Abusalihonline's Blog

Just another WordPress.com site

தலாக் தலாக் தலாக் ; முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக புருடா விடும் டூப் மாஸ்டர்களின் முகத்திரையை கிழிக்கும் சர்வே !! BY அபூஸாலிஹ்

தலாக் தலாக் தலாக் ; முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக புருடா விடும் டூப் மாஸ்டர்களின் முகத்திரையை கிழிக்கும் சர்வே !!

அபூஸாலிஹ்

இந்தியா முழுவதும் ஆதிக்க சக்திகள் விரும்பும் சட்டத்தினை கொண்டுவந்து நாட்டின் பன்முக தன்மைக்கு வேட்டு வைக்கவேண்டும் என்ற கேடு மதியுடன் செயற்படுபவர்கள் அந்த சட்டத்திற்கு வைத்துள்ள பெயர் பொது சிவில் சட்டம் .(!).

எதையுமே பொதுவாக கரு தாதவர்கள் யாரையும் ஒன்றாக மதித்து நடத்தாதவர்கள் மனத்தளவிற்கு கூட அப்படி நினைக்காதவர்கள் இன்று பொது சிவில் சட்டம் என்ற அடையாளத்துடன் ஒரு புதிய குழப்பத்தினை குத்தகை எடுத்துள்ளார்கள்.மக்கள் அனைவரும் ஒன்று என்ற தத்துவத்திற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள் . சாதி ரீதியாக குலத்தின் ரீதியாக பிறப்பின் ரீதியாக பேதம் பேணுபவர்கள் இன்று பொது பொது என்று பிதற்றுவது பீதி பரப்புவது , எல்லாமே அவர்களது மறைமுக அஜெண்டாவின் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றும் யத்தனிப்புடன் எடுத்து வைக்கும் முன் நகர்த்தல்கள் என்றால் அது மிகையன்று .

முஸ்லீம் மகளிர் ஆணாதிக்க கொடுமையால் நொந்து போவதாகவும் வெம்பி வாடுவதாகவும் ஒரு மிகைப்படுத்தல் அரசியல் ஒன்றை புளுகு வாத மீடியாக்கள் வெறுப்புணர்வு அரசியல் வியாதிகளின் விருப்பத்திற்கேற்ப பரப்பி வருகின்றன. ஆணாதிக்கம் எல்லா சமூகங்களிலும் உள்ளதை விட முஸ்லீம் சமூகத்தில் குறைவிலும் குறைவாக உள்ளது .

அதிலும் குறிப்பாக மணமுறிவு தொடர்பான விவகாரத்தில் முஸ்லீம் மகளிர் பெற்றுள்ள உரிமைகள் எந்த சமூக பெண்களுக்கும் கிடைத்திராத ஒரு சிறப்பு சலுகை ஏன் சிறப்பு அதிகாரம் என்றே சொல்லலாம். இருப்பினும் புழுதி வாரி தூற்றல் தொடர்கிறது

இந்த நிலையில் இந்தியா ஸ்பென்ட் . ஓ ஆர் ஜி என்ற வலைத்தளம் இந்தியா வில் உள்ள மண மான பெண்களின் நிலை குறித்து விரிவான

ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பொய் பரப்புரைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. யு சி சி என சுருக்கமாக அழைக்கப்படும் யூனிபார்ம் சிவில் கோடு கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. விவாகரத்து விவகாரம் குறிப்பாக முத்தலாக் விவகாரம் முஸ்லீம் மகளிரின் மண வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாசிச சக்திகள் கூறிவரும் நிலையில் இந்த டேட்டா பொய்மைகளை அடித்து நொறுக்கியுள்ளது.

அந்த வலைதள தகவல் திரட்டுக்களில் வெளிப்படும் உண்மைகள் ; விவாகரத்து பெறுபவர்களில் அதிகம் பேர் ஹிந்துக்கள்( 68 சதவீதம்) என்றும் முஸ்லிம்கள் 23.3 சதவீதம் என்பதும் தெரியவந்துள்ளது. மண முறிவுகளில் கோவா மாநிலத்தில் குறைவான அளவிலே விவகாரத்துக்களை செய்துள்ளனர். மணமுறிவுகள் மகளிரின் மேம்பாட்டில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இது மோடி அரசுக்கு அபாய எச்சரிக்கையாக உள்ளது.. பெண்களுக்கு அவர்தம் மேம்பாட்டுக்கு பாடுபடுவதாக மத்திய அரசு கருத்துமானால் மணமுறிவு விவாகாரம் குறித்து அது ஏற்படுத்தும் சமூக பொருளாதார உளவியல் சிக்கல் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணவேண்டும். முஸ்லீம் பெண்களை விட ஹிந்து பெண்கள் அதிக அளவு அதாவது மூன்று மடங்கு அதிகமாக மண முறிவு பெறுகிறார்கள்

