Abusalihonline's Blog

Just another WordPress.com site

செல்லாத நோட்டு விவகாரம் ;பசியால் பரிதவித்த மக்களுக்கு உணவளித்த ஹைதராபாத் இளைஞர்கள் BY அபூஸாலிஹ்

செல்லாத நோட்டு விவகாரம் ;பசியால் பரிதவித்த மக்களுக்கு உணவளித்த ஹைதராபாத் இளைஞர்கள்

அபூஸாலிஹ்

பெருவெள்ளம் ,பெருவிபத்து பேரிடர், சுனாமி என மக்கள் அல்லலுக்கு ஆட்படும்போதெல்லாம் உதவிக்கரமாய் நேசத்துடன் சேவை செய்யும் உள்ளங்கள் உடனடியாக களமிறங்கி துயர் துடைப்பது வாடிக்கை. .

பேரிடர் பெருவிபத்து சுனாமி போன்ற அசம்பாவித சூழலில் நிவாரண பணிகள் செய்ததைப்போல தற்போது நாட்டை மிகப்பெரும் இக்கட்டில் ஆழ்த்திய பண மதிப்பிழப்பு விவகாரம் நாட்டு மக்களை செல்லாக்காசுகளை போல மாற்றப்பட்டுவிட்ட அவல நிலையில் சாமான்ய மக்களின் துயரம் தொடர்கதையாக செல்லும் நிலையில் அன்றாட வாழ்வுக்கே மிகவும் சிரமப்படும் அந்த மக்களை ஏனென்று கேட்க கூட நாதியற்ற நிலையில்ஹைதராபாத் முஸ்லீம் இளைஞர்கள் செல்லா நோட்டு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்த அரிய தகவல்கள் வெளிவந்துள்ளன. .
சையத் அக்ரம் என்னும் இளைஞர் தலைமையிலான குழு தினமும் 600 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மெஹ்திப்பட்டினம் பஸ் நிலையம். .பீவி என் ஆர் எக்ஸ்பிரஸ் 47 ஆம் வாசல் அருகே 50 பேருக்குமேல் பசியால் பரிதவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி உபசரிக்க காத்து கிடக்கின்றனர்.

உணவை வழங்க சையது நாசீர் அஹ்மது, அவரது சகோதரர் அக்ரம், மற்றும் அவரது நண்பர் கஜேந்திரன் உள்ளிட்ட தன்னார்வ இளைஞர்கள் உணவு வழங்கி மகிழ்கின்றனர்.

வங்கி வாசலில் காத்துக்கிடந்து மிடறு தண்ணீர் கூட அருந்த வாய்ப்பில்லா மக்கள் வேதனையில் உழன்றனர் மனமும் உடலும் ஒருசேர சோர்ந்த மக்கள் தொகுப்பில்97 பேருக்குமேல் உயிரிழந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பரிதவித்து வரும் நிலையில் பாலைவன சோலையாக இவர்களது அரும்பணிகள் அவர்களுக்கு ஆறுதல் வழங்கி வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

சில நாட்களுக்கு முன்பாக இரண்டு இளம் தொழிலாளர்கள் எங்கள் உணவகத்திற்கு வந்தனர். மிகவும் பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கேட்டனர். . பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் இருந்த அவர்கள் செல்ல்லாத நோட்டு விவகாரத்தால் நாங்கள் இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடவில்லை . வேலை இழந்து தவிக்கின்றோம் என்றனர். அவர்களுக்கு உணவளித்த நாங்கள் அன்று முதல் எங்கள் ரெஸ்டாரண்டை இது போன்ற பசியாளிகளுக்கு இலவசமாக உணவளிக்க பயன்படுத்த முடிவு செய்த்தோம் என்கின்றனர் நாஸிர் , அக்ரம் சகோதரர்கள் இது அந்த ஏழை தொழிலாளர்கள் வந்து உணவு கேட்ட அந்த ஒரு நொடியில் உருவானது என்றனர்.

ஏழைகள் வயிற்றில் மூண்ட பசி என்னும் நெருப்பு நவம்பர் 21ம் தேதியில் இருந்து உணவுக்காக மூட்டப்பட்ட நெருப்பால் அணைந்தது.

ஆம் சையத் நாஸிர் அக்ரம் சகோதரர்கள் முயற்சியால் பசிப்பிணி நீக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. .

இது இந்த சகோதர்களுக்கு சொந்தமான ரையான் பங்ஷன் ஹாலில் முற்பகல் 11 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை அல்லது தயாரிக்கப்பட்ட உணவு முடியும் வரை வழங்கப்பட்டு வருகிறது றேத்தி பாவ்லி , அட்டாபூர் , மெஹ்திபட்டினம், மற்றும் தோலிசைவுக் ஏரியாக்களில் 70 க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் அனா மதிப்பிழப்பால் ஈயாடுகிறது. எல்லாம் பண மதிப்பிழம்பின் விளைவுதிருமண மண்டபங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில் அவர்களின் பசி தீர்க்கும் அற சாலையாக ரையான் பங்க்ஷன் ஹால் மாறிவிட்டது. செல்லாத நோட்டுக்கள் மட்டுமில்லை. செல்லும் 2000 நோட்டுக்களாலும் சிலர் துன்பங்கள் அனுபவித்ததாக நாசீர் சகோதரர்கள் கூறுகிறார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாக்கிக்கொண்டு வருவதால் வேலை இழந்து வரும் மக்களின் பசி பசி தீர்ப்பது எமது கடமை . இதற்கு எவ்வளவு நிதி ஆனாலும் அது பற்றி கவலையில்லை எங்களுக்குள் பகிர்ந்தும் சில நண்பர்களின் நிதி உதவிக்கொண்டும் தொண்டினை தொடருவோம் என்கிறார்கள் . தினமும் 600 பேருக்குமேல் உணவு வழங்கும் இந்த50 பேர் கொண்ட குழு. இவர்களை நாமும் வாழ்த்துவோம் .

Advertisements
Comments Off on செல்லாத நோட்டு விவகாரம் ;பசியால் பரிதவித்த மக்களுக்கு உணவளித்த ஹைதராபாத் இளைஞர்கள் BY அபூஸாலிஹ்