Abusalihonline's Blog

Just another WordPress.com site

அம்பானி மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் ? பதில் தர முடியாது ! ஆர் டி ஐ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அபூஸாலிஹ்

அம்பானி மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் ?

பதில் தர முடியாது ! ஆர் டி ஐ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில்

அபூஸாலிஹ்

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் மோடியின் நெருங்கிய நண்பருமான ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது பொது வெளியில் பெரும் சலசலப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி வந்ததில் இருந்து பணக்காரர்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் அதானி அம்பானி ஆகியோரின் விளையாட்டு பொம்மைகளா இந்திய அரசு எந்திரங்கள் என்ற வினா சமூக நலன் நாடும் ஒவ்வொரு வரின் உள்ளங்களிலும் எழுகிறது இந்நிலையில் நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பது தொடர்பாக முக்கிய விவரங்களை கேட்டு அகமதாபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆர் டி ஐ மூலம் விளக்கங்கள் கேட்டதற்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை கண்காணித்துவரும் பொறுப்புள்ள துறையான உள்துறை அளித்துள்ள பதில் இந்திய நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் ரகத்தை சேர்ந்தவையாகும்.

1. நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான முக்கிய காரணம் என்ன ?

2. நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதி கொடுத்த அதிகாரியின் பெயர் என்ன ?

3. தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கவேண்டும் என நீட்டா அம்பானி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட கடிதத்தின் நகல் வேண்டும் .

4. நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்புக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகிறது ? அதன் விவரம்

5. பாதுகாப்பு செலவுகளுக்காக மாதத்தில் எவ்வளவு தொகை நீட்டா அம்பானி தரப்பில் இருந்து பெறப்படுகிறது ?

6. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுபவர்களின் பெயர்கள், பொறுப்பு, அவர்கள் எந்த அளவு முக்கியத்துவம் உடையவர்கள் ? என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு

உள்துறை அமைச்சகம் உரிய பதிலை தர மறுத்துள்ளது மேலும் சில முக்கிய தனி நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புத்துறை தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிடும் நபரான நீட்டா அம்பானி தொடர்பான கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவுகள் 8(1)ஜி 8(1) ஜே மற்றும் 24(1) இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டவர்கள் எனவே நீங்கள் கேட்கும் விவரங்களை தர முடியாது என உள்துறை அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisements
Comments Off on அம்பானி மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் ? பதில் தர முடியாது ! ஆர் டி ஐ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அபூஸாலிஹ்

ராம்குமார் (தற் ) கொலை ! முடிச்சாச்சு ! மூடியாச்சு !! BY அபூஸாலிஹ்

ராம்குமார் (தற் ) கொலை !
முடிச்சாச்சு ! மூடியாச்சு !!

அபூஸாலிஹ்

சென்னை சூளை மேடு மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம் குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. மின்சார வயரை கடித்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாக முந்தி தருவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு நாளேடு கூறியது. மின்சார பெட்டியில் இருந்த மின் கம்பிகளை துண்டித்து தனது வாய் மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செருகி தற்கொலை செய்து கொண்டதாக மணியோசை எழுப்பும் ஒரு தின சரி சொன்னது.. அவாள் மலரோ ட்யூப் லைட்டுக்கு கரண்ட் போகும் வயரை கடித்ததால் இறந்ததாக சொன்னது. . ஆசியாவிலே யே அதிநவீன வசதிகள் உடன் கட்டப்பட்ட சிறை சாலையில் இவ்வளவு எளிதாக தற்கொலை செய்ய முடியும். ?

ராம் குமார் கைது செய்யப்பட்ட நேரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூட கொலை வழக்கில் எந்த ஆதாரமும் இன்றி கொலையாளி கைது செய்யப்பட்டார் என்று கூறினார். ஆதாரங்கள் இல்லாததால் அவரை கொன்று விட்டனரா ? என்ற கேள்வியை சில மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.தமிழ்நாட்டின் பிரபல வழக்குகளில் முக்கியமான பாத்திரம் உயிரிழப்பது தற்செயலானதா?
இளவரசன்- திவ்யா விவகாரத்தில் இளவரசன்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் டிஸ். பி விஷ்ணுப்ரியா.
ஸ்வாதி வழக்கில் ராம் குமார். என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.

ஜூன் 24ம் தேதியில் இருந்து செப்டம்பர் 18 வரை ஏறக்குறைய 85 நாட்கள் வரை நாட்டு மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்த விவகாரம் சோக கிளைமாக்சுடன் முற்று பெற்றது.

ஜூன் 24ல் சுவாதி மிருகத்தனமாக படு கொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ரத்தம் தோய்ந்த வரலாற்று தடத்தினை பதித்தது. கொலையாளியை கண்டு பிடிப்பதில் அவ்வளவு மெத்தனமா ? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தமிழக காவல்துறையின் புலனாய்வை மீறி முந்திரிக்கொட்டை தனமாக இனவெறியுடன் சுவாதியின் கொலையாளி என்று ஒருவரை முஸ்லீம் நபர் ஒருவரின் பெயரை யாரும் எதிர்பாராத ஒரு கோணத்தை தனது முக நூலில் நிலை தகவலாக வெளியிட்டார்.. ஒய்ஜி மகேந்திரன் என்ற கோமாளி நடிகர் . அதில் சுவாதி என்ற இளம்பெண் அநியாயமாக கொல்லப்பட்டாரே என்ற வேதனை யை விட முஸ்லீம் சமூகத்தின் மீது அந்த ஆசாமிக்கு இருந்த வன்மம் துவேஷம் தான் பெரிதும் வெளிப்பட்டது.ஒய்ஜி மகேந்திரனின் கருத்தினை ஒட்டி இதர கோமாளிகளான எஸ் வி சேகர், மனோபாலா , என்ற சினிமா பபூன்கள் மட்டுமின்றி அரசியல் காமெடி பீஸ் பாஜக கல்யாண ராமனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனித்தனர்.

இந்த ஒரு விவகாரத்தை வைத்து நாட்டையே கலவரக் காடாக்க விஷமிகள் முயன்றனர். நிலைமை இவ்வாறு இருக்க ஜூலை 1ம் தேதி சுவாதி கொலை தொடர்பாக ராம் குமார் பிடிபட்டதாக காவல்துறை அறிவித்தது. அதற்குமுன்னதாக ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாகவும் அது தொடர்பான புகைப்படங்கள் மீடியாவில் வெளியானது. காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த புகைப் படங்களை எடுத்தது யார்? பரப்பியது யார்? என்ற கேள்விக்கு இன்றுவரை விடையில்லை.. காவல்துறையிடம் பிடிப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்று கழுத்தை அறுத்ததாக வும் உடனடியாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதித்து 18 தையல்களுடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
ராம்குமார் வாய் திறந்து பேசினால் எதோ ஒரு மர்ம முடிச்சு அவிழ்ந்து யாருக்கோ சிக்கல் என்பதால் இந்த நடவடிக்கை என அப்போதே பேசப்பட்டது. . உண்மையிலேயே அது ராம்குமாரின் தற்கொலை முயற்சி தான் எனில் ஏற்கனவே தற்கொலை முயற்சி செய்தவரின் விவகாரத்தில் சிறைத்துறை இவ்வளவு அலட்சியயமாகவா இருப்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா ? தன து கழுத்தையே அறுக்க துணிந்தவனுக்கு கரண்ட் கம்பியை கடிக்க செல்லும் அஜாக்கிரதையாக இருந்தது யார் தவறு ?

இந்த வழக்கை நாம் ஒரு பருந்து பார்வையில் பார்த்தோமானால் ஜூலை 1ம் தேதி ராம் குமார் கைது செய்யப்பட்டார் ஜூலை 2 ல் இந்த வழக்கில் ராம் குமார் தான் கொலையாளி என அன்றைய சென்னை பெருநகர ஆணையர் டிகே ராஜேந்திரன் உறுதியாக சொன்னார். என்னை இழிவு படுத்தி சுவாதி பேசியதால் கொன்றேன் என ராம்குமார் சொன்னதாக காவல்துறை சொன்னது. ஜூலை 5ல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ராம் குமார். ஜூலை 13ல் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட பின் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. ஜூலை 14ல் மீண்டும் ராம்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியது. இந்த வழக்கில் பல குளறுபடிகள் உள்ளதாக ராம்குமார் வக்கீல் ராம்ராஜ் கூறினார். தன்மீது போடப்பட்டது பொய் வழக்கு ஆகஸ்ட் 18ல் ராம்குமார் கூறினார் . இதுவே ராம்குமாரின் நேரடி வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. சுவாதி கொலை வழக்கை சிபி ஐ க்கு மாற்றவேண்டும் என ராம்குமாரின் தாயார் ஆகஸ்ட் 19ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.செப்டம்பர் 2ல் அந்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகிறது. செப்டம்பர் 18 ல் கரண்ட் கம்பி யை கடித்து தற்கொலை செய்ததாக சிறைத்துறை கூறியது. இது போலீஸ் செய்த கொலை என ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பே இந்த வழக்கு முடிவு வந்துள்ளது. குற்றப்பத்திரிகை யை நுங்கம்பாக்கம் போலீசார் தயாரித்து முடித்து விட்டனர். 19 ம் தேதி அல்லது 20 தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடைசி வரை இந்த கொலை வழக்கில் தொடர்பே இல்லை என்று கூறி வந்த ராம்குமார் கதை கரண்ட் கம்பியை கடித்ததாக கூறப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இது விஷயத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் கூறுவதை உன்னிப்பாக அவதானிப்போமானால் 17ம் தேதி ராம்குமாரை சந்தித்து கவலைப்ப டாதே விரைவில் ஜாமீனில் எடுக்கிறேன் என்று கூறி வரும்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர் எப்படி தற்கொலை முடிவுக்கு வந்து இருப்பார் ? என குமுறுகிறார். சிறை உள்ளிருந்து மட்டுமல்ல வெளியில் இருந்தும் ராம்குமாருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக தனக்கு எச்சரிக்கை தகவல் வந்ததாக ராம்ராஜ் கூறியதை அலட்சியப்படுத்த முடியாது. உளவியல் ரீதியாக தைரியமாக இருந்த ராம்குமார் முக்கியமான தடயங்கள் குறித்து சொன்னதாகவும் இப்போது கூறினால் தனது உயிருக்கு ஆபத்து என்பதால் இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் வேலூர் சிறையில் சக ரவுடி கைதியால் பேரறிவாளன் தாக்கப்பட்டார். அதேபோல் ராம்குமாரை ஒரு கூலிப்படை கொலையாளி கொன்றிருக்க வாய்ப்புண்டு என்று பரவலாக பேசப்படும் நிலையில் சிறையில் கூட பாதுகாப்பற்ற நிலை யில் தமிழக நிலை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அள்ளியள்ளி வழங்கி வருகிறது

Comments Off on ராம்குமார் (தற் ) கொலை ! முடிச்சாச்சு ! மூடியாச்சு !! BY அபூஸாலிஹ்

ஹரியானா ‘ மாட்டுக்கறி விவகாரம் -இரண்டு முஸ்லீம் பெண்களை கற்பழித்த வெறி கும்பல் மேலும் இரண்டு பேர் அடித்துக்கொலை BY அபூஸாலிஹ்

ஹரியானா ‘ மாட்டுக்கறி விவகாரம் -இரண்டு முஸ்லீம் பெண்களை கற்பழித்த வெறி கும்பல் மேலும் இரண்டு பேர் அடித்துக்கொலை

அபூஸாலிஹ்

2014ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான ஹிந்துத்துவா வெறிப்படையின் எழுச்சிக்குப்பிறகு இந்திய திருநாட்டில் கொடூர கொலைகள் பாலியல் கூட்டு வன்முறைகள் தீ வைத்து கொளுத்துதல், சூறையாடல்கள் அன்றாட நிகழ்வாக மாறி விட்டன. பசு மாடுகளை கடத்துகிறார்கள் என்ற பெயரில் அப்பாவி சிறுபான்மை இளைஞர்களை துன்புறுத்தி படுகொலை செய்யும் அளவுக்கு அந்த மனித மிருகங்களுக்கு துணிச்ச்சலை கொடுத்தது எது ? யார் ? என்பதை விளக்கி சொல்லத்தேவையில்லை.

ஹரியானா மாநிலம் மேவாத் அருகில் டிங்கர் ஹரி என்ற கிராமத்தில் ஒரு முஸ்லீம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உறவுக்கார இளம்பெண்கள் (இதில் ஒரு சிறுமிக்கு 13 வயது ) கொலை செய்த அதே வெறி பிடித்த கும்பலால் பாலியல் வன்முறைக்கு இலக்கக்கப்பட்டார்.

இந்த குலை நடுங்க வைக்கும் சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் 24 ம் தேதி இரவு நள்ளிரவு நேரத்தில் இப்ராஹிம் ரஷீதான், தம்பதிகளின் பழைய வீட்டை ஒரு வெறி பிடித்த கும்பல் தட்டத்தொடங்கியது . கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் மேற்சொன்ன தம்பதிகளை கடுமையாக தாக்கி 100 மீட்டர் தூரம் அடித்து இழுத்து சென்றனர். அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு ஏற்கனவே ஜாபிர் மற்றும் அவரது மனைவியை கட்டிலோடு சேர்த்து கட்டிப்போட்டு அடித்துள்ளனர். பின்னர் அங்கு இருந்த 13 வயது சிறுமியையும் மற்றொரு பெண்ணையும் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு இலக்காக்கியுள்ளனர் எப்படித்தெரியுமா ?

அறையை விட்டு வெளியே வரக்கூடாது. மீறினால் உறங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை கண்டம் துண்டமாக வெட்டி விடுவோம் என்று மிரட்டி பாலியல் கொடுமைகளை செய்தனர். வெளியே வரவோ சத்தம் போடவோ அபயக்குரல் எழுப்பவோ அவர்களுக்கு சக்தி எது ?

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சொல்கிறார்

அவர்கள்12 பேருக்கு மேல் இருந்தார்கள். ஆனால் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிகிறது. அவர்களை பல தடவை பார்த்ததாகவும் அந்த பெண் கூறினார். அவர்கள் அனைவரும் திங்கள் ஹரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள முகம்மத்ப்பூர் ஆகிர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் அவர்களை பல தடவை அங்கு கண்டதாக உள்ளூர் உளவுத்துறையினரும் கூறுகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக கிராமத்தைவிட்டு வெளியேறி சில கருணை உடையவர்களின் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.

மாநில வரலாற்றிலேயே காணாத இந்த கொடூர செயல் குறித்து இரண்டு வாரங்கள் வரை கண்டு கொள்ளாத பாஜக தலைமையிலான அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் கிருஷ்ண லால் பண்வாரை அனுப்பி ஆறுதல் கூற அனுப்பிவைத்தது.

நாங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பழி தீர்க்கப்பட்டுள்ளோம் என கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான இளம் பெண் கூறியுள்ளார். இவர் தனது வாக்குமூலத்தை ஆதார பூர்வமாக மனித உரிமை ஆர்வலர் ஷாப்பினம் ஹாஸ்மி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட டெல்லி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வன்முறையாளர்கள் அந்த இளம்பெண்ணிடம் நீ மாட்டுக்கறி சாப்பிட்டாய் தானே என்று கேட்டனாராம். ஆனால் அவர் இல்லை என்று கூறிய பிறகும் நீ யும் உங்கள் ஆட்களும் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக உங்களை தண்டிக்கிறோம் என்று வெறியுடன் கூறி மிருகத்தனமாக நடந்துள்ளதை பாதிக்கப்பட்ட அபலைப்பெண்கள் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரம் வரை காவல்துறை மவுனமாகவே இருந்தது. மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மட்டும் பசு பாதுகாப்பு படைக்கும் இந்த சம்பவத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது என கிளி பிள்ளை போல சொல்லிக்கொண்டேயிருந்தார்.

இரண்டு கொலைகள் இரண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த பிறகும் 15 நாட்களுக்குப்பிறகும் அசைந்து கொடுக்காத அரசு நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ஹரியானா காவல்துறை 30 குண்டர்களில் நால்வரை மட்டுமே கைது செய்தது.

கற்பழிப்பு , அத்துமீறி நுழைதல் என்ற இரண்டு குற்றங்களை மட்டும் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேவத் மக்களின் ஆவேச போராட்டத்திற்கு பின் இரண்டு கொலை குற்றமும் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டன.
ஹரியானாவில் பாஜகவில் ஏற்பட்டதில் தொடங்கி பசு குண்டர்கள் அட்டூழியம் எல்லை மீறி விட்டதாக நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானாவில் நடந்த கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாநிலம் முழுவதும் தொடர் அழுத்தங்கள் எழுந்ததை தொடர்ந்து மாநில அரசு அமைத்த 12 பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் படி சிபி ஐ விசாரணை தொடங்கப்படவுள்ளது. இந்த குழுவில் 3 எம் எல் ஏக்களும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழுவில் இடம்பெற்று இருந்த இந்திய தேசிய லோக்தல் கட்சியின் எம் எல் ஏ ஜாகிர் ஹுசைன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி எட்டிற்கு அளித்த நேர்காணலில் முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் கடமை தவறிய அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை உறுதி என்று கூறிய அவர் மதவெறி கிரிமினல்கள் மீதான நடவடிக்கை குறித்தும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு குறித்தும் மவுனம் சாதிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆர்வலர் ஷபனம் ஹாஸ்மியும் ராஜ்ய சபா எம்பியான அலி அன்வர் அன்சாரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே இந்த கொடூர செயல் குறித்து கேள்விப்பட்ட மக்கள் நியாயம் கேட்டு மேவத்தின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஒன்று திரள தொடங்கியுள்ளனர். பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரும் அவர்களுடன் இணைந்துள்ளனர். சுயராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவும் அங்கு வந்தார் .

ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் சலீம் துணைத்தலைவர் நுஸ்ரத் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு மேவாத்தில் நிகழும் முஸ்லிம்களின் மகா பஞ்சாயத்திலும் பங்கேற்றனர்.

இந்த கொலைகளும் கற்பழிப்புகளும் திட்டமிடப்பட்டு தான் நிகழ்ந்திருக்கின்றன. இதனை எளிதில் விட்டு விடமாட்டோம் என சூளுரைக்கினறனர்

Comments Off on ஹரியானா ‘ மாட்டுக்கறி விவகாரம் -இரண்டு முஸ்லீம் பெண்களை கற்பழித்த வெறி கும்பல் மேலும் இரண்டு பேர் அடித்துக்கொலை BY அபூஸாலிஹ்