Abusalihonline's Blog

Just another WordPress.com site

லண்டன் தீ விபத்து; உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள் – மீட்கப்பட்டவர்கள் ஆனந்த கண்ணீர் அபுசாலிஹ்

லண்டன் தீ விபத்து; உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள் – மீட்கப்பட்டவர்கள் ஆனந்த கண்ணீர்
அபுசாலிஹ்

லண்டன் மாநகரம் மேற்கு பகுதி நள்ளிரவு அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது க்ரீன் பெல் டவர் என்ற 24 அடுக்கு மாடிகளை கொண்ட இரண்டு கட்டிடங்களில் திடீரென தீ பற்றியது.
யாருக்கும் தெரியாது .எந்த அபாய எச்சரிக்கை மணியும் ஒலிக்கவில்லை. க்ரீன் பெல் டவரின் ஹீரோக்களாக பல முஸ்லிம்கள் பதறி துடித்து பாய்ந்து எழுந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். புனித ரமலான் மாதம் நோன்பு நோற்பதற்காக நள்ளிரவு எழுந்தவர்கள் தீயை கண்டதும் நடவடிக்கையில் இறங்கினர் தீ ஜுவாலை தோன்றியதை பார்த்த மறுநொடியில் மீட்பு பணியில் இறங்கியதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். முதலில் கீழ் தளங்களில் தீ பற்றியதாகவும் அங்குள்ள மக்கள் அயர்ந்து தூங்கிய நிலையில் முஸ்லிம்கள் உடனடியாக மக்களை வெளியேற்றினர் .

அன்றோ பஸ்ஸோ என்ற 33 வயது நபர் இண்டிபெண்டெண்ட் செய்தி ஏட்டிற்கு கொடுத்த பேட்டியில் முஸ்லிம்கள் இந்த தீவிபத்தில் மீட்பு பணியில் அரும் பங்கு ஆற்றியுள்ளதை மறக்க முடியாது என்கிறார் மீட்பு பணி செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாகளாகவே பார்க்க முடிகிறது. மீட்ட்டதோடு அவர்கள் உணவும் உடைகளும் வழங்கினர் என்கிறார். இந்த தீ விபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய முஸ்லிம்கள் குறித்து உள்ளுர் பெண்மணி ஒருவர் பேசும் காணொலி இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது.

அந்த காணொலியில் அந்த பெண்மணி தங்களை காப்பாற்றிய முஸ்லிம்களிடம் நன்றி ரமலான், ரமாலானுக்காவும் நன்றி என்று நன்றிபெருக்கோடு குறிப்பிடுகிறார். மற்றொரு உள்ளுர் பெண்மணி தீ விபத்து சம்பவத்தை விவரிக்கும் போது, முஸ்லிம்கள் வீடுகளின் கதவுகளை நோக்கி ஒடி மக்களை நெருப்பிலிருந்து காப்பாற்றினர். அவர் மேலும் “இந்த இளம் முஸ்லிம் பையன்கள் பள்ளிவாசல்களிலிருந்து ஒடி வந்து எங்களை காப்பாற்றாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள்” என்று குறிப்பிடுகிறார். இத்துடன் அவர் நிறுத்தவில்லை. முஸ்லிம்களின் இந்த மனிதநேய உதவியை ஊடகங்கள் புறக்கணித்ததை அவர் பெரிதும் குறைப்பட்டார். “அவர் தவறு செய்தால் அதை பற்றி விலவாரியாக பேசுகிறார்கள். அவர்கள் தான் தண்ணீர் பைகளுடன் வந்து மக்களுக்கு அளித்து அவர்களை காப்பாற்றினார்கள்.’ ஆனால் அது குறித்து பேசாமல் இருப்பது நியாயமா என்று கேட்கிறார் இந்த ஆங்கிலேய பெண்மணி.ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதை சுட்டிக்காட்டி முஸ்லிமல்லாத மக்கள் பலர் முஸ்லிம்கள் எப்படி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினார்கள் என்பது குறித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் காணொலியுடன் பதிவுகளை பிரசுரித்திருந்தனர். தங்களின் உறவுகளை அனைவரும் தேடி தவித்த போது அவர்களை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றி உணவும் நீரும் கொடுத்து காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்ட வர்களை செயின்ட் கிளெமென்ட் தேவாலயத்தில் கொண்டு தங்க வைத்து உணவும் உடையும் தாகம் தீர்க்க நீரும் வழங்கினர் அருகில் உள்ள அல் மனார் பள்ளிவாசலிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். ரஷீதா என்ற பெண்மணி ஸ்கை நியூஸ§க்கு அளித்த பேட்டியில் எங்களுக்கு ஸஹர் எனும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரம் 2.30 மேல் தான் ஆகும் எனினும் அன்று இரவு வணக்கம் முடிய நேரம் ஆனதால் விபத்து கண்டு மீட்பு பணியி ல் இறங்க முடிந்தது.

இந்த பகுதியில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடந்து கொள்கிறோம். பல்வேறு நாட்டினரும் வாழும் இங்கு முஸ்லிகளில் கணிசமானவர்கள் மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்களாவார். நாடியா யூசுப் என்ற 29 வயது பெண்மணி நாங்கள் முதலில் எழுந்தவுடன் தீ விபத்தை கண்டோம். ஸஹருக்கு உணவு தயாரிப்பது என்பது 2ம் பட்சமாகவே இருந்தது என்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல இஸ்லாமிய கலாச்சார மையங்களும், பள்ளிவாசல்களும் தங்கள் கதவுகளை திறந்து வைத்திருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை தஞ்சம் அளித்தன. தீ விபத்து நேர்ந்த சில மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30000 பவுண்ட்கள் முஸ்லிம் அறக்கட்டளைகளான முஸ்லிம் ஏய்ட் மற்றும் அல் மனார் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் சேவை அன்று தமிழகத்தில் சுனாமி எனும் ஆழிப்பேரலையின் போதும் அமெரிக்காவை புரட்டியெடுத்த கத்ரீனா புயலின் போதும் நேற்றைய சென்னை பெரு வெள்ளத்தின் போதும் இன்றைய லண்டன் தீ விபத்தின் போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . மலரின் இயல்பான மணம் போல் தேனின் இயல்பான தித்திப்பினை போல இது வே ஒரு நல்ல முஸ்லிமின் இயல்பாகும். இறைவன் நாடினால் யுக முடிவு காலம் வரை இந்த சேவை குணம் தொடரும் , தொடரவேண்டும். தொடரட்டும் எல்லா புகழும் இறைவனுக்கே. லண்டன் மக்களின் நிம்மதியில் மகிழ்ச்சியில் நாமும் இணைந்து வாழ்த்துவோம். லண்டன் சமாதானம் நீடிக்கட்டும்

Advertisements
1 Comment »

விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஜ்ரத் மஹல்ஆவணப்படம் அபூசாலிஹ் 16 April 2017

விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஜ்ரத் மஹல்ஆவணப்படம்

அபூசாலிஹ்
16 April 2017

இந்தியா

அவுத் அரசின் கடைசி அரசி பேகம் ஹஸ்ரத் மஹல் முதல் இந்திய விடுதலை போரில் செரு களத்தில் அவர் சாதித்ததையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சிறைவைக்கப்பட்டதையும் , 20ஆண்டுகளாக வாடியதையும் 138 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திரையிடப்பட்டது.

இதற்கென விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஸ்ரத் மஹல் குடும்பத்தினர் நேபாளத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். பேகம் ஹஸ்ரத் மஹல் பற்றிய ஆவணப்படம் ஏப்ரல் 7ம் தேதி திரையிடப்பட்டது. இத்தகவலை ஹஸ்ரத் மஹலின் எள்ளுப்பேத்தி (கொள்ளுப்பேத்தியின் மகள்) மன்ஜிலாத் பாத்திமா தெரிவித்தார்.

அவுத் பேரரசர் நவாப் வாஜித் அலிஷாவின் இளைய அரசியான பேகம் ஹஸ்ரத் மஹல் 1857ல் நடந்த முதல் இந்திய விடுதலைப்போராட்டத்தில் வீர தீர சாதனைகளை நிகழ்த்திய போதிலும் ஜான்சியை சேர்ந்த லக்குமிபாய் அளவுக்கு கொண் டாடப்படவில்லை என பாத் திமா தனது மனக்குறையை தெரிவித்தார் நடுநிலையாளர்கள் எல்லோருடைய மனக்குறை கூட அது தான் இல்லையா?

இந்தி ஆவணப் படம்

26நிமிட ஹிந்தி மொழியிலான இந்த ஆவணப்படத்தின் தலைப்பு பேகம் ஹஸரத் மஹல் ஆகும். அவுத் பேரரசின் கடைசி அரசியாக இருந்தாலும் முதல் இந்திய விடுதலைப்போரின் முதல் புரட்சிக்காரிதான் பேகம் ஹஸ்ரத் மஹல் . மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தை முஹியத்தீன் மிர்ஸா இயக்கிய இந்த படத்தை பிலிம் டிவிஷன் தயாரிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த படம் பெட்டிக்குள் முடங்கியதை வெளிக்கொணர பாடுபட்டார் பாத்திமா இளைய தலைமுறையினர் விடுதலைப்போராட்ட வீர பரம்பரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்தம் தியாகம் நினைவு கூறப்படுவதற்காக படத்தை திரையிட செய்தோம் என்கிறார் பாத்திமா.

ஆவணப்படத்தில் ஹஸ்ரத் மஹல் போர்க்களத்தில் வீரத்துடன் களமாடிய சம்பவங்களை இந்திய விடுதலை வீரர்கள் என்ற எம் ஜி அகர் வாலின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டதாக ஆவணப்பட பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

மகாராணியை எதிர்கொண்டவர்

1856ல் அவுத் அரசை பிரிட்டிஷ் அரசுடன் இணைத்த பிறகு மன்னர் வாஜித் அலிஷா நாடு கடத்தப்பட்டார்.வீறு கொண்டெழுந்த அரசி பேகம் ஹஸ்ரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதருக்கு முடிசூட்டி நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் ஆடம்பர வாழ்வு வாழ்ந்த அரசியாக இருந்தபோதும் போர்க்களங்களில் தோன்றி தனது வீரர்களுக்கு உத்வேக ம் ஊட்டுபவராக விளங்கியதாக அந்த நூல் ஆதாரங்களுடன் குறிப்பிட்டது. விடுதலைப்போராட்டத்தில் இந்திய பெண்கள் எனும் கலைக்களஞ்சியம் படைத்த சிம்மி ஜெயின் கூற்றின்படி பிரிட்டிஷ் மஹாராணி விக்ட்டோரியாவுக்கு எதிர்ப்பிரகடனஷ்ம் விடுத்து சவாலாக விளங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயின் தனது நூலில் புரட்சிக்குப்பிறகு விக்ட்டோரியா மகாராணி இந்திய மக்களை குளிரவைக்கும் விதமாக ஏமாற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீராங்கனை ஹஸ்ரத் மஹல் எதிர் அறிக்கை ஒன்றை மக்களுக்கு வெளியிட்டார். அதில் பிரிட்டிஷ் மஹாராணி அறிக்கையின் நம்பகத்தன்மையையும் உண்மை யையையும் கேள்வி கேட்டார் . பிரிட்டிஷ் ராணியின் அறிக்கைக்கு கடும் சவாலாக விளங்கினார்.

இவரது தலைமையின் கீழ் லக்னோ உட்பட அவத் மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக உன்னத போராட்டம் நடத்தியது நெகிழ்வான வரலாறாகும். இன்றைய தவைமுறை அதில் கற்க வேண்டிய பாடம் ஏராளம் உள்ளது.

இமாலய மலையடி வாரத்தில் 20 ஆண்டுகள்

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்தபிறகு மகனுடன் நேபாளத்திற்கு தப்பி சென்றார். 1859ல் நேபாளம் சென்ற பேகம் ஹஸ்ரத் மஹல் 20 ஆண்டுகளாக மரணிக்கும் வரை கடும் சிரமத்துடன் அங்கேயே வாழ்ந்து மறைந்தார்,முதல் விடுதலைப்போராட்ட களத்தில அந்நியரை வீரத்துடன் எதிர்த்த முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.

போர்ப்படை திறமை கொண்ட இவரை தம் பக்கம் கொண்டுவர பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்க ஆங்கிலேயர் செய்த தொடர் முயற்சி பலிக்கவில்லை. எதற்கும் ஆசைப்படாத , அடிபணியாத வீராங்கனையாக 1879 வரை வாழந்து மறைந்தார். ரங்கூன் பகதூர்ஷா ஜாபர் இறுதி நினைவுகளை சுமந்து கொண்டு இருப்பது போல் நேபாளத்தின் காத்மாண்டு பேகம் ஹஸ்ரத் மஹல் என்ற வீராங்கனையின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுபடுத்திக்கொன்டே இருக்கும். இந்த ஆவணப் படம் தமிழாக்கம் செய்யப்படுவது காலத்தின் கட்டாயம்

Comments Off on விடுதலைப் போராட்ட வீராங்கனை பேகம் ஹஜ்ரத் மஹல்ஆவணப்படம் அபூசாலிஹ் 16 April 2017

உபி தேர்தல் முடிவுகள் ; அதல பாதாளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் BY ABUSALIH

உபி தேர்தல் முடிவுகள் ;

அதல பாதாளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

BY ABUSALIH

2017 உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் பாஜகவின் வெற்றிக்கு மிகப்பெரிய விலையாக முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவம் படு வீழ்ச்சியை சந்தித்துஉள்ளது . தற்போது 25 முஸ்லிம் உறுப்பினர் களே சட்டமன்றம் செல்ல உள்ளனர். 2007ல் 56 முஸ்லிம்கள் சட்டமனற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அன்றைய சட்ட மன்ற தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்திருந்தது. முஸ்லிம் உறுப்பினர்களை அதிகம் பெற்ற கட்சியாக செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி விளங்கியது .

2012ல் 68 முஸ்லிம் வேட்பாளர்கள் வென்று சட்டமன்றம் சென்றனர். கடந்த தேர்தலில் அகிலேஷ் சமாஜ்வாடி கட்சி சார்பில் பெரும்பான்மை முதல்வரானார். சமாஜ்வாடி சார்பில் முஸ்லிம்கள் உறுப்பினர்கள் கணிசமான அளவில் சட்டமன்ற த்தில் நுழைந்தனர்.

தற்போது ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாத பாஜக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் சட்டமன்ற பலம் பாதியாக குறைந்துள்ளது

இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 99 முஸ்லிம்களை களமிறக்கியது . சமாஜ்வாடி 56 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கியது. இருப்பினும் வெறும் 25 பேரே கரையேற முடிந்தது. வெற்றி பெற்ற 25 பேரில் 17 சமாஜ்வாடி கட்சி சார்பிலும் 6பேர் பகுஜன் சமாஜ் கட்சி யின் சார்பிலும் வென்றவர்கள். 2 பேர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாவார்.

வென்ற முஸ்லிம் பிரபலங்களில் ராம்பூரில் ஆஸம்கான் 46842 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். . அவரது மகன் அப்துல்லா ஆஸம்கான் சூரிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்தார் அன்சாரி மாவ் தொகுதியிலும் வென்றார்

உள்ளுக்குள்ளே எதிரி ?

மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளாத காரணம் பாஜக வின் மிருக மெஜாரிட்டி

உவைஸி கட்சியால் பாஜக குறைந்த பட்சம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது .

1. காந்த் தொகுதியில் ஆர் கே சிங் என்ற பாஜக வேட்பாளர் 76307 வாக்குகள் பெற்று வென்றார். அடுத்த படியாக வந்த சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அனீசுர்ர்ரஹ் மான் வாக்குகள் 73959, பகுஜன் சமாஜ் வேட்பாளர் முகமது நசீர் பெற்ற வாக்குகள் 43820 , ஒவைசியின் எம் ஐ எம் இந்த வேட்பாளர் பிஸாவுல்லாஹ் சவுத்ரி 22908 வாக்குகள் பெற்றார் . வெறும் 2348 வாக்குகள் வித் தியாசத்தில் 3 முஸ்லிம் வேட்பாளர்களையும் முறியடித்தார் பாஜக வேட்பாளர் . ஆனால் 3 முஸ்லிம் வேட்பாளர்களும் சேர்ந்து பெற்ற மொத்த வாக்குகள் 140,681. பீகார் போன்று ஒரு மெகா கூட்டணி அமைக்க தவறியது மட்டும் இன்றி ஒரு புதிய அமைப்பு ஒன்று கிட்டத்தட்ட23 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை சிதறடித்துள்ளது. 2348 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில் பாசிசம் பாதை போட்டு விட்டது

2தண்டா

தண்டா தொகுதி தண்டமாக போனது. பாஜகவின் சஞ்சு தேவி 74768 வாக்குகள் பெற்று வென்றார் . அவருக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாடி வேட்பாளர் அஜீமுல் ஹக் பெஹல்வான் 73043 வாக்குகள் , எம் ஐ எம் வேட்பாளர் இர்பான் 2070 வாக்குகள் பெற்றார் .பாஜக இங்கு வெறும்1725 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றது,.ஆனால் சமாஜ்வாடி யும் எம் ஐ எம் இரண்டும் வாங்கிய வாக்குகள் 75113.

3. கெயின்ஸ்ரீ
எஸ் குமார் சிங்க் என்ற பாஜக வேட்பாளர்55716 வாக்குகள் பெற்றார் . அலாவுதீன் என்ற பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 53 413 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பாஜக வேட்பாளருக்கும் இவருக்கும் வாக்கு வித்தியாசம் 2303 மட்டுமே இங்கு எம் ஐ எம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 3160 .

4. சரவஸ்தி

ராம் பேரான் பாஜக வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 79437. இவருக்கு அடுத்து சமாஜ் வாடி வேட்பார் முகமது ரம்ஜான் 78992 வாக்குகள் வாங்கினார் வெற்றி வித்தியாசம் வெறும் 445 வாக்குகள் தான் ஆனால் . எம் ஐ எம்மின் கலீம் 2933 வாக்குகள் வாங்கினார் . இங்கு இதில் தவறு நிகழ்ந்துள்ளது . பாஜக பெற்றது உண்மையான வெற்றியா என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா ?

வோட்டு மிஷினில் தகிடுதத்தம் மாயாவதி

இதனிடையே உத்திரப்பிரதேச தேர்தல் வாக்குப்பதிவில் பாஜக வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்ததாக பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு பதிவு இயந்திரங்களை கையாளப்பட்டுள்ளது . ஆதிர்ச்சிகரமான அதிர்ச்சி காரமான இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள கடினமாக இருப்பதாக மாயாவதி கூறுவதோடு இது குறித்த சந்தேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது என்றார். பாஜக அல்லாத கட்சிகளின் வாக்குகளை வாக்குப்பதிவு எந்திரம் பதிவு செய்யவேயில்லை/ அல்லது செலுத்தப்பட்ட வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு விழுந்தவையாகவே வாக்கு பதிவு இயந்திரத்தால் கணக்கிடப்பட்டுள்ளது. என்கிறார். மறுதேர்தல் வேண்டும் என்கிறார் வாக்குப்பதிவு எந்திர நம்பக தன்மை குறைவு குறித்து 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக தலைவர் அத்வானியும் பிரகாஷ் ஜவடேகரும் கேள்வி எழுப்பினர் அது குறித்த கேள்விகள் இன்னமும் விடையில்லா வினாக்களாகவே விடைத்து நிற்கின்றன

Comments Off on உபி தேர்தல் முடிவுகள் ; அதல பாதாளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் BY ABUSALIH

அலிகார் ; ஏழைகளுக்கு உதவும் கருணை சுவர் BY ABUSALIH

அலிகார் ; ஏழைகளுக்கு உதவும் கருணை சுவர்

அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் இல்லாதவர்க்கு உதவும் நல்ல நோக்கில் கருணை சுவர் ஒன்றை எழுப்பியுள்ளனர். அந்த சுவரில் கொக்கிகள் மாட்டப்பட்டு அதில் துணி மணிகள் ஆடைகள் தொங்க விடப்பட்டுள்ளன . அவ்வழியே சென்று தேவையுடையவர்கள் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் . அணிந்து கொள்ளலாம் . இந்த இரக்கமுள்ள செயல்பாடு முதன்முதலில் அரபு நாடுகளில் கொண்டுவரப்பட்டது. . அறுசுவை உணவுகள் , சுவை மிகுந்த குளிர் பானங்கள் அதற்குரிய உபகருணங்களில் வைக்கப்பட்டு இருக்கும். . தேவையுடைவர்கள் அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த அறச்செயல் பின்னர் பிற நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இங்கு தான் முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கருணை சுவர் முழுவதும் ஏழை மக்களுக்கு அவசர தேவைக்கான பொருள்கள் நிறைந்து ருக்கும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது . இங்கு பணியாளர் முதலாளி யாரும் கிடையாது . தாமாகவே வேண்டிய பொருள்களை இலவசமாகவே எடுத்து செல்லலாம் . அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கூட்டு முயற்சி செய்து இந்த நற்பணிகளை ஊக்குவித்து வருகிறது. .பொது காரியத்துக்காக மேற்படிப்பு படிக்கும் இளைய தலைமுறையினர் ஒன்றிணைவது அர்ப்பணிப்புடன் செய்யக்ல்படுவது தமது ஆனுபவ த்தில் இதுவே முதல்முறை என பாராட்டு பாத்திரம் வாசிக்கின்றனர், . . தொடக்க விழாவில் பங்கேற்ற ராஜீவ்குமார் , பி டி ஷர்மா , எம் ஜி குப்தா , பேராசிரியர் சுஹைல் அஹ்மத் சித்திக்கி , பேரா அபித் ஹசன், பேரா சபீர் அலி, பேரா பைசல் ஜியா, பேரா அப்சல் ஆகியோர் .
. தமது தொண்டுகளை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சர் சையது அஹ்மதுகானுக்கு சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர். அலிகார் மாணவர்கள் பிற பல்கலைக்கழகங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையில்லை

Comments Off on அலிகார் ; ஏழைகளுக்கு உதவும் கருணை சுவர் BY ABUSALIH

செல்லாத நோட்டு விவகாரம் ;பசியால் பரிதவித்த மக்களுக்கு உணவளித்த ஹைதராபாத் இளைஞர்கள் BY அபூஸாலிஹ்

செல்லாத நோட்டு விவகாரம் ;பசியால் பரிதவித்த மக்களுக்கு உணவளித்த ஹைதராபாத் இளைஞர்கள்

அபூஸாலிஹ்

பெருவெள்ளம் ,பெருவிபத்து பேரிடர், சுனாமி என மக்கள் அல்லலுக்கு ஆட்படும்போதெல்லாம் உதவிக்கரமாய் நேசத்துடன் சேவை செய்யும் உள்ளங்கள் உடனடியாக களமிறங்கி துயர் துடைப்பது வாடிக்கை. .

பேரிடர் பெருவிபத்து சுனாமி போன்ற அசம்பாவித சூழலில் நிவாரண பணிகள் செய்ததைப்போல தற்போது நாட்டை மிகப்பெரும் இக்கட்டில் ஆழ்த்திய பண மதிப்பிழப்பு விவகாரம் நாட்டு மக்களை செல்லாக்காசுகளை போல மாற்றப்பட்டுவிட்ட அவல நிலையில் சாமான்ய மக்களின் துயரம் தொடர்கதையாக செல்லும் நிலையில் அன்றாட வாழ்வுக்கே மிகவும் சிரமப்படும் அந்த மக்களை ஏனென்று கேட்க கூட நாதியற்ற நிலையில்ஹைதராபாத் முஸ்லீம் இளைஞர்கள் செல்லா நோட்டு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்த அரிய தகவல்கள் வெளிவந்துள்ளன. .
சையத் அக்ரம் என்னும் இளைஞர் தலைமையிலான குழு தினமும் 600 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மெஹ்திப்பட்டினம் பஸ் நிலையம். .பீவி என் ஆர் எக்ஸ்பிரஸ் 47 ஆம் வாசல் அருகே 50 பேருக்குமேல் பசியால் பரிதவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி உபசரிக்க காத்து கிடக்கின்றனர்.

உணவை வழங்க சையது நாசீர் அஹ்மது, அவரது சகோதரர் அக்ரம், மற்றும் அவரது நண்பர் கஜேந்திரன் உள்ளிட்ட தன்னார்வ இளைஞர்கள் உணவு வழங்கி மகிழ்கின்றனர்.

வங்கி வாசலில் காத்துக்கிடந்து மிடறு தண்ணீர் கூட அருந்த வாய்ப்பில்லா மக்கள் வேதனையில் உழன்றனர் மனமும் உடலும் ஒருசேர சோர்ந்த மக்கள் தொகுப்பில்97 பேருக்குமேல் உயிரிழந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பரிதவித்து வரும் நிலையில் பாலைவன சோலையாக இவர்களது அரும்பணிகள் அவர்களுக்கு ஆறுதல் வழங்கி வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

சில நாட்களுக்கு முன்பாக இரண்டு இளம் தொழிலாளர்கள் எங்கள் உணவகத்திற்கு வந்தனர். மிகவும் பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கேட்டனர். . பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் இருந்த அவர்கள் செல்ல்லாத நோட்டு விவகாரத்தால் நாங்கள் இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடவில்லை . வேலை இழந்து தவிக்கின்றோம் என்றனர். அவர்களுக்கு உணவளித்த நாங்கள் அன்று முதல் எங்கள் ரெஸ்டாரண்டை இது போன்ற பசியாளிகளுக்கு இலவசமாக உணவளிக்க பயன்படுத்த முடிவு செய்த்தோம் என்கின்றனர் நாஸிர் , அக்ரம் சகோதரர்கள் இது அந்த ஏழை தொழிலாளர்கள் வந்து உணவு கேட்ட அந்த ஒரு நொடியில் உருவானது என்றனர்.

ஏழைகள் வயிற்றில் மூண்ட பசி என்னும் நெருப்பு நவம்பர் 21ம் தேதியில் இருந்து உணவுக்காக மூட்டப்பட்ட நெருப்பால் அணைந்தது.

ஆம் சையத் நாஸிர் அக்ரம் சகோதரர்கள் முயற்சியால் பசிப்பிணி நீக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. .

இது இந்த சகோதர்களுக்கு சொந்தமான ரையான் பங்ஷன் ஹாலில் முற்பகல் 11 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை அல்லது தயாரிக்கப்பட்ட உணவு முடியும் வரை வழங்கப்பட்டு வருகிறது றேத்தி பாவ்லி , அட்டாபூர் , மெஹ்திபட்டினம், மற்றும் தோலிசைவுக் ஏரியாக்களில் 70 க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் அனா மதிப்பிழப்பால் ஈயாடுகிறது. எல்லாம் பண மதிப்பிழம்பின் விளைவுதிருமண மண்டபங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில் அவர்களின் பசி தீர்க்கும் அற சாலையாக ரையான் பங்க்ஷன் ஹால் மாறிவிட்டது. செல்லாத நோட்டுக்கள் மட்டுமில்லை. செல்லும் 2000 நோட்டுக்களாலும் சிலர் துன்பங்கள் அனுபவித்ததாக நாசீர் சகோதரர்கள் கூறுகிறார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாக்கிக்கொண்டு வருவதால் வேலை இழந்து வரும் மக்களின் பசி பசி தீர்ப்பது எமது கடமை . இதற்கு எவ்வளவு நிதி ஆனாலும் அது பற்றி கவலையில்லை எங்களுக்குள் பகிர்ந்தும் சில நண்பர்களின் நிதி உதவிக்கொண்டும் தொண்டினை தொடருவோம் என்கிறார்கள் . தினமும் 600 பேருக்குமேல் உணவு வழங்கும் இந்த50 பேர் கொண்ட குழு. இவர்களை நாமும் வாழ்த்துவோம் .

Comments Off on செல்லாத நோட்டு விவகாரம் ;பசியால் பரிதவித்த மக்களுக்கு உணவளித்த ஹைதராபாத் இளைஞர்கள் BY அபூஸாலிஹ்

தலித் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் கர்நாடக பள்ளிக்கூ டங்கள் பதறவைக்கும் ஆய்வு கள் அபுஸாலிஹ் பழைய பதிவு

தலித் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும்
கர்நாடக பள்ளிக்கூடங்கள்
பதறவைக்கும் ஆய்வுகள்
அபுஸாலிஹ்
இந்தியா எங்கள் தாய் நாடு ,இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர் என பாலர் பருவம் முதல் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுத்து வரும் மாணவ செல்வங்களிடையே பேதம் பார்க்கும் கொடூர செயல் கர்நாடக பள்ளிக்கூடங்களில் நிகழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மங்களூர் பல்கலைக்கழகத்தின் the Centre for Study of Social Exclusion and Inclusive Policy மையத்தின் ஆய்வுகள் இதனை தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தின் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் 13.7விழுக்காடு தலித் குழந்தைகள் கல்வி கற்கின்றனர் . இந்த பச்சிளம் பாலகர்களை ஆதிக்க சாதி மாணவர்களின் அருகில் அமரவிடாமல் தனித்து உட்காருமாறு கட்டயப்படுத்தப்படுகின்றனர் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஆசிரியர்களே இந்த அக்கிரமத்தில் நேரடியாக ஈடுபடுகின்றனர்
இந்த அநீதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது. பெல்காம் மாவட்டத்தின் பத்து வட்டங்களிலும் இந்த அநீதி பரவியுள்ளது. மேலும் குல்பர்கா ,சித்ரதுர்கா ,மைசூர் மற்றும் கோலார்மாவட்டங்களிலும் சமூக கலாச்சார ரீதியிலான பிளவுகள் அதிகரித்துள்ளன.
கடந்த தொடங்கிய இந்த ஆய்வின்படி வேறுபாடு காட்டுதல் மற்றும் சாதிய ரீதியிலான துன்புறுத்தல்கள் பெல்காம் மாவட்டத்தின் 50கிராமங்களில் உள்ள 2,425தலித் குடும்பங்களை சேர்ந்த 12677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தபகுதிகளில் 825குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தான் ஆரம்ப கல்வி கூடங்களில் பயில்கின்றனர்.
ஆசிரியர்களும் தலித் குழந்தைகளின் மீது தீண்டாமை பிரயோகிக்கின்றனர். குறிப்பாக மதிய உணவு நேரத்தின் போது தலித் மாணவர்களுக்கு அமர ஓரிடமும் தனியாக சாப்பிடும் தட்டும் ,கொடுத்து அவமானப்படுத்துகின்றனர். தலித் குழந்தைகள் பள்ளியின் சமையல் கூடத்திற்குஉள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்
தலித் மாணவர்கள் ஒரு தடவை கூட வகுப்பறை மாணவர்தலைவராக நியமிகப்பட்டதில்லை என 72..8விழுக்காடு பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால் தலித் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்த படுகின்றனர்.
33விழுக்காடு தலித் பெற்றோர் இதனை தெரிவித்துள்ளனர் இந்தியாவிலேயே தலித்களின் கல்வி குறைவான நிலை கர்நாடகத்தில் அதிகம் என அவ்வாய்வுகள் தெரிவிகின்றன.இங்கு தலித் மக்களின் கல்வி அறிவற்றோர் விழுக்காடு 45ஆக இருக்கிறது.
பாஜக ஆளும் கர்நாடகாவில் சமூக நீதி சந்தி சிரிக்கிறது

Comments Off on தலித் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் கர்நாடக பள்ளிக்கூ டங்கள் பதறவைக்கும் ஆய்வு கள் அபுஸாலிஹ் பழைய பதிவு

தலாக் தலாக் தலாக் ; முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக புருடா விடும் டூப் மாஸ்டர்களின் முகத்திரையை கிழிக்கும் சர்வே !! BY அபூஸாலிஹ்

தலாக் தலாக் தலாக் ; முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக புருடா விடும் டூப் மாஸ்டர்களின் முகத்திரையை கிழிக்கும் சர்வே !!

அபூஸாலிஹ்

இந்தியா முழுவதும் ஆதிக்க சக்திகள் விரும்பும் சட்டத்தினை கொண்டுவந்து நாட்டின் பன்முக தன்மைக்கு வேட்டு வைக்கவேண்டும் என்ற கேடு மதியுடன் செயற்படுபவர்கள் அந்த சட்டத்திற்கு வைத்துள்ள பெயர் பொது சிவில் சட்டம் .(!).

எதையுமே பொதுவாக கரு தாதவர்கள் யாரையும் ஒன்றாக மதித்து நடத்தாதவர்கள் மனத்தளவிற்கு கூட அப்படி நினைக்காதவர்கள் இன்று பொது சிவில் சட்டம் என்ற அடையாளத்துடன் ஒரு புதிய குழப்பத்தினை குத்தகை எடுத்துள்ளார்கள்.மக்கள் அனைவரும் ஒன்று என்ற தத்துவத்திற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள் . சாதி ரீதியாக குலத்தின் ரீதியாக பிறப்பின் ரீதியாக பேதம் பேணுபவர்கள் இன்று பொது பொது என்று பிதற்றுவது பீதி பரப்புவது , எல்லாமே அவர்களது மறைமுக அஜெண்டாவின் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றும் யத்தனிப்புடன் எடுத்து வைக்கும் முன் நகர்த்தல்கள் என்றால் அது மிகையன்று .

முஸ்லீம் மகளிர் ஆணாதிக்க கொடுமையால் நொந்து போவதாகவும் வெம்பி வாடுவதாகவும் ஒரு மிகைப்படுத்தல் அரசியல் ஒன்றை புளுகு வாத மீடியாக்கள் வெறுப்புணர்வு அரசியல் வியாதிகளின் விருப்பத்திற்கேற்ப பரப்பி வருகின்றன. ஆணாதிக்கம் எல்லா சமூகங்களிலும் உள்ளதை விட முஸ்லீம் சமூகத்தில் குறைவிலும் குறைவாக உள்ளது .

அதிலும் குறிப்பாக மணமுறிவு தொடர்பான விவகாரத்தில் முஸ்லீம் மகளிர் பெற்றுள்ள உரிமைகள் எந்த சமூக பெண்களுக்கும் கிடைத்திராத ஒரு சிறப்பு சலுகை ஏன் சிறப்பு அதிகாரம் என்றே சொல்லலாம். இருப்பினும் புழுதி வாரி தூற்றல் தொடர்கிறது

இந்த நிலையில் இந்தியா ஸ்பென்ட் . ஓ ஆர் ஜி என்ற வலைத்தளம் இந்தியா வில் உள்ள மண மான பெண்களின் நிலை குறித்து விரிவான

ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பொய் பரப்புரைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. யு சி சி என சுருக்கமாக அழைக்கப்படும் யூனிபார்ம் சிவில் கோடு கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. விவாகரத்து விவகாரம் குறிப்பாக முத்தலாக் விவகாரம் முஸ்லீம் மகளிரின் மண வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாசிச சக்திகள் கூறிவரும் நிலையில் இந்த டேட்டா பொய்மைகளை அடித்து நொறுக்கியுள்ளது.

அந்த வலைதள தகவல் திரட்டுக்களில் வெளிப்படும் உண்மைகள் ; விவாகரத்து பெறுபவர்களில் அதிகம் பேர் ஹிந்துக்கள்( 68 சதவீதம்) என்றும் முஸ்லிம்கள் 23.3 சதவீதம் என்பதும் தெரியவந்துள்ளது. மண முறிவுகளில் கோவா மாநிலத்தில் குறைவான அளவிலே விவகாரத்துக்களை செய்துள்ளனர். மணமுறிவுகள் மகளிரின் மேம்பாட்டில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இது மோடி அரசுக்கு அபாய எச்சரிக்கையாக உள்ளது.. பெண்களுக்கு அவர்தம் மேம்பாட்டுக்கு பாடுபடுவதாக மத்திய அரசு கருத்துமானால் மணமுறிவு விவாகாரம் குறித்து அது ஏற்படுத்தும் சமூக பொருளாதார உளவியல் சிக்கல் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணவேண்டும். முஸ்லீம் பெண்களை விட ஹிந்து பெண்கள் அதிக அளவு அதாவது மூன்று மடங்கு அதிகமாக மண முறிவு பெறுகிறார்கள்

ஆண்கள் விவகாரத்தில் 76சதவீத ஹிந்து ஆண்கள் விவகாரத்து செய்து கொள்கிறார்கள். இதிலும் முஸ்லிம்கள் 12. 7 சதவீதமே . விவாகரத்து செய்துகொள்கிறார்கள் ஹிந்து பெண்களைவிட ஹிந்து ஆண்களே அதிக அளவு விவாகரத்து செய்கிறார்கள். 8 சதவீதம் அதிகம் .

அனால் முஸ்லீம் பெண்களை விட குறைவான முஸ்லீம் ஆண்களே விவாகரத்து செய்கின்றனர். ஏறக்குறைய இரண்டு மடங்கு முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் தனது வாழ்க்கைத்துணையை மறுதலிக்கும், வசதியை , நிராகரிக்கும் உரிமையை முஸ்லீம் தனியார் சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளனர் என்பது ஆவண பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

.( தங்களுக்கு பொருத்தமான இணையரை தெரிந்தெடுக்கும் உரிமையை மறுமண அங்கீகாரத்தை இஸ்லாம்1450 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியுள்ளது. என்பதை குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறன் )

முஸ்லீம் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சக்திகள் தங்களின் முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள் .

விவகாரத்துக்கள் ஒரு சமூக பிரச்னை . என்ற அளவிலே அதனை அரசுகள் அணுகவேண்டும்.

வாய்ப்புக்கேடாக இன்றைய மோடி அரசு அதற்கு மத சார்பு வர்ணம் பூசி பிரச்னையை சிக்கலாக்கி விட்டது. குடிமக்களுக்கான முன்னேற்றம், மற்றும் அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆலிம் பைசி கூறுகிறார் முத்தலாக் பிரச்னையில் முஸ்லிம்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. அதனை நாங்களே (முஸ்லிம்களே ) தீர்த்துக்கொள்வோம் அதில் வெளியில் இருந்து யாரும் தலையிட வேண்டாம். பொதுமக்கள் அனைவருக்குமான கல்வி , பொருளாதார சமூக மேம்பாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும் என்கிறார்,

அகில இந்திய அளவில் விவாகரத்து செய்பவர்களில் கிராமப்புற மக்களே அதிகம் 8. 5 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் விவாகரத்து செய்துள்ளவர்கள். நகர்ப்புறங்களில் 5 லட்சத்து 3 ஆயிரம் பேர் விவாகரத்து செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மராட்டிய மாநிலம் முன்னிலை வகிக்கிறது

ஆண்கள் அதிகமாக விவாகரத்து செய்யும் மாநிலமாக குஜராத் விளங்குகிறது . மாநிலத்தின் மொத்த விவாகரத்துக்களில்54 சதவீத ம் ஆண்களே விவாகரத்துகள் செய்கிறர்கள் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத நிலை ( நாட்டின் பிரபலமான வாழா வெட்டர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது உங்கள் நினைவுக்கு வந்தால் யாம் பொறுப்பல்ல.)

இந்த சர்வே கூறும் உண்மை விவரங்களின் வாயிலாக தலாக் தலாக் தலாக் என்று முஸ்லீம் ஆண்கள் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் முஸ்லீம் பெண்களை விவாகரத்து செய்து பெண்களுக்கு கொடுமை இழைப்பதாக கட்டி விடப்பட்ட கட்டுக்கதை தகர்ந்தது .

பொய்க்கதை பரப்பியவர்களே உங்கள் முகங்களில் நீங்களே கரியை பூசிக்கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் . உண்மை உறங்காது. பொய்மை ஒரு போதும் வெல்லாது

Comments Off on தலாக் தலாக் தலாக் ; முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக புருடா விடும் டூப் மாஸ்டர்களின் முகத்திரையை கிழிக்கும் சர்வே !! BY அபூஸாலிஹ்

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு… தொடரும் வக்ஃபு முறைகேடுகள் BY அபூஸாலிஹ்

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு… தொடரும் வக்ஃபு முறைகேடுகள்
BY அபூஸாலிஹ்

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களுக்கு மாதம் 159 ரூபாய் மட்டும் வாடகை கொடுக்கிறார்கள். இவர்கள் தாதாக்களோ, ஆதிக்க வெறிபிடித்த பண முதலைகளோ அல்ல. மேற்கு வங்காள மாநில அரசுதான் இத்தகைய சாதனைக்கு(?) சொந்தக்காரனாக விளங்குகிறது.

ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், தலைமைச் செயலகம் செயல்படும் வில்லியம்ஸ் கோட்டை, சீதாபூர் மதரஸா மற்றும் அதைச் சார்ந்த மைதானம் (ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது), இவ்வாறு முக்கிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து மேற்கு வங்காள அரசு அற்பசொற்ப வாடகை கொடுத்து வந்தது நாட்டு மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.

2555 பிகாசாவுள்ள (511 ஏக்கர்) நிலத்திற்கு மாநில அரசு 159 ரூபாய் மட்டுமே மாத வாடகை செலுத்துகிறது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

இந்த 159 ரூபாய் மாத வாடகைக் கூட 1999ஆம் ஆண்டு வரைதான் கொடுத்து வந்தது. அதன்பிறகு அதனைக்கூட நிறுத்திவிட்டது. மேற்கூறப்பட்ட வக்ஃபு சொத்துக்களுக்கு முத்தவல்லியான மவ்லவி அபுல் பரகாத் தனது 99ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான அபுநயீம் சித்தீக்கியிடம் ஒரு பைசாகூட அரசால் வழங்கப்படவில்லை.

வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் நவாபாக இருந்த நவாப் அலி வர்திகான், சீதாபூர் மஸ்ஜித் மற்றும் மதரஸாவைப் பராமரிக்கும் செலவு வகைக்காக மவ்லவி சம்சுத்தீன் மற்றும் மசியுத்தீன் ஆகிய இருவருக்கும் கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் பிரம்மாண்டமான அரசு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்காக மிகப்பெரிய தொகையாக(?) 159 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.

எந்த மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் பராமரிப்புக்காக சொத்துக்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. மதரஸாவும், மஸ்ஜிதும் பாழடைந்த நிலையில் உள்ளன என்பதுதான் பெரும் சோகம்.

வில்லியம் கோட்டை, ராஜ்பவன், புகழ்பெற்ற ஈடன் கார்டன் உள்ளிட்ட பானிபவான் மைதானம் முதலிய முக்கிய இடங்கள் அனைத்தும் தங்களது மூதாதையர்களின் சொத்துக்களே என பெருமிதத்துடன் கூறுகிறார். ஆனால் இவர்களது உரிமையை மறுத்து நியாயமான தொகையை வழங்க மறுத்து அரசுகள் வீண் பிடிவாதம் காட்டி வருவதாக வருந்துகிறார்.

வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலம் தொடங்கி ஜவஹர்லால் நேரு தொடர்ந்து இந்திரா காந்தி, ஜோதிபாசு போன்றவர்களின் காலங்களில் கூட நியாயம் வழங்கப்படவில்லை.

சீதாபூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் 1772ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு மாதம் 158 ரூபாய் வாடகைத் தொகையாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக அபூநயீம் சித்தீக்கி கூறுகிறார். அதன்பிறகு ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடடா, என்ன நேர்மை?
என்ன நேர்மை ?
புல்லரிக்க வைக்கும் செயலல்லவா ?

17ஆம் நூற்றாண்டில் முர்ஷிதாபாத்துக்கு வருகை தந்த நவாப் அலி வர்திகான், ஹூக்ளி மாவட்டத்தில் 15 ஆயிரம் பிகா நிலமும் (3000 ஏக்கர்), ஹவுரா மற்றும் 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் 2555 பிகா நிலங்கள் (511 ஏக்கர்) வழங்கப்பட்டன. இன்று இவை அனைத்தும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளின் முக்கிய சொத்துக்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அநீதிகள் தொடர்கின்றன.

தனி நபர்கள் முறைகேடு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே முறைகேடு செய்தால் எங்குபோய் முறையிடுவது? முறையான, நீதியான நிர்வாகம் பற்றி வாய்கிழியப் பேசும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

–அபுசாலிஹ்

Comments Off on பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு… தொடரும் வக்ஃபு முறைகேடுகள் BY அபூஸாலிஹ்

அம்பானி மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் ? பதில் தர முடியாது ! ஆர் டி ஐ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அபூஸாலிஹ்

அம்பானி மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் ?

பதில் தர முடியாது ! ஆர் டி ஐ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில்

அபூஸாலிஹ்

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் மோடியின் நெருங்கிய நண்பருமான ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது பொது வெளியில் பெரும் சலசலப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி வந்ததில் இருந்து பணக்காரர்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் அதானி அம்பானி ஆகியோரின் விளையாட்டு பொம்மைகளா இந்திய அரசு எந்திரங்கள் என்ற வினா சமூக நலன் நாடும் ஒவ்வொரு வரின் உள்ளங்களிலும் எழுகிறது இந்நிலையில் நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பது தொடர்பாக முக்கிய விவரங்களை கேட்டு அகமதாபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆர் டி ஐ மூலம் விளக்கங்கள் கேட்டதற்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை கண்காணித்துவரும் பொறுப்புள்ள துறையான உள்துறை அளித்துள்ள பதில் இந்திய நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் ரகத்தை சேர்ந்தவையாகும்.

1. நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான முக்கிய காரணம் என்ன ?

2. நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதி கொடுத்த அதிகாரியின் பெயர் என்ன ?

3. தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கவேண்டும் என நீட்டா அம்பானி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட கடிதத்தின் நகல் வேண்டும் .

4. நீட்டா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்புக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகிறது ? அதன் விவரம்

5. பாதுகாப்பு செலவுகளுக்காக மாதத்தில் எவ்வளவு தொகை நீட்டா அம்பானி தரப்பில் இருந்து பெறப்படுகிறது ?

6. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுபவர்களின் பெயர்கள், பொறுப்பு, அவர்கள் எந்த அளவு முக்கியத்துவம் உடையவர்கள் ? என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு

உள்துறை அமைச்சகம் உரிய பதிலை தர மறுத்துள்ளது மேலும் சில முக்கிய தனி நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புத்துறை தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிடும் நபரான நீட்டா அம்பானி தொடர்பான கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவுகள் 8(1)ஜி 8(1) ஜே மற்றும் 24(1) இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டவர்கள் எனவே நீங்கள் கேட்கும் விவரங்களை தர முடியாது என உள்துறை அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Comments Off on அம்பானி மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் ? பதில் தர முடியாது ! ஆர் டி ஐ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அபூஸாலிஹ்

ராம்குமார் (தற் ) கொலை ! முடிச்சாச்சு ! மூடியாச்சு !! BY அபூஸாலிஹ்

ராம்குமார் (தற் ) கொலை !
முடிச்சாச்சு ! மூடியாச்சு !!

அபூஸாலிஹ்

சென்னை சூளை மேடு மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம் குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. மின்சார வயரை கடித்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாக முந்தி தருவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு நாளேடு கூறியது. மின்சார பெட்டியில் இருந்த மின் கம்பிகளை துண்டித்து தனது வாய் மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செருகி தற்கொலை செய்து கொண்டதாக மணியோசை எழுப்பும் ஒரு தின சரி சொன்னது.. அவாள் மலரோ ட்யூப் லைட்டுக்கு கரண்ட் போகும் வயரை கடித்ததால் இறந்ததாக சொன்னது. . ஆசியாவிலே யே அதிநவீன வசதிகள் உடன் கட்டப்பட்ட சிறை சாலையில் இவ்வளவு எளிதாக தற்கொலை செய்ய முடியும். ?

ராம் குமார் கைது செய்யப்பட்ட நேரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூட கொலை வழக்கில் எந்த ஆதாரமும் இன்றி கொலையாளி கைது செய்யப்பட்டார் என்று கூறினார். ஆதாரங்கள் இல்லாததால் அவரை கொன்று விட்டனரா ? என்ற கேள்வியை சில மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.தமிழ்நாட்டின் பிரபல வழக்குகளில் முக்கியமான பாத்திரம் உயிரிழப்பது தற்செயலானதா?
இளவரசன்- திவ்யா விவகாரத்தில் இளவரசன்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் டிஸ். பி விஷ்ணுப்ரியா.
ஸ்வாதி வழக்கில் ராம் குமார். என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.

ஜூன் 24ம் தேதியில் இருந்து செப்டம்பர் 18 வரை ஏறக்குறைய 85 நாட்கள் வரை நாட்டு மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்த விவகாரம் சோக கிளைமாக்சுடன் முற்று பெற்றது.

ஜூன் 24ல் சுவாதி மிருகத்தனமாக படு கொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ரத்தம் தோய்ந்த வரலாற்று தடத்தினை பதித்தது. கொலையாளியை கண்டு பிடிப்பதில் அவ்வளவு மெத்தனமா ? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தமிழக காவல்துறையின் புலனாய்வை மீறி முந்திரிக்கொட்டை தனமாக இனவெறியுடன் சுவாதியின் கொலையாளி என்று ஒருவரை முஸ்லீம் நபர் ஒருவரின் பெயரை யாரும் எதிர்பாராத ஒரு கோணத்தை தனது முக நூலில் நிலை தகவலாக வெளியிட்டார்.. ஒய்ஜி மகேந்திரன் என்ற கோமாளி நடிகர் . அதில் சுவாதி என்ற இளம்பெண் அநியாயமாக கொல்லப்பட்டாரே என்ற வேதனை யை விட முஸ்லீம் சமூகத்தின் மீது அந்த ஆசாமிக்கு இருந்த வன்மம் துவேஷம் தான் பெரிதும் வெளிப்பட்டது.ஒய்ஜி மகேந்திரனின் கருத்தினை ஒட்டி இதர கோமாளிகளான எஸ் வி சேகர், மனோபாலா , என்ற சினிமா பபூன்கள் மட்டுமின்றி அரசியல் காமெடி பீஸ் பாஜக கல்யாண ராமனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனித்தனர்.

இந்த ஒரு விவகாரத்தை வைத்து நாட்டையே கலவரக் காடாக்க விஷமிகள் முயன்றனர். நிலைமை இவ்வாறு இருக்க ஜூலை 1ம் தேதி சுவாதி கொலை தொடர்பாக ராம் குமார் பிடிபட்டதாக காவல்துறை அறிவித்தது. அதற்குமுன்னதாக ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாகவும் அது தொடர்பான புகைப்படங்கள் மீடியாவில் வெளியானது. காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த புகைப் படங்களை எடுத்தது யார்? பரப்பியது யார்? என்ற கேள்விக்கு இன்றுவரை விடையில்லை.. காவல்துறையிடம் பிடிப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்று கழுத்தை அறுத்ததாக வும் உடனடியாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதித்து 18 தையல்களுடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
ராம்குமார் வாய் திறந்து பேசினால் எதோ ஒரு மர்ம முடிச்சு அவிழ்ந்து யாருக்கோ சிக்கல் என்பதால் இந்த நடவடிக்கை என அப்போதே பேசப்பட்டது. . உண்மையிலேயே அது ராம்குமாரின் தற்கொலை முயற்சி தான் எனில் ஏற்கனவே தற்கொலை முயற்சி செய்தவரின் விவகாரத்தில் சிறைத்துறை இவ்வளவு அலட்சியயமாகவா இருப்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா ? தன து கழுத்தையே அறுக்க துணிந்தவனுக்கு கரண்ட் கம்பியை கடிக்க செல்லும் அஜாக்கிரதையாக இருந்தது யார் தவறு ?

இந்த வழக்கை நாம் ஒரு பருந்து பார்வையில் பார்த்தோமானால் ஜூலை 1ம் தேதி ராம் குமார் கைது செய்யப்பட்டார் ஜூலை 2 ல் இந்த வழக்கில் ராம் குமார் தான் கொலையாளி என அன்றைய சென்னை பெருநகர ஆணையர் டிகே ராஜேந்திரன் உறுதியாக சொன்னார். என்னை இழிவு படுத்தி சுவாதி பேசியதால் கொன்றேன் என ராம்குமார் சொன்னதாக காவல்துறை சொன்னது. ஜூலை 5ல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ராம் குமார். ஜூலை 13ல் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட பின் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. ஜூலை 14ல் மீண்டும் ராம்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியது. இந்த வழக்கில் பல குளறுபடிகள் உள்ளதாக ராம்குமார் வக்கீல் ராம்ராஜ் கூறினார். தன்மீது போடப்பட்டது பொய் வழக்கு ஆகஸ்ட் 18ல் ராம்குமார் கூறினார் . இதுவே ராம்குமாரின் நேரடி வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. சுவாதி கொலை வழக்கை சிபி ஐ க்கு மாற்றவேண்டும் என ராம்குமாரின் தாயார் ஆகஸ்ட் 19ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.செப்டம்பர் 2ல் அந்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகிறது. செப்டம்பர் 18 ல் கரண்ட் கம்பி யை கடித்து தற்கொலை செய்ததாக சிறைத்துறை கூறியது. இது போலீஸ் செய்த கொலை என ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பே இந்த வழக்கு முடிவு வந்துள்ளது. குற்றப்பத்திரிகை யை நுங்கம்பாக்கம் போலீசார் தயாரித்து முடித்து விட்டனர். 19 ம் தேதி அல்லது 20 தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடைசி வரை இந்த கொலை வழக்கில் தொடர்பே இல்லை என்று கூறி வந்த ராம்குமார் கதை கரண்ட் கம்பியை கடித்ததாக கூறப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இது விஷயத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் கூறுவதை உன்னிப்பாக அவதானிப்போமானால் 17ம் தேதி ராம்குமாரை சந்தித்து கவலைப்ப டாதே விரைவில் ஜாமீனில் எடுக்கிறேன் என்று கூறி வரும்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர் எப்படி தற்கொலை முடிவுக்கு வந்து இருப்பார் ? என குமுறுகிறார். சிறை உள்ளிருந்து மட்டுமல்ல வெளியில் இருந்தும் ராம்குமாருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக தனக்கு எச்சரிக்கை தகவல் வந்ததாக ராம்ராஜ் கூறியதை அலட்சியப்படுத்த முடியாது. உளவியல் ரீதியாக தைரியமாக இருந்த ராம்குமார் முக்கியமான தடயங்கள் குறித்து சொன்னதாகவும் இப்போது கூறினால் தனது உயிருக்கு ஆபத்து என்பதால் இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் வேலூர் சிறையில் சக ரவுடி கைதியால் பேரறிவாளன் தாக்கப்பட்டார். அதேபோல் ராம்குமாரை ஒரு கூலிப்படை கொலையாளி கொன்றிருக்க வாய்ப்புண்டு என்று பரவலாக பேசப்படும் நிலையில் சிறையில் கூட பாதுகாப்பற்ற நிலை யில் தமிழக நிலை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அள்ளியள்ளி வழங்கி வருகிறது

Comments Off on ராம்குமார் (தற் ) கொலை ! முடிச்சாச்சு ! மூடியாச்சு !! BY அபூஸாலிஹ்