ஆண்கள் விவகாரத்தில் 76சதவீத ஹிந்து ஆண்கள் விவகாரத்து செய்து கொள்கிறார்கள். இதிலும் முஸ்லிம்கள் 12. 7 சதவீதமே . விவாகரத்து செய்துகொள்கிறார்கள் ஹிந்து பெண்களைவிட ஹிந்து ஆண்களே அதிக அளவு விவாகரத்து செய்கிறார்கள். 8 சதவீதம் அதிகம் .

அனால் முஸ்லீம் பெண்களை விட குறைவான முஸ்லீம் ஆண்களே விவாகரத்து செய்கின்றனர். ஏறக்குறைய இரண்டு மடங்கு முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் தனது வாழ்க்கைத்துணையை மறுதலிக்கும், வசதியை , நிராகரிக்கும் உரிமையை முஸ்லீம் தனியார் சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளனர் என்பது ஆவண பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

.( தங்களுக்கு பொருத்தமான இணையரை தெரிந்தெடுக்கும் உரிமையை மறுமண அங்கீகாரத்தை இஸ்லாம்1450 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியுள்ளது. என்பதை குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறன் )

முஸ்லீம் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சக்திகள் தங்களின் முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள் .

விவகாரத்துக்கள் ஒரு சமூக பிரச்னை . என்ற அளவிலே அதனை அரசுகள் அணுகவேண்டும்.

வாய்ப்புக்கேடாக இன்றைய மோடி அரசு அதற்கு மத சார்பு வர்ணம் பூசி பிரச்னையை சிக்கலாக்கி விட்டது. குடிமக்களுக்கான முன்னேற்றம், மற்றும் அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆலிம் பைசி கூறுகிறார் முத்தலாக் பிரச்னையில் முஸ்லிம்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. அதனை நாங்களே (முஸ்லிம்களே ) தீர்த்துக்கொள்வோம் அதில் வெளியில் இருந்து யாரும் தலையிட வேண்டாம். பொதுமக்கள் அனைவருக்குமான கல்வி , பொருளாதார சமூக மேம்பாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும் என்கிறார்,

அகில இந்திய அளவில் விவாகரத்து செய்பவர்களில் கிராமப்புற மக்களே அதிகம் 8. 5 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் விவாகரத்து செய்துள்ளவர்கள். நகர்ப்புறங்களில் 5 லட்சத்து 3 ஆயிரம் பேர் விவாகரத்து செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மராட்டிய மாநிலம் முன்னிலை வகிக்கிறது

ஆண்கள் அதிகமாக விவாகரத்து செய்யும் மாநிலமாக குஜராத் விளங்குகிறது . மாநிலத்தின் மொத்த விவாகரத்துக்களில்54 சதவீத ம் ஆண்களே விவாகரத்துகள் செய்கிறர்கள் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத நிலை ( நாட்டின் பிரபலமான வாழா வெட்டர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது உங்கள் நினைவுக்கு வந்தால் யாம் பொறுப்பல்ல.)

இந்த சர்வே கூறும் உண்மை விவரங்களின் வாயிலாக தலாக் தலாக் தலாக் என்று முஸ்லீம் ஆண்கள் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் முஸ்லீம் பெண்களை விவாகரத்து செய்து பெண்களுக்கு கொடுமை இழைப்பதாக கட்டி விடப்பட்ட கட்டுக்கதை தகர்ந்தது .

பொய்க்கதை பரப்பியவர்களே உங்கள் முகங்களில் நீங்களே கரியை பூசிக்கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் . உண்மை உறங்காது. பொய்மை ஒரு போதும் வெல்லாது

Advertisements
Comments Off on தலாக் தலாக் தலாக் ; முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக புருடா விடும் டூப் மாஸ்டர்களின் முகத்திரையை கிழிக்கும் சர்வே !! BY அபூஸாலிஹ்

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு… தொடரும் வக்ஃபு முறைகேடுகள் BY அபூஸாலிஹ்

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு… தொடரும் வக்ஃபு முறைகேடுகள்
BY அபூஸாலிஹ்

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களுக்கு மாதம் 159 ரூபாய் மட்டும் வாடகை கொடுக்கிறார்கள். இவர்கள் தாதாக்களோ, ஆதிக்க வெறிபிடித்த பண முதலைகளோ அல்ல. மேற்கு வங்காள மாநில அரசுதான் இத்தகைய சாதனைக்கு(?) சொந்தக்காரனாக விளங்குகிறது.

ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், தலைமைச் செயலகம் செயல்படும் வில்லியம்ஸ் கோட்டை, சீதாபூர் மதரஸா மற்றும் அதைச் சார்ந்த மைதானம் (ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது), இவ்வாறு முக்கிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து மேற்கு வங்காள அரசு அற்பசொற்ப வாடகை கொடுத்து வந்தது நாட்டு மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.

2555 பிகாசாவுள்ள (511 ஏக்கர்) நிலத்திற்கு மாநில அரசு 159 ரூபாய் மட்டுமே மாத வாடகை செலுத்துகிறது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

இந்த 159 ரூபாய் மாத வாடகைக் கூட 1999ஆம் ஆண்டு வரைதான் கொடுத்து வந்தது. அதன்பிறகு அதனைக்கூட நிறுத்திவிட்டது. மேற்கூறப்பட்ட வக்ஃபு சொத்துக்களுக்கு முத்தவல்லியான மவ்லவி அபுல் பரகாத் தனது 99ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான அபுநயீம் சித்தீக்கியிடம் ஒரு பைசாகூட அரசால் வழங்கப்படவில்லை.

வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் நவாபாக இருந்த நவாப் அலி வர்திகான், சீதாபூர் மஸ்ஜித் மற்றும் மதரஸாவைப் பராமரிக்கும் செலவு வகைக்காக மவ்லவி சம்சுத்தீன் மற்றும் மசியுத்தீன் ஆகிய இருவருக்கும் கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் பிரம்மாண்டமான அரசு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்காக மிகப்பெரிய தொகையாக(?) 159 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.

எந்த மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் பராமரிப்புக்காக சொத்துக்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. மதரஸாவும், மஸ்ஜிதும் பாழடைந்த நிலையில் உள்ளன என்பதுதான் பெரும் சோகம்.

வில்லியம் கோட்டை, ராஜ்பவன், புகழ்பெற்ற ஈடன் கார்டன் உள்ளிட்ட பானிபவான் மைதானம் முதலிய முக்கிய இடங்கள் அனைத்தும் தங்களது மூதாதையர்களின் சொத்துக்களே என பெருமிதத்துடன் கூறுகிறார். ஆனால் இவர்களது உரிமையை மறுத்து நியாயமான தொகையை வழங்க மறுத்து அரசுகள் வீண் பிடிவாதம் காட்டி வருவதாக வருந்துகிறார்.

வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலம் தொடங்கி ஜவஹர்லால் நேரு தொடர்ந்து இந்திரா காந்தி, ஜோதிபாசு போன்றவர்களின் காலங்களில் கூட நியாயம் வழங்கப்படவில்லை.

சீதாபூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் 1772ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு மாதம் 158 ரூபாய் வாடகைத் தொகையாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக அபூநயீம் சித்தீக்கி கூறுகிறார். அதன்பிறகு ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடடா, என்ன நேர்மை?
என்ன நேர்மை ?
புல்லரிக்க வைக்கும் செயலல்லவா ?

17ஆம் நூற்றாண்டில் முர்ஷிதாபாத்துக்கு வருகை தந்த நவாப் அலி வர்திகான், ஹூக்ளி மாவட்டத்தில் 15 ஆயிரம் பிகா நிலமும் (3000 ஏக்கர்), ஹவுரா மற்றும் 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் 2555 பிகா நிலங்கள் (511 ஏக்கர்) வழங்கப்பட்டன. இன்று இவை அனைத்தும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளின் முக்கிய சொத்துக்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அநீதிகள் தொடர்கின்றன.

தனி நபர்கள் முறைகேடு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே முறைகேடு செய்தால் எங்குபோய் முறையிடுவது? முறையான, நீதியான நிர்வாகம் பற்றி வாய்கிழியப் பேசும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

–அபுசாலிஹ்

Comments Off on பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு… தொடரும் வக்ஃபு முறைகேடுகள் BY அபூஸாலிஹ்