினார்

2006 ம் ஆண்டு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை தவறாக சித்தரித்து பின்னர் தனது தவறை திருத்திய சம்பவம் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் நடந்தது .
2006 ஆகஸ்ட் மாதம் கார்டிப் நகரத்தில் ஜாகிர் பங்கேற்கும் சொற்பொழிவு டேவிட் டேவிஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீட்டின் பேரில் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கப்பட்டது. அதனை கண்டு வெகுண்டெழுந்த வேல்ஸ் இஸ்லாமிக் கவுன்சிலின் பொது செயலாளர் சலீம் கித்வாய் டாக்டர் நாயக் கார்டிப் நகரத்தில் உரையாற்ற தடை சொல்ல எவருக்கும் உரிமையில்லை. . அவரை போன்று சர்ச்சைகளற்ற பரப்புரையாளரை எங்கும் காண இயலாது. அவரை உரையாற்ற வைத்து பாருங்கள். அவர் சமயங்களுக்கான ஒற்றுமைகள் . ஒப்பீடுகள் பற்றி தான் பேசுகிறார். என்றார். டாக்டர் ஜாகிர் பேச அனுமதி வழங்கப்பட்டது. . ஜாகிர் நாயக் பேசினார். அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் டேவிஸ் தனிப்பட்ட முறையில் டாக்டருடன் உரையாற்றினார். கார்டிப் நகர சபை டாக்டர் ஜாகீர் உரை வீச்சில் தீவிர வாதம் குறித்து துளியளவு கூட காண முடியாது . முன்னதாக அவரை வைத்து சர்ச்சைகள் எழுப்பியது அனாவசியமானது என வருந்தியது .
டாக்டர் ஜாகிர் நாயக் தொடர்ந்து நெருப்பாற்றிலேயே நீந்தி வருகின்றார் என்பதை நிரூபிக்கும் விதமாக இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அவர் வாழ்வில் இடம்பெற்றது

பிரிட்டனிலும் கனடாவிலும் அவரின் பேச்சுக்கு தடை விதிக்கப்பட்டது அவர் மீது சர்ச்சைகள் உண்டு என்பதால் அல்ல.டாக்டர் நாயக் தரப்பில் அந்த பிரச்னையை கையாண்ட விதம் தான் அங்கு அவருக்கு தடை நிலை அறிவிக்கப்பட்டதாக கொள்ளவேண்டும். கனடாவில் முஸ்லிம் கனடியன் முஸ்லிம் காங்கிரசின் நிறுவனர் தாரிக் பாத்தாஹ் ஜாகிர் நாயக் கனடா நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.கானடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர் வர வேண்டாம் என தெரிவித்தார். கார்டிப் நகரத்தில் நடத்தப்பட்டதை போல பிரச்னையின் தீவிரத்தை குறைக்க முயற்சிகள் நடத்தப்படவில்லை எனலாம். பிரிட்டனின் உள்துறை செயலர் தெரேசா மே தடை விதித்தார் . பிரிட்டனின் உள்துறை அமைச்க த்தில் தடை நீக்க முயற்சியில் சட்டப்பூர்வமான நடவடிக்கையில் இறங்கவேண்டிய டாக்டர் நாயக்கின் சட்ட நிபுணர் குழு டாக்டர் ஜாகிர் நாயக் மீதான தடை குறித்து கருத்தினை கடுமையாக காட்டு மிராண்டி தனமானது . மனித தன்மையற்றது என்று கூறி பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக்கொண்டது. பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் மகேஷ் பட் இந்த தடை விதிப்பினை கண்டித்தார் . இது பேச்சு சுதந்திரத்தினை பறிக்கும் செயல் என்றார்

2012ல் டாக்டர் ஜாகீருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஜோஹர் பாரு ,ஷா ஆலமில் உள்ள டெக்னோலோகி மாரா பல்கலைக்கழகம் , தலைநகர் கோலாலம்பூரில் உள்ள குஆன் தான் , மற்றும் புத்ர வ்ர்ல்டு டிரேடு செண்டர் ஆகிய இடங்களில் உரையாற்றினார். அப்போது மலேஷியாவில் செயல்பட்டு வந்த மதவாத அமைப்பான ஹிண்ட்ராப் கடும் எதிர்ப்பு எழுப்பியதையும் பொருட்படுத்தாமல் முன்னாள் மலேஷிய பிரதமர் மகாதீர் முகமத் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் டாக்டரின் அழைப்பு பணிகள் வரவேற்பை பெற்று வந்தாலும் சில குதர்க்க புத்திக்காரர்களின் குறுக்கு மூளைகளால் சர்ச்சைகளாக்கப்பட்டு வந்தன. அதனால் அவர் சர்ச்சைக்குரிய பரப்புரையாளர் என சித்தரிக்கப்படுவதில் யாதொரு நியாயமும் இல்லை

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த மனிதர்களில் 89 வது இடத்தை டாக்டர் ஜாகிர் நாயக் பிடித்ததாக 2010 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு தெரிவித்தது. 2009ல் அவருக்கு 82 ம் இடம் கிடைத்தது . மேலும் உலகின் சக்தி வாய்ந்த 500 முஸ்லிமகளில் டாக்டர் ஜாகிர் நாயக் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். 2009,2010,2011,2012,2013,2014 ஆகிய ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். (2015 ஆண்டுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை ஆபீஸர்ஸ் )

2013ம் ஆண்டு உலகின் சிறந்த முஸ்லிம் ஆளுமையாக 17 வது துபை சரவதேச புனித குர் ஆன் விருது வழங்கப்பட்டது. இதனை அமீரக துணை ஆட்சியாளர் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
அதே ஆண்டு மலேஷியாவில் உயர் விருது மா அல் ஹிஜ்ராஹ் பெர்சனாலிட்டி விருது நவம்பர் 5ம் தேதி மலேஷிய அதிகார பீடமான புத்ர ஜெயா இன்டர் நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் வண்ணமயமான நிகழ்வில் வழங்கப்பட்டது . நாட்டின் உயர் விருதினை வழங்கிய மலேஷியா நாட்டில்தான் டாக்டர் ஜாகீருக்கு நுழைய தடை விதிக்கப்பட்டதாக சில அரைகுறைகள் அலறுகின்றன. (இவனுகளுக்கு பொதுஅறிவு பத்தாது என்பதை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டவேண்டும். ?)

ஆப்பிரிக்க நாடான காம்பியா தொடங்கி சவூதியின் மன்னர் பைசல் சர்வதேச விருது வரை பெற்று இருக்கும் ஜாகிர் நாயக் இனி பெற வேண்டிய விருது சர்வதேச அமைதி விருதான நோபல் பரிசு மட்டுமே என்ற நிலையில் அவரை தாறுமாறாக தரக்குறைவாக எழுதியும் காணொளி காட்சியாக ஒளி பரப்பி வரும் மதவாத ஊடகங்கள் உண்மை நிலை பரப்பாமல் தங்களின் எஜமானர்களின் உத்தரவை மட்டுமே சிரமேற்கொண்டு பரப்பி நாட்டை குழப்பத்தில் தள்ளி வன்முறைக் காடாக மாற்ற முயல்கிறார்கள்.பங்களா தேஷின் ஏதோ ஒரு தீவிரவாதி சொன்னானாம் ஜாகிர் நாயக்கால் உத்வேகம் பெற்றேன் என்று அதனால் இவரை கண்காணிக்கவேண்டுமாம் கைது செய்யவேண்டுமாம் என்ன ஒரு பித்தலாட்டம் ? குஜராத் இனப்படுகொலை சம்பவத்தில் பாபு பஜ்ரங்கி யார் கட்டளையின் படி செயல்பட்டேன் என்று கூறினான் ? தெஹல்கா ஆவணங்கள் என்ன சொல்கின்றன. ? அதன் மீது நடவடிக்கை என்ன ? சரி அது ரொம்ப பெரிய்ய இடம் . அதைவிடுங்கள் . எஸ் பி பட்டினம் கொலைகார எஸ் ஐ காளிதாஸின் முக நூல் பக்கத்தில் சு சாமியை லைக் பண்ணி இருந்தானே ? அதற்கு சு சாமியை தமிழக போலீஸ் என்ன செய்தது ? இத்தனைக்கும் தமிழக முதல்வருக்கும் சு சாமிக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு இருந்ததே ? அப்படியும் கைது செய்யவில்லையே ? டைம்ஸ் நவ்வில் அர்னாப் கொசுவாமி என்ற பன்னாடை ஆங்கிலத்தை ஹிந்தி போல் பேசுகிறான் . அதனை ஆஹா ஓகோ என்று கொண்டாட இங்கும் சிலர் உலவுகின்றனர். அவரிடம் இதழியல் அறம் என்பது மருந்துக்கும் கூட தென்படவில்லை.

இது ஜாகிர் நாயக் மீதான குறி மட்டும் தான் என நாம் நினைத்தால் ஏமாந்து போவோம். அழைப்பியல் பணியை இந்திய துணை கண்டத்தில் ஒட்டு மொத்தமாக அழிக்க நினைக்கும் சதி திட்டம் தான் இதற்கு பின்னால் உள்ளது. அவர்கள் நூறு மடங்கு ஆவேசத்தில் வந்தாலும் இந்திய முஸ்லிம் சமூகம் ஆயிரம் மடங்கு வேகத்துடன் வீரியத்துடன் களமிறங்கும் வெற்றி முகட்டை முட்டும் வரை .
இது திண்ணம்