Abusalihonline's Blog

Just another WordPress.com site

லண்டன் தீ விபத்து; உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள் – மீட்கப்பட்டவர்கள் ஆனந்த கண்ணீர் அபுசாலிஹ்

on July 3, 2017

லண்டன் தீ விபத்து; உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள் – மீட்கப்பட்டவர்கள் ஆனந்த கண்ணீர்
அபுசாலிஹ்

லண்டன் மாநகரம் மேற்கு பகுதி நள்ளிரவு அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது க்ரீன் பெல் டவர் என்ற 24 அடுக்கு மாடிகளை கொண்ட இரண்டு கட்டிடங்களில் திடீரென தீ பற்றியது.
யாருக்கும் தெரியாது .எந்த அபாய எச்சரிக்கை மணியும் ஒலிக்கவில்லை. க்ரீன் பெல் டவரின் ஹீரோக்களாக பல முஸ்லிம்கள் பதறி துடித்து பாய்ந்து எழுந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். புனித ரமலான் மாதம் நோன்பு நோற்பதற்காக நள்ளிரவு எழுந்தவர்கள் தீயை கண்டதும் நடவடிக்கையில் இறங்கினர் தீ ஜுவாலை தோன்றியதை பார்த்த மறுநொடியில் மீட்பு பணியில் இறங்கியதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். முதலில் கீழ் தளங்களில் தீ பற்றியதாகவும் அங்குள்ள மக்கள் அயர்ந்து தூங்கிய நிலையில் முஸ்லிம்கள் உடனடியாக மக்களை வெளியேற்றினர் .

அன்றோ பஸ்ஸோ என்ற 33 வயது நபர் இண்டிபெண்டெண்ட் செய்தி ஏட்டிற்கு கொடுத்த பேட்டியில் முஸ்லிம்கள் இந்த தீவிபத்தில் மீட்பு பணியில் அரும் பங்கு ஆற்றியுள்ளதை மறக்க முடியாது என்கிறார் மீட்பு பணி செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாகளாகவே பார்க்க முடிகிறது. மீட்ட்டதோடு அவர்கள் உணவும் உடைகளும் வழங்கினர் என்கிறார். இந்த தீ விபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய முஸ்லிம்கள் குறித்து உள்ளுர் பெண்மணி ஒருவர் பேசும் காணொலி இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது.

அந்த காணொலியில் அந்த பெண்மணி தங்களை காப்பாற்றிய முஸ்லிம்களிடம் நன்றி ரமலான், ரமாலானுக்காவும் நன்றி என்று நன்றிபெருக்கோடு குறிப்பிடுகிறார். மற்றொரு உள்ளுர் பெண்மணி தீ விபத்து சம்பவத்தை விவரிக்கும் போது, முஸ்லிம்கள் வீடுகளின் கதவுகளை நோக்கி ஒடி மக்களை நெருப்பிலிருந்து காப்பாற்றினர். அவர் மேலும் “இந்த இளம் முஸ்லிம் பையன்கள் பள்ளிவாசல்களிலிருந்து ஒடி வந்து எங்களை காப்பாற்றாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள்” என்று குறிப்பிடுகிறார். இத்துடன் அவர் நிறுத்தவில்லை. முஸ்லிம்களின் இந்த மனிதநேய உதவியை ஊடகங்கள் புறக்கணித்ததை அவர் பெரிதும் குறைப்பட்டார். “அவர் தவறு செய்தால் அதை பற்றி விலவாரியாக பேசுகிறார்கள். அவர்கள் தான் தண்ணீர் பைகளுடன் வந்து மக்களுக்கு அளித்து அவர்களை காப்பாற்றினார்கள்.’ ஆனால் அது குறித்து பேசாமல் இருப்பது நியாயமா என்று கேட்கிறார் இந்த ஆங்கிலேய பெண்மணி.ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதை சுட்டிக்காட்டி முஸ்லிமல்லாத மக்கள் பலர் முஸ்லிம்கள் எப்படி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினார்கள் என்பது குறித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் காணொலியுடன் பதிவுகளை பிரசுரித்திருந்தனர். தங்களின் உறவுகளை அனைவரும் தேடி தவித்த போது அவர்களை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றி உணவும் நீரும் கொடுத்து காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்ட வர்களை செயின்ட் கிளெமென்ட் தேவாலயத்தில் கொண்டு தங்க வைத்து உணவும் உடையும் தாகம் தீர்க்க நீரும் வழங்கினர் அருகில் உள்ள அல் மனார் பள்ளிவாசலிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். ரஷீதா என்ற பெண்மணி ஸ்கை நியூஸ§க்கு அளித்த பேட்டியில் எங்களுக்கு ஸஹர் எனும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரம் 2.30 மேல் தான் ஆகும் எனினும் அன்று இரவு வணக்கம் முடிய நேரம் ஆனதால் விபத்து கண்டு மீட்பு பணியி ல் இறங்க முடிந்தது.

இந்த பகுதியில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடந்து கொள்கிறோம். பல்வேறு நாட்டினரும் வாழும் இங்கு முஸ்லிகளில் கணிசமானவர்கள் மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்களாவார். நாடியா யூசுப் என்ற 29 வயது பெண்மணி நாங்கள் முதலில் எழுந்தவுடன் தீ விபத்தை கண்டோம். ஸஹருக்கு உணவு தயாரிப்பது என்பது 2ம் பட்சமாகவே இருந்தது என்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல இஸ்லாமிய கலாச்சார மையங்களும், பள்ளிவாசல்களும் தங்கள் கதவுகளை திறந்து வைத்திருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை தஞ்சம் அளித்தன. தீ விபத்து நேர்ந்த சில மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30000 பவுண்ட்கள் முஸ்லிம் அறக்கட்டளைகளான முஸ்லிம் ஏய்ட் மற்றும் அல் மனார் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் சேவை அன்று தமிழகத்தில் சுனாமி எனும் ஆழிப்பேரலையின் போதும் அமெரிக்காவை புரட்டியெடுத்த கத்ரீனா புயலின் போதும் நேற்றைய சென்னை பெரு வெள்ளத்தின் போதும் இன்றைய லண்டன் தீ விபத்தின் போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . மலரின் இயல்பான மணம் போல் தேனின் இயல்பான தித்திப்பினை போல இது வே ஒரு நல்ல முஸ்லிமின் இயல்பாகும். இறைவன் நாடினால் யுக முடிவு காலம் வரை இந்த சேவை குணம் தொடரும் , தொடரவேண்டும். தொடரட்டும் எல்லா புகழும் இறைவனுக்கே. லண்டன் மக்களின் நிம்மதியில் மகிழ்ச்சியில் நாமும் இணைந்து வாழ்த்துவோம். லண்டன் சமாதானம் நீடிக்கட்டும்

Advertisements

One response to “லண்டன் தீ விபத்து; உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள் – மீட்கப்பட்டவர்கள் ஆனந்த கண்ணீர் அபுசாலிஹ்

  1. IBC Tamil says:

    It is very great moment, we proud to muslim ibctamil.com

Comments are closed.
%d bloggers like this: