Abusalihonline's Blog

Just another WordPress.com site

ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள் BY ABUSALIH

on July 4, 2017

ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள்

BY ABUSALIH

ஏராளமான மக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மாட்டுக்கறி விருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றுள்ளனர் மிஜோரம் மக்கள். மாடுகளை விற்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டுமக்களின் உணவு உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக மாட்டுக்கறி விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்திய மியான்மர் எல்லை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மிஜோராம் ஆளுநர் மாளிகை பகுதிக்கு 200 அடி தூரத்தில் இந்த மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.

மோசமான சீதோசன நிலையில் 5000 பேர் பங்கு பெற்ற இந்த விருந்தினை உள்ளூர் அமைப்பான ஜோ லைஃப் ஒருங்கிணைத்தது. மாட்டுகறி தீர்ந்துவிட்டதால் 2000 பேருக்கு மட்டுமே விருந்து அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறிக்கோள் மாட்டு இறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவதற்காக அன்று. நாட்டு மக்களின் உணவு உரிமையை காப்பாற்றுவதற்கு தான். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஜோ லைஃப் அமைப்பு கூறியது. முன்னதாக மாட்டுக்கறிக்கு தடை ஏதும் இல்லை என அறிவித்து விட்டு பின்னர் அடிப்படை உரிமைகளை கூட மறுதலிக்கும் சதி செயல்கள் தொடர்கிறது. ஒருவன் என்ன சாப்பிடுவது என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது . அவர்கள் எதையும் திணிக்க கூடாது என ஜோ லைஃப் அமைப்பின் ரேம் ருமாட்டா வர்தே கூறினார். மிசோரம் மாநிலத்தில் பல்வேறு சமயங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையினராவர் . அவரவர் தமது விருப்பம் போல் தம் சமய சம்பிரதாயங்களை பின்பற்றி கொள்ளலாம் இதில் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என வார்டே மேலும் தெரிவித்தார்.

மாட்டுக்கறி விருந்து என்பது மத்தியஅரசின் அறிவிப்புக்கு எதிரான அடையாள பூர்வ போராட்டமாகும். திரளான மக்கள் துணிச்சலுடன் பங்கேற்றதை வரவேற்பதாக அவர் கூறினார் . மிசோரம் உணவு உரிமையை கட்டுப்படுத்தும் செயலை காலில் போட்டு மிதிக்க தயாராகி விட்டது

Advertisements

4 responses to “ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள் BY ABUSALIH

 1. இஸ்லாமிய அரசியல்வாதி வந்தால் பன்றி இறைச்சி விருந்து வைக்க கூடாதா ?
  விருப்பம் என்றால் இஸ்லாமிய அரசியல்வாதி உண்ணலாம் … முடியவில்லை என்றால் சும்மா இருந்துவிட்டு செல்லலாம்
  என்ன விருந்து வைப்பது என்று மிசோரம் மக்களின் உரிமை தானே
  உங்கள் தளம் முழுவதும் வெறுப்பு தானே உள்ளது
  எங்கேயாவது ஏனைய மதத்தவர்களின் நல்ல செயல்கள் போட்டிருக்கின்ரீர்களா ?

  • தாராளமாக பன்றிக்கறி விருந்து என்று அறிவிக்கட்டுமே யார் வேண்டாமென்று சொன்னது ? விருப்பம் இருந்தால் வந்து விட்டு போகட்டுமே ஆனால் நாம் கேட்பது ஆதாரம் மட்டுமே இன்னமும் பூசி மெழுகிறீர்கள் ? அட ஆதாரம் எங்கே அய்யா ? கொடுத்து விட்டு பேசுங்கள் . நாம் உங்கள் கமெண்ட் குறித்து கருத்து சொன்னதற்காக வேண்டுமென்றே எம் தளத்தில் வெறுப்பு பரப்புரை தான் உள்ளது என திசை திருப்ப வேண்டாம் . இதற்கு முன்னர் நீங்கள் பதிவிட்ட கமெண்ட்டுக்கு ஆதாரம் தரவும் மழுப்பவேண்டாம் .

 2. இஸ்லாமிய அரசியல்வாதிகள் யாராவது வந்தால் பன்றி கறி விருந்து கொடுப்போம் என்று மிசோரம் மக்கள் உறுதி

  • உங்கள் செய்தி ஆதாரமற்றது . புளுகு வகையை சேர்ந்தது உண்மை என்றால் லிங்க் கொடுங்க . இல்லையெனில் தயவுசெய்து உங்கள் கமெண்ட்டை நீங்களே டெலிட் பண்ணிட்டு ஓடிப்போயிருங்க வெறுப்பு பரப்புரைக்கு இது இடமல்ல

Comments are closed.
%d bloggers like this: