Abusalihonline's Blog

Just another WordPress.com site

காஷ்மீரில் பிரச்னைக்கான தீர்வினை புதைத்து விட்டு நாடகமா ? BY ABUSALIH

காஷ்மீரில்
பிரச்னைக்கான தீர்வினை புதைத்து விட்டு நாடகமா ? BY ABUSALIH

காஷ்மீரில் தொடரும் குமுறல்
காஷ்மீரின் சுயேச்சை சம உ அவாமி இத்திஹாத் கட்சி தலைவர் பொறியாளர் ரஷீத் மத்திய அரசையும் மீடியாக்களை யும் அமர்நாத் விவகாரத்தில் மட்டும் காட்டும் அக்கறையை வைத்து சாடினார் .

காஷ்மீரில் அப்பாவி மக்கள் படும் துயரங்கள் குறித்தோ பலியாகும் காஷ்மீரிகள் குறித்தோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை மாறாக அமர்நாத் யாத்திரீகர்களுக்கு எந்த துன்பமும் நேர்ந்து விடக்கூடாது என்பதும் பண்டிட்களுக்கு ஒரு சிறு தொல்லை கூட நேர்ந்து விடக்கூடாது என்பதில் காட்டும் அக்கரையில் ஒரு சிறு பகுதியை கூட பாதிக்கப்பட்ட அப்பாவி காஷ்மீரிகள் விவகாரத்தில் காட்டுவதில்லையே ஏன் என வினவினார்.

காஷ்மீர் வீதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறைத்து சர்வதேச அரங்கில் புளுகுவதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ளட்டும் என சீறினார்.

அனைத்து அவலங்களையும் நீக்கிடும் விதமாக திறந்த மனதுடன் மோடி அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கவேண்டும். அமெரிக்க அரசு தொடங்கி ஐநா பெரு மன்றம் வரை நடந்தவை அனைத்தையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கும் நிலையில் முழுமையான பேச்சு வார்த்தைக்கு முயல வேண்டுமே தவிர காஷ்மீர் வீதிகளில் அப்பாவி மக்கள் மீதி நடத்திய பயங்கர வாத தாக்குதல்களை நியாயப்படுத்தும் முயற்சிகளில் இறங்க கூடாது வருத்தம் தெரிவிக்கும் வேளை இது பூசி மெழுகும் நேரம் அல்ல என்கிறார் .

பிரதமர் மோடி மட்டும் அல்ல ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பாக காங்கிரஸ் உட்பட இதில் அரசிய ல் செய்கிறார்களே ஒழிய பேச் சு வார்த்தையில் ஆர்வம் காட்டுவதில்லை .

ஆயகம் தாங்கிய கிளர்ச்சி 1989 ம் ஆண்டிலும், அமர்நாத் நில பிரச்னை 2008 ல் , 2009 ஆண்டில் ஆசியா ,நிலோபர் என்ற இரு சின்னனஞ்சிறு சிறுமிகள் ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது ஆகிய ஆண்டுகளில் காஷ்மீர் கொந்தளித்தது. 2010 தொடங்கி புர்ஹானுத்தீன் வாணி படுகொலை வரை காஷ்மீரின் கொதி நிலை குறையவில்லை.

மோடி அரசு காஷ்மீர் பிரச்னையை மூடிய அறைகளுக்குள் பேச வேண்டாம். காஷ்மீர் மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று சொல்வதற்கு மோடி போன்ற தலைவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை பிரச்னைக்கான நியாயமான தீர்வினை புதைத்து விட்டு நாடகமாடுவதில் எவ்வித நன்மையையும் இல்லை என்கிறார் பொறியாளர் ரஷீத்

Advertisements
Comments Off on காஷ்மீரில் பிரச்னைக்கான தீர்வினை புதைத்து விட்டு நாடகமா ? BY ABUSALIH

சுவாதிக்காக பொங்கியவர்களே ! சாலிய மங்கலம் கலை செல்வியை தெரியுமா? BY அபூஸாலிஹ்

சுவாதிக்காக பொங்கியவர்களே !
சாலிய மங்கலம் கலை செல்வியை தெரியுமா?

அபூஸாலிஹ்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சாலிய மங்கலம் கிராமத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற தாழ்ததப்பட்ட அருந்ததிய இனத்தை சேர்ந்த கலை செல்வி என்ற 20 வயது இளம்பெண் பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் . வாழ்வதற்கே வசதியற்ற குடிசைகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுக்குள் கழிப்பிடம் எப்படி சாத்தியமாக முடியும் ? இவர்கள் வசிக்கும் வீடுகளே கழிப்பிடம் அளவுக்கு உள்ள சிற்றிடமாகவே இருக்க முடியும் என்ற நிலையில் அந்த புறக்கணிக்கப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே காட்டுப்பகுதிக்கு சென்றால் தான் இயற்கை உபாதையை தீர்க்க முடியும் எனும் நிலைக்கு யார் காரணம் ?

நாட்டை ஆளும் மத்திய மாநில அரசுகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றன. ? பகலில் காட்டுப்பகுதிக்கு செல்ல முடியாத பெண்கள் எப்போது இருட்டும் என காத்திருந்து நொந்து நூலாகி வேதனையில் வெம்பி இரவானதும் செல்லும் அந்த பெண்களை சீரழித்து கொன்ற 27 வயது குமார் போன்ற 25 வயது ராஜா போன்ற மனித மிருகங்கள் உருவாக்க யார் காரணம் ? பாலியல் படுகொலை செய்ய வருவதற்கு முன் அந்த கயவர்கள் சென்ற இடம் ? (அதே தான் நீங்கள் மனதில் நினைத்தது மிக சரி ) டாஸ் மாக் மதுக்கடை . அங்கு சென்று முட்டக்குடித்து விட்டு கதறக்கதற …………….. தின தந்தியில் வரும் வழக்கமான வாசகங்களை சேர்த்து வாசித்துக்கொள்க.

இதில் குற்றவாளிகள் என யாரை சுட்டுவது ? யாரை தான் சொல்லாமல் விடுவது ? தலித் மக்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டிலோ அல்லது மகளிர் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலோ அல்லது சமூக நலத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலோ அல்லது சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலோ அல்லது மோடி நீட்டி முழக்குகிறாரே ஷ்வச்சா பாரத் , உச்சா பாரத் என்றும் அதற்கு விளம்பரம் செய்ய செலவாகும் நிதியில் ஒரு சிறு பகுதியையோ இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொது கழிப்பிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மனம் இல்லையா ? பெண்கள் ஒதுங்கும் இடங்களில் பொறுக்கிகளுக்கு என்ன வேலை ? காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது. ? குற்றவாளிகளின் புண்ணியத்தலங்களாக இருக்கும் டாஸ்மாக்கை மூடி தொலைத்தால் என்ன ? இன்னும் எத்தனை அவலங்கள் இந்நாடு சந்திக்க வேண்டும் என ஆள்வோர் எதிர்பார்க்கிறார்கள்?
இந்த பகுதியில் ஆண்டு தோறும் 15முதல் 20 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காக்கப்படுகின்றனர் என்றால் நாடு எங்கே செல்கிறது ?

.

கடைசியாக ஒரு வார்த்தை சுவாதிக்காக பொங்கியவர்கள் எங்கே ?

Comments Off on சுவாதிக்காக பொங்கியவர்களே ! சாலிய மங்கலம் கலை செல்வியை தெரியுமா? BY அபூஸாலிஹ்

முஸ்லிம்கள் தலித்துகள் மீது ஆந்திர அரசின் ஓர வஞ்சனை !! BY ABUSALIH

முஸ்லிம்கள் தலித்துகள் மீது ஆந்திர அரசின் ஓர வஞ்சனை !! BY ABUSALIH

ஹிந்து அறநிலையத்துறை விலை நிலங்களில் குத்தகை எடுத்துள்ள தலித் மற்றும் முஸ்லீம் விவசாயிகள் அந்நிலங்களை விட்டு வெளியேறவேண்டும் என ஆந்திர அரசு கெடுபிடி விதித்துள்ளது. . ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கலயா ராவ் மற்றும் முதன்மை செயலர் ஜெ எஸ் வி பிரசாத் அறிவித்துள்ளனர். அமைச்சர் மாணிக்கலயா ராவ் பாஜக வில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு வந்தவர். மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு முஸ்லீம் ஐக்கிய முன்னணி முக்கிய பிரமுகர் ஹபீபுர்ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டூர் ஜும்மா மஸ்ஜிதிற்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு நூற்றுக்கணக்கான முஸ்லீம் அல்லாத சகோதர்கள் இருந்து வருகின்றனர். இது போல நாடெங்கும் உள்ள மத நிறுவங்களுக்கு உட்பட்ட சொத்துக்களில் மத மாச்சரியம் இன்றி எல்லா மக்களும் பங்கு பெற்று வரும் நிலையில் ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்கிறார் அவர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரகுராம் கோயிலில் 1200 ஏக்கர் விவாசாய நிலத்தில் 1568 குத்தகை தரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் 204 பேர் தலித்துகள், 199 பேர் முஸ்லிம்கள் 5 பேர் பழங்குடியினர்

குண்டூரில் உள்ள வேணுகோபால் சாமி கோயிலுக்கு சொந்தமான 800 ஏக்கர் விவசாய நிலங்களில் கணிசமான முஸ்லீம் மற்றும் தலித் குத்தகை தாரர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வெளியேறாவிட்டால் காவல்துறை உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே காரணத்துக்காக பாஜகபோல் நடப்பது என்ன நியாயம் சந்திரபாபு நாயுடு காரு அவர்களே ? இந்து அற நிலையத்துறை மீது நீங்கள் காட்டும் அக்கறையை லட்சக்கணக்கான கோடிகளுக்கு பெறுமதியான வக்ப் சொத்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட் டையை போடும் முஸ்லீம் அல்லாத சக்திகளிட ம் இருந்து மீட்டுத்தர தயாரா ?
அவ்வாறே தலித் மக்களுக்கே சொந்தமான பஞ்சமி நிலங்களை அபகரித்து வைத்து இருக்கும் தலித் அல்லாத ஆதிக்க சக்திகளிடம் இருந்து தலித் மக்களுக்கே பெற்று தரத்தயாரா ? என்ற கேள்விகளுக்கு மோடியின் நண்பர் நாயுடு பதில் தரட்டும்

Comments Off on முஸ்லிம்கள் தலித்துகள் மீது ஆந்திர அரசின் ஓர வஞ்சனை !! BY ABUSALIH

கோல்வால்க்கர் காந்தியாரை கொல்ல வேண்டும் என ரகசிய கூட்டத்தில் பேசிய வெறி பேச்சு அம்பலம் விவரங்கள் எழுத்தாளர்: அபூஸாலிஹ் தாய்ப் பிரிவு: சமூகம் – இலக்கியம் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016 1947 ம் ஆண்டு சிஐடி ரிப்போர்ட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31276-2016-08-08-17-13-54

Comments Off on கோல்வால்க்கர் காந்தியாரை கொல்ல வேண்டும் என ரகசிய கூட்டத்தில் பேசிய வெறி பேச்சு அம்பலம் விவரங்கள் எழுத்தாளர்: அபூஸாலிஹ் தாய்ப் பிரிவு: சமூகம் – இலக்கியம் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016 1947 ம் ஆண்டு சிஐடி ரிப்போர்ட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்

பாலஸ்தீனத்திற்கு நிகரான காஷ்மீர் துயரம் ; வேதனை தெரிவிக்கும் அமெரிக்க அறிஞர் நோம் சாம்ஸ்கி BY அபுஸாலிஹ்

பாலஸ்தீனத்திற்கு நிகரான காஷ்மீர் துயரம் ; வேதனை தெரிவிக்கும் அமெரிக்க அறிஞர் நோம் சாம்ஸ்கி

அபுஸாலிஹ்

சமூக அறிவியல் அறிஞரும் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைகழக மொழியியல் பேராசிரியர் மற்றும் அரசியல் ஆய்வாளருமான நோம் சொம்ஸ்கி இந்தியாவின் காஷ்மீர் மாநில நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வுகள் செய்து வரும் மகபூப் மக்தூமியிடம் மேற்கொண்ட மின்னஞ்சல் உரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

பாஸ்டன் நகரில் இருந்து
ஸ்ரீ நகருக்கு ஈமெயில் மூலம் உரையாடிய நாம் சொம்ஸ்கி காஷ்மீரில் அண்மையில் நடக்கும் நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கிறது. காஷ்மீர் தவிர்த்த இந்தியப் பகுதிகள் வெறித்தனம் கொண்டவையாக மாறி வருகின்றன. காஷ்மீர் பிரச்னை என்ன என்பதை தெரியாமல் இருக்கின்ற அவர்கள் மனம் போனபடி ஒரு தலை சார்புடன் கருத்துகளை பரப்புகின்றனர். என்று தெரிவித்துள்ளார். கடந்த களத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என்றார். பாதுகாப்பு படையின் மேற்பார்வையில் ஒரு மாநிலம் நடத்தப்படுவது அவலமானது என்றார்.

2016 ஜூலை மாதத்திலேயே காஷ்மீரை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும் என்றார். காஷ்மீர் ஏராளமான பரிதாப கதைகளை கொண்டுள்ள அவல தேசம் ஆகும் 80 களின் இறுதியில் நடந்த போலியான தெர்தல்களுக்குப்பிறகு படு பயங்கர அராஜகங்களை அம்மாநிலம் சந்தித்து வருகிறது. என்றார் நோம் சொம்ஸ்கி

பாலஸ்தீன பிரச்னை இன்று உலக அளவில் முன்னிலை படுத்தப்பட்டதற்கு அங்கு அமெரிக்காவின் சதி முக்கிய பங்காக இருந்தது. அதே போல் அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பு , பாலஸ்தீனத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் முன்னிலைப்படுத்தியது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் அது போல் நடக்கவில்லை.

பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ராணுவம் என்ன செய்ததோ அதையே காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்கிறது என அழுத்தம் திருத்தமாக வெளியிட்டார் . நோம் சோம்ஸ்கியின் கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது . காஷ்மீர் பிரச்னை எளிதில் தீர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பாகிஸ்தான் அதில் குட்டையை குழப்புகிறது.

ஆனால் அந்த குழப்பத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இந்திய மற்றும் பன்னாட்டு வெகுஜன ஊடகங்கள் முயல்கின்றன. காஷ்மீர் சுயாட்சி கோருபவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற பொய்யை தொடர்ந்தனர். நோம் சொம்ஸ்கி போன்ற அறிஞர்களின் கருத்து உலக அளவில் பரவும் நிலையில் நிச்சயம் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்டு ஒரு சுயாட்சி திட்டத்திற்கான முன்னெடுப்பு ஏற்படவேண்டும் ப சிதம்பரம் போன்றவர்களின் கூற்றுப்படி முயற்சிக்கலாம் . எரியும் நெருப்பை எப்போதுதான் அணைப்பது?
. இஸ்ரேலுடன் இந்தியா வை ஒப்பிடுவது இந்திய குடியரசுக்கு அவமானம் அல்லவா ? அதுவும் நோம் சொம்ஸ்கி போன்ற உலகறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் அவ்வாறு தெரிவிப்பது அவமானம் , வேதனை, வெட்கம் என்ன செய்யப் போகிறது மானமிகு இந்திய அரசு

Comments Off on பாலஸ்தீனத்திற்கு நிகரான காஷ்மீர் துயரம் ; வேதனை தெரிவிக்கும் அமெரிக்க அறிஞர் நோம் சாம்ஸ்கி BY அபுஸாலிஹ